திங்கள், ஜனவரி 14, 2019

காஞ்சிவரம் தொன்மையான பௌத்த தளம் XX



சிலையமையப்பு 
செம்பு, வெள்ளி, பித்தளை ஆகியவற்றை கலந்து செய்யப்பட்ட சிலை. நிலத்தை தொடும் முத்திரை - உயரம் 9.5 cm அகலம் 6.5 cm.12 ஆம் நூற்றாண்டு - வலது கை (Right Hand), கழுத்து மற்றும் தலையில் ஆபரணங்களால் அலங்கரிக்கபட்டுள்ளது. நெற்றி திலகத்துடன் காணப்படுகிறது (Urna) - தாமரை அமர்வு. புத்தர் அணிந்திருக்கும் நேர்த்தியான கிரீடம், கழுத்தணி மற்றும் கைப்பட்டைகள், நெற்றியின் நடுவில் உள்ள உஷ்ணீஷம் ஆகிய அனைத்தும் வெள்ளியால் பதிக்கப்பட்டிருப்பது.  11 மற்றும் 12 ஆம் நூற்றாண்டுகளில் கிழக்கு இந்தியாவின் பீகாரில் செய்யப்பட்ட ஒரு வகை சிற்பக்கலையின் சிறப்பம்சங்களாகும்.
விக்டோரியா மற்றும் ஆல்பர்ட் அருங்காட்சியகம்
1966 விக்டோரியா மற்றும் ஆல்பர்ட் அருங்காட்சியக விவரப்பதிவில் (Victoria and Albert Museum) இந்த புத்தர் சிலையை பற்றி பதிவு செய்யப்பட்டது. 
இந்த புத்தர் சிலை 1917க்கு முன்பு காஞ்சிபுரம் அருகே செங்கல்பட்டு வட்டத்தில் தோண்டியெடுக்கப்பட்டது. இச்சிலை 13 (அ) 14ஆம் நூற்றாண்டில் புதைக்கப்பட்டிருக்கலாம்.  
இந்த மாதிரியாக வடிவமைக்கப்பட்ட சிலை, (Pala Period) பால காலத்தின் பிற்பகுதியின் கிழக்கு இந்திய சிற்ப மாதிரியை மிக நெருக்கமாக கொண்டுள்ளது. இச்சிலை விக்டோரியா மற்றும் ஆல்பர்ட் அருங்காட்சியகத்தில் உள்ளது. 

1966-ஆம் ஆண்டில், திருமதி A.M. ஸ்டோடார்ட் (A.M. Stodart) அவர்களிடமிருந்து இச்சிலை விலைக்கு வாங்கப்பட்டது. இதற்கு முன்னதாக, அவரிடமிருந்தே இச்சிலை அருங்காட்சியகத்திற்குக் கடனாகப் பெறப்பட்டிருந்தது. 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக