திங்கள், மார்ச் 04, 2019

காஞ்சிவரம் தொன்மையான பௌத்த தளம் XXI மாங்காடு


அமைவிடம்
ஊர்                  : மாங்காடு (பூந்தமல்லிக்கு அருகில்)
வட்டம்          : திருபெரும்புதூர் வட்டம் (Sriperumbudur)
மாவட்டம்    : காஞ்சீவரம் மாவட்டம் -600122

கோவில்கள்:   

01. மாங்காடு காமாட்சியம்மன் கோயில்  (Kamatchi Amman Temple)
02.மாங்காடு வெள்ளீசுவரர் கோயில் (Valliswara Temple)
03. பட்டு விநாயகர் கோயில்  (Vinayagar Temple)
04. பட்டு தர்மராஜர் கோயில் (Dharmaraja Temple)

மாங்காடு காமாட்சியம்மன் கோவிலில் இருந்து பட்டு விநாயகர் கோயில் 2 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. விநாயகர் கோயில் மற்றும் தர்மராஜர் கோயில் இவ்விரண்டு கோவில்களும் பட்டு என்னும் கிராமத்தில் உள்ளது. தர்மராஜர் கோயில் விநாயகர் கோயிலில் இருந்து 200 அடி தூரத்தில் உள்ளது. இங்கு தான் புத்த விகார் இருந்தது. பட்டு என்ற இடத்தில் இருந்த புத்தர் சிலையை பற்றி அறிய இங்கு அளித்துள்ள தொடர்பை பயன்படுத்துங்கள் காஞ்சிவரம் தொன்மையான பௌத்த தளம் X பட்டு

தாம்பரம், பூந்தமல்லி பேருந்து நிலையம், போரூர், வடபழனி மற்றும் சென்னை புறநகர் பேருந்து நிலையத்திலிருந்து (CMBT) மாங்காட்டுக்கு செல்லலாம். மாமரங்கள் நிறைந்த இடம் என்பதால் மாங்காடு என்று பெயர் பெற்றது. மாங்காடு காமாட்சியம்மன் கோயிலில் ஒரு மாமரம் இல்லை. கல்வெட்டுகளில் மாங்காட்டின் பெயர் “அழகிய சோழ நல்லூர்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மாங்காடு காமாட்சியம்மன் ஆலயத்திலிருந்து 500 மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது மாங்காடு வெள்ளீசுவரர் கோயில். இது மாங்காடு காமாட்சி அம்மன் கோவில் பின்புறம் உள்ளது. 

தமிழ் ஆராட்சி பேரறிஞர் திரு மயிலை சினி வேங்கடசாமி
 கல்வெட்டு
வெள்ளீசுவரர் ஆலயத்தில் உள்ள கல்வெட்டுச் சாசனம் ஒன்று திரிபுவன சக்கரவர்த்தி கோனேரின்மை கொண்டான் சுந்தரபாண்டிய தேவர் (Sundarapandiyadeva) (1251-64) காலத்தில், அவரது 5ஆவது ஆண்டில் எழுதப்பட்டது. இதில் இங்கிருந்த பள்ளிக்கு (புத்த விகார்) மாங்காடு கிராமம், பள்ளிச் சந்தமாகக் கொடுக்கப்பட்டதென்று எழுதப்பட்டுள்ளது. (788, 358 of 1908 Top. List Vol. 1.)
புத்தர் சிலைகள்
மூன்று புத்தர் சிலைகள் இவ்வூரில் இருக்கிறது. இவற்றில் ஒரு புத்தர் சிலை தலையுடைந்து கிடக்கிறது என தமிழும் பௌத்தமும் என்ற தம் நூலில் 1940ல் பதிவு செய்து இருக்கிறார். இன்றும் மாங்காடு புத்தர் சிலையை பற்றி குறிப்பிடும் நூலாசிரியர்கள் இன்றும் அங்கு புத்தர் சிலைகள் இருப்பது போன்று தமிழ் ஆராட்சி பேரறிஞரின் பதிவை அப்படியே பதிவு செய்கின்றனர்.
தொல்லியல் துறை  இயக்குநர் அறிஞர் திரு Dr D தயாளன்
இந்த மூன்று புத்தர் சிலைகளும் 11-12 ஆம் நூற்றாண்டை சேர்ந்தது என்றும்,  இந்த மூன்று புத்தர் சிலைகளும் தற்பொழுது மாங்காட்டில் இல்லை, இச்சிலைகள் எங்கிருக்கிறது என்று கண்டறிய முடியவில்லை என்றும் Buddhist Remains in South India என்ற நூலில் குறிப்பிட்டுள்ளார். 
இந்த மூன்று புத்தர் சிலை பற்றிய தகவல் சென்னை அருங்காட்சியகத்தில் மற்றும் அதன் அருகில் இருக்கும் தொல்லியல் துறையிடமும் கேட்டு எந்த தகவலும் கிடைக்கவில்லை. பௌத்த வரலாற்று அடையாளத்தை காப்பதில் சிறிது கூட அக்கறை இல்லை.