திங்கள், நவம்பர் 20, 2017

ரூபாயின் பிரச்சனை -பாபா சாகிப்


1923ல் The Problem of the Rupee – Its origin and its solution ரூபாயின் பிரச்சனை தோற்றமும்  தீர்வும் என்ற ஆய்வு கட்டுரைக்கு பாபா சாகிப்புக்கு  லண்டன் பொருளாதார கல்லூரி Doctor of Science பட்டத்தை அளித்தது. இந்த ஆய்வு  கட்டுரையை நூலக பி எஸ் கிங் அன் கம்பெனி வெளியிட்டது. இந்நூல் முழுவதும் விற்கப்பட்டுவிட்டது. மேலும் இந்நூலின் தேவை அதிகமாக இருந்தது என்றுரைக்கிறார் பாபா சாகிப். எனவே ரூபாயின் பிரச்சனை என்ற ஆய்வில் 1923 வரை உள்ள இந்திய நாணயத்தின் வரலாற்று ஆய்வை அளித்ததை, இரண்டவது பதிப்பில் இந்திய நாணயத்தின் வரலாற்று ஆய்வை 1924லிருந்து அன்றுவரை (1947) அளித்தார். ரூபாயின் பிரச்சனை என்ற பெயரை மாற்றி  இந்திய  நாணயம் மற்றும் வாங்கியின் வரலாறு History of Indian Currency and Banking என்று வெளியிட்டார்.

ரூபாயின் பிரச்சனை என்ற நூலின் தேவை அதிகரித்தது ஏன்?
பாபா சாகிப் எழுதிய ஆய்வு கட்டுரைகளில் இந்த பொருளாதார ஆய்வு கட்டுரை மட்டும் தேவையை அதிகரித்ததற்க்கு காரணம்.    
01. நம் நாட்டின் பொருளாதாரத்தை  பற்றி அறிய  வேண்டுமென்றால் நமக்கு கிடைக்கும் அறிஞர்கள் அனைவரும் வெளி நாட்டு அறிஞர்கள் தான். இந்த சூழ்நிலையில் நம் நாட்டில் பொருளாதாரத்தில் டாக்டர் பட்டம் பெற்ற முதல் இந்தியர் என்ற பெருமை பெற்றவர் பாபா சாகிப். 
பொருளாதாரத்திற்க்காக 1998 நோபல் பரிசும் 1999 பாரத் ரத்னாவும் பெற்ற Dr. அமர்த்தியா சென் சொல்கிறார் என் பொருளாதாரத்தின் தந்தை Dr.Ambedkar, பொருளாதாரத்தில் அவரது பங்களிப்பு வியக்கத்தக்கது மற்றும் எப்பொழுதும் நினைவு கூறப்படுவது என்று . 
02. இந்திய நாணயத்தில் (Indian Currency) 1893 சீர்திருத்தம் கொண்டுவரப்பட்டது. சீர்திருத்தம் கொண்டுவந்ததற்கான சூழல் என்ன என்று எந்த அறிஞரும் சொல்லவில்லை. 1800 இருந்து சீர்திருத்தம் கொண்டுவரப்பட்ட 1893 வரை உள்ள 93 ஆண்டுகளை பாபா சாகிப் புறக்கணிக்கப்பட்ட காலம் (Negated Period) என்று கூறுகிறார். இந்த 93  ஆண்டு இந்திய செலாவணி பற்றி ஆய்வு செய்து இருக்கிறார். 
03. இந்த காரணங்கள் எல்லாவற்றையும் விட மிக முக்கியமானது இந்திய செலாவணியினால் ஏற்பட்ட பொருளாத சீர்கேட்டை சரி செய்ய பாபா சாகிப்பின் ஆய்வு நூல் தேவையாய் இருந்தது. ராயல் குழு (Royal Commission on Indian Currency and Finance) இருந்த ஒவ்வொரு உறுப்பினரும் பாபா சகிப்பின் Problem of Rupee என்ற நூலை வைத்து இருந்தனர்.
ராயல் குழு    
இந்திய பிரிடிஷ் ஆட்சியின் கீழ் இருந்தபோது, இந்திய நாணயம் வெள்ளி நாணயமாக இருந்தபோது, பிரிடிஷ் ஏற்றுமதியாளர்களிடம் இருந்து இந்தியாவிற்கு  இறக்குமதி செய்யும்பொழுது அவர்களுக்கு தங்க நாணயத்தில் மதிப்பிட்டு செலுத்த வேண்டி இருந்தது. ஏனெனில் இங்கிலாந்து நாட்டின் நாணயம் தங்க நாணயமாக இருந்தது. அப்படி கணக்கிடப்படும் போது அதிகப்படியான பரிமாற்று விகிதம் (Overvalued Exchange Rate) கணக்கிடப்பட்டது. இதனால் பிரிட்டிஷ் ஏற்றுமதியாளர்கள் பெரும் பயனடைந்தனர். இந்தியர்கள் பெரும் நட்டத்தை அடைந்தனர். இது பிரிட்டிஷ் நிர்வாகத்திற்கும் இந்தியா வணிகருக்கும் இடையே மிகப்பெரிய மோதலை உருவாக்கியது. இந்த பிரசாணைக்கு தீர்வு காண பிரிட்டிஷ் அரசு ராயல் குழு ஒன்றை 1925ல் அமைத்தது. ராயல் குழு என்ற பெயரில் வந்த ஹில்டன் குழு (Hilton Young Commission) க்கு பாபா சாகிப் இந்த சிக்கலுக்கு தீர்வைஅளித்தார். பாபா சகிப்பின் வழிகாட்டுதல், வேலை செய்யும் முறை, கண்ணோட்டம் ஆகியவற்றின் அடிப்படையில் இந்திய ரிசர்வ் வங்கி (Reserve Bank of India (RBI)  உருவாக்கப்பட்டது. 

இந்திய ரிசர்வ் வங்கி
இன்று இயங்கும் RBI பாபா சகிப்பு அளித்த வழிகாட்டுதல் மூலம் உருவாக்கப்பட்டதே. ஆனால் RBIயும், பொருளாதார மேதைகளும், பொருளாதார சீர்கேற்றிற்காக பிரிட்டிஷ் உடன் போராடிய வணிகர்களும், காழ்ப்புணர்ச்சியின் காரணமாக RBI உருவாக காரணமாக இருந்த பாபா சாகிப்பை மறைக்கின்றனர்.  RBI உருவாக காரணமாக இருந்த இந்திய நாணய சீர்திருத்தவாதி (Reformer of Indian Currency) பாபா சாகிப்பின் படத்தை ருபாய் நோட்டுகளில் அசிட்டாமல் RBI உருவாவதற்கும் இந்திய பொருளாதாரத்திற்கும் எந்த தொடர்பும் இல்லாத காந்தியை அனைத்து நோட்டுகளிலும் அச்சிடபட்டு வெளியிடப்படுகிறது.

நாம் நினைக்கலாம் பாபா சாகிப்பின் ஒளிப்படம் பதித்த நாணயங்களை RBI  வெளியிட்டுள்ளது என்று. பாபா சாகிப்பின் 100வது பிறந்தநாளுக்களாக ஒரு ருபாய் நாணயம் வெளியிடப்பட்டது. பின்னர் பாபா சாகிப்பின் 125 வது பிறந்தநாளுக்களாக 10 ருபாய் நாணயம் வெளியிடப்பட்டது.

நாணய வெளியிடும் உரிமை RBIக்கு இல்லை. நாணய வெளியிடும் உரிமை  இந்திய அரசுக்கு (Government of India) மட்டுமே உண்டு. நாணயம் பல தலைவர்களை நினைவுகூரவும், பல நிகழ்வுகளை நினைவுகூரவும் நாணயத்தில் தலைவர்களின் உருவங்களும் வரலாற்று நிகழ்வுகளும் வெளிடப்படுகிறது. உதாரணத்திற்கு  நேரு, காந்தி, இந்திரா காந்தி, ராஜிவ் காந்தி, சர்தார் வல்லபாய் பட்டேல், சுபாஷ் சந்திரா போஸ், லால் பகதூர் சாஸ்திரி, சுவாமி விவேகானந்த, பால கங்கா திலகர், ராஜேந்திர பிரசாத் என நீட்டிக்கொண்டே போகலாம். எனவே நாணய வெளியிடு என்பது  இதற்க்கு முன் குறிப்பிட்டவர்களில் பாபா சாகிப்பும்  ஒருவர் அவ்வளவு தான்.

 

நாணயத்திற்கும் ருபாய் நோட்டுக்கும்  உள்ள  வேறுபாடுகள் 
01.நாணயம் (Coins) என்பது சொத்து. அது நாணயத்தை வைத்து இருப்போரின் சொத்து.
ஆனால் ருபாய் நோட்டு என்பது பொறுப்பு (Liability). அது வைத்து இருப்பவரின் பொறுப்பு இல்லை அது RBIயின்  பொறுப்பு. அதனால் தான் ருபாய் நோட்டில் I promise to pay the bearer என்ற வார்த்தை உள்ளது. 
02. நாணயம் என்பது அதன் மதிப்பிற்கு உரிய பொருட்களை (உலோகத்தை) பெற்று உள்ளது. ருபாய் நோட்டு என்பது காகிதம். அதற்குரிய மதிப்பை RBIயிடம் உள்ளது. 
RBI வெளியிடும் பணத்தாள் 
RBI நோட்டுகளை இரண்டு வகையாக பிரித்து பார்க்கலாம் ஒன்று சுதந்திரத்திற்கு முன் RBI நோட்டு சுதந்திரத்திற்கு பின் RBI நோட்டு என்று. சுதந்திரத்திற்கு முன் ஜார்ஜ் VI (George) அவரின் உருவம் பதித்து நோட்டுகள் வந்தது, சுதந்திரத்திற்கு பின் ஜார்ஜ் VI அவரின் உருவத்தை நீக்கி விட்டு இந்திய தேசிய சின்னம் (Ashoka Lion Capital) பதித்து நோட்டுகள் வந்தது. Ashoka Lion Capitalலை தேசிய சின்னமாக கொண்டுவந்தவர் பாபா சாகிப். காந்தியின் நூறாவது பிறந்த நாள் 1969 வந்ததும், காந்தியின் படம் நோட்டின் பின்புறம் பதியப்பட்டது. 1996 இருந்து பின் பக்கம் இருந்தவர் முன் பக்கம் தோன்றி இன்றுவரை மாற்ற முடியவைத்தவராக Monopoly யாக இருக்கிறார்.
RBI = Problem of Rupee, Its origin and  solution by Dr.Ambedkar in 1923 + Evidence before the Royal commission  by Dr.Ambedkar in 1926.

நாணயத்தின் தேவை  
பண்டைய இந்தியா பல்வேறு குறு நில மன்னர்களால் ஆளப்பட்டு வந்தது. பண்ட மாற்று முறையில் இயங்கியது. கால்நடைகளும், தானியங்களும் தான் பண்டமாற்று பொருளாக இருந்தது. உள் நாட்டு வணிகம் பண்ட மாற்று முறையில் பெரிய சிக்கல் எதையும் உருவாக்கவில்லை. ஆனால் வெளிநாட்டு வணிகம் என்பது பண்ட மாற்று முறையில் இயங்குவதில் பெரும் சிக்கலாக இருந்தது. அதைப்போன்று குறு நில மன்னர்களின் ஆட்சி மாறி பேரரசு ஆட்சி மாறியபொழுது பண்ட மாற்று முறையில் இயங்குவதில் பெரும் சிக்கலாக இருந்தது. எனவே நாணயத்தின் தேவை ஏற்பட்டது. 

முத்திரை நாணயங்கள்
வணிக தேவையை நிறைவேற்ற முத்திரை நாணயங்கள் (Punched Mark Coins) உருவானது. இந்த நாணயங்களை அரசும் வணிக குழுவும் பயன்படுத்தியது. முத்திரை நாணயங்கள் பெதுமக்களின் பயன்பாட்டில் இல்லை. பெதுமக்கள் பண்ட மாற்று முறையில் தம் தேவைகளை நிறைவேற்றிக்கொண்டனர். அதாவது முத்திரை நாணயங்கள் வணிகத்திற்கு மட்டுமே பயன்படுத்தப்பட்டது. முத்திரை நாணயங்களை முதன் முதல் வெளியிட்டது  மகத பேரரசன் அஜசசத்ரு 552 - 520 BC. ஒரு புறம் மட்டும் முத்திரை சின்னங்கள் இருக்கும். இதனை முன் புறம் என்று கொள்ளலாம். மௌரிய பேரரசு வீழ்ச்சிக்கு பிறகு முத்திரை நாணயங்கள் நிறுத்தப்பட்டது. இந்த முத்திரை நாணயங்கள் முதன்மையாக வெள்ளி மற்றும் செப்பு  நாணயங்களை கொண்டிருந்தது. 

இந்தியாவின் முதல் நாணயம்
குஷானர்கள் முதன் முதலில் தங்க காசுகளை வெளியிட்டவர்கள்.  (வீமா காட்பீஸ்). நம் நாட்டில் முதன் முதல் பகவன் புத்தரின் உருவம் பதித்த நாணயம் வெளியிட்டவர் கனிஸ்கர். 

இயல் 1 இரட்டை உலோக நாணய மதிப்பில் இருந்து வெள்ளி நாணய மதிப்பீடு

உலக நாடுகள் பெரும்பான்மையாக பயன்படுத்திய நாணயங்கள் தங்க நாணயங்கள் மற்றும் வெள்ளி நாணயங்கள்.
Single Standard ஒற்றரை தர மதிப்பு : தங்க நாணயத்தை அல்லது வெள்ளி  நாணயத்தை பயன்பாட்டில் கொண்டிருந்தால் Single Standard or Monometallism அல்லது ஒற்றரை தர மதிப்பை கொண்டவை என்று பெயர்.  தங்க நாணயங்கள் தரத்தை கொண்ட நாடுகள் Gold Standard பின்பற்றும் நாடுகள் என்றும் வெள்ளி நாணயங்கள் தரத்தை கொண்ட நாடுகள் Silver Standard பின்பற்றும் நாடுகள் என்றும் அழைக்கப்படுகிறது. இன்று Silver Standardஐ பின்பற்றும் நாடுகள் ஏதும் இல்லை.

Double Standard இரட்டை தர மதிப்பு : தங்க நாணயத்தையும் வெள்ளி நாணயத்தையும் பயன்பாட்டில் கொண்டிருந்தால் Double Standard அல்லது Bimetallism அல்லது இரட்டை தர மதிப்பை கொண்டவை என்று பெயர். தங்க நாணயம் மற்றும் வெள்ளி நாணயம் இரண்டும் ஒரே மதிப்பை கொண்டது இல்லை. தங்கத்தின் மதிப்பு அதிகம் எனவே இவ்விரு நாணயத்திற்கும் ஒரு விகித (Ratio) தொடர்பை நிர்ணயம் செய்து இருக்கவேண்டும்.

முகலாயர்களின் பேரரசு செர்ஷா சூரி ஆட்சி
செர்ஷா சூரி ஆட்சிக்கு முன் நம் நாடு தங்க நாணயங்களை பயன்பாட்டில் பெருமளவு கொண்டிருந்தது. தங்க நாணயங்கள் பகோடா, வராகன் என்ற பெயரில் பயன்பாட்டில் இருந்தது. 
01. செர்ஷா சூரி தான் முதன் முதலில் வெள்ளி நாணயத்தை நம் நாட்டில் அறிமுகப்படுத்தினான். செர்ஷா சூரி ஆட்சியில் தங்க நாணயங்கள், வெள்ளி நாணயங்கள் இரண்டும் பயன்பாட்டில் இருந்தது. தங்க நாணயங்கள் மெகர் எனவும் வெள்ளி ருபாய் என்றும் அழைக்கப்பட்டது. வெள்ளி நாணயங்களை பெரிய அளவில் பயன்படுத்தினர். 
02. தங்கத்தின் மதிப்பு அதிகம் எனவே இவ்விரு நாணயத்திற்கும்  ஒரு விகித (Ratio) தொடர்பை நிர்ணயம் செய்து இருக்கவேண்டும்.  அப்படி செய்து இருந்தால் Single Standard  என்பது  Double Standard ஆகா மாறியிருக்கும். ஆனால் அவர்கள் இந்த இரு நாணயத்திற்கும் விகிதம் எதையும்  பின்பற்றவில்லை.
03. தங்க நாணயம் வெள்ளி நாணயம் இரண்டும் ஒரே எடை அளவில் அதாவது 175 கிராம் (22 சவரன்) வைத்திருந்தனர். ஒரே எடை மற்றும் ஒரே மதிப்பில் இந்த இரு நாணயத்தையும் பயன்பாட்டில் வைத்து இருந்ததால் இது Double Standard இல்லை Parallel Standard  இணை மதிப்பை கொண்டது என்கிறார் ஜோவன்ஸ். 
04.தங்கத்திற்கும் வெள்ளிக்கும் இடையோ விகிதம் பயன்படுத்தவில்லை என்றாலும் செப்பு Copper Coins நாணயத்திற்கு விகிதம் பயன்படுத்தப்பட்டுள்ளது என்றுரைக்கிறார் பாபா சாகிப்.  
05. காசுகளை அச்சடித்து வெளியிடும் உரிமை அரசர்களுடையது என்று கருதினர். அதனை பொறுப்புடன் செய்தனர். நாணயத்தில் ஏதாவது குறை இருந்தால் உடனே அது சரி செய்தனர்.    
06. பல்வேறு நாணய சாலைகளை (Mint) உருவாக்கினார். பல்வேறு நாணய சாலைகளை உருவாக்கினாலும் அவைகள் வெளியிடும் நாணயம் ஒரே தரத்துடன்  வேறுபாடு இன்றி இருந்தது.    
07. ஆனால் தென்னிந்தியாவை பொறுத்த வரை பண்டைய காலத்தில் இருந்து பிரிட்டிஷ் ஆட்சி வரை  தங்க நாணயத்தை பயன்படுத்தியது. ஏன் எனில் முஸ்லீம்களின் ஆட்சி தென்னிந்தியாவில் வலுவாக இல்லை.  
08. செர்ஷா சூரிக்கு பின் வந்தர்களும் இந்த நடைமுறையை பின்பற்றினர்.  எனவே முகமதியர்களின் ஆட்சியில் இந்தியா பொருளாதாரத்தில் முன்னேற்றம் அடைந்து இருந்தது. வாங்கி தொழில்கள் சிறப்பாக இருந்தது.
முகலாயர்களின் பேரரசு பல தனியராக சீர்குலைந்த போது இந்திய நாணயம்
அதிகாரம் பெற விரும்புவோர் ஆசைப்படும் முதல் உரிமை நாணயம் அச்சிடும் உரிமை. எனவே நாணயம் வெளியிடும் உரிமை அரசரிடம் இருந்து அரசியல் சூதாடிகளின் உரிமையானது. எல்லா இடங்களிலும் நாணய சாலை முழுமையாக செயல்பட்டது. பல்வேறு பட்ட நாணயங்கள் தோன்றியது. பணத்தாசை பிடித்ததால் இஸ்லாமியர் பயன்படுத்திய மூல தரத்தை பயன்படுத்தவில்லை. தன்னால் தயாரித்த நாணயங்களை மக்கள் பயன்படுத்த வேண்டும் என்பதால் தங்கள் விரும்பியதை எல்லாம் செய்தனர். எனவே பல்வேறு நாணய சாலைகள் (Mint) தொழில் கூட்டங்கள் ஆனது.

நாணயத்தின் அடக்கம் (Cost) அந்த அளவுக்கு (Weight) பொய்யாக்கப்பட்டதால் நாணயங்கள் வணிக சரக்காக மாறியது. நாணயம் என்ற மதிப்பை இழந்ததது. தரக்குறைவான நாணயத்தின் அதன் உண்மையான மதிப்பை அறிய வேண்டியது அவசியமானது. இதனால் ஷ்ராப் என்ற வர்க்கம் தோன்ற காரணமாக இருந்தது. ஏழைகளும் அறியாமையில் உள்ளவர்களும் ஏமாற்றப்பட்டனர். இஸ்லாமியர் ஆட்சி மறைவுக்கு பின்னர் நாணயத்தின் மதிப்பும் மறைந்தது  

இந்திய நாணயம் பிரிட்டிஷ் ஆட்சியில்
18ம் நூற்றாண்டின் இடைக்காலத்தில் இந்தியா பிரிட்டிஷ் ஆட்சியின் கீழ் இருந்தது. கெட்ட நாணயத்தை நல்ல நாணயமாக மற்ற வேண்டிய கடமை கிழக்கிந்திய கம்பெனியின்  தோள்களில் விழுந்தது.

கிழக்கிந்திய கம்பெனி செய்த சீர்திருத்தங்கள் 
நிர்வாக காரணங்களுக்காக மூன்று மாகாணங்களாக இந்தியாவை பிரித்தனர். 01.சென்னை மாகாணம் 02.வங்காளம் 03.பம்பாய் என்று.
01. இஸ்லாமியர்கள் பயன்படுத்திய இணை தரத்தை  தடை செய்தனர் (Parallel Standard). ஒரு தங்க நாணயம் எத்தனை வெள்ளி நாணயத்திற்கு சமம் என்று கணக்கிடபட்டது. இதனால் இணை மதிப்பு  மறைந்து இரட்டை மதிப்பு உருவானது . 
02.ஒரு கிராம் தங்கம் 14 கிராம் வெள்ளிக்கு சமம் என்று நிர்ணயித்தனர். சட்ட ரீதியான விகிதமும் சந்தை விகிதமும் பெரிதும் வேறுபட்டதால் இந்த (Double Standard) இரட்டை தர மதிப்பு தோல்வியில் முடிந்தது. மீண்டும் நாணயத்தின் எடையையும் அதன் விகிதத்தையும் மாற்றி (1:16) வெளியிடப்பட்டது (1769). இரண்டவது முறையும் படு தோல்வியை அடைந்தது. மூன்றாவது முறையும் (1793) தோல்வியை தழுவியது. மூன்று மாகாணத்தில் ஒன்றில் கூட வெற்றி பெற முடியவில்லை.   
இரட்டை மதிப்பு ஏன் தோல்வியை தழுவியது? 
மூன்று மாகாணங்களுக்கு இடையே நிதி சுதந்திரம் இல்லை. மூன்று மாகாணங்களுக்கு இடையே  ஒரு பொதுவான செலவாணி இல்லை. ஒரு மாகாணத்தின் நாணயத்தை மற்ற மாகாணத்தில் சட்ட ரீதியான நாணயமகா உபயோகபடுத்த முடியவில்லை.
உலகங்களின் ஏற்ற இறக்கத்தை தடுக்க முடியாது எனவே நாட்டமின்றி இரு நாணயங்களும் பயன்பாட்டில் இருக்க முடியாது என்பது நிருபிக்கப்பட்ட உண்மை. எனவே தங்க நாணயத்தை நிறுத்தி வெள்ளி நாணயத்திற்க்கு சென்றனர்.  

தங்க நாணயத்தை நிறுத்தி வெள்ளி நாணயத்திற்க்கு  செல்லுதல் (From Double Standard to Single Standard -Silver Standard)

01. ஒற்றை உலோக நாணய முறைக்கு லார்டு விவர்பூல் அவர்களின் கருத்தை கேட்டப்பட்டது. அவர் தங்க ஒற்றை நாணய முறையை இந்தியாவிற்கு பரிந்துரைத்தார். உலக முழுவதிலும் நிலவிய நடைமுறை வெள்ளி நாணயமகா இருந்தது.  வெள்ளி நாணயத்தை பெருமளவில் பல நாடுகள் பயன்படுத்தி கொண்டு வந்தது. பொது மக்களின் முன்னுரிமை வெள்ளிக்கு அளித்தனர். எனவே லார்டு விவர்பூல் அவர்களின் பரிந்துரையை நடைமுறை படுத்தாமல் வெள்ளி நாணயத்தை நடைமுறை படுத்தினர்.

02.இந்தியா முழுவதும் கணக்கிடும் நாணயமாக வெள்ளி நாணயத்தை கொண்டுவந்தனர். தங்க நாணய பயன்பாட்டை தடை செய்தனர்.

03.வெள்ளி நாணயத்தின் எடையை 180 கிராம் என்றும் கழிவு Wastage 15 கிராம் (1:12) நிகர எடை 165 கிராம் என்றும் நிர்ணயத்தினர். இந்த 180 கிராம் என்பது இஸ்லாமியர்கள் முதன் முதலில் பயன்படுத்திய மூல அளவு. எனவே பழைய மூல அளவையே மீண்டும் கொண்டுவந்தனர்.

04. ஒரு தங்க மோகருக்கு சமமாக 15 வெள்ளி ரூபாய் என அரசு வெளியிட்டது. இந்த அறிவிப்பினால் தங்கம் ஏதும் அரசுக்கு வரவில்லை. கரணம் தங்கத்தின் மதிப்பை மிக குறைவாக மதிப்பிட்டதால் யாரும் இதனை விரும்வில்லை. ஆஸ்திரியாவிலும் கலிபோர்னியாவிலும் தங்கம் கண்டுபிடிக்கப்பட்டதால் நிலைமை மாறியது. தங்கம் இரு நாடுகளில் கண்டுபிடிக்கப்பட்டதால் 15 ரூபாய் என்பது உயர் மதிப்பானது. எனவே தங்கம் அரசுக்கு அதிக அளவில் வந்ததால் பெரும் அதிர்ச்சிக்குள்ளானர். நிலைமையை புரிந்து கொண்டு 1841ல் வெளியிட்ட பிரகடனத்தை 1852 ல் திரும்ப பெற்றது.

05.நாட்டின் வெள்ளி நாணயத்தின் தேவையை பூர்த்தி செய்துகொள்வதற்கு போதுமான வெள்ளி இல்லை. மேலும் வெள்ளியின் தேவை தொடர்ந்து அதிகரித்து கொண்டு வந்தது. வெளியின்  தேவை அதிகரிக்க இரண்டு  காரணங்கள் இருந்தது.
R1. பண்ட மாற்று பொருளாதாரம் பண மாற்று பொருளாதாரமாக மாறியது.
01. பிரிட்டிஷ் வருமானம் எல்லாம் பணமாக செலுத்தபட்டது  02. உள் நாட்டு ராஜாக்களால் பெருமளவு பண்டமாற்று முறையில் செலுத்தபட்டதை பணமாக  செலுத்தபட்டது 03. ராணுவத்திற்க்கு சம்பளம் பணமாக அளிக்கப்பட்டது- 04. இராணுவ செலவு பணமாக அளிக்கப்பட்டது 05.  விவசாயிகளுக்கு கூலி பண்டத்திற்க்கு பதில் பணமாக அளிக்கப்பட்டது. 06.தொழிலாளிளுக்கு சம்பளம் பண்டத்திற்க்கு பதில் பணமாக அளிக்கப்பட்டது. 07. போலீஸ், அதிகாரிளுக்கு சம்பளம் பணமாக கொடுக்கப்பட்டது. 08 வரி, கடன், வட்டி எல்லாம் பணமாக மாறியது. பணத்தை தவிர வேறு எதையும் பெற முடியாது என்ற நிலைமை உருவாக்கியது.  இதனால் பணத்தின் தேவை அதிகமானது.
R2 இந்தியா மக்களிடம்  ஏற்பட்ட பொருளாதார மாற்றம் வணிகத்தில் ஏற்பட்ட வளர்ச்சி. 
(இங்கிலாந்து) தன் நாட்டின் உற்பத்தி பொருட்களை பெயரளவுக்கு 2.5% இறக்குமதி தீர்வையில் (Import Duty)  பெறும்படி இந்தியாவை கட்டாயப்படுத்தியது. அதே சமயம் இந்தியாவில் உற்பத்தியான அத்தகைய பொருள்களுக்கு ஏற்றுமதி வரி 50%லிருந்து 500%விதித்து. இங்கிலாந்தை போன்று இந்தியா ஏற்றுமதி செய்யும் பொருள்களுக்கு இங்கிலாந்திற்கு சாதகமாகவும் (Favourable), இந்தியாவிற்கு பாதகமாகவும் கொள்கையை கையாண்டது. இந்த அநீதிக்கு எதிராக பெரும் கிளர்ச்சி ஏற்பட்டது .
1842  ஏற்றுமதி இறக்குமதி வரி விதிப்பில் சீர்திருத்தம் கொண்டுவந்தனர். அதன் படி சர் ராபர்ட் பீல் குறைந்த தீர்வையில் (Duty) இந்திய பொருள்களை அனுமதித்தார். கப்பல் வணிக சட்டமும் இரத்தானது.  இதனால் இந்திய வணிகம் விரிவடைந்தது, இந்திய உற்பத்தி பொருள்களின் தேவை அதிகரித்தது.
1854 கிரிமிய யுத்தம் ரஷ்ய பொருள்களின் வரத்து துண்டித்தது. அந்த இடத்தை இந்திய பிடித்தது. 1853 ஐரோப்பா முழுவதும் பட்டு உற்பத்தியில் தோல்வி அடைந்தது இது இந்திய பாட்டுக்கு தேவையை அதிகரித்தது   
06.இந்திய எந்த உயர் உலோகங்களையும் தயாரிக்க வில்லை. வெள்ளியின் இறக்குமதி பெருமளவில் இருந்தது. அதே போன்று இறக்குமதி செய்யப்பட்ட வெள்ளியை நாணயமாக்குவதும் பெரிய அளவில் இருந்தது. அப்படி இருந்தும் பணம் நெருக்கடி ஏற்பட்டது. அது ஏன் என்று விளக்குகிறார் Mr.காசல்ஸ் .
அச்சிட்டு வெளியிட்ட வெள்ளி நாணயங்கள் எல்லாம் அப்படியே வெள்ளி நாணய பரிமாற்றத்துக்கு பயன்பட்டு இருந்தால் பண முடக்கம் ஏற்பட்டு இருக்காது.  நாணய சாலையில் கஷ்டப்பட்டு உருக்கி அதிக பொறுமையுடன் திறமையுடன் ஒருவர் நாணயமாக உற்பத்தி செய்யும் பொழுது வெள்ளி தட்டாரும், நகை வியாபாரியும் அதை மிக விரையாக வளையங்களாக வடித்து விடுகின்றனர்.
எனவே இந்த பிரச்சனையை தீர்க்க இருந்த ஒரே வழி பணம் சம்பந்தப்பட்ட தேவைக்கும் பணம் சாரதா தேவைக்கும் போதுமான அளவு வெள்ளியை இறக்குமதி செய்வது தான். ஆனால் வெள்ளியின்  இறக்குமதி ஏற்கனவே உச்ச கட்டத்தில் இருந்தது. வெள்ளி உலக உற்பத்தியில் பெருமளவு இந்தியா எடுத்துக்கொண்டது
07. இந்த சிக்கலை தீர்க்க பத்திரங்கள் (Bond) வெளியிடப்பட்டது. அவையும் தோல்வியில் முடிந்தது காரணம் 12 மாதங்களுக்கு மேல் அவை பெறக்கூடாது எங்கே வாங்கப்படுகிறதோ அங்கே தான் பத்திரத்தை கொடுக்கவேண்டி இருந்தது. இதனால் கொடுக்க வேண்டிய தொகை அதிகமாக இருந்தது வட்டியின் காலம் குறைவாக இருந்தது.

08. இந்த பிரச்சனையை தீர்க்க முடியாததால் மக்கள் கேள்வி கேட்டனர்.  ஒற்றை உலோக செலாவணி வெள்ளிக்கு பதில் ஒற்றை உலோக செலவாணி தங்கத்திற்கு மாறவேண்டி. 

09.இந்த தங்கத்திற்க்கான கிளர்ச்சிக்கு எதிர் தாக்குதலாக இருந்தது திரு வில்சன் அவர்களால் முதன் முதலில் பரிந்துரைக்க பட்ட காகித நாணயம். ஆனால் திரு லியாவ் இந்திய செலாவணியில்  இருந்து தங்கத்தை ஒதுக்குவது என்பது காட்டுமிராண்டித்தனம் என்றுரைத்தார். 
11. திரு வில்சன் இறந்ததால் அதனை செயல்படுத்த வேண்டிய பொறுப்பில் இருந்தார் திரு லியாவ். காகித நாணயம் வெளியிட்டனர். அதுவும் பயனளிக்கவில்லை. எனவே மொத்த முழு பளுவும் வெள்ளியின்  மேல் விழுந்தது. 
12. தங்க நாணயம் பயன்பாட்டில் இல்லை என்றாலும் தங்கம் அதிக அளவில் இறக்குமதி செய்யப்பட்டது.
13. திரு சார்லஸ் டிரிவெலின் காகித நாணயத்தில் இருந்த பலவீனமனா அம்சத்தை கண்டுபிடித்தார்.தங்கத்தை இந்தியாவில் பின் கதவு வழியாக அனுமதிப்பதற்கு பதில் அது இந்தியாவின் நாணய மதிப்பாக மாற்றவேண்டும் என்றார். காகித நோட்டுகளை பொன் அல்லது வெள்ளி கட்டிகளுக்கு நாணய பரிமாற்றம் செய்யக்கூடாது  என்று பிரச்சனைக்கு தீர்வு காணப்பட்டது

இயல் 2 வெள்ளி நாணய மதிப்பும் அதன் நாணய சம மதிப்பில்குலைவும்

எல்லா நாடுகளிலும் நாணய சாலையில் இருந்து வெளிவரும் நாணயங்கள் சட்டத்திற்கு ஏற்றதாக என்பதை உறுதி செய்ய ஒரு அமைப்பை ஏற்படுத்தும்.  அந்த அமைப்பு ஒரு குறிப்பிட்ட அளவிற்கு அதிகமாக நாணயங்கள் குறைபாடு உடைய இருந்தால் அந்த நாணயங்கள் ஏற்றுக்கொள்ளாது. ஆனால் இது போன்று எந்த அமைப்பையும் இந்தியாவில் நாணய தரத்தை பார்க்க அமைக்கவில்லை. எனவே நாணய சாலை சுதந்திரமாக இந்தியாவில் இயங்கியது.

இது போன்ற சுதந்திரத்தை காகித நாணயத்திற்கு அளிக்க முடியாது  என்பதால் இந்த சுதந்திரம் காகித நாணயங்களுக்கு இல்லை. இந்தியாவை நிர்வாக காரணங்களுக்காக மூன்று மாகாணங்களாக பிரிக்கப்பட்டது. இந்த மாகாணங்களில் 01. Bank of Bengal 02. Bank of Bombay and 03.Bank of Madras இயங்கியது. இவைகள் தான் நோட்டுகளை வெளியிடும் உரிமையை கொண்டிருந்தது.

இந்த காகித நோட்டுகளை வெளியிடும் போது அதில் வெளியிடும் வட்டாரத்தின் (Circle) வட்டாரத்தின் பெயர் குறிப்பிடப்பட்டிருக்கும். இது ஏன் என்றால் இந்த நோட்டுகளை அதை வெளியிட்ட வட்டத்தின் சொந்த counterல் தான் பணமாக மாற்றிக்கொள்ள முடியும். இந்த நோட்டுகளை அந்த வட்டாரத்திற்கு வெளியே பணமாக மாற்றிக்கொள்ள முடியாது. ஒவ்வொரு வட்டாரமும் பலஉப வட்டாரங்களை (Sub-Circle) கொண்டிருக்கும். ஒரு வட்டாரத்தின் நோட்டை அதன் உபவட்டாரத்திலும் மாற்ற முடியாது. ஆனால் ஒரு உப வட்டாரம் வெளியிடும் நோட்டுகளை அந்த உப வட்டாரத்திலும், அந்த வட்டாரத்தில் உள்ள பிற வட்டாரத்திலும், ஏன் அதன் வட்டாரத்திலும் மாற்றிக்கொள்ள முடியும்.

இந்த வட்டரங்கள் மற்றும் உப வட்டரங்களுக்கு ஏற்படும் பண தேவைக்கு ஏற்ப நிதியை அனுப்பி வைக்க வேண்டியிருந்தது. ஒரு வட்டாரத்தின் எல்லைக்கும் மற்றோரு வட்டாரத்தின் எல்லைக்கும் 700 மைல்கல் தூரம் இருந்தது. பணத்தை கொடுக்க இங்கும் அங்கும் நிதியை அனுப்பி வைக்க வேண்டிய கட்டாயம் இருந்தது. இந்த மையங்களுக்கு விரையாக அனுப்பி வைக்க வசதிகள் மிக குறைவாக இருந்தது. எல்லா இடங்களிலும் பணமாக மாற்றக்கூடிய ஏற்பாடு இல்லை. மேலும் பணமாக மாற்றிக்கொள்ளும் மையங்கள் சிறு எண்ணிக்கையை கொண்டிருந்தது.

இந்திய செலவாணி சட்டம் 1861
இந்த சிக்கலுக்கு தீர்வு காண 1861 ஆம் ஆண்டு இந்திய செலவாணி சட்டம் கொண்டுவரப்பட்டது. இந்திய செலவாணி சட்டம் என்பது ஆங்கில வாங்கி சட்டத்தின் (1844) முழு மறுபதிப்பு.

01. இந்திய செலவாணி சட்டம் 1861 சட்டத்தின் படி காகித நோட்டுகளை வெளியிடும் உரிமையை Bank of Madras, Bank of Bombay and Bank of Bengal இந்த வங்கியிலிருந்து எடுத்துக்கொள்ளபட்டது. இது இந்திய வங்கிகள் நோட்டுகளை வெளியிடும் உரிமையை பறித்துக்கொண்டு இந்திய வங்கிகளை கழிவு (Commission) பெரும் வங்கியாக மாற்றியது.
02. தேசிய அளவிலான காகித நாணயத்தை வெளியிடும் அமைப்பை நிறுவியது. அதன் படி ரூ 10 20 50 100 500 1000 என்று வெளியிட்டது. பின்னர் 1871 ஆம் ஆண்டு ரூ 5 நோட்டை வெளியிட அனுமதியளிக்கப்பட்டது.
 பணத்தின் தேவையும் அளிப்பும் (Demand and Supply of Money)
எல்லா இடங்களிலும் பணமாக மாற்றக்கூடிய ஏற்பாடுகள் செய்யப்பட்டாலும் பணத்தின் தேவைக்கு ஏற்ப அளிப்பை கணக்கில் கொள்ளவில்லை. 


01. திரு வான்டென் மெர்கின் உரைப்பது என்னவென்றால் பருவ மறுபாடுகளுக்கு (Seasons) ஏற்ற இறக்கங்களை உட்படுவதில் புகழ்பெற்ற நாடு இந்தியா. உலகின் எந்த ஒரு பகுதியிலும் எந்த பண சந்தையிலும் ஏற்படாதவை இந்தியாவில் ஏற்படுகிறது என்று. 

நாடு முழுவதும் தீவிரமான காலம் (Busy period) மந்தமான காலம் (Slak Period) என்று ஒரே மாதிரியாக இருந்தது இல்லை. இதற்கு கரணம் பருவ கால நிலை (Seasons) மட்டுமல்ல சமூக பொருளாதார நடவடிக்கைகளும் கரணம் என்றுரைக்கிறார். அதாவது திருமண காலம், திருவிழா காலம், விடுமுறைக்காலம் என பல இருக்கின்றன.

தென்னிந்தியா (Chennai) பொறுத்தவரை பிப்ரவரி முதல் ஜூலை மதம் வரை ஆறு மதம் தீவிரமான சமூக பொருளாதார நடவடிக்கை காலம். அதாவது பணத்தின் தேவை அதிகமாக இருக்கும் காலம். மேற்கு இந்தியா (Bombay) பொறுத்த வரை ஜனவரி மதம் முதல் ஏப்ரல் மதம் வரை நான்கு மதம் மற்றும் நவம்பர் மதம் முதல் டிசம்பர் மதம் வரை இரண்டு மாதங்கள் ஆகா ஆறு மாதங்கள் தீவிரமான சமூக பொருளாதார நடவடிக்கை காலம். அதாவது பணத்தின் தேவை அதிகமான காலம்.

எனவே பணத்தின் தேவை என்பது ஓரிடத்தில் அதிகமாகவும் பிறிதொரு இடத்தில் குறைந்தும் காணப்படும். இது நமக்கு உரைப்பது என்னவென்றால் பணத்தின் தேவைக்கு ஏற்றார் போல் பணத்தின் அளிப்பு இல்லை என்பது.

இங்கிலாந்தில் சிறப்பாக இயங்கிய செலவாணி சட்டம் இந்தியாவில் மோசமாக இயங்கியது ஏன்?.

01. இங்கிலாந்தில் காசோலை (Cheque) சிறப்பாக இயங்கியது, இந்தியாவில் தோல்வியை தழுவியது. இந்தியாவில் தொல்வியை தழுவ இரு கரணங்கள் இருக்கிறது. 
01. காசோலை பயன்படுத்த கல்வி அறிவு வேண்டும். இந்தியாவில் கல்வி கற்றவர்கள் மிக குறைவு. அதிலும் ஆங்கில அறிவு உடையவர்கள் மிக அரிது. வங்கிகள் ஆங்கில மொழியில் மட்டுமே இயங்க விரும்பியது ஒரு காரணம்.
02. ஒரு குறிப்பிட்ட காலத்திற்குள் காசோலையை வாங்கியில் சமர்பிக்க வேண்டும் இல்லை எனில் அது மதிப்பற்றதாகிவிடும் என்பது இரண்டாவது காரணம். தற்பொழுது காசோலை செல்லுபடியாகும் காலம் மூன்று மாதங்கள்.
இங்கிலாந்து வங்கிகளை விட கழிவு அளவை அதிகமாக வெட்டி எடுக்க வேண்டிய கட்டாயத்திற்கு உள்ளாயின இந்திய வங்கிகள்.
வங்கிகளின் வருமானம் என்பது கடன் அளித்து அதன் மூலம் வட்டி பெறுதல்.  வங்கிகள் தாங்கள் பெரும் Cash Deposit and Credit Deposit முலமாக தான் கடன் அளிக்கிறது. சேமிப்புகளின் பெரும்பகுதி பட்டியங்களாக (Bills) உள்ளன. அவற்றிக்கு ரொக்கமாக கொடுப்பது என்பது வங்கி தொழில். கையில் குறைந்தபட்ச Cash Reserve கையிருப்பை வங்கி எப்பொழுதும் வைத்து இருக்கவேண்டும். எனவே கடன் அளிப்பதற்கு முன் Cash Reserve எந்த அளவுக்கு வங்கி இருக்கிறதோ அதை பொறுத்து தான் வங்கி கடன் வழங்கும். Cash Deposit குறைவாக இருந்தால் அல்லது Credit Deposit அதிகமாக இருந்தால் கடன் வழங்குவதை குறைத்திடும், கழிவு தள்ளுபடி கொடுப்பதை (Bills Discounting) நிறுத்திவிடும்.

Cheque பயன்பாடு இல்லாததால் Cash Reserve அதிகமாக தேவைபட்டது. ரொக்க தொகைக்கும் கடன் தொகைக்கும் தேவைப்படும் விகிதத்தை பாதுகாக்க வங்கி தங்களின் வருமானத்தை அதிக அளவு வெட்டி குறைக்க வேண்டியிருந்தது.    

1873 ஒன்று படுத்தப்பட்ட புதிய நாணய சாலை சட்டம் 
01.  நாணய எடைகள்,  நாணய அளவுகள், காசுகள் ஆகியவற்றில் ஒருங்கிணைந்த நிலை (Uniformity) ஏற்படவேண்டும் கிளர்ச்சி ஏற்பட்டது. ஒன்றிணைந்த சரவதேச நாணய முறைக்காக உலகத்தின் முதன்மையான செலவாணியாக தங்கம் மட்டுமே இருக்க வேண்டும் என்ற முடிவு எடுக்கப்பட்டது. நாணய சாலை வெளியிடும் நாணய பட்டியலில் (List) இருந்து வெள்ளி டாலர் எடுக்கப்பட்டது. 

02. வெள்ளியின் மதிப்பை குறைக்கும் வேலை தீவிரம் ஆனது. களத்தில் முதலில் இறங்கியது ஜெர்மனி. வெள்ளி காசுகள் அசசடிப்பதை நிறுத்தியது. வெள்ளிக்கும் தங்கத்திற்கும் விகிதம் (15: ½  (அ) 15:1) என நிர்ணயித்தது. ஜெர்மனி கலாசாரத்தை பின்பற்றும் நாடுகள் எல்லாம் உடனே இந்த கொள்கையாக காப்பி அடித்தது.

தங்கத்தின் உற்பத்தி முன்பு எப்பொழுதும் கண்டிராத உச்சத்தை எட்டியது, வெள்ளி வீழ்ச்சியடைந்து. 

இயல் 3 வெள்ளி நாணய புழக்கமும் அதன் நிலையற்ற தன்மையின் தீமையும்

1873 ஆம் ஆண்டுக்கு முன் ஒரு குறிப்பிட்ட அளவு தங்கம் எவ்வளவு அளவு வெள்ளிக்கு சமம் என்று இருந்தது. இது சர்வேதேச பரிவர்த்தனையில் ஒரு சிறிய விஷயமாக இருந்தது. எவ்வளவு தங்கம் எவ்வளவு வெள்ளிக்கு சமம் என்று மதிப்பிடுவதில் சூதாட்டமாக இருந்தது. 

அரசின் வருமானம்
அரசின் வருமானம் என்பது வரி விதிப்பின் மூலம் பெறுதல் தான். இந்த வரி விதிப்பை பார்த்தால் அதிகமான வரிவிதிப்பு இல்லாத ஆண்டே இல்லை என்றுரைக்கிறார் பாபா சாகிப். இருக்கிற வரி சுமையோடு வருமான வரியையும் சேர்த்தனர். (வருமான வரியை  முதன் முதலில் இந்தியாவில் 1860ல்  ஜேம்ஸ் வில்சன் கொண்டுவந்தார்) செலாவணியில் ஏற்பட்ட வீழ்ச்சியினால் வரி சுமை அதிகமானது.

இந்தியாவில் அதிக அளவு மூலதனத்தை முதலீடு செய்தவர்கள் ஆங்கிலேயர்கள். இந்தியாவில் முதலீடு செய்வது ஆபத்து என்று கருதினார்கள். வெள்ளி நாணயத்தை பயன்படுத்தும் நாட்டில் முதலீடு செய்வதால் வெள்ளி மதிப்பு குறையும் பொழுது தங்களின் முதலீட்டின் மதிப்பும் குறைந்து விடுகிறது. எனவே இந்த நிசசயமற்ற தன்னமையை கண்டு அஞ்சினர்.


செலவாணி வீழ்ச்சி காலம் முழுவதும் இந்தியாவில் தொழில் வளர்ச்சி வேகமாக வளர்ந்தது. பருத்தி பஞ்சாலைத் தொழில், சணல் தொழில் துறை, விவசாயிகள் வீட்டு தேவையை வீட சந்தை விலையை வைத்து பயிரிட்டனர். தங்க நாணயம் பயன்பாட்டில் உள்ள நாடுகளின் தொழில் துறை இஸ்தமித்து பொய் இருந்தது.

அரசின் செலவு

வெளிநாட்டில் இருந்து பணியாளர்களை பெறுவதற்கு பதில் உள் நாட்டிலே இந்திய பணியாளர்களை நியமனம் செய்தனர். இதனால் அரசு பணியில் இருந்த ஆங்கிலேயர்கள் பெற்ற அதே அதிக அளவு சம்பளத்தை இந்தியர்கள் பெற்றனர். இதனால் இந்த சீர்திருத்தம் உதவவில்லை. 1870 ஆண்டு சட்டம் திருத்தபட்டு இந்தியர்களின் சம்பளம் குறைக்கப்பட்டது. ஒப்பந்த பணியாளர்களுக்கான பணி இடங்களில் ஒப்பந்தமற்ற பணியார்களை நியமித்து 22% செலவை குறைத்து.

இந்தியாவில் பணியாற்றிய ஆங்கிலேயர்கள் தங்களின் சம்பளத்தை வெள்ளியில் பெற்றனர். அவர்கள் இங்கிலாந்தில் இருந்த தங்கள் குடும்பத்திற்கு சம்பளத்தை வெள்ளியில் அனுப்பமுடியாது. ஏன்னெனில் இங்கிலாந்து தங்க நாணயத்தை கொண்டது. எனவே அவர்கள் தங்களின் சம்பளத்தை தங்கத்தில் அனுப்ப வேண்டியிருந்தது. வெள்ளியின் மதிப்பு வீழ்ச்சியடைவதால் நிலையான சம்பளத்தை அவர்களால் அனுப்பமுடியவில்லை. எனவே அரசு இவர்களுக்கு சலுகை அளித்தது. இந்த வித்தியாச தொகை இந்திய கருவூலத்தின் செலவில் ஈடுகட்டப்பட்டது. செலவாணி வீழ்ச்சியால் நஷ்ட ஈடு கேட்டனர். பலர் மாமூல் வாங்கி கொழுத்தனர்.

வெள்ளி செலவாணி வீழ்ச்சி இந்தியாவிற்கு சாதகமாகவும் இங்கிலாந்திற்கு பாதகமாகவும் இருந்தது. தங்கத்திற்கும் வெள்ளிக்கும் இடையிலான விகிதம் என்பது தங்க விலைக்கும் வெள்ளி விலைக்கும் இடையிலான தலைகீழ் விகிதம்.
ஜெய் பீம்