புதன், அக்டோபர் 14, 2015

கம்மா கர்மா வேறுபாடுகள்

கம்மா 
“கம்மா” (Kamma) என்பது பாலி மொழிச்சொல். தமிழில் கன்மம் எனப்படும். கம்மா என்பதின் பொருள் செயல். விரும்பி செய்யும் செயலே கம்மாவாகும். தற்செயலான (அ) விருப்பற்ற (அ) உள்ள சமநிலையோடு செய்யப்படும் செயல் கம்மாவாகாது.

கர்மா (Karma) என்பது வடமொழி சொல். கம்மா, கர்மா இவ்விரண்டு சொற்களும் மொழி வேறுபாட்டால் உருவான ஒலி வேறுபாடான சொற்கள் அல்ல. இவ்விரண்டு சொற்களும் பொருள் வேறுபாடு உடையது.    வைதிகத்தில் சொல்லப்படுகின்ற “கர்மா” என்ற கோட்பாட்டில் இருந்து பௌத்தத்தில் சொல்லப்படுகின்ற "கம்மா" வேறுபட்டது.

கம்மா, கர்மா வேறுபாடுகள்

01.
கம்மா என்பது செயலை மட்டும் குறிக்கும். செயலினால் உருவாகும் விளைவை பௌத்தம் விபாக என அழைக்கிறது.

கர்மா என்பது செயலையும் அதன் விளைவையும் குறிப்பதாகும்.

02.
கம்மா காரண காரியங்களை (Cause and Effect) அடிப்படையாக கொண்ட இயற்கை விதி. செயல்கள் எல்லாம் எதிர் செயல் உடையது என்ற முறையில் அமைந்தது.

கர்மா என்பது ஒழுக்க நீதி. அது ஒருவருடைய நடத்தையை மதிப்பிட்டு  தீர்வு வழங்கும் முறை. 

03.
நற்செயல்கள் நன்மையையும் தீச்செயல்கள் தீமையையும் விருப்பு வெறுப்பற்று  உள்ள சமநிலையோடு  செய்யும் செயல்கள்  நன்மையையோ தீமையையோ தராது என்ற கோட்பாடுடையது கம்மா.

கர்மா என்பது ஒழுக்க நீதி. கர்மா எனபதற்கு கடவுள் வேண்டும். அக்கடவுள் சரியெது பிழையெது என்பதை தீர்மானிப்பர். அவறே சட்டங்கள் செய்து நற்செயலுக்கு வெகுமானத்தையும் தீயச்செயலுக்கு தண்டனையும் வழங்குபவர். 

04.
செயலையும் அதன் விளைவையும் அறிந்து ஒருவர் நற்செயல்களை மேற்கொண்டு நன்மை பெறலாம். சொல்லும் செயலும் மனதின் படியே என்பதால் கம்ம விதி மனதை சார்ந்தது. நற்செயலா அல்லது தீயசெயலா என  நிர்ணயிக்க செயலை பார்ப்பது கம்ம விதி

நான்கு வருணத்தவரும் அதன் உட்பிரிவான சாதியினரும் அவரவர்க்கு உரிய பணி, உரிமை, சலுகைகளை அறிந்து அதனை செய்வதே சரியான செயல்கள். பிற வருணத்தவருக்கு உரிய பணி, உரிமை, சலுகையில் தலையிடுவது தவறான செயல் மற்றும் தண்டனைக்குரியது. எனவே கர்ம விதி பிறப்பை அடிப்படையாக கொண்டது, மாற்ற முடியாது. நற்செயலா அல்லது தீய செயலா என நிர்ணயிக்க செய்பவரை பார்ப்பது கர்மவிதி

05.
ஒரு மனிதனின்  விதிக்கு (இன்பம் மற்றும் துன்பம்) பல காரணிகள் காரணமானவை. பிறப்பு வகை, ஆளுமை, தோற்றம், பொதுவான கால அளவு , தனிமனித முயற்சி போன்ற காரணிகளில் கம்மாவும் ஒன்றே.

ஒரு மனிதனின்  விதிக்கு காரணமானது  கர்மா  ஒன்றே. கர்மாவென்பது விதிக்கப்பட்டது மாற்ற முடியாதது கடந்த காலத்திலிருந்து வருவது.

06.
தீச்செயல்களை  தவிர்பதாலும், நற்செயல்களை பெருக்குவதாலும் தீமையின் விளைவை தாங்கிக்கொள்ள முடியும், தீய செயலினால் ஏற்படும் தீமையை தவிர்க்க இயலாது என்பது கம்ம விதி.

காணிக்கை, பக்தி, பலி போன்ற பரிகாரம் மூலம் துன்பத்திலிருந்து விலக்கு பெறலாம் என்பது கர்ம விதி.

07.
நிலையாமையை (அனிச்சாவை) அடிப்படையாக கொண்டது கம்ம விதி. எனவே கன்ம விதி ஆன்மாவை மறுக்கிறது. மனமும் உடலும் எப்பொழுதும் மாறிக்கொண்டே இருப்பதனால் 'ஆன்மா' ஏதும் இருக்க இயலாது. ஐம்புலன்களின் ஐந்து தளங்களையும் எல்லைகளையும்   அனுபவிப்பது மனம். மனதின் தலைவனே மனிதன். ஆத்மா என்று அழைப்பது மனதின் ஒரு குறிப்பிட்ட ஒரு பகுதியாகிய   எதிர்வினையாற்றும் மனம் தான் என்கிறது கம்ம விதி.

கர்ம விதி ஆன்மாவை அடிப்படையாக கொண்டது. ஆன்மா நிலையானது, அழிவற்றது, வெளிச்சக்தி எதுவும் ஆன்மாவை பாதிக்காது. எந்த மாறுதலையும் உண்டாக்க முடியாது, காரண காரியத்திற்கு அப்பாற்பட்டது ஆன்மாவிற்கு பிறப்பும் இறப்பும் இல்லை என்கிறது கர்ம விதி.

08.
செயலும் (கம்மா) அதன் விளைவும் (விபாக) வெவ்வேறு காலங்களில் நிகழ்கிறது. சில செயல்கள் உடனடியாக அதற்கான விளைவை பெறுகிறது. சில செயல்கள் சில காலம் அல்லது நீண்ட காலம் எடுத்துக்கொள்கிறது. சில செயல்களுக்கான விளைவை பெறுவதற்குள் வாழ்நாள் முற்று பெறுகிறது. மரணத்திற்கு பிறகு செயலுக்கான விளைவை பெற முடியாது. அதாவது கம்ம விதியும் அதன் பாதிப்பும் தற்கால வாழ்வுக்கு மட்டுமே பொருந்தும்.

இக்கருத்தை வைதிகமும் ஜைனமும் முற்றாக மறுதளிக்கிறது. இப்பிறப்பில் அனுபவிப்பவைகள் எல்லாம் முற்பிறப்பின் பாவ புண்ணியத்தின் பாதிப்பு. இப்பிறப்பில் செய்யப்படும் பாவ புண்ணியத்தை பொறுத்தே மறுபிறப்பு இருக்கும் என்பது கர்ம விதி. கர்ம விதி வழிவழி வருவது. கூடு விட்டு கூடு பாய்வது.

செவ்வாய், அக்டோபர் 06, 2015

காஞ்சிவரம் தொன்மையான பௌத்த தளம் XI அங்கம்பாக்கம்

அங்கம்பாக்கம்
அமைவிடம்
ஊர் : அங்கம்பாக்கம் (வாலாஜாபாத் பேருந்து அருகில்)
வட்டம் :வாலாஜாபாத் வட்டம்
மாவட்டம் :காஞ்சீவரம் மாவட்டம்


~*~ அங்கம்பாக்கம் கிராமத்தின் சாலை ஓரத்தில் இருந்த பழமையான விநாயகர் கோவிலில் புத்தர் சிலை இருந்தது. இக்கோவில் பாழடைந்து இருந்ததால் புத்தர் சிலையை  அக்கோவில் அருகிலிருந்த பழமையான பெரிய போதி மரத்தடியில் எடுத்து வைக்கப்பட்டிருந்தது. தற்பொழுது புதிதாக கோவில் கட்டுவதற்காக பாழடைந்திருந்த அந்த கோவில்  இடித்து தள்ளப்பட்டுள்ளது.   

சிலையமைப்பு
கை
சிந்தனை கை. கை மணிக்கட்டுகள் சிதைந்துள்ளது. கையில் தாமரை மலர் வடிக்கப்பட்டுள்ளது. 
கால்
செம்பாதி தாமரை அமர்வு 
ஞான முடி
தலை வரை மட்டுமே சிலை காணப்படுகிறது அதனால் ஞான முடியை அறியமுடியவில்லை.
தலைமுடி
சுருள் சுருளான முடிகள்  
கழுத்து கோடுகள்
மூன்று  
சீவர ஆடை
உடல் பகுதி 1/2 அங்குல அளவு தேய்வுற்றுள்ளது  எனவே சீவர ஆடையை தெளிவாக காண முடியவில்லை. கை மணிக்கட்டுகள் சிதைந்துள்ளதால் கைகளிலும் சீவர ஆடையைகாண முடியவில்லை. கால்களில் சீவர ஆடையை காணமுடிகிறது.
சிலை உயரம்
 2 அடி உயரம் 

குறிப்பு
01. முகம் சிதைந்தும் தேய்ந்தும் காணப்படுகிறது. நெற்றி திலகம் காணப்படுகிறது.  அரை வட்ட வடிவிலான தோரணம் உடைந்துள்ளது. 

02. 04 டிசம்பர் 2014 வாலஜாபாத் நாக்பூர் தீட்ச பூமி பயணக்குழு தங்களின் கருத்தரங்கம் முடித்து சென்ற பொழுது அங்கம்பாக்கம் சிலையை பற்றி அறிந்து நேரில் பார்வையிட்டு  புத்தர் சிலை என்று முகநூல் வழியாக வெளியிட்டனர். மருத்துவர் தமிழ்கனல், மழைக்காதர் வ.திருமாறன், ஆனந்த வளவன், சி. தூயவன், பருத்திகுலம் பார்த்திபன், தாவீது, மதி ஆதவன், தீபக்ரஜனி   போன்றோர். 

03. பௌத்தர் மற்றும் போராளி இராணுவ வீரர் அங்கம்பக்கம் குப்புசாமி பிறந்த ஊர் இக்கிராமம்

04.அங்கம்பக்கம் சுற்றியுள்ள பௌத்த பெயர்கொண்ட இடங்கள் தம்மனூர் மற்றும் பழைய சீவரம். தம்மன் ஊர். தம்மா என்பது பாலி மொழி சொல்.