புதன், நவம்பர் 16, 2011

ஏழாம் அறிவு


மதிப்பிற்குரிய போதி தர்மா புத்தரல்ல. புத்தராக முயன்றவர்களில் ஒருவர், போதி சத்துவர் என அழைக்கப்படுபவர்.

போதி தருமரை புத்தருக்கு சமமாக கருதப்பட்டவர் என இத்திரைப்படத்தில் சொல்லப்படுகிறது. புத்தருக்கு சமமானவர் யாருமில்லை.

போதி சத்துவர்க்கு கோவில்கள் கட்டப்பட்டது, தமிழ் மருத்துவத்திலும் சிலம்பத்திலும் கைதேர்ந்தவர் என்பதால் தான் என இத்திரைப்பட இயக்குனர் தவறாக கருதுகின்றார்.

உயர்வெய்திய பகவன் புத்தரை கடவுளாக கருதும் மகாயான பிரிவை சார்ந்த துறவி (பிக்கு) தான் போதி தருமர். சுவாசத்தை கவனிக்கும் (ஆனா பானா -பகவன் புத்தரின் தியான முறை) நுணுக்கத்தை கற்றுக்கொடுத்தார். தியான மார்க்கத்தை சீனாவிலும் ஜப்பானிலும் பரப்பியவர். இந்தியாவில் அழிந்த புத்தரின் தியானம் மீண்டும் திரு S.N. கோயங்கா அவர்களால் கொண்டுவரட்ப்பட்டது (Vipassana Meditation).

இலங்கையில் இனவெறியின் காரணமாக அழிக்கப்பட்ட நூலகத்தை குறிப்பிடும் இத்திரைப்படம் மதவெறியின் காரணமாக இந்தியாவில் அழிக்கப்பட்ட நாளந்தா பல்கலைக்கழகத்தை குறிப்பிடவில்லை. தர்க்கத்தை ஊக்குவிக்கும் நூல்கள், மருத்துவ நூல்கள், மூடநம்பிக்கையை அழித்தொழிக்கும் பல நன்னெறி
நூல்கள் தமிழ் நாட்டிலேயே இறந்துபோகசெய்யப்பட்டது பற்றி ஏதும் சொல்லப்படவில்லை. போதி தருமரை தமிழராக மட்டுமே இத்திரைப்படம் வலியுறுத்துகிறது.

தமிழை அவமதித்தால் வாயிலேபோடுவேன்.
கோவிலுக்கு செல்ல அனுமதி கிடைத்தும் தமிழ் இன்றும் ஊமையாக இருக்கிறது. நீசமொழி என்றுரைப்பவரின் வாயிலேயே போட்டால் சிறப்பாக இருக்கும்

7 ஆம் அறிவு என்பது D.N.A என இத்திரைப்படம் சொல்கின்றது என நினைக்கிறேன்.  D.N.A 7 ஆம் அறிவாக  முடியாது.

தமிழ் நாட்டிலிருந்து சென்ற போதி தருமர் சீனாவிலும் ஜப்பானிலும் இன்றும் வாழ்ந்து கொண்டிருக்கின்றார். இந்தியாவில் இருந்து சென்ற பௌத்தம் பல நாடுகளில் சிறப்பாக இருக்கின்றது. பௌத்தம் பிறந்த நாட்டிலேயே கொன்றழிக்கப்பட்டது. போதி தருமரை பற்றி 20 நிமிடம் திரைப்படத்தில் சிறப்பாக காண்பித்த அனைவரின் முயற்சிக்கும் நன்றி.

வெள்ளி, அக்டோபர் 21, 2011

புத்தரின் போதனைகள் -2


புத்தர் அறவுரைகள்
அஞ்சாமை
யாருடைய சிந்தை கலங்காதிருக்கிறதோ,
யார் நல்வினை தீவினைகளைப்பற்றிச்
சிந்திப்பதில்லையோ, அவருக்கு
அச்சம் என்பதே இல்லை!

வாய்மை
எல்லாப் பொருளுக்கும் அழிவுண்டு ஆனால்
வாய்மை என்றைக்கும் நிலைத்திருக்கும்

வேதம்
வேதங்கள் என்பவை தண்ணீர் இல்லாத
பாலைவனம்; வழி இல்லாத காடுகள்,
அறிவுள்ள எம்மனிதனும் தன் அறிவு
வேட்கையைத் தனித்துக்கொள்ள
வேதங்களை நாடிச் செல்ல மாட்டான்.

தனியுடமை
ஒரு குலத்திற்கு ஆதிக்கவன்மையும்
மற்றக்குலத்திற்கு துக்கத்தையும்
துயரத்தையும் கொடுப்பதற்குக்
காரண கர்த்தாவானத்து தனியுடைமை தான்.

மனிதர்
௦மனிதர் எல்லோரும் சரிசமமானவர்.
மனிதனை மதிப்பிடுவதற்கு அறிவும்
ஒழுக்கமும் தாம் அளவுகோலே தவிர
பிறப்பு அன்று.

எல்லாரிடத்தும் ஈவிரக்கம் காட்டுவதைக்
கைவிடக் கூடாது. எதிரிக்கும் கூடச்
(சிலவறை முறையின் படி) ஈவிரக்கம் காட்ட
நாம் கடமைப்பட்டவர்கள்

கல்வி
கல்வி கற்கும் உரிமையை எல்லோரும்
பெற்றவராவர். ஒழுக்க நெறியில்லாத
படிப்பு மிகக் கேடானது

ஆய்வு
தவறில்லாதது ஒன்றுமில்லை.
எப்பொழுதும் கட்டுப்பட்டதும் ஏதுமில்லை.
எவையும் ஆய்வுக்கும் ஆராய்ச்சிக்கும்
உட்பட்டனவாகும்

முயற்சி
முடியாதது ஒன்றுமில்லை.
எல்லாமே காரண காரியங்களுக்கு
உட்பட்டிருக்கின்றன.

நிரந்தரமானதோ, மாற்ற முடியாததோ
ஒன்றுமில்லை. இன்று இருப்பது
நாளையில்லை. எதுவுமே மாற்றத்திற்கு
உட்பட்டது

மக்களியல்பு
பேசாமல் சும்மா உட்கார்ந்திருப்பவனையும்
வைகிறார்கள். மிகுதியாக பேசுபவனையும்
வைகிறார்கள். திட்டப்படாத மனிதனே
உலகில் இலன்.

எப்போதும் திட்டப்படுபவனாக அல்லது
எப்போதும் போற்றப்படுபவனாக மனிதன்
எப்போதும் ஒருவன் இருந்ததுமில்லை
இருக்கிறதுமில்லை இருக்கப்போவதுமில்லை.

அறிஞர்
பொற்கொல்லன் பொன்னிலுள்ள
களிம்பை அகற்றுவது போல
அறிஞர் கணந்தோறும் சிறிது
சிறிதாகத் தம் மாசினை
அகற்றிக் கொள்கின்றனர்.

தூய்மை
தண்ணிரைத் தெளித்துவிட்டு இது
தூய்மையான இடம் என்று கூறுவதால்
ஓர் இடம் தூய்மையாகி விடாது

தண்ணீரால் குற்றத்தைக் கழுவ இயலாது
மனிதன் மயக்கத்திலிருந்து விடுதலை பெற வேண்டும்.

மீன் புலால் முதலிய உணவுகளை
விலக்குவதாலோ, ஆடையின்றி
அலைவதாலோ, தலைமை
மழிப்பதாலோ, முடியை
வளர்ப்பதலோ, உடலில் துப்புரவற்ற
பொருள்களைப் பூசிக் கொள்வதாலோ
அவன் தூய்மையுடையவனாகான்

உயிர் மறுப்பு
உடலின் தோற்ற காலத்தில்
உள்ளே புகுந்து அது மடியும்போது
வெளியேறும் உயிர் ஒன்று இல்லை

சுவர்க்கம் - நரகம்
நீருள் நின்று தவம் புரிவதால்
இன்ப உலகு கிடைக்கும் என்றால்,
மீன்களே முதலில் இன்ப உலகிற்குரியது

பலியிடும் உயிர்கள் உடனே
இன்பவுலகு செல்வதானால், ஒருவன்
முதலில் தன் தந்தையை பலியிட்டு
இன்பவுலகிற்கு அனுப்பி விடலாமே!

முட்டாள்
குழம்பிலே தோய்ந்த்துள்ள கரண்டிக்குக்
குழம்பின் சுவை தெரியாது, வாழ்க்கை
முழுவதும் அறிவாளியுடன் பழகினாலும்
முட்டாளுக்கு உண்மை புலப்படாது.

தோற்றமும் அழிவும்
உலகத்தில் உள்ளும் புறமும்
அழிவற்ற பொருள் ஏதும் கிடையாது.
உலகத்தின் பொருள்கள் யாவும் நிமிடத்திற்கு
நிமிடம் மாறிக் கொண்டே இருக்கின்றன.
தோன்றுவன அழியும்

ஆசை
உலகத்தில் ஆசையைப் போன்ற
நெருப்பில்லை, வெறுப்பைப் போன்ற
பகையில்லை, மயக்கம் போன்ற
வலையில்லை, காமத்தைப் போன்ற
புயல்யில்லை

ஆசையை வென்ற மனிதனை வெல்ல
உலக்த்தில் எவருமில்லை!

அறிஞர் அறிவிலார் தொடர்பு
அறிவாளிகளின் கூட்டுறவு
உறவைக் காண்பது போன்று
இன்பத்தை அளிக்கும்

மூடர்ககளின் கூட்டுறவு
பகைவனுடைய சேர்க்கை போன்று
துன்பம் தருவதாகும்

சான்றோரும் தீயவரும்
தொலைவிலே இருந்தாலும்
சான்றோர்கள் இமயமலையைப் போன்று
தோற்றம் அளிக்கிறார்கள், ஆனால்
இரவில் செய்த அம்பு போலத் தீயவர்
இடம் புலப்படாமல் கிடக்கிறார்கள்

நல்லவன்
கையில் காயம் இல்லாதவன் நஞ்சைத்
தீண்டலாம். காயம் இல்லாதவனை நஞ்சு
ஓர் ஊறும் செய்வதில்லை. அப்படியே
தீமை செய்யாதவனுக்கு தீமை நேர்வதில்லை

ஆரவாரம்
கோவணாண்டி கோலமே சடைமுடியோடு
அழுக்கேறிய உடம்போ, பட்டினிக் கிடத்தலோ
மண்மீதும் மூச்சை அடக்கி உட்கார்ந்திருத்தாலோ,
ஆசையை வெல்லாத ஒருவனைத்
தூய்மையானவனாக்கி விடாது

நூல் குறிப்பு
போதி மாதவர் - ஆசிரியர் தி. இராசகோபாலன்
பக்கம் 155-160


செவ்வாய், அக்டோபர் 11, 2011

கெளதம புத்தர் மகாவிஷ்ணுவா...?

இல்லை, இல்லவேயில்லை.
புத்தர் மகாவிஷ்ணுவின்  அவதாரமென கூறுவது புத்தரை 
இழிவுபடுத்துவதாகும்.

பகவன் புத்தர், மகாவிஷ்ணுவின் அவதாரம் என்பதை நான் நம்பமாட்டேன். அப்படிப்பிரச்சாரம் செய்வது விஷமத்தனமானது தவறானது என்று நான் உறுதியாக நம்புகிறேன்
  • 15 -10 -1956 -அறிவர் அண்ணல் அம்பேத்கர் புத்த நெறியைத் தழுவிய போது அவர் எடுத்துக்கொண்ட 22 உறுதிமொழிகளில் 5வது உறுதிமொழி

01. புத்தரை மகாவிஷ்ணுவின் அவதாரம் எனக் கூறுவதின் காரணமென்ன?
1.பௌத்தத்தை அது தோன்றிய இந்திய மண்ணிலிருந்து அகற்ற பயன்படுத்திய பொய்க்கருத்து தான் புத்தர் விஷ்ணுவின் அவதாரமென்பது.
2. பௌத்த தருமக்  கேழ்வியிலிருந்த குடிகள் புத்தர் என்றும் அழகர் என்றும் அரங்கர் என்றும் தருமர் என்றும் வழங்கி பகவனை பற்றி விசாரிக்கும்  காரணம் கொண்டு புத்தரே விஷ்ணு என்றும் விஷ்ணுவே புத்த அவதாரம் என்றும் புராணமேற்ப்படுத்தி புத்தா பாதமே விஷ்ணு பாதம் விஷ்ணு பாதமே புத்தா பாதம் என்றும் கூறி பொய்யிற்க்கு பொய்யை முட்டுக் கொடுத்து பொய்யையும் விருத்தி செய்து கொண்டு வருகின்றனர். மெய் மெய்யென விளங்கும் சத்திய பெருஞ்சரித்திரத்துடன் தங்களது பொய்க் கதைகளையும் சேர்த்து மெய்ப்பித்துக் கொள்ள வேண்டுமென்று நோக்கம். 
3.புத்தரால் அறிவும் ஒழுக்கமும் ஏற்பட்டதை ஒழிக்கவே அவதாரக்கதைகள்.  எனவே தான் புத்தர் நாள் வைதிகர்களுக்குப் பகை நாளாகும்.

02. புத்தர் கடவுளோ அவதாரமே இல்லையெனில் புத்தரென்பவர் யார்?
http://elambodhi.blogspot.com/2011/08/1.html -பிறப்பு கி.மு 563 பரி நிர்வாணம் கி.மு 483
1.யாரும் புத்தராக பிறந்திட முடியாது. சித்தார்த்த தாம்  தன்  முயற்சியினால் தான் புத்தரானார். புத்தர் என்பது மறுபிறப்பற்ற ஒரு   உயரிய பண்பும் அறிவார்ந்த நிலையும்.   
2.பகவன் புத்தர் ஓர் இயல்பான மனிதர், தமது வாழ்நாளில் எந்த ஒரு அற்புதங்களையும் செய்யாதவர்.
3.கடவுளை பற்றி கவலைப்பட வேண்டாம் மனிதனைப் பற்றி கவலைப்படு, அறிவுதான் முக்கியம், ரிஷி சொன்னார், மகான் சொன்னார் என்று நம்பாதே, யார் எதைச் சொன்னாலும் உன் அறிவைக் கொண்டு தர்க்கம் செய்து மிஞ்சுவதை எடுத்துக்கொள் என்று சொல்லியவர்.காலாம சூத்திரம் -அங்குத்தர நிகாயம் 3:65
புத்தர் போதகர் (மார்க்கதத்தா) மட்டுமே மோட்சம்  அளிப்பவரல்ல (மோட்சதத்தா) 

03.புத்தரை மகாவிஷ்ணுவின் அவதாரமில்லை என மறுப்பதின் காரணமென்ன? 

பௌத்தமும் இந்து மதமும் வெவ்வேறானவை. முற்றிலும் முரண்பாடு உடையது.
1.இந்து மாதம் கடவுள், ஆன்மா, வருணங்கள், சாதிகள் ஆகியவற்றை நம்புகிறது. பௌத்தம் கடவுளை, ஆன்மாவை மறுக்கிறது, சமத்துவமின்மையின் மிகப்பெரிய எதிரியாகவுள்ளது. 
2.இந்து மதத்தில் தாங்கள் (அவதாரங்கள்) போதிப்பது கடவுளின்  சொல்லென்றும், பிழையற்றதென்றும், கேள்விக்கு அப்பாற்பட்டது என்றும் உண்மையும் இறுதியானதுமென்றும் உரிமை கொண்டாடினார்கள்.
ஆனால் பகவன் புத்தர் மேற்குறிப்பிட்ட எந்த உரிமையையும் கொண்டாடவில்லை. தனது போதனைகள் "காரண காரியத்தையும் அனுபவத்தையும்" அடிப்படையாக கொண்டதென்றும், தன்னை பின்பற்றுவார்கள் தனது போதனையை தான் கூறியதாலேயே பிழையற்றதென்று ஏற்றுக்கொள்ளக்கூடாது என்று சிந்தனை சுதந்திரத்தை அளித்தார்.  
மேலும் பௌத்தம் எக்காலத்திலும் விஞ்ஞானத்துடன் முரண்படுவது கிடையாது. பௌத்த நூல் தொகுப்பினுடைய ஏதாவது ஒரு அறிக்கை, நவின விஞ்ஞான அறிவுக்கு முரண்பட்டு இருந்தால் அதை நூல்தொகுப்பிலிருந்து விலக்குவதற்கு முழு சுதந்திரம் உள்ளது.
3. கடவுள் தன் உருவாக்கத்தில் தூயவராகயிருக்க வேண்டுமென்பது அவதாரக் கோட்பாட்டுக்கு அவசியமில்லை. கடவுள் மிகவும் மாசுடையிராகவும் ஒழுக்கமற்ற செயற்பாடு உடையவராகவும் இருக்கலாம். ஒழுக்கமே புத்தரின் மதமாகும். ஒழுக்கமில்லையென்றால் புத்தமதம் ஒன்றுமில்லாதது ஆகும். புத்த மதத்தில் கடவுளுக்கு பதிலாக அங்கு ஒழுக்கம் இருக்கிறது. 
4. இந்து என்போர் யார் என்னும் வினாவிற்கு ஒருவர் முகத்தை ஒருவர் உற்றுப்பார்ப்பதே அதற்க்கு விடையின்றி வேறு மறுமொழி ஒன்றும் கிடையாது. புத்தரென்னும் ஓர் புத்திரன் தோன்றினார் அவரின் போதனைகளை பின்பற்றியவர்கள் பௌத்தர்களானார். கிறிஸ்துவென்னும் ஓர் புத்திரன் தோன்றினார் அவரின் போதனைகளை பின்பற்றியவர்கள் கிறிஸ்துவனார்கள். முகமது வென்னும் ஓர் புத்திரன் தோன்றினார் அவரின் போதனைகளை பின்பற்றியவர்கள் முகமதியர்களானர். அது போல் இவ்விந்து என்னும் புத்திரன் எவரும் இருந்ததில்லை 
இந்து என்ற சொல் இந்திய மொழிகளில் எந்த மொழியிலும் இல்லாத சொல். எந்த புராண இதிகாசத்திலும் கையாளப்படாத சொல். 1799ல் சர். வில்லியம் ஜோன்சு உள்நாட்டு நீதி நெறிகளை தொகுத்து அதற்கு இந்து சட்டம் என்று பெயரிட்டார். அப்போது தான் இந்து என்ற சொல் முதன் முதலாக அரசு அங்கீகாரம் பெற்றது.
இந்து ஒரு சமய சார்புடைய சொல்லல்ல. கிறித்துவரல்லாத, இசுலாமியரல்லாத பார்சியல்லாத மக்கள் எல்லாம் இந்துக்கள் என்று வரைவிலக்கணம் கொண்டு உள்ளது. 
5. இந்துக்கள் என்பவருக்குள் சாதி ஆச்சாரம் என்னும் பிரிவினைகள் உண்டு. பௌத்தர்களுக்கு அத்தகைய பிரிவினை பேதங்கள் கிடையாது.
6. இந்துக்கள் என்போர் அவரவர்கள் தேவதைகளைத் தொழுது அவர்களுக்குப் பூசை நெய் வேத்தியஞ் செய்து வந்தால் மோட்சமும் சுகமும் உண்டென்பார்கள். பெளத்தர்களோ நன்மார்க்க நடையில் சீலத்தைப் பின்பற்றி ஒழுக்கத்தில் நிலைப்போருக்கு முத்திய சுகமுடென்பார்கள்
7. இந்துக்கள் என்போர் சாதி சமய ஆச்சரத்தில் லைத்திருக்க வேண்டும். பெளத்தர்களோ பாவச் செயல்களை அகற்றி நன்மெய் கடைபிடித்து இதயசுத்தி உடையவர்களாகி சருவசீவர்கள் மீதும் அன்பு பாராட்ட வேண்டும். 
8. இந்துக்கள் என்போர்களுக்கு தங்கள் சாதி ஆச்சாரங்களுக்கு தக்க சாதிப்பெயரும் தொடர்மொழியும் இருப்பதுடன் நெற்றியிலும் கழுத்திலும் சமய சின்னங்களாகும் விபுதி, திருமண், உருத்திராட்சம் முதலியன இருத்தல் வேண்டும். 
9. மீண்டும் மீண்டும் பிறப்பவரே மகாவிஷ்ணு. பகவன் புத்தர் மறுபிறப்பு அற்றவர். 
10. புத்தர் தனக்கு ஏற்படும் தீங்குகளைப் பெருந்தன்மையோடு போருத்துக்கொண்டர். அதனை மனதில் கொள்ளமாட்டார். வேதனை, அபாயம், அவமதிப்பு ஆகியவை அவரது மன அமைதியைக்குலைத்து விடவில்லை. உயிரை அழிக்கும் செயலுக்கு அப்பாற்பட்டவர். அவர் தடியையும் வாளையும் விலக்கி வைத்தார். கேடான செயல்களிருந்தும் பாலியல் நடத்தைகளிருந்தும் அவர் விலகி நின்றார். எப்போதும் உண்மையே பேசுவார். பிரிந்து கிடப்பவர்களை ஒன்று சேர்க்க பிரயத்தனம் செய்வார். கடுஞ்சொல் பேசமாட்டார். கனிவான மொழி பேசுவார். ஒரு நாளைக்கு ஒரு வேளை மட்டும் உணவு உட்கொள்வார். இரவில் உண்பதில்லை நடனம், பாட்டு அலங்காரம் செய்து கொள்வதில்லை.
ஆனால் இதற்கு நேர் மாறானவர் மஹா விஷ்ணு. விஷ்ணு சக்கரம் என்ற ஆபத்தான ஆயுதத்தை தாங்கியவர். பார்ப்பனர்களை எதிர்ப்பவர்களை அந்தச் சக்கரத்தின் மூலமாக அழிப்பவர். பாம்பின் விஷத்தை விட கொடியவர். மனித தன்மையை மீறியவர். கலகங்களை ஒடுக்குவதில் இறக்கமற்றவர். பாலியல் வன்முறைகளையும், கடத்தல்களையும் செய்தவர்.
    
04. புத்தர் மகாவிஷ்ணுவின் அவதாரமில்லையெனில் வைதிக நூல்களில் புத்தர் மகாவிஷ்ணுவின் அவதாரமென கூறிப்பிட்டபட்டுள்ளது எங்ஙனம்?

பௌத்தர்கள், ஜைனர்கள் ஆகியர்களின் பரம்பரை வேதங்களிலிருந்தோ உபநிடதங்ககளிலிருந்தோ தோன்றியதன்று. அது வேத காலத்துக்கு முன்னரே மத்திய இந்தியாவில் விளங்கிய ரிஷிமுனிவர்களின் பரம்பரையிலிருந்து தோன்றியது.

புராணங்கள் 
புராண இதிகாசங்கள் என்பவை சரித்திரங்கள் அல்ல. அவை கற்பனை கதை. 100 க்கு 75 புராணங்கள் புத்தருக்கு பின்னால் தான் எழுதப்பட்டது. இராமாயணம் எழுதியதும் மகாபாரதம் எழுதியதும் புத்தருக்கு பின் தான் தந்தை பெரியார்.

புராணங்களை  எழுதியவர்கள் சூதர்கள் தான். பிராமணர்கள் அல்ல. 
ஒரு காலக் கட்டத்தில் திடிரேன பார்பனர்கள் முனைந்து சூதர்களை ஒதுக்கி தள்ளிவிட்டு புராணங்களை எழுதும் உரிமையைத் தாங்களே ஏகபோகமாக எடுத்துகொண்டார்கள். இதனால் புராண ஆசிரியர்கள் பெயரிலும் மாற்றங்கள் ஏற்பட்டன. அதாவது சூதர்களுக்கு பதிலாக பிராமணர்கள் புராணங்களின் ஆசிரியர்களாகிவிட்டனர்.

புராணம்  அதன் இடைப்பட்ட காலம்
01.மார்கண்டேய                           கி பி 200 - 400
02.வாயு                                            கி பி 200 - 500
03.பிரம்மானந்த                            கி பி 200 - 500
04.விஷ்ணு                                     கி பி 100 - 350
05.மச்சய                                         கி பி 325
06.பாகவத                                      கி பி 500 - 600
07.கூர்ம                                           கி பி 550 - 1000
08.வாமன                                       கி பி 700 - 1000
09.லிங்க                                          கி பி 600 - 1000
10.வராக                                          கி பி 800 - 1500
11.பத்ம                                            கி பி 600 - 950
12.பிரஹ நாரதிய                       கி பி 875 - 1000
13.அக்னி                                        கி பி 800 - 900
14.கருட                                          கி பி 850 - 1000
15.பிரம்ம                                       கி பி 900 - 1000
16.ஸ்கந்த                                     கி பி 700 பிறகு
17.பிரம்ம வைவரத                  கி பி 700 பிறகு
18.பவிஸ்ய                                  கி பி 500 பிறகு
ஹஸரா (புராணங்களின் காலத்தை கணித்தவர்)

இராமாயணம்
இன்றுள்ள இராமாயணம்  வால்மீகி இராமாயணமல்ல. இராமாயண பாடல்கள் ஒன்றுக்கொன்று உடன்பட்டு வரவில்லை பழைய புதிய கருத்துக்கள் அடுத்தடுத்து வரிசைப்படுத்தி வைக்கப்பட்டிருக்கிறது  - திரு சி. வி வைத்யா
தொடக்கத்தில் அது இராவணன் இராமனுடைய மனைவி சீதையை அபகரிக்க சென்றதால் இராமனுக்கும் இராவணனுக்குமிடையே ஏற்ப்பட்ட போரைப் பற்றிய ஒரு சிறிய கதையாக இருந்தது. இரண்டவது பதிப்பில் அது நீதியை போதிக்கும் ஒரு கதையாக ஆகியது. மக்கள் ஆற்ற வேண்டிய கடமைகளை எடுத்துரைக்கும்  ஓர் உபதேச நூலக மாறியது.  
மூன்றாவது பதிப்பில் தொல் கதைகள், அறிவு, கல்வி, தத்துவங்கள் மற்றும் கலை, அறிவியல் முதலிய அனைத்தை யும் கொண்ட ஒரு நூலக மாறியது.

மகாபாரதம்
பற்பல இடைச்சொருகல்களினால் மகாபாரதம் பெருக்கமானது.
• மகாபாரதத்தின் மூலம் வியாசாரால் எழுதப்பெற்றதாகும் . இவர் இதற்கு கொடுத்த தலைப்பு 'ஜெயம்' என்பதே. பாடல்கள் 8800 - கௌரவர்களுக்கும் பாண்டவர்களுக்கும் நடந்த போரைப் பற்றி கூறும் ஓர் நூல்.
• இரண்டாவது பதிப்பு 'பாரதம்'- வைசம்பாயணர் என்பவரால் வெளியிடப்பட்டது. பாடல்கள் 24000- பல்வேறு உபதேசங்கள்  இடம்  பெற்றுவிட்டன. 
• சவுதி வைசம்பாயணரின் நூலை முழுவதுமாக திருத்தியமைத்து "மகாபாரதம்" என்ற தலைப்பில் வெளியிட்டார். பாடல்கள் 96836 - பல தொல் கதைகள் இணைத்து வெளியிட்டார். அரசியல், புவியல், வில்வித்தை முதலிய பல்வேறு கலைகளையும் இணைத்து வெளியிட்டார்.

மகாபாரத காலம்
• கி.பி 200க்கும் கி.பி 400க்கும் இடைப்பட்ட காலம் -பேரசிரியர் ஹாப்கின்ஸ்
• மகாபாரதத்தில் ஹூணர்களைப் பற்றி குறிப்புள்ளது. தோரயமாக கி.பி 455ல் ஸ்கந்த குப்தன் ஹூனர்களை தோற்கடித்தான்.
19 வது அத்தியாயம் வனப்பருவம் பாடல் 29 "இந்த உலகம் முழுவதுமே இஸ்லாமிய உலகமாக மாறிவிடும், இதனால் யாகங்கள் புனிதமான சடங்குகள், சமய விழாக்கள் யாவுமே அற்றுப்போகும்"
மேலும் வனப்பருவத்தில் பாடல் 65, 66 & 67 மக்கள் யாதுகாக்களை வழிபட முற்படுவார்கள்" என்று கூறப்படுகிறது. இதுகா என்ற சொல் யாதுகாவாக மறுவி உச்சரிக்கப்படுகிறது. முஸ்லிம்கள் ஒரு சுவற்றின் முன் நின்று பிராத்தனை செய்வார்கள் அதுவே "இதுகா" எனப்படும் -கோசாம்பி.
இந்தியாவின் மீது முகம்மது காசிம் என்பவன் கி.பி 712 ல் நடத்திய படையெடுப்புதான் முதல் இஸ்லாமிய படை எடுப்பாகும். இவனுக்கு பின் முகமது கஜினி படை எடுத்து வந்தான். இவன் இந்துக் கோவில்களையும் பௌத்த மடங்களையும் நாசப்படுத்தி கோவில் பூசாரிகளையும், பௌத்த பிக்குகளையும் படுகொலை செய்தான். ஆனால் அவன் மசூதிகளையோ பிராத்தனை சுவர்களையோ கட்டவில்லை. அவனுக்கு பின் வந்த முகமது கோரி தான் இதை செய்தான். இதிலிருந்து கி.பி 1200 வரை மகாபாரதம் எழுதி முடிக்கப்படவில்லை.
பகவத் கீதை
•பகவத் கீதையை யார் எழுதியது என்பது இதுவரை  யாருக்குமே தெரியாது. காலம்தோறும் பலர் கைக்கு மாறி பல்வேறு பதிப்புகளாக வெளிவந்தது.
• பகவத் கீதையில் வரும் பாடல்கள் பலர் எழுதியுள்ளனர். அதில் பலருக்கு இலக்கண விதிகளே தெரியவில்லை -பேரசிரியர் ராஜ்வதே.
•பகவத் கீதையிலுள்ள பாக்களில் மொத்தம் 60 பாக்கள் தான் மூலப்பாக்கள் மற்றவை பின்னால் எழுதி இடை சொருகல் செய்யப்பட்டவை - இராஜாராம் சாஸ்திரி
• 146 பாடல்கள் பகவத் கீதையில் பிற்காலத்தில் புதிதாகச் சேர்க்கப் பெற்றவையாகும். இவை மூலப்பாடல்களில் இல்லை. பேராசிரியர் கார்பே
கீதையின் காலம்  
• கி.பி 2ம் நூற்றண்டுக்கு முற்பட்டதாக இருக்க முடியாது -பேராசிரியர் கார்பே
• கி.பி 2ம் நூற்றாண்டில்  இவை எழுதப்பட்டிருக்க வேண்டும் - பேரசிரியர் உஷீத் &  திரு தொலங்கி
• பாலாத்திய அரசனுடைய காலத்தில் தான் பகவத் கீதை  இயற்றப்பற்றிருக்கவேண்டும். பாலத்தியன் குப்தா அரச மரபை சார்ந்தவன். கி.பி 467 ல் அரசு கட்டிலேறினான்.

o சங்கராச்சாரியார் (கி.பி 788 -882) பகவத் கீதைக்கு உரை எழுதுவதற்கு முன்னர் அது அத்தனை அறியப்படாத நூலாகவே இருந்தது.

o சந்திரஷித் என்பவர் தத்துவ சங்கிரகம் என்னும் ஆய்வு கட்டுரையைச் சங்கராச்சாரியார் பிறப்பதற்கு 50 ஆண்டுகளுக்கு முன்னர்தான் எழுதியுள்ளார். இந்தக் ஆய்வுக் கட்டுரையில் கீதை பற்றி குறிப்பிடவில்லை.

o விஜினவாதம் என்பது வசுபந்து தோற்றுவித்த ஒரு தத்துவம். இத்தத்துவம் பற்றி பிரம்ம சூத்திர பாஷியம் என்ற நூலில் திறனாய்வு செய்யப்பட்டுள்ளது. பிரம்ம சூத்திர பாஷியம் பற்றி பகவத் கீதையில் குறிப்பிடப்ட்டுள்ளது. எனவே பகவத் கீதை வசுபந்துக்கும் பிரம்ம சூத்திர பாஷியத்திற்கும் பிற்பட்டதாகவே இருக்கவேண்டும். வசுபந்து குப்த அரசன் பாலாத்தியனுக்கு குருவாக இருந்தவர்.

o பகவத் கீதை பாரதப் போருக்குச் சற்று முன்பாக பகவன் கிருஷ்ணனால் உபதேசிக்கப்படுவதாகக் கருதப்படுகிறது. ஆயினும் அந்தப் பகவானே பாரதக் கதைக்கு புதியவர். அப்போர் நடந்து பல நூற்றண்டுகள் கழித்தும் அந்தப் பகவனின் உயர்ந்த தெய்விகத் தலைமையை ஏற்றுக்கொள்ளப்படவில்லை. அதில் வழங்கும் சமஸ்கிருதம் கிட்டத்தட்ட கி.பி மூன்றாம் நூற்றாண்டுக்குறியது. பேரசிரியர் கோசாம்பி

o பகவத் கீதையில் கிருஷ்ணன் கடவுள் என்ற முறையில் தான் சதுர்வர்ண அமைப்பை உருவாக்கியதாக கூறுகிறார். அதாவது ஒருவருடைய உள்ளார்ந்த குணங்களுக்கு ஏற்ப ஒவொருவரின் தகுதியையும் தொழிலையும் அவர் நிர்ணயிக்கிறார். இந்த தத்துவம் புதியது. பழைய தத்துவத்தின் படி சதுர்வர்ணத்தின் அஸ்திவாரமானது வேதங்களின் ஆணையின் பேரில் இயற்றப்பட்டதகும். அறிவர் அண்ணல் அம்பேத்கர்

05. புத்தரை அவதாரமென கூறுபவர்கள் புத்தர் தருமம் சங்கம் ஆகிய மும்மணிகளுக்கு அவர்களின் பங்களிப்பு என்ன?

புத்தருடைய 32 முத்திரைகளில் முக்கியவற்றில் சிலவற்றை தங்கள் தேவதைகளின் (கடவுள்) கைகளிலும் உருவத்திலும் நாட்டினார்கள்.  பௌத்த விஹார்களையும் குகைகளையும் கைபற்றி சிதைத்து தங்கள் கடவுளை இடம் பெற செய்தது. பௌத்த நூல்களை அழித்தது. தங்களின் நூல்களில் புத்தரை மிக அவதூறாக எழுதிவைத்தது. பிக்குகளையும் பௌத்தர்களையும் கழுவேற்றியது, நாடு கடத்தியது.


11- நவம்பர்-1999 மாலை 3.30 மணியளவில் சாரநாத்தில்லுள்ள மகா போதி சங்க அலுவலகத்தில் பகவன் புத்தர் மகா விஷ்ணுவின் அவதாராம் என்ற பொய்யை திரும்பப் பெற்றுக்கொள்வதாக ஜகத்குரு சங்கரச்சாரியாவும் காஞ்சிபுரம் சங்கரமடத்தலைவர் ஜெயேந்திர சரசுவதிவும் விபாசன ஆசிரியர் S.N. கோயங்க  உடன் ஒரு ஒப்பந்தத்தில் கைஎழுத்திட்டு இருக்கின்றனர். http://www.vridhamma.org/en1999-13

இன்னும் ஏன்  இந்த பொய் பிரசாரம்.

நூல் குறிப்புகள்
01. அயோத்திதாசர் சிந்தனைகள் (சமயம், இலக்கியம்) தொகுதி II
      தொகுப்பாசிரியர் - ஞான. அலாய்சியஸ்
 02. பகவன் புத்தர் 
      தர்மானந்த கோசம்பி
 03. பண்டைய இந்தியா - பண்பாடும் நாகரிகமும்
      டி. டி கோசம்பி
 04. புத்தரும் அவருடைய சமயத்தின் எதிர்காலமும்
      போதிசத்தா அறிவர் அண்ணல் அம்பேத்கர்
 05. அறிவர் பாபாசாகேப் அம்பேத்கர் - பேச்சும் எழுத்தும்
      நூல் தொகுப்பு தொகுதி 7
 06. அறிவர் அண்ணல் அம்பேத்கர் தம்ம புரட்சி
       பரம்ய உருகேன் சங்கராக்ஷிதா
 07. புத்த நெறி
      தந்தை பெரியார்
 08. நான் ஏன் இந்து அல்ல
      காஞ்ச அய்லய்யா

வியாழன், ஆகஸ்ட் 18, 2011

புத்தரின் போதனைகள் -1


கரணிய மெத்த சுத்தங்
௦01. தமது ஒரே குழந்தையை, தம் சொந்த வாழ்வை தியாகம் செய்து காப்பாற்றும் ஒரு தாயைப் போலவே,
எல்லா உயிர்களிடமும் எல்லையற்ற அன்பைக்காட்ட ஒருவர் பழகிக்கொள்ள வேண்டும்

02.தவறான கருத்துகளில் வீழ்ந்துவிடாமல், சீலத்தையும் உள்ளுரு நோக்கையும் கொண்டவராய், புலனாசையை அகற்றுகின்ற ஒருவர் மீண்டும் கருப்பைக்குள் பிறப்பெடுப்பதில்லை.

குத்தக பாட - மங்கள சுத்தங்
01.அறிவிலிகளை அகற்றுதலும், அறிஞர்களுடன் கூடுதலும், மரியாதைக்குரிய இடத்தில் மரியாதை தருவதுமான இதுவே மிகவுயர்ந்த அருள் வாழ்த்தாகும்

02.தீமையை நீறுத்தலும் விலக்கலும், போதையுட்டுவனவற்றைத் தவிர்த்தலும், தம்மத்தில் விழிப்பாகவிருத்தலும் ஆகிய இதுவே மிக உயர்வான அருட்பேறு ஆகும்.

மகாவக்கபாலி, 365 கிளாவத்துகதா
எனக்கு சேவை செய்ய விரும்புவோர், நோயாளிகளுக்குச் சேவை செய்யட்டும்

வசல சுத்தங் -1
01.கோபம், பழியுணர்வு, தீய எண்ணம், பொறமை, தவறான கண்ணோட்டம் மற்றும் ஏமாற்றும் போக்கு ஆகியவற்றை உடைய ஒருவனே தீண்டத்தகாதவன் ஆவான்.

02.தாவரங்களுக்கிடையே பல வகைகளும் இனங்களும் உள்ளன
விலங்குகளுக்கிடையே பல வகைகளும் இனங்களும் உள்ளன
பறவைகளுக்கிடையே பல வகைகளும் இனங்களும் உள்ளன
மீன்கள், பூச்சிகள், பாலுட்டிகள் ஆகியவற்றினிடையே
பல வகைகளும் இனங்களும் உள்ளன ஆனால்
மனிதரிடையே - வேறுபாடே இல்லை

ஆளவக சுத்தம்
செல்வவளம் பெற உழைப்பாளியாய் இருங்கள்
செய்யத்தக்கன செய்யுங்கள்
புகழ்பெற - வாய்மையுடையோ ராயிருங்கள்
நண்பர்களை பெற - தாராளமாயிருங்கள்
மெய்யறிவு பெற - அறிவுற்று தம்மத்தை கேளுங்கள்
வேதனையுறாதிருக்க -தன்னடக்கத்தோடு செயல்படுங்கள்
ஈகை, வாய்மை, பொறாமையுடைமை
ஆகியவற்றைக் கைக்கொள்ளுங்கள்


தேரா காதை  
01.தவத்திலும் பிரம்மச்சரியத்தினாலும், புலனடக்கத்தினாலும், மனக்கட்டுபாட்டினாலும் தான் ஒருவர் உன்னதமானவராவார்.

02.அலங்கரிக்கப்பட்ட இந்த உடலை பாரீர்
இது புண்களின் குவியல்
மெலிந்து தளர்ந்து உறுதி யிழந்த ஒரு கட்டி
சிந்தையை வெகுவாய் ஆட்கொள்ளும் இதனில்
இல்லை எதுவும் நீடிப்பதாக!
இல்லை எதுவும் நீடித்திருப்ப தாக

சம்யுத்த நிகாயம்
01 தொடக்கத்திலும் நடுவிலும் முடிவிலும் - தத்துவ வடிவிலும், பயிற்சி வடிவிலும் நன்மை அளிப்பது  தம்மமே.  தங்கள் கண்களுக்கு முன்னே அறியாமையின் ஒரு சிறு திரையே உள்ள உயரினங்கள் தம்மத்தின் தொடர்பில் வரவில்லை என்றால் அவர்களுக்கு பேரிழப்பு ஏற்பட்டுவிடும். 

02.தற்செயல்தாமோ தீச்செயல்தாமோ
நடத்துகின்றானொரு மானுடன் இங்கெனில்
உற்றசொத்தென அவனுக்குள்ளது
உடனவன்கொண்டு செல்வது இவையே

03.நன்னெறி யாண்டுளதோ ஆங்கு மெய்யறிவு உள்ளது
மெய்யறிவு யாண்டுளதோ ஆங்கு நன்னெறி உள்ளது
மீண்டும் மீண்டும் பிறப்பதோ இறப்பதோ
மீண்டும் மீண்டும் சவக்குழி புகுவதோ
தெள்ளிய பார்வையும் தேறிய பாதையும்
நிப்பானம் உய்விக்கும் பிறப்பினை அறுக்கும்

04அறிவுடையோன் எப்போதும் இன்புறுகின்றான்
தனக்குள் முழுமையாய்ச் சுதந்திரம் அடைகின்றான்
புலனாசைகளால் அவன் கறைப்படுவதில்லை
பற்றற்றவனவன் பாதிப்புறுவதில்லை


தீக நிகாய, மகாபரிநிப்பன சுத்தங்
"தோன்றியவை யாவும் மறையும் தன்மை கொண்டதே;
சோர்வுறாது தொடர்ந்து முயற்சி செய்தவண்ணம் இருங்கள்"
          இதுவே புத்தரின் இறுதி வார்த்தைகள் ஆகும்.

மஜ்ஜிமநிகாயம் 140 ஆவது சூத்திரம்
உண்மைகளை உணர்ந்துக்கொள்ள போதனைகள் புத்தரிடமிருந்து வருகிறதா அல்லது வேறு ஒருவரிடமிருந்து வருகிறதா என்று பார்க்கக் கூடாது. அப்போதனைகளில் உண்மை இருக்கிறதா என்று மட்டுமே பார்க்க வேண்டும்

அந்த்தாலக்கண சுத்த
பிணியுறும் போதோ முதுமையுறும் போதோ
உடல் உம்சொல்லைக் கேட்கிறதோ?
"இல்லை இல்லை - அது கேட்பதில்லை"

ஆணையிட்டுப் பிணியை ஒருவன் அகற்றவியலாது
ஆணையிட்டுப் முதுமையினைக் தடுக்கவியலாது
ஆணையிட்டுப் மரணத்தை நிறுத்தவியலாது

ஓவ்வொரு கணமும் மாறும் இவ்வுலகம்
மாறா ஆன்மாவை பெற்றிருப்பதெங்ஙனம்?
அதனால் இயலாது

சுத்த நிபாதம் 4 .6
உண்மையில் வாழ்க்கை மிகச் சிறிய தேயாம்
ஒருவர் நூற்றண்டுக்குள் மடிவது திண்ணம்
உடமைகள் யாவும் விட்டே செல்வார்
எனினும் எண்ணுவர் ' இது எனதென்றே"


ரோசிதச்ச சுத்தம்
நான் போதிப்பன யாவும்
துன்பமும் அவற்றின் துடைப்புமே


மகாமங்கள சுத்தம்
தந்தை தாயாரைப் பெணிடுதலும்
மனைவி மக்களை காத்திடுதலும்
அமைதியான தொழில்கள் யாவிலும்
ஈடுபட்டு வாழ்தலுமான வாழ்வே
பேறுகள் யாவிலும் நற்பேறாகும்

தம்ம பதம்

01.அவன் என்னை கடுமையாக பேசினான், என்னை  அடித்தான்
என்னை  தோற்கடித்தான், என்னிடமிருந்து எல்லாவற்றையும்
எடுத்துக்கொண்டான் என்பன போன்ற சிந்தனைகளுக்கு
அடைக்களம் தரும் ஒருவரிடம் வெறுப்பு தணிவதில்லை. (3) 

02.இந்த உலகத்தில், வெறுப்பை வெறுப்பால்
ஒருபோதும் அணைக்க முடியாது.
வெறுப்பின்மையால் (அன்பு) தான்
அதை அணைக்க முடியும்.
இதுவே நிலையான தர்மமாகும். (5)

03.இல்லனவற்றை உள்ளனவென்றும்
உள்ளனவற்றை இல்லனவென்றும்
தவறிய கருத்தை பேணிடுவோர்கள்
உண்மையை என்றும் அடைவதேயில்லை (11)

04.குறைபட வேய்ந்த கூரைவீட் டுள்ளே
ஊடுருவிப் பெய்யும் மழையினைப் போலே
முறைப்பட மேம்பா டுற்றிடா நெஞ்சில்
ஊடுருவிக் காமம் உட்புகுந் திடுமே. (13)

05.இங்கும் துன்புறுகிறான் பின்பும் துன்புறுகிறான்
இம்மை மறுமை இரண்டிலும் தீயவன்
துன்பம் உறுகிறான் துன்புற்று அழிகிறான்
தன்னுடைய மாசுறு செயல்களைக் கண்டே (15)

06.மனத்தை கட்டுப்படுத்துவது நன்று
மகிழ்ச்சியை அளிப்பது கட்டுடை மனமே (35)

07.புரிந்து கொள்வதே கடினமாம் மனம்,
மிகு நுட்பமானதால், விரும்புமிடம் அதுதாவும்,
அறிவோர் மனம் அடக்குவோ ராக.;
அடங்கிய மனது மகிழ்ச்சியை கொணரும். (36 )

08.மக்களென் உடைமை வளங்களென் உடைமை
முட்டாள் மனிதன் முழங்குவான் இங்ஙனம்
அவனே அவனுக்குரியவன் என்றேனில்
மக்களா உடைமைகள்? வளங்களா உடைமைகள்? (62 )

09.செல்வவள மாற்றத்தால் சிதைவுறா
உள்ளமே வாழ்விற்சிறந்த பேறாகும்
அசைவிலாமல் புயலைத் தாங்கும்
உறுதியான பறைபோல்
அசைவிலாமல் உறுதிகொள்வர்
அறிஞர் போற்றல் தூற்றலில் (81 )

10.ஆயிரம் யுத்தங்களில் ஆயிரக்கணக்கான
மனிதர்களை வெல்பவனை விட
தம்மைத் தாமே வெல்பவன் தான்
மேன்மை வாய்ந்த போர் வீரனாவான். (103)

11.தமது மூத்தோரை இடைவிடாமல்
மதிக்கும் பக்தி இயல்புடையவர்களுக்கு
நீண்ட ஆயுள், அழகு, மகிழ்ச்சி, வலிமை
என்னும் நான்கு பண்புகளும் வளர்கின்றன (109 )

12.நல்லுரை தம்மால் நமக்கென்ன லாபம்
என்றொரு போதும் எண்ணுதல் வேண்டாம்
துளித்துளி நீரால் குவளை நிரம்பும்
துறவியோ தன்மை மதிப்பால் நிறைகிறார்
சிறுகச் சிறுக தான் என்றால் கூட (122)

13.அனைவரும் தண்டனையைக் கண்டு பயப்படுகிறார்கள்,
அனைவரும் மரணத்தைக் கண்டு பயப்படுகிறார்கள்.
ஆதலால், அனைவரையும் தம்மை போல் கருதி,
கொலை செய்யாமலிருப்பீர்களாக!
கொலை செய்வதையும் ஊக்குவிக்காமலிருப்பீர்களாக! (129 )

14.எவரிடமும் கடுங்சொற்களைப் பயன்படுத்தாதீர்கள்.
அவ்வாறு கடுங்சொற்களுடன் பேசினால் மற்றவர்களும் உங்களிடம்
அப்படியே பேசுவார்கள். கோபமும் விவாதமும் உள்ள சொற்கள் துன்பமே. அதன் விளைவாக உங்களுக்கு தண்டனைதான் கிடைக்கும். (133)

15.தனக்கெந்த நன்மையும்
செய்யாத செயலினையும்,
தீமைமிகு செயலினையும்
செய்வது மிக எளிதே;
அனால்
நன்மை பயப்பதையும்
நல்லதையும் செய்வதற்கு
உண்மையில் மிக கடினம் (163)


16.பசியே பெரும் பிணி (203)
உடல் நலமே பெரும் வரவு,
நம்பிக்கை உரியவர்களே உத்தம உறவினர்கள்  (204)

17.பற்றி லிருந்தே துக்கம் உதிக்கிறது
பற்றிலிருந்தே அச்சம் உதிக்கிறது
பற்றினை முற்றும் விட்டவற்கில்லை
துக்கம்; அச்சம்  அதைவிடக் குறைவே (216)

18.சீலம் உள்நோக்கில் நிறைநிலை உற்றவர்,
எவரவர் தம்மத்தில் நிலைத்து நிற்பவர்
உண்மை உணர்ந்தவர் தன்கடன் கழித்தவர்,
இவரே மக்கட் இனிவராம். (217 )

19.வாய்மைகளில் சிறந்தவை - நான்கு உன்னத வாய்மைகளே
வழிகளில் சிறந்தவை - உன்னத எண் வழிப்பாதைகளே
நிலைகளில் சிறந்தது - நிப்பான நிலையே
மனிதரில் சிறந்தவர் - இவற்றை காண்பவரே (273)

20.புத்தர்கள் வழியை மட்டுமே காட்டுவார்கள் (276)

21." கூட்டுப்பொருட்கள் யாவும் நிலையற்றதே ஆகும்"
உண்மையான ஆழ்நோக்குடன் இதை உணர்ந்தறியும்
ஒருவர் துன்பத்திலிருந்து விடுபட்டவர் ஆகிறார்.
இதுவே தூய்மையடைவதர்க்கான வழி. (277)

22.உண்மையாகவே, தியானத்தினால் தெள்ளறிவு (ஞானம்) உதிக்கிறது. தியனமில்லை என்றால், ஞானம் தேய்கிறது.
பெறுவதும் இழப்பதுமாகிய இந்த இருவழிப் பாதையை அறிந்துக்கொண்டு, ஞானத்தை அதிகரிக்கும் வழியில் ஒருவர் தன்னையே வழிநடத்திக் கொள்ளவேண்டும். (282)

23.தம்மத்தின் தானம் அனைத்து தானங்களையும்  வெல்லக்கூடியது
தம்மத்தின்  சுவை அனைத்து சுவைகளையும் வெல்லக்கூடியது
தம்மத்தின் மகிழ்ச்சி அனைத்து இன்பங்களையும் வெல்லக்கூடியது
விருப்பின் (ஆசை யின்) அழிவு அனைத்து   துன்பங்களையும் வெல்லக்கூடியது (354) 

24.பகைவர் இடத்திலும் நட்புடனிருத்தல்
வன்முறைக் கிடையிலும் அமைதியாயிருத்தல்
பற்றுள்ளோர் இடையிலும் பற்றற்றிருத்தல்
உற்றவ உன்னத மனிதர் என்பேனே (406)

தம்மபதம் முழுவதும் பார்க்க கீழ்காணும் தொடர்பை அழுத்தவும்

குறிப்புகள்

01. புத்த தம்மம் அடிப்படை கொள்கைகள் - டாக்டர் எஸ். வி. எதிரிவீர
- தமிழாக்கம் டாக்டர் வீ. சித்தார்த்த

02. புத்தரும் அவர்தம் போதனைகளும் - சங்கைக்குரிய நாரத தேரர்
 -தமிழாக்கம் - பிக்கு போதிபாலர்

03. விபசன்னா செய்தி மடல் - தம்ம சேது, சென்னை  

செவ்வாய், ஆகஸ்ட் 16, 2011

புத்தரின் பதில்கள் 3

மனித மாமிசம் உண்ணும்  ஆலாவகன் புத்தரிடம் கேட்டான்? 

இங்கே   மனிதனின் உடமைகளிற் சிறந்தது எது?
எதை நன்றாக பயிற்சி செய்தால் மகிழ்ச்சியளிக்கும்?
சுவைகளில்   மிகச் சிறந்த சுவை  எது?

சுவைகளில் மிகச் சிறந்த சுவை எது?
எப்படி வாழ்ந்தால் சிறந்த வாழ்க்கை எனப்படும்?
இந்த   வினாக்களுக்கு புத்தர் இவ்வாறு  பதிலளித்தார்.

இங்கே   தன்னம்பிக்கையே மனிதனின் சிறந்த உடமை
தம்மத்தை நன்கு பயின்றொழுகினால் மகிழ்ச்சியளிக்கும்
வாய்மையே சுவைகளில் மிகச் சிறந்த சுவை
புரிந்துணர்வோடு வாழும் வாழ்க்கையே சிறந்த வாழ்க்கையாகும்


அடுத்து ஆலாவகன் புத்தரைக் கேட்டான்?
வெள்ளத்தை ஒருவன் கடப்பதெப்படி?
கடலை ஒருவன் கடப்பதெப்படி?
துக்கத்தை ஒருவன் வெல்வதெப்படி?


புத்தர் பதிலளித்தார்
தன்னம்பிக்கையால் ஒருவன்
வெள்ளத்தை கடப்பான்

கவனத்தால் ஒருவன்
கடலை கடப்பான்

உழைப்பால் ஒருவன்
துக்கத்தை வெல்வான்

ஞானத்தால் ஒருவன்
தூய்மை அடைவான்

வியாழன், ஆகஸ்ட் 11, 2011

புத்தரின் பதில்கள் 2


புத்தரின் ஆசிரியர் யார்?


தம்மத்தை போதிக்க காசி செல்லும் வழியில், துறவியாக திரிந்து கொண்டிருந்த உப்பகன் என்ற பெயர் கொண்ட ஒரு துறவி அவரை பார்த்து, நண்பரே! உமது புலன்கள் மிகவும் தெளிவடைந்துள்ளன. உமது உடற்பொலிவு துயதாகவும் தெளிவாகவும் உள்ளது. நண்பரே!

யார் பொருட்டு நீர் துறவு மேற்கொண்டீர்?
உமது ஆசிரியர் யார்?
யாருடைய கொள்கைகளை நீர் பின்பற்றுகீறீர்? என்று கேட்டார்

புத்தர் பதிலளித்தார்
அனைத்தையும் வென்று விட்டேன்
அனைத்தையும் அறிந்து விட்டேன்
அனைத்திலும் பற்றறுத் தேன்
அனைத்தையும் துறந்து விட்டேன்

ஆவாவெலாம் அழித்து நிற்கும்
அரகந்த நிலையில் நானே
அமிழ்ந்து கிடக்கின்றேன்
அனைத்துமே முழுமையாக
அனைத்தையும் நானாய்த் தானே
அறிந்துமே புரிந்து கொண்டேன்

ஆசிரியர் என்றேனக்கு
யாருமே இல்லை இங்கு
நிகராக இருப்பவர் இல்லை
இவ்வுலகத்தில் எவ்விடத்தும்

தெய்வங்கள் உள்ளடங்க
எனக்கெதிர் நிற்க வல்லார்
யாருமே இல்லை இங்கு
மெய்யேதான் நான் இப்பாரில்
அரகந்த னாயிருத்தல்
ஒப்புயர்வற்ற ஆசான்
இங்கு நான் ஒருவனே தான்

பூரண மெய் ஞானம் பெற்றோன்
புவியில் நான் ஒருவனே தான்

தன்மையாடு சாந்தி
மேவிய வாழ்கின்றேன் நான்
தம்ம சக்கரத்தை காசி
நகரிலே நாட்டுதற்குச்
செல்கின்றேன், மரணமில்லாப்
பெருவாழ்வு முரசு தன்னைக்
கொட்டுதற்கே

திங்கள், ஆகஸ்ட் 08, 2011

புத்தரின் பதில்கள் -1புத்தரென்பவர் யார்?

ஒரு சமயம் துரோணர் என்ற அந்தணர் புத்தரை அணுகி வினவலானார்.

வணக்கத்திற்குரியவரே, தாங்கள் ஒரு தேவரா?
இல்லவே இல்லை, அந்தணரே. நான் ஒரு தேவனல்லன் என்று பதிலளித்தார் புத்தர்

அப்படியானால், போற்றுவதற்குரியவரே, தாங்கள் ஒரு கந்தர்வரா இருப்பீர்களா?
இல்லவே இல்லை, அந்தணரே நான் ஒரு கந்தர்வனல்லன்

அப்படியானால், தாங்கள் ஒரு யகசரோ?
இல்லவே இல்லை, அந்தணரே நான் ஒரு யக்னல்லன்

அப்படியானால், போற்றுவதற்குரியவரே, தாங்கள் ஒரு மனிதர்தான?
இல்லவே இல்லை, அந்தணரே நான் ஒரு மனிதனல்லான்

அப்படியானால், போற்றுவதற்குரியவரே, வணங்கி கேட்டுக்கொள்கிறேன், தாங்கள் யார்?
புத்தர் தனது மறுமொழியில், தேவன், கந்தர்வன், யக்சன் (அ) மகான் கட்டாயமாக பிறப்பெடுக்க வைக்கும். மானமாசுக்களை எல்லாம் அழித்தது விட்ட ஒருவர் தாம் என்று கூறியதுடன்.

" ஆசைக்குரிய அழகுத் தாமரை
நீரினால் தூய்மை இழந்திடுவ தில்லை"
நாவிவ் வுலகினால் மாசடைவ தில்லையால்
உத்தம அந்தணா நானொரு புத்தன்"
என்றார் புத்தர்
நிபாத சுத்த

~*~ புத்தர் தம்மை இந்துக்களின் கடவுளான மகாவிஷ்ணுவின் அவதாரம் என்று கூறிக்கொள்ளவில்லை. மீண்டும் மீண்டும் பிறப்பவரே விஷ்ணு என்று பகவத் கீதை கூறுகிறது.

வெள்ளி, ஆகஸ்ட் 05, 2011

புத்த மார்க்க வினா விடை-3


க. அயோதிதாஸ் பண்டிதர் எழுதியது.

01 . புத்தராகிய சற்குரு ஞான நீதிகளைப் போதித்து வந்தார் என்பதில் ஞானம் என்பதின் பொருள் என்ன?
ஞானம் என்பது அறிவு என்னும் பொருளைத் தரும். அஃது சிற்றறிவு என்றும் பேரறிவு என்றும் இரு வகைப்படும்.

02. சிற்றறிவு என்றும் பேரறிவு என்றும் இரு வகை அறிவுகள் உண்டோ?
உண்டு, அதாவது, சிறு வயதுள்ள மனிதன் என்றும் பேரு வயதுள்ள மனிதன் என்றும் தேகியை (தேகத்தை) குறிப்பது போல அறிவினிடத்திலும் விருத்தி பேதத்தால் இரு வகைகள் உண்டு.

03. சிற்றறிவு என்பது என்ன?
தங்கள் மனதை வீண் விஷயங்களில் செல்லவிடாமலும், தேகத்தைச் சோம்பல் அடையச்செய்யாமலும், உலோகங்களால் செய்யுங் கருவிகளையும், மரங்களால் செய்யுங் கருவிகளையும் கண்டுபிடித்து, உலகில் உள்ள சீவராசிகளுக்கு சுகம் உண்டாக்கி வைப்பது அல்லாமல், தங்களையும் தங்களை அடுத்தோர்களையும் குபேர சம்பத்தாக வாழ்விக்கச் செய்யும் ஓர்வகை உத்திக்கு சிற்றறிவு என்று கூறப்படும்.

04. அவ்வகை சிற்றறிவினால் கண்ட வித்தைகள் எவை?
பஞ்சை நூலகத் திரிப்பதும், நூலை ஆடையாக்குவதும், மண்ணிற் பலன் உண்டாக்குவதும், மண்ணை இரும்பாக மாற்றுவதும், இரும்பை இயந்திரங்களாக்குவதும், இயந்திரங்களால் புகைரதம், புகைகப்பல், மின்சாரதந்தி, மின்சார ரத முதலிய சூத்திரங்களை உண்டு செய்வதேயாம். இவ்வகை சிற்றறிவுடையவனை சூஸ்திரனென்றும், சூத்திரனென்றும் கூறப்படும். இதுவே விருத்தி ஞானமாம்.

05 பேரறிவு என்பது என்ன?
சீவராசிகளாகக் தோன்றும் யாவும் அநித்தியம் (நிலையற்றது) என்று அறிந்து மண்ணாசை, பெண்ணாசை, பொன்னாசை ஆகிய முப்புரங்களையும் அறிந்து எல்லாக் கவலையும் அற்று இருப்பதை பேரறிவு என்றும் சொருப ஞானம் என்றும் உண்மை என்றும் கூறப்படும்.

06 இவ்வகை பேரறிவினால் உலகில் உள்ளோருக்கும் தனக்கும் உண்டாகும் பயன் என்ன?
தனக்கு உண்டாகும் பிறப்பு, பிணி. மூப்பு, மரணம் என்னும் நான்கு வகைத் துக்கங்களை ஜெபித்துக்கொள்வது அல்லாமல் தன்னை அடுத்தவர்களுக்கும் சுகவழியைப் போதிப்பான். இவ்வகை பேரறிவாளனை வடமொழியில் பிராமணன் என்றும் தென்மொழியில் அந்தணன் என்றும் கூறப்படும்.

07 அஞ்ஞனம் என்பது என்ன?
அஞ்ஞனம் என்பது அறிவின் விருத்தி இல்லாமல் என்று கூறப்படும். அதாவது தன்னுடைய அறிவினால் ஒன்றை விசாரித்து தெளியாமல் ஒருவன் சொல்லுவதை நம்பிக்கொண்டு பேசுவது, ஒருவன் எழுதி வைத்திருப்பதை நம்பிநடப்பது ஆகிய செய்கைகளை அஞ்ஞனம் எனபபடும்.

08 உலகத்தில் எழுதிவைத்திருக்கும் வேதங்களும் புராணங்களும் அவற்றின் போதனைகளும் அஞ்ஞனம் ஆகுமோ?
அவைகளை வாசித்த நிலையிலும், கேட்ட நிலையிலும் நிற்பது, கற்கண்டு என்று எழுதியிருப்பதையும் கற்கண்டு என்று போதித்த வார்த்தையும் கேட்டுக்கொண்டு அதை விசாரியாமலும், சிந்தியாமலும், கற்கண்டு கற்கண்டேன்னும் பொருகளை எல்லோரும் காணக்கூடியதாய் இருந்தாலும் அதின் இனிப்பாகிய சுவையை ஒவ்வொருத்தனும் சுவைத்தறிந்துக் கொள்ளக் கூடியவனாக இருக்கிறான்.

09. மெஞ்ஞானம் என்பது என்ன?
வாசித்தவைகளையும், கேட்டவைகளையும் சிந்தித்து தெளிவடைதலும் கற்கண்டு என்பவை எதிலிருந்து உற்பத்தியாகிறது? அதின் நிறம் ஏத்தகையது? அதின் சுவை ஏத்தகையது? என்று தேடி வாசரித்து சுவைத்து அறிந்த நிலையே மெஞ்ஞானம் எனப்படும்.

10. புத்தர் மரணம் அடைந்தார் என்றும், புத்தர் நிருவாணம் அடைந்தார் என்றும் கூறும் படியான இருவகை வார்த்தைகளின் பேதம் என்ன?
துன்பத்திற்கு இன்பம் எதிரிடையாகவும், துக்கத்திற்கு சுகம் எதிரிடையாகவும் இருப்பது போல, மரணத்திற்கு நிருவாணம் எதிரிடையாயிருக்கின்றது. எக்காலத்தும் நித்திரையில்லாமல் விழித்திருப்பவனை போலும், இரவென்பது இல்லாமல் பகலவனாய் இருப்பது போலும், பிறவியை நீக்கி நித்திய ஜீவனானவர்களுக்கு நிருவாணம் அடைந்தோர் என்றும், தேகத்தில் நோய்க்கண்டு பலவகைத் துன்பங்களால் கபமீறி சுவாசம் அடைக்குங்கால் பொருளின் பேரிலும், பெண்சாதி பிள்ளைகள் பெயரிலும் இருக்கும் பாசம் இழுத்து, பெரு நித்திரை உண்டாக்கி அநித்திய சிவனையடைந்து பிறவியின் ஆளானோர்களை மரணம் அடைந்தார் என்றும் கூறப்படும். ஆசாபாச பற்றுகளில் அழுந்தி மரணமடைந்தோர்களுக்கு பிறவியின் துன்பமும், ஆசாபாசங்கள் அற்று நிர்வாணமடைதோர்களுக்குப் பிறவியற்ற இன்பமும் உண்டாம்.

11. நிருவாணம் என்பது என்ன?
பொய்மை ஆகிய தேகத்திக்பேரில் அணைந்துள்ள வஸ்திரங்கள் எல்லாவற்றையும் கழற்றி எறிந்து விடுவதை தேக நிருவாணம் என்றும்; பெண்ணாசை, மண்ணாசை, பொன்னாசை என்று மனதில் அணைந்துக் கொண்டிருக்கும் பற்றுக்களை கழற்றி எறிந்துவிட்டு உண்மையாகிய ஒளியுற்றலை நிருவாண நிலை என்றும், அந்தர நிர்வாணம் என்றும், எல்லோரும் தரிசிக்க உண்மை ஜோதி வானோக்கி எழுதலை மகா பரிநிர்வாணம் என்றும் கூறப்படும். (ஆசை என்னும் இளமையிலிருந்து ஆசையற்று முத்தினான், முத்திபெற்றான், கடைத்தேறினான், மோக்கமுற்றான் நிருவாணமடைந்தான் என்று வழங்கி வருகிறார்கள்) இவ்வகையான சுகவழியை ஆதியில் போதித்தவுரம், அதின் அனுபவமாகிய சுகமுக்தியைக் காண்பித்தவரும், சற்குருவான புத்தராகையால் அவர் போதித்த சுயக்கியான வழியினின்று நிருவாணமுற்ற பின் அடியார்களை ஆதிக்க சமமானவர்கள் என்றும், சமஆதியானார்கள் என்றும், சமாதியானார்கள் என்றும் வழங்கி வருகிறார்கள்.

12. தன்னிற்றானே உண்மை அறிந்து சுகமடைய வேண்டுமேயல்லது பிறரால் யீடேற்றம் உண்டாவதில்லை என்னும் சுயக்கியானத்தைப் போதித்த புத்தரவர்கள் இவ்வுலகத்தில் எத்தனை வருடமிருந்தார்?

சாக்கிய சக்கரவர்த்தி திருமகனாக பிறந்து பதினாறாவது வயதில் அசோதரை என்னும் மலையசன் புத்திரியை விவாகம் செய்து, இருபதாவது வயதில் இராகுலன் என்னும் ஓர் புத்திரனைப் பெற்று, இருபத்தியோராவது வயதில் அரசாங்கத்தையும் தனது பந்துமித்திரரையும் விட்டு அரச மரத்தடியில் நிலைத்து தன்னையறிந்து காமமென்னும் மன்மதனையுங் காலனென்னும் மரணத்தையுங் செயித்து, முப்பதாவது வயதில் உண்மையின்று உலகேங்கும் சுற்றி சுயக்கியான சங்கங்களை ஏற்படுத்தி ஜீவகாருண்ய வாழ்க்கையையிருத்தி விட்டு, எண்பத்தைந்தாவது வயதில் காசியில் கங்கைக்கரை என்று வழங்கும் பேரியாற்றங்கரை பல்லவ நாட்டில் சோதிமயமாக எல்லோரும் தரிசிக்கும்படி நிருவாண திசையடைந்தார்.

13. பிறவி என்பது என்ன?
அணுவிலும் சிறிய சீவராசிகள் கண்களுக்குத் தோன்றும் உருவமாக எழும்புவதைப் பிறப்புபென்றும், அந்த தோற்ற உருவம் அழிந்துவிடுவதை இறப்பென்றும் கூறப்படும். இதில் கண்களுக்கு தோன்றும் தேகத்திற்கு பொய்மையென்றும், அதை தோற்றிவிக்கும் சத்துக்கு உண்மையென்றும், இருவகைகள் உண்டு. இவற்றுள் தேகத்தை தானென்று அபிமானித்திருக்கும் வரையில் பிறவியென்னும் துக்க சக்கரத்தில் சுழன்று திரிவான். தேகத்தை தானல்லவென்று நீக்கி உண்மையாகிய தன்னையறிந்தவன் பிறவியென்னும் துக்க சக்கரத்தை விடுவித்துக் கொள்ளுவது மல்லாமல் தேகனென்று சொல்லும் வார்த்தை நீங்கி தேவனென்று சொல்லும் மேன்மையடைவான்.

14 சிலர் தன் முயற்சியினால் சுகம்பெரும் வழிகளை நம்பாமல் மணி மாலைகளைக் கொண்டு ஜெபித்திருப்பது என்ன?
ஒரு வசனத்தை பலமுறை சொல்வதே ஜெபமாகும். அவற்றுள் எண் வழுவாமல் காக்க மணிமாலையை சுழற்றுவதன்றி மற்றியாதும் இதில் பயனில்லை.

15. கடவுளை வழிபடுவது என்றால் என்ன?
அவர் உலகில் பிறந்து நமக்கு அருளிய நியாயங்களில் நாம் நின்றோழுகுவதே கடவுளை வழிபடுவதேயாகும்.

16 கடவுளை மாத்திரம் நம்பிக்கொண்டு முக்திபெற முடியாதோ?
கடவுள் என்பதற்கு நன்மெய் என்ற பொருளிருக்க அம்மொழியை மட்டும் விசுவாசித்து வாக்கு, மனம், காயத்தால் தீயச்செய்கையில் நிலைப்பவர்க்கு முக்தியே இல்லை.

17 அறிவே ஆனந்தம் எனபதென்ன?
அறிவால் சர்வமும் உணர்ந்து புண்ணியத்தைக் கைக்கொள்வது மக்களின் முதற் பேறாகும் இதனை அறிவின் மயமென்றும் சொல்லப்படும்.

18 . இவைகளை வகுத்தார் யார்?
ஆதியங் கடவுளாகிய சாக்கைய புத்த சுவாமியே.

19 . இவ்வகை பேரானந்த ஞானங்களைப் போதித்த சற்குரு நிருவாண திசையடைந்து எத்தனை வருடமாகிறது?
இந்தகலியுகம் 5057 மன்மத - சித்திரை மாதம் ( மே 1955 ) பௌர்ணமி திதி வரையில் 2499 வருடமாகிறது. (தற்போது சித்திரை மாதம் மே 2011 பௌர்ணமி திதி வரையில் 2555 வருடமாகிறது)

20 . புத்தர் போதித்துள்ள அட்டாங்க மார்க்கத்தில் மனதையடக்க மந்திரங்கள் ஏதேனும் உண்டோ?
உண்டு. மந்திரம் என்பதற்கு ஆலோசித்தல் என்னும் பொருளை தரும் அதாவது, மனமென்னும் சத்துவிழிப்பில் எங்கிருந்து உதிர்கின்றன, நித்திரையில் எங்கு அடங்கின்றன, சொப்பனத்தில் எங்கு விரிகின்றன வென்று ஆலோசித்தல் மந்திரம் எனப்படும்.

21 . மனம் அடங்குவதற்கு தியானமாகிலும் ஏதேனும் உண்டோ?
உண்டு. தியானம் என்பதற்கு கியானம், ஞானமென்னும் பொருளைத் தரும், அதாவது மனதைப் பேராசையிற் செல்லவிடாமலும், பொறமையில் சூழவிடாமலும், வஞ்சினத்தில் நிலைக்கவிடாமலும், காம இச்சையில் விழவிடாமலும், ஜாக்கிரதையாக ஆண்டுவரும் அறிவுக்கு தியானம் எனப்படும்.

22 . மனம் அடங்குவதற்குப் பூசைகள் ஏதேனும் உண்டோ?
இல்லை. பூசையென்பதும், பூசனையென்பதும், பூசலென்பதும் தேகத்தை தடவலென்னும் பொருளைத்தரும். அதாவது கல்வியை கற்பிக்கும் குருவையானாலும், கை தொழிலை கற்பிக்கும் குருவையானாலும், ஞானத்தை போதிக்கும் குருவையானாலும் நெருங்கி அவருடைய கை, கால் முதலிய அவயங்களைப் பிடித்தலுக்கு பூசதலென்று பெயர். இவ்வகை பூசைக்கும் மனதுக்கும் யாதொரு சம்பந்தமில்லை.

23 . அருகமதம் வேறு, புத்த மதம் வேறென்று கூறுகின்றார்களே அதின் விவரம் என்ன?
வட தேசங்களில் உள்ளவர்கள் புத்தரென்றும், தென் தேசங்களில் உள்ளவர்கள் அருகரென்றும் (பல காரியத்திலும் நானகருனல்ல என்றும்) வழங்கி வருகின்றார்கள்.

24 . சமணமதம் என்பது என்ன?
புத்த தருமத்தை அனுசரித்து சங்கங்களில் சேர்ந்து மடத்தில் வாழ்கிறவர்கள் சகல சீவராசிகளின் பேரிலும் அன்புவைத்து சமமனமுண்டாகி வாழ்ந்தவர்கள் ஆகையால் சமனர் என்றும் சமணாள் என்றும் அழைக்கப்பெற்றார்கள்.

25 . சமணர்களை கழுவேற்றி விட்டதாக சொல்லுகின்றார்களே அதின் விவரம் என்ன?
வேட பிராமணர்கள் தங்கள் சீவனங்களுக்காக ஏற்படுத்திக்கொண்ட மதங்களை உறுதி செய்துக் கொள்ளுவதற்கு சிற்றரசர்களையும் பெருங்குடிகளையுங் தங்கள் வயப்படுத்திக் கொண்டு புத்த தருமத்தை அனுசரித்து வந்தவர்களைக் கழுவிலேற்றிக் கொன்றதுமல்லாமல் பலவகை துன்பங்களையும் செய்து வந்தார்கள்.

26 . வேடபிராமணர்கள் இந்தியாவில் மாத்திரமா பௌத்தர்களை கழுவிலேற்றி வதைத்தார்கள் ஏனைய கண்டங்கட்கு போகவில்லையா?
எல்லா கண்டங்கட்கும் குடியேறி அக்கண்டங்களில் சிறந்து விளங்கிய சமணர்களையும் அவர்களை ஆதரித்து வந்தவர்களையும் கழுவிலும், மரத்திலும் கொன்று வேதங்கட்கு சுதந்திரம் பெற்று அவ்வக் கண்டத்தார்களைப் போலவே நிற்கின்றார்கள்.

27 . கழுவிலேற்றி கொன்ற சமணர்கள் நீங்கலாக மற்றவர்கள் எங்கு போய்விட்டார்கள்?
சற்குருவின் அருளினால் வேறு வேறு மதத்தவர்களாகிய அரசர்கள் இத்தேசத்தை வந்து கைபற்றிக்கொண்ட படியால் சமணர்களையும் அவர்களை சார்ந்தவர்களையுங் கொல்லுவதற்கு ஏதுமில்லாமல் பறையர் பறையரென்று தாழ்த்தி வஞ்சிளமென்னுங் கழுவிலேற்றி வதைத்து வருகின்றனர்.

28 . ஜைன மாதம் என்பது என்ன?
புத்தருடைய ஆயிர நாமங்களில் ஜைரரென்னும் பெயரும் அடங்கியிருக்கின்றன. அப்பெயரை வகுத்திக்குங் கூட்டத்தார் புத்த தருமத்திற்கு சிலவற்றையும் வேட பிராமணர்கள் ஏற்படுத்தியிருக்கும் மதக்கட்டுப்பாடுகளிற் சிலவற்றையும் அனுசரித்துக்கொண்டு ஜைத மதத்தரென வழங்கி வருகிறார்கள்.

29 . சின்னசாமி என்ற பெயரும் அதற்கெதிர் பெரியசாமி என்ற பெயரும் பௌத்தர்கள் வழங்குவதின் காரணம் என்ன?
தமிழ்மொழில் (ஜினசாமி) யாகிய புத்தரை சினசாமி சின்னசாமி சின்னச்சாமி என்றும் சாமிகட்கெல்லாம் முதலுமதிகாரியு மானதால் மகாசாமி என்றும் பெரியசாமி என்றும் வழங்குகிறார்கள். இதன் அர்த்தமுணராதார் சாமியில் சின்னதும் பெரியதும் உண்டோ என்று கேழ்க்கிறார்கள்.

புதன், ஜூலை 20, 2011

பகவான் புத்தர் அருளிய போதனைகள் -புக்குசாதி

IF YOU FIND TRUTH IN ANY RELIGION, ACCEPT THAT TRUTH. (Buddha)


உண்மைகளை உணர்ந்துக்கொள்ள போதனைகள் புத்தரிடமிருந்து வருகிறதா அல்லது வேறு ஒருவரிடமிருந்து வருகிறதா என்று பார்க்கக் கூடாது. அப்போதனைகளில் உண்மை இருக்கிறதா என்று மட்டுமே பார்க்க வேண்டும்


To the seeker after Truth it is immaterial from where an idea comes. The source and development of an idea is a matter for the academic. In fact, in order to understand Truth, it is not necessary even to know whether the teaching comes from the Buddha, or from anyone else. What is essential is seeing the thing, understanding it. There is an important story in the Majjhima-nikāya (sutta no.140) which illustrates this.

சத்திய நாட்டமுள்ளவர்க்கு ஒரு கருத்து எங்கிருந்து வருகிறது என்பதில் அக்கறையில்லை. ஆராட்சியில் ஈடுபட்டவர்க்கு ஒரு கருத்து எங்கே தோன்றி எவ்வாறு வளர்ந்தது என்பது முக்கியமனதாய் இருக்கலாம். சத்தியத்தை உணர்ந்து கொள்வதனால் அது புத்தர் கூறியதா வேறு ஒருவர் அருளியதா என்பதை அறிந்து கொள்வதே அவசியமில்லை. எது அவசியம் என்றால் உண்மையைக் காணுதல், அதைப்புரிந்து கொள்ளுதல், மஜ்ஜிமநிகாயம் 140 ஆவது சூத்திரத்தில் இதனை விளக்கும் ஒரு முக்கியமான கதை உண்டு.

The Buddha once spent a night in a potter’s shed. In the same shed there was a young recluse who had arrived there earlier. They did not know each other. The Buddha observed the recluse and thought to himself: ‘Pleasant are the ways of this young man. It would be good if I should ask about him’. So the Buddha asked him ‘O bhikkhu, in whose name have you left home? Or who is your master? Or whose doctrine do you like?’

புத்த பகவான் ஒரு குயவனுடைய சாலையில் இரவைக்கழித்தார். அதே சாலையில் ஏற்கனவே அங்குவந்து சேர்ந்த ஒரு இளம் சந்நியாசியும் இருந்தார். ஆனால் ஒருவரை ஒருவர் அறிந்து கொள்ளவில்லை. அந்த சந்நியாசியின் போக்கை கவனித்த புத்தர் தமக்குள் நினைக்கலானார். " இந்த இளவலின் நடத்தை நன்றாய் இருக்கிறது. இவரை கேட்டறிந்துகொள்வது நல்லது". புத்தர் அவரை " ஒ பிக்குவே யாருடைய உபதேசத்தை கேட்டுச் சந்நியாசங் கொண்டீர்? உங்களுடைய ஆசிரியரின் பெயரென்ன? எவருடைய கொள்கையை நீர் மேற்கொள்ளுகீறீர்?.

‘O friend,’ answered the young man, ‘there is the recluse Gotama, a Sakyan scion, who left the Sakya-family to become a recluse. There is high repute abroad of him that he is an Arahant, a Full-Enlightened One. In the name of that Blessed One I have become a recluse. He is my Master, and I like his doctrine.’

வாலிபர் கூறினார், " நண்பரே! கோதமர் என்ற சாக்கியச் செம்மல் துறவியாய் இருக்கிறார், அவர் சாக்கிய குடும்பத்தைத் துறந்து பிக்குவானார். அவர் பூரண ஞானம் பெற்ற அருகதர் என எங்கும் புகழ் பெற்றிருக்கிறார். அந்தப் பகவானுடைய பெயராலேயே நான் துறவு பூண்டேன். அவரே என் குரு. அவருடைய தருமத்தை நான் ஏற்றுக்கொண்டேன்".

 ‘Where does that Blessed One, the Arahant, the Fully-Enlightened One live at the present time?’

இப்பொழுது பூரண ஞானம் பெற்ற பகவானான, அந்த அருகதர் எங்கே இருக்கிறார்?

‘In the countries to the north, friend, there is a city called Sāvatthi. It is there that Blessed One, the Arahant, the Fully-Enlightened One, is now living.’

"நண்பரே! வடக்கே உள்ள நாட்டில் சவாத்தி என்ற ஒரு நகரம் உண்டு. அங்கேதான் பூரண ஞானம் பெற்ற அருகதரான பகவான் இப்பொழுது வசிக்கிறார்".

‘Have you ever seen him, that Blessed One? Would you recognize him if you saw him?’

"அந்த பகவானை எப்போதாவது கண்டிருக்கிறீரா? நீர் அவரை கண்டால் இனங்கண்டு கொள்வீரா?"

‘I have never seen that Blessed One. Nor should I recognize him if I saw him.

"நான் அந்த பகவானைக் பார்த்ததில்லை. கண்டால் இவர் தான் என்று அறிந்து கொள்ளவும் மாட்டேன்.


The Buddha realized that it was in his name that this unknown young man had left home and become a recluse. But without divulging his own identity, he said: ‘O bhikkhu, I will teach you the doctrine. Listen and pay attention. I will speak.’

இந்த வாலிபர் இல்லறத்தைத் துறந்து சந்நியாசங் கொண்டது தம்முடைய தருமத்தைப் பின்பற்றியே என்பதை புத்தர் உணர்ந்தார். தான் இன்னார் என்பதைக் காட்டிக் கொள்ளாமலே புத்தர், " ஒ பிக்குவே! நான் தருமத்தைப் போதிக்கிறேன். நான் கூறுவதை கவனமாக கேட்பீராக."
‘Very well, friend,’ said the young man in assent.
" நல்லது நண்பரே," என வாலிபர் ஒப்புக்கொண்டார்

Then the Buddha delivered to this young man a most remarkable discourse explaining Truth.

பகவான் பின்னர் சத்தியம் என்றால் என்ன என்பதைப் பற்றி மிகச் சிறந்த உபதேசத்தைப் செய்தார்

It was only at the end of the discourse that this young recluse, whose name was Pukkusāti, realized that the person who spoke to him was the Buddha himself. So he got up, went before the Buddha, bowed down at the feet of the Master, and apologized to him for calling him ‘friend’ unknowingly. He then begged the Buddha to ordain him and admit him into the Order of the Sangha.

புக்குசாதி என்ற இந்தத் துறவி பகவானுடைய அறிவுரையை கேட்டு முடியுந் தருவாயில் தான் தனக்கு தருமம் உபதேசங் செய்தவர் புத்தர் என்பதை உணர்ந்து, எழுந்து, புத்தர் முன் சென்று அவருடைய பாதங்களில் விழுந்து வணங்கி, தெரியாமல் தான் அவரை நண்பன் என்று மரியாதையின்றிக் கூறியதை மன்னிக்குமாறு வேண்டிக்கொண்டார். பின்னர் சங்கத்தில் தன்னை சேர்த்துக் கொள்ளுமாறு இறந்து வேண்டினார்.

 The Buddha asked him whether he had the alms-bowl and the robes ready. (A bhikkhu must have three robes and the alms-bowl for begging food). When Pukkusāti replied in the negative, the Buddha said that the Tathāgatas would not ordain a person unless the alms-bowl and the robes were ready. So Pukkusāti went out in search of an alms-bowl and robes, but was unfortunately savaged by a cow and died.

பிண்டாபாத்திரமும் சீவர உடையும் தயாராக இருக்கின்றனவா என்று புத்தர் அவரை கேட்டார். (பிக்குவிடம் மூன்று சீவர உடையும், பிச்சை எடுப்பதற்கு பிச்சா பாத்திரமும் இருக்க வேண்டியது அவசியம்). இல்லை என்று அவர் கூறியதும், பிண்டாபாத்திரமும் சீவர ஆடையும் இல்லாதபோது அவர்களுக்கு தாதாகர்கள் பிக்குவாக தீட்சை செய்ய மாட்டார்கள் என்று கூறினார். உடனே புக்குசாதி பிண்டாபாத்திரமும் சீவரமும் தேடச் சென்றார். ஆனால் வழியில் ஒரு பசுவினால் கொல்லப்பட்டு இறந்தார்.

Later, when this sad news reached the Buddha, he announced that Pukkusāti was a wise man, who had already seen the Truth, and attained the penultimate stage in the realization of Nirvāna, and that he was born in a realm where he would become an Arahant and finally pass away, never ti return to this world again.

இத்துக்ககரமான சம்பவம் புத்தர் காதுக்கு எட்டியபோது புக்குசாதி ஞானி என்றும் அவர் சத்தியத்தை அறிந்துவிட்டார் என்றும் நிவாணமடையும் மார்க்கத்தில் மூன்றாவது நிலையை அடைந்து விட்டார் என்றும் அருகத நிலை அடையக்கூடிய ஓர் உலகில் அவர் பிறந்துள்ளார் என்றும் ஈற்றில் அவர் மீண்டும் வாரா நெறியை அடைவார் என்றும் கூறினார்

From this story it is quite clear that when Pukkusāti listened to the Buddha and understood his teaching, he did not know who was speaking to him, or whose teaching it was. He saw Truth. If the medicine is good, the disease will be cured. It is not necessary to know who prepared it, or where it came from.

புத்தர் கூறிய அறிவுரையைக் கேட்டு அதைப் புரிந்து கொண்ட போது புக்குசாதி தான் புத்தர் போதனையைக் கேட்டுக் கொண்டிருப்பதாகவோ புத்தர் தன்முன் இருப்பதாகவோ உணர்ந்து கொள்ளவில்லை. அவர் உண்மையை மாத்திரம் கண்டார் என்பது இக்கதையிலிருந்து தெரியவருகிறது. மருந்து நல்ல மருந்தானால் நோயை நீக்கும், மருந்து யார் தயார் செய்தார், அது எங்கிருந்து வந்ததென்று    தேரிந்து கொள்ளவேண்டியதில்லை

மரியாதைக்குரிய வாள்போல ஸ்ரீ ராகுல மகா தேரோ அவர்கள் எழுதிய
பகவான் புத்தர் அருளிய போதனை (What the Buddha Taught) என்ற நூலை  கற்றரிய விரும்புவோர் கீழ்காணும் இணையதள தொடர்பை அழுத்தவும்.
http://quangduc.com/English/basic/68whatbuddhataught.html

சனி, ஜூன் 25, 2011

பௌத்தத்தின் மறுமலர்ச்சிக்கு அம்பேத்கரின் பங்கு

சென்னை பல்கலைக்கழகம், அறிவர் அண்ணல் அம்பேத்கர் மையம் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு Dr . ஆ. பத்மநாபன் IAS (ஓய்வு) (முன்னாள் மேதகு ஆளுநர், மிசோரம் ) ஆற்றிய உரையின் சில துளிகள்.

01) பௌத்தத்தின் மறுமலர்ச்சி 1891ல் அநாகரிக தர்மபால ஆரம்பித்து வைத்தார். அதனை அறிவர் அண்ணல் அம்பேத்கர் 1956ல் அதன் உச்சகட்டத்திற்கு அழைத்துச் சென்றார். 1891ம் ஆண்டு அறிவர் அண்ணல் அம்பேத்கர் பிறந்தார். பௌத்தத்தின் மறுமலர்ச்சியும் அறிவர் அண்ணல் அம்பேத்கரின் பிறப்பும் ஒன்றாக நிகழ்ந்தது.

02) 1907ல் அறிவர் அண்ணல் அம்பேத்கர் மேட்ரிகுலேசன் தேறியபோது அவருடைய ஆசிரியர் கிறிஸ்ராஜ் அர்ஜுன் கேலூஸ்கர் என்பவர் மராத்தி மொழியில் எழுதப்பட்ட கௌதம புத்தரின் வரலாற்று நூலை அவருக்கு பரிசாக அளித்தார்.

03) நாசிக் பிரகடனம். நான் ஒரு இந்துவாக பிறந்து விட்டேன் ஆனால் நான் இறக்கும் பொழுது ஒரு இந்துவாக இருக்கமாட்டேன்.

04) பௌத்த சின்னங்களான தர்ம சக்கரத்தையும் சாரனாத்தில் அசோகரின் தூணில் இருந்த நான்கு சிங்கம் கொண்ட சின்னத்தையும் இந்திய தேசிய சின்னங்களாக மாற்றினார்.

05) 1945ல் மக்கள் கல்வி சங்கத்தை ஆரம்பித்தார். சித்தார்த்தா கல்லூரியை நிறுவினார். அவர் மாநாடு கூட்டிய இடத்திற்கு புத்தர் நகர் என்று பெயரிட்டார்.

06) ஔரங்கபாத்தில் பௌத்தம் தழுவிய கிரேக்க அரசர் மிரிலிண்டர் (அ) மியாண்ட என்பவரின் நினைவாக மிலாண்டு பலகலைகழகத்தை நிறுவினார்.

07) பேரசிரியர் பி.லட்சுமி நரசு அவர்கள் எழுதிய Essence of Buddhisim என்னும் பௌத்த சாரத்தை புதுப்பித்தார்.

08) இன்றைய தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடி இன மக்கள் ஒரு காலத்தில் பௌத்தர்களாக இருந்தார்கள் என்றும், அவர்களே கி.பி 4ம் நூற்றாண்டில் குப்தா மன்னர்களால் நசுக்கப்பட்டு தீண்டத்தகாதவர்கள் ஆனார்கள் என்று அறிவர் அண்ணல் அம்பேத்கர் கூறுகிறார்.

09) 1950 மே மாதம் 3ம் நாள் டெல்லியில் பௌத்தர்கள் பேரணி ஒன்றை நடத்தினார்.

10)  புத்தரும் அவர் எதிர்கால சமயமும் என்னும் பொருள் பற்றி கல்கத்தாவில் இருந்து வெளிவந்த மகாபோதி பத்திரிக்கையில் எழுதினார்.

11)  1950 மே மாதம் 25 ம் நாள் - கண்டியில் புத்த பெருமானின் பல் இருக்கும் கோவிலில் உலக பௌத்த மாநாட்டில் கலந்து கொண்டார். அக்கூட்டத்தில் பௌத்த சமயத்தின் தோற்றமும் வீழ்ச்சியையும் பற்றி பேசினார்.

12)  தம் தொண்டர்களுக்கு பௌத்த உபாசனா என்ற பௌத்த சூத்திரங்களை அடங்கிய புத்தகத்தை வெளியிட்டார்.

13) 1954ல் பௌத்தத்தை பரப்புவதற்காக "Buddhist Society of India" இந்திய பௌத்த சங்கத்தை ஆரம்பித்தார்.

14) 1954ல் மே மாதம் 15நாள் - பர்மாவில் நடந்த புத்த ஜெயந்தி விழாவில் கலந்து கொண்டார்.

15)  1954 ஜூன் மாதம் - பௌத்தத்தை போதிப்பதற்காக ஒரு பயிற்சி பள்ளி ஆரம்பிக்க போவதாக கூறினார்.

16)  1954 அக்டோபர் மாதம் - பர்மாவிற்கு சென்றார் அங்கு நடந்த உலக பௌத்த மாநாட்டில் அவர் கண்களில் நீர் தளும்ப " நான் மிக வேதனையுடன் கூறிக் கொள்கிறேன். இந்த மாபெரும் புத்தர் பெருமான் பிறந்த மண்ணில் பௌத்தம் அழிந்து விட்டது. இது எவ்வளவு வேதனை தரும் விஷயம் என்றார்.

17)  1954 டிசம்பர் மாதம் - பர்மாவில் இருந்தபோது மாண்டலே நகரத்தில் இருந்தபொழுது உலகபௌத்த கலாச்சார கல்வி நிறுவனத்தை ஆரம்பித்த Dr . R. L. சோனி என்பவருடன் தங்கிருந்தார். அவர் 2500வது புத்த ஜெயந்தி விழாவில் என்னுடைய தொண்டர்களுடன் பௌத்தத்தில் சேரப்போகிறேன் என்று கூறினார்.

18)  இந்தியாவிற்கு திரும்பிய பிறகு அவர் பௌத்த சங்கத்தை மாற்றி அமைத்தார்.

19)  மே மாதம் 1956ல் 2500வது புத்த ஜெயந்தி விழாவில் அக்டோபர் மாதம் பௌத்தம் தழுவபோவதாக கூறினார்.

20)  14 அக்டோபர் 1956 . அக்டோபர் 14ம் நாள் ஏன் தேர்ந்து எடுத்தார்?. அன்று தான் தர்ம விஜயம் செய்த அசோக சக்கரவர்த்தி பௌத்தம் தழுவினார். நாக்புரியை தேர்ந்து எடுக்க காரணம் அங்கு நாக் என்ற ஆறு ஓடியது. அதன் கரையில் நாகர்கள் என்ற பௌத்தர்கள் வாழ்ந்தார்கள்.

21) 14 அக்டோபர் 1956 ஞயிற்று கிழமை நான்கு இலட்சம் பேருடன் திரிசரணம்,பஞ்சசீலம் கூறி பௌத்தம் தழுவினார்கள். மறுநாள் ஒரு இலட்சம் பேர் பௌத்தம் தழுவினார்கள்.

22) அறிவர் அண்ணல் அம்பேத்கர் 22 உறுதி மொழிகளை தயாரித்து உறுதிமொழி எடுத்துக்கொண்டார்.

23)  15 அக்டோபர் 1956 அறிவர் அண்ணல் அம்பேத்கர் பௌத்தத்தின் பிரிவுகளான வஜ்ராயனத்திலோ அல்லது மகாயனத்திலோ சேரப்போவதில்லை என்று புதிய பௌத்த சமயமான நவயானத்தில் சேரப்போவதாக கூறினார்.

24)  15 நவம்பர் 1956 லிருந்து 20 நவம்பர் 1956 வரை நான்காவது உலக பௌத்த மாநாடு காட்மன்டுவில் நடந்தபோது Dr. அம்பேத்கர் உரையாற்றினார். அந்த மாநாட்டின் தலைவர் Dr. மல்லசேகரா பேசும் போது சற்று ஒரு மாத்திற்கு முன்புதான் 14 அக்டோபர் 1956 ல் நாகபுரியில் ஒரு அதிசயம் நடந்தது. Dr. அம்பேத்கர் தலைமையின் கீழ் ஐந்து இலட்சம் மக்கள் பௌத்தத்தில் சேர்ந்தனர். உலக வரலாற்றில் இப்படி ஐந்து இலட்சம் மக்கள் ஒரே நிகழ்ச்சியில் ஒரு மதத்திற்கு மாறியது கிடையாது.

25) தமது கடைசி பயணத்தை புத்தகய, சாரநாத் மற்றும் குஷிநகர் முதலிய இடங்களுக்கு சென்றார்.

26) அறிவர் அண்ணல் அம்பேத்கரின் இறுதி நூல் "புத்தரும் அவர் தம்மமும்"புதன், ஜூன் 08, 2011

துயரம் தருவது கடவுளா? அல்லது மனிதனா?

ராஜயோகம்  ஜூன் 2011  இதழ்

பக்கம் 44 -46
எல். டபிள்யு. விக்கிரமேனராஜா, கொலும்பு.