திங்கள், நவம்பர் 13, 2023

பாபா சாகேப் அம்பேட்கர் அவர்களின் இந்திய அரசமைப்புச் சட்டமும் குடியரசு தினமும்

சேவா பி.எஸ்.என்.எல் SC/ST பணியாளர்கள் நலச் சங்கம் (SEWA BSNL SC/ST Employees Welfare Association) ஒருநாள் கருத்தரங்கம் 26/01/2022 அன்று இக்சா மையம் (ICSA) ஜீவன ஜோதி வளாகம், எழும்பூர், சென்னை-8ல் இரு தலைப்புகளில் நடத்தியது.

முதல் அமர்வு காலை 10.00 மணி முதல் 1.00 மணி வரை "பாபா சாகேப் அம்பேட்கர் அவர்களின் இந்திய அரசமைப்புச் சட்டமும் குடியரசு தினமும்" என்ற தலைப்பில் கருத்துரை வழங்கியவர் S.ஜெயராஜ் MA ML. அவர் அகில இந்திய பொதுச் செயலாளர் BSNL SEWA மற்றும் அம்பேத்கரிஸ மாற்றும் பௌத்த அறிஞர்கள் அறக்கட்டளை (ABI)  தலைவர்.  அவரின்   உரை. 

SC இன மக்கள் அவர்களுடைய உரிமைகளை மீட்டு தந்தது பிரிட்டிஷ் அரசு அரசாணை (Communal GO). அது உருவம் திரிக்கப்பட்டு பூனா ஒப்பந்தம் என்று பேசப்படுகிறது. ஆனால் அடிப்படை என்னவென்றால் இந்த பிரிட்டிஷ் அரசாணை 17/08/1938 மூலம் நமக்கு உரிமைகள் வந்தது. துரோகம் செய்தவர்களின் வரலாறு தான் பூனா ஒப்பந்தம். 

01. இந்திய குடிமகன் யார்?

நான் ஒரு இந்தியன் என்று சொல்லும் அனைவரும் இந்திய அரசியல் சாசனத்தை புரிந்து கொள்ள வேண்டும். இந்திய அரசியல் சாசனத்தை புரிந்து கொள்ளவில்லை என்றால் அரசியலும் தெரியாது அதன் திறவுகோல் பிடிக்கவும்  முடியாது. இந்தியன் என்று சொல்ல, இந்நாடு  என்நாடு என்ற எண்ணம் வேண்டும். நாம் ஏன் பிற நாட்டில் இருந்து இருக்க கூடாது என்ற எண்ணம் வரக்கூடாது.

 02. அரசியல் சாசனம் என்றால் என்ன?

அந்த (இந்திய) நாட்டின் அரசியலை விளக்குவது தான் அரசியல் சாசனம்.

01. இந்த நாட்டை வழிநடத்துவதற்கு

02. இந்த நாட்டை ஆட்சி (Govern) செய்வதற்கு

03. இந்த நாட்டில் உள்ள அரசு, நிர்வாகம் மற்றும் நீதித்துறை எந்த அளவுக்கு எப்படி செய்ய வேண்டும் என்பதை தீர்மானிப்பதற்கு

04. அரசுக்கும் மக்களுக்கும் உள்ள உறவை நெறிப்படுத்துவதற்கு மக்களுக்கு எந்தெந்த உரிமைகள் வலியுறுத்தப்படுகின்றன என்பதை விளக்குவது தான் அரசியல் சாசனம். 

03. அரசியல் சாசனத்தை ஏன் தெரிந்துகொள்ளவேண்டும்?

01. கட்சிகள் அரசியல் சாசனப்படி இயங்க வேண்டும். அரசியல் சாசனத்தை  தெரியவில்லை என்றால் நம் வாழ்விற்காக நிறுவப்பட்ட அரசியல் கட்சிகள் நம்மை முன்னேற்றுவதற்கு செயல்படுகிறதா என்பதை சோதிக்க முடியாது. அரசியல் சாசனம் தெரியாத எந்த குடிமகனும் வெளுத்தது எல்லாம் பால் என்று நினைத்துக்கொண்டு அவர்கள் முன்னேற மாட்டார்கள். 

02. இந்திய குடியரசு தினம் 72 வருடம் நிறைவு பெற்று 73ம் ஆண்டுக்குள் நுழைகிறோம். 72 ஆண்டுகள் என்பது மூன்று தலைமுறைகள் (என் தந்தை /நான்/என் மகன்). அரசியல் சாசனப்படி அந்த உரிமைகளை மக்களிடம் சேர்த்து இருக்கிறார்களா? சிறப்பு உரிமைகள் SC  மற்றும் சிறுபான்மையினர் (Minority) அளித்துள்ளார்களா? சாதி ஒழிக்கப்பட்டு விட்டது என்று சொல்கிறார்களே (சரத்து 17) அது ஒழிக்கப்பட்டு விட்டதா? இதெல்லாம் ஏன்? அரசியல் சாசனம் தெரிந்தால் தான் இந்த கேள்விகளுக்கு விடை தெரியும்.

04. இந்தியர்  யார்?

சாதியை கொண்டவர்கள் இந்தியர் இல்லை. பறையர், வன்னியர், கவுண்டர், ஐயர் என்பவர் எவரும் இந்தியர் இல்லை. Dr அம்பேத்கர் அரசியல் சாசன சபையில்  நிறை உரையாற்றும் பொழுது சாதி பெருமை கொள்பவர்கள் எனில் நீங்கள் இந்தியர் இல்லை என்றுரைத்தார். சாதி பெருமை பேசிக்கொண்டு இருந்தால் இந்திய அரசியல் சாசனம் எத்தனை உரிமைகள் வழங்கி இருந்தாலும் அவை வீண்.

05. இந்திய குடியரசுதினத்தில் அதை படைத்தவர் பற்றி பேசுவதில்லை ஏன்?

இந்திய குடியரசு தினத்தில் குடியரசு தின படைப்பை பற்றி பேசப்படுகிறது. ஆனால் அதை படைத்தவர் பற்றி பேசுவதில்லை. இப்படி பேசாமல் இருந்தால் உயிரில்லா உடம்பு போன்றது, அது இயக்கமற்றது. அரசியல் சாசனம் எழுதியது தாழ்த்தப்பட்டவர் எனவே பேசுவதில்லை. அரசியல் சாசனம் தாழ்த்தப்பட்ட மக்களுக்கா எழுதப்பட்டது?

06.அரசியலமைப்பு  தினம் (அ) குடியரசு தினம் இவ்விரண்டில் முக்கியமான நாள் எது? 

01. அதிக அறியாமைக்கு பெயர் போன நாடு நம் நாடு. இங்கு 5 பச்சை நிற புத்தகங்கள்.கொண்டுவந்து காட்சிப்படுத்தி உள்ளேன். இந்த 5 புத்தகங்கள் 10,000 பக்கங்கள் கொண்டது. அரசியல் சாசன சரத்துக்கள் எவ்வாறு அரங்கேற்றப்பட்டது அல்லது ஏற்றுக்கொள்ளப்பட்டது? 26/11/1950 அரசியல் சாசனம் தாக்கல் செய்யப்பட்டது. இந்த நாளை (Constitution Day) அரசியலமைப்பு தினம் என்று அழைக்கப்படுகிறது.

அரசியலமைப்பு  தினம், குடியரசு தினம் இந்த இரண்டு தினத்தில் மிக முக்கியமான நாள் எதுஎன்றால் குடியரசு தினம் தான் மிக முக்கியமான நாள்.

01.திருத்தங்கள் (Amendments) கொண்டுவரும்பொழுது எல்லாம் இந்திய குடியரசு தினத்தை முன்னிட்டு தான் குறிப்பிடப்படுகிறது. தற்பொழுது திருத்தங்கள் வந்தால் 73ஆம் ஆண்டு என்று குறிப்பிடுவர். நாம் தமிழ் வருட பிறப்பு, தெலுங்கு வருட பிறப்பு என்று சொல்கிறோம் அல்லவா அது போன்று தான் இந்தியாவிற்கு வருட பிறப்பு என்பது 26 ஜனவரி (குடியரசு தினம்).

03. இந்திய அரசியலமைப்பு சிதைக்கப்பட்டது என்றால் இந்தியர் எவரும் இந்தியராக இருக்க மாட்டார்கள். இந்திய அரசியலமைப்பு ஒழிக்கப்பட்டு மீண்டும் சாதியமைப்பு மேலோங்கி இருக்கும்.

07. அந்நியர்கள் நம் மீது பல முறை படை எடுத்தது ஏன்?

இந்திய அரசியல் சாசனம் எழுத எடுத்துக்கொண்ட நாட்கள் 1478 (அ) நன்கு ஆண்டுகள் (09/11/1946 முதல் 26/11/1950). இந்த நாட்கள் கால அளவு தேவையானதல்ல, தேவையானது அரசியல் சாசனத்தில் சொல்லப்பட்டது. இந்திய அரசியல் சாசனத்தை உருவாக்க 292 உறுப்பினர்கள். ஆனால் முதல் நாள் கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள் 207 பேர். 85 பேர் கலந்து கொள்ளவில்லை. அதற்கு அரசியல் காரணம் உள்ளது. அப்பொழுது இருந்த ராஜாக்கள், மிட்ட மிராசுகள், மைசூர் மகாராஜா என 600 இளவரசர் மாநிலங்கள் (Princely States) இருந்தன. இந்திய அரசியல் சாசனம் இந்த 600 இளவரசர் மாநிலங்களை 9 மாநிலங்களுக்குள் அடக்கி வைத்தது. இது ஒரு சாதனை.

S .ஜெயராஜ் அவர்கள் குறிப்பிடும் யூனியன் மாநிலங்கள் 

01. Andaman and Nicobar - அந்தமான் நிக்கோபார்,

02. Chandigarh - சண்டிகர்,

03. Daman and Diu - டாமன் மற்றும் டையூ,

04. Dadar and Nagar Haveli - தாதர் மற்றும் நகர் ஹவேலி,

05. Delhi - டெல்லி,

06. Jammu and Kashmir - ஜம்மு காஷ்மீர்,

07. Ladakh - லடாக்,

08. Lakshadweep - லட்சத்தீவு,

09. Puducherry - புதுச்சேரி

இந்தியாவில் ஒவ்வொரு பகுதியும் ஒரு அரசன் ஆண்டு வந்தான். அந்நியர்கள் நம் மீது பல முறை படை எடுத்தது இந்திய வளங்களை கொள்ளையடித்தனர். ஏன் இப்படி நடந்தது என்றால் நீங்கள் ஒரு நாடு என்பது போல இல்லை. இது தொடருமானால் இன்னும் நம் மீது படை எடுப்பர் என்று Dr அம்பேத்கர் இந்திய அரசியல் சாசனத்தில் பதிவு செய்கிறார்.

08. மகர் சட்டம் என்றால் என்ன?

(Manu  Law is replaced by Mahar Law) மனு சட்டம் மகர் சட்டத்தால் மாற்றப்பட்டது. இந்திய அரசியல் சாசனத்தை எழுதியது Dr அம்பேத்கர். அவர் ஒரு மகர். அவர் எழுதிய அரசியல் சாசனம் என்பதால் மகர் சட்டம் என்றுரைக்கின்றர். மனு சட்டம் சாதி அடிப்படையில் ஏற்படுத்தப்பட்ட முறை. இந்திய அரசியல் சாசனத்தால் தான் நான் பிரதம மந்திரியாக  இருக்கிறேன் என்றுரைத்தார் மோடி. ஒரு சூத்திரன் அரசாண்டால் அங்கே இருப்பது கேவலம் என்றுரைக்க்கிறது மனு. 

09. இந்திய அரசியல் சாசனம் 72 ஆண்டுக்குள் 105 திருத்தங்கள் ஏன்?

1287ல்  13 பேர் (50 மாநிலங்கள்) அமெரிக்க அரசியல் சட்டம் வடிவமைத்து கொடுத்தார்கள். அமெரிக்காவில் 200 வருடம் தாண்டிவிட்டன இதில் இதுவரைக்கும் 27 திருத்தங்கள் தான் செய்து இருக்கின்றனர். 1950ம்  ஆண்டு 30 கோடி மக்களுக்கு இந்திய அரசியல் சாசனத்தை 296 பேர் எழுதியது. ஆனால் இதுவரை 105 திருத்தங்கள் இந்திய அரசியல் சாசனத்தில் வந்துள்ளது.  நம் நாட்டில் 72 ஆண்டுக்குள் 105 திருத்தங்கள். இது ஏன்?

01. அரசியல் சாசன சபையில் கேட்கப்பட்ட கேள்வி, நேரடியாக ஒட்டு போட்டு அரசியல் சாசன சபைக்கு உறுப்பினர்கள் வரவில்லை. அரசியல் சாசன சபைக்கு வர வாக்காளர் குழு (Electro college) மூலம் வந்திருக்கலாம் என்று. அப்பொழுது Dr அம்பேத்கர் கேட்கிறார், அது போன்று வாக்காளர் குழு மூலம் தேர்ந்து எடுக்கப்பட்டு வந்திருந்தனர் என்றால் அறிவார்ந்தவர்கள் எல்லாம் வந்து விடுவார்கள் என்று நினைக்கிறீர்களா என்று.

02. நமக்கு நம் நாட்டின் மீதும் அரசியலமைப்பு சட்டத்தின் மீதும் நம்பிக்கை இல்லாமல் அதை பொருட்படுத்தாமல் இருந்ததால் 105 திருத்தங்கள்.

03. (Preamble - We the people of India) முகப்புரை- நாம் இந்திய மக்கள். இது ஒரு சுவரிசமான தகவல். (In the name of the God) கடவுள் என்ற பெயரில் என்ற வார்த்தையை பயன்படுத்தி அதன் பின் நாம் இந்திய மக்கள் என்ற வரிகள் வரவேண்டும் என்று வாதம் எழுந்தது. (We are the people in the name of the God). "நாம் கடவுளின் பெயரால் மக்கள்" இந்த  வரியை ஓட்டுக்கு விடப்பட்டது. இந்த வரி நிராகரிக்கப்பட்டது. (In the name of the God) கடவுளின் பெயரில் இந்த வரியை அரசியல் சாசனத்தை படைத்தவர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. இந்திய மக்களாகிய நாம் என்ற வரியே ஏற்றுக்கொள்ளப்பட்டது. முற்றுப்புள்ளி, காற்புள்ளி என எந்த திருத்தமும் இல்லாமல் அப்படியே ஏற்றுக்கொள்ளப்பட்டது.  (USA we the people of America) "நாங்கள் அமெரிக்காவின் மக்கள்", "நாங்கள் இந்திய மக்கள்" இரண்டும் ஒரே மாதிரியான வரிகள் கிடையாது.

04. இந்திய அரசியல் சாசனம் வேதத்தை விட, பைபிளை விட, திரிபீடகத்தை விட, குர்ஆனை விட சிறந்தது. ஒருவர் மத சட்டங்கள் மீறினால் அவர்கள் மீது சட்டம் பாயாது. ஆனால் ஒருவர் அரசியல் சட்டத்தை மீறினால் அவர்கள் மீது சட்டம் பாயும். இவ்வாறு இருக்கும்போது, இந்திய அரசியல் சாசனத்தை மதித்தது இருந்தால் 105 திருத்தங்கள் தேவையில்லை.

05. எந்த அதிகாரி நியமனம் செய்கிறாறோ அந்த அதிகாரி தான் அந்த நபரை நீக்க முடியும். Grade 1 அலுவலராக நியமிக்கப்பட்டவர் Grade 2  அலுவலர் அவரால் நீக்க முடியாது. இது அரசியல் சாசனம் முன்பு இருந்ததில்லை (Article 16)

10. மத்திய அரசு (அ) ஒன்றிய அரசு எது சரியானது?

21/05/2021 அன்றுவரை தமிழ் நாட்டில் மத்திய அரசு என்று அழைக்கப்பட்டது. 21/05/2021 அன்றுவரை  யாருக்கும் இது குழப்பம் இல்லை. அதன் பிறகு ஒன்றிய அரசு என்று பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டது.  

(Union of states means it is federal of states) மாநிலங்களின் ஒன்றியம் என்பது மாநிலங்களின் கூட்டாட்சி என்று பொருள்படும். அமெரிக்காவில் இருப்பது (Federation) கூட்டமைப்பு. எனவே அது  கூட்டாட்சி அரசு (Federal Government). நாமும் Federal Government. எனவே Union என்ற சொல்லுக்கு பதிலாக (Federation) என்ற சொல்லை பயன்படுத்த வேண்டும் என்ற விவாதமே நடந்தது. Union என்று போட்டால் அது ஒற்றையாட்சி அரசாக (Unitary government) மாறிவிடும். அந்த (Sovereign) இறையாண்மை என்பது ஒருவரிடம் முடிந்துவிடும். Federation கூட்டமைப்பு என்று போட்டால் அந்த இறையாண்மை பல இடங்களில் பரவியிருக்கும். உதாரணத்திற்கு மாநில அரசு மாநிலங்களுக்கான சட்டம் இயற்றுகிறது. பாராளுமன்றம்  சட்டம் இயற்றும் பொழுது (Sovereign) இறையாண்மை என்பது ஒன்றிய அரசிடம் இருக்கிறது. இது தான் (Federation) கூட்டமைப்பு. நம் நாட்டின் சட்டம் என்பது மாநில அரசு மத்திய அரசுகளிடம் உள்ளது.   

11. Dr அம்பேத்கர் (Union of States) மாநிலங்களின் ஒன்றியம் என்று ஏன் வைத்தார்?

Federal Government 13 states அவர்கள் விரும்பி ஏற்றுக் கொண்டார்கள். Dr அம்பேத்கருக்கு கூட்டாட்சி Federal Government என்று வைத்துக்கொள்ளவேண்டும் என்று அழுத்தம் கொடுத்தனர். Federal Government என்பது கட்டாயம். அரசியல் சாசனத்தை சிதைக்காமல் பார்த்துக்கொண்டனர். ஆனால் இங்கு நாம் தமிழ்நாடு, தெலுங்கு, பஞ்சாப் என்று இருக்கிறோம். ஆனால் இங்கு நமக்கு அதிகாரம் இருக்கிறதா என்றால் அது ஒரு எள் அளவு கூட இல்லை. இந்த மாநிலங்கள் என்பது இந்த Union என்பதிலிருந்து நீங்கள் நினைத்தால் கூட பிரிக்க முடியாது.

12.  தமிழ்நாடு என்ற புரிதல் உருவாக்கி கொடுத்தவர் யார்?

ஆந்திர, கேரளா, கர்நாடக, தனி மாநிலமானது. மெட்ராஸ் மாநிலத்திற்கு என்ன பெயர் வைக்கலாம் என்றபொழுது தமிழ்நாடு என்று பெயரிட்டு தமிழ்நாடு என்ற புரிதல் உருவாக்கி கொடுத்தவர் Dr அம்பேத்கர். Dr அம்பேத்கர் 1955ல் மொழி மாநிலங்கள் என்று பிரிக்கும் பொழுது  (English Volume 1 Page 158) Tamil is the state தமிழ் மாநிலம் என்று குறிப்பிடுகிறார்.  

13.  மாநில அரசுக்கு பெயர் வைப்பது மத்திய அரசு. இது ஏன்?

One State One Law, ஒரு மாநிலம் ஒரு சட்டம்

One Law One State, ஒரு சட்டம் ஒரு மாநிலம்.

இவ்விரண்டும் ஒன்று போல் தெரியும். தெலுங்கு பேசியவர்கள் எல்லோரும் ஒரே மாநிலமாக அன்று இருந்தார்கள். தெலுங்கு பேசியவர்கள் எல்லோரும் தற்பொழுது இரண்டு மாநிலமாக மாறியுள்ளது. தெலுங்கானா மக்களின் மொழி தெலுங்கு. ஆந்திர மக்களின் மொழி தெலுங்கு. உங்கள் வசதிக்காக ஒரு மாநிலம் எத்தனை மாநிலமாக வேண்டுமானாலும் மாறலாம். இதற்கு மத்திய அரசு தான் சட்டம் இயற்றும். மாநில அரசுக்கு பெயர் வைப்பது கூட மத்திய பாராளுமன்றம் தான். உங்கள் மாநிலத்திற்கு என்ன பெயர் வைக்க வேண்டும் என்பது கூட உங்களுக்கு அவசியமில்லை. உதாரணத்திற்கு அன்று ஒரிசா என்று இருந்த மாநிலத்தின் பெயர் இன்று ஒடிசா என்று மத்திய அரசு மாற்றியுள்ளது. மாநிலத்திற்கு பெயர் வைப்பது பாராளுமன்றத்தில் இருக்கிறது. இது ஏன் என்றால் எந்த காலத்திலும் நீங்கள் unionகுள் இருக்க வேண்டும் என்பதால் தான்.

இந்திரா காந்தி பிரதம மந்திரியாக இருந்தபோது மாநில சுயாட்சி என்ற வார்த்தை காணாமல் போனது. இது ஏன் என்றால் நீங்கள் பிரிவினை வாதம் பேசுவீர்கள் என்று. மாநிலங்கள் என்பது தனியாக பிரிவதற்கு உங்களுக்கு உரிமையே கிடையாது. கூட்டாட்சி என்பது விருப்பாமானது ஆனால் கூட்டரசு கட்டாயம். (Federation is option but union is compulsory). எனவே மாநிலங்கள் என்பது unionலிருந்து   நினைத்தால் கூட பிரிக்கமுடியாது. Dr. அம்பேத்கர் சொல்கிறார் இது அரசாங்கத்தின் கூட்டாட்சி வடிவம் ( Federal Form of Government) தான். ஆனால் இங்கு நீங்கள் பிரிந்துசெல்லக்கூடிய உரிமை கிடையாது. இந்திய அரசியல் சாசனத்தில் உரிமை இருந்தால் மட்டுமே அதனை கோர முடியும்.

14.NEET (National Eligibility Cum Entrance Test) 

கல்வி அரசியல் சாசனம் 1950ல் Entry 11ஐ சார்ந்தது. கல்வி மாநில பட்டியலில் இருந்தது. 03/01/1977ல் மாநில பட்டியலில் இருந்த கல்வியை பொது பட்டியலுக்கு (Concurrent List) மாற்றப்பட்டது. நெருக்கடி நிலை (Emergency Period) காலத்தில் இந்திரா காந்தி அவர்கள் 50% மேற்பட்டோரின் ஆதரவு பெற்று கல்வியை மாநில பட்டியலில் இருந்து பொதுப்பட்டியலுக்கு  மாற்றினார். 

மாநில அரசு 66 பொருள்களில் சட்டம் இயற்றலாம். மத்திய அரசு 97 பொருள்களில் சட்டம் இயற்றலாம். இரு அரசும் ஒரே பொருளில் சட்டம் இயற்றினால் மத்திய அரசின் சட்டம் தான் செல்லுபடியாகும்.

பொதுப்பட்டியலில் உள்ள கல்வியை மாநில பட்டியலுக்கு கொண்டுவர 50%  மேற்பட்டோரின் ஆதரவு பெற்று தீர்மானம் கொண்டுவரவேண்டும். அவ்வாறு செய்தால் தான் நீட்டுக்கு விலக்கு பெறமுடியும், NEET இது மாநில பட்டியலில் இல்லை. 

15.இங்கு பேசப்படும் சமூக நீதி என்பது அரசியல் சாசனத்தில் பேசப்படும் சமூக நீதியிலிருந்து வேறுபடுகிறது ஏன்? 

இந்திய அரசியல் சாசனத்தின் படி அனைவரும் சமம். சாதி இருந்தால் எப்படி  அனைவரும் சமம் ஆகா முடியும்? இது ஒரு  முரண். சாதி இருக்கிறதா? என்றால் இருக்கிறது. இந்த சாதி சட்டத்திற்கு முரணானது. அதனால் தான் பாபா சாகிப் 26/01/1950 இந்திய குடியரசு அன்று நாம் ஒரு முரண்பாட்டில் நுழைக்கிரோம் என்றுரைக்கிறார். இந்த சமூகம் சாதியை ஆதரிக்கிறது. ஆனால் இந்திய அரசியல் சாசனம் எல்லோரும் சமம் என்றுரைக்கிறது. இந்த முரண்பாட்டில் நுழைகிறோம் என்றுரைக்கிறார்.

இந்திய அரசியல் சாசனத்தில் சமம் என்பது என்னவென்றால் (Equal Protection  and Equal Opportunity)  சம பாதுகாப்பு மற்றும் சமவாய்ப்பு. நாம் பேசுகின்ற சமூக நீதி வேறு இந்திய அரசியல் சாசனம் பேசுகின்ற சமூக நீதி வேறு.  இதற்கு என்ன வேறுபாடு? இந்திய அரசியல் சாசனத்தில் சமூக நீதி என்பது சுதந்திரம், சமத்துவம் மற்றும் சகோதரத்துவம் ஆகியவற்றின் அமைந்துள்ளது.

சாதி என்பது இன்னொரு சாதியின் மீது வெறுப்பு. மேல் இருக்கும் சாதி கீழ் இருக்கும் சாதியை வெறுக்கும். இந்த வெறுப்பில் சுதந்திரம், சமத்துவம் மற்றும் சகோதரத்துவம் சாத்தியமா?  சுதந்திரம், சமத்துவம் மற்றும் சகோதரத்துவம் விரும்பாத ஒருவர் இந்திய குடிமகனாக இருக்க முடியாது.

(Morality is maintaining the justice)  ஒழுக்கம் என்பது நீதியைப் பேணுவதாகும் என்றுரைக்கிறார் பாபா சாகிப். எனவே சாதியின் பெயரால் பெண்கள், சிறுவர்கள் அல்லது பிறர் துன்புறுத்தப்பட்டனர் என்றால் அது அனைவரும் சமம் என்பதற்கு முரணானது. இது அரசியல் சாசனத்திற்கு முரணானது.


16 இட ஒதுக்கீடு (Reservation )

உச்ச நீதிமன்றம் (Fundamental Rights) அடிப்படை உரிமைகளுக்கு எதிராக தீர்ப்பு வழங்க முடியாது. (You can not act against the law) நீங்கள் சட்டத்திற்கு எதிராக செயல்பட முடியாது. உச்ச நீதிமன்றமோ வேறு யாரும் எதிராக செயல்பட முடியாது. அப்படி என்றால் நீங்கள் மட்டும் எப்படி செயல்பட முடியும்? Reservation - Article 16 இது சமவாய்ப்பு கொடுக்கிறது.  சமவாய்ப்பு  என்றால் என்ன? 1932 ல் Communal GO வாங்கிகொண்டு வருகிறார் பாபா சாகேப். 1935ல் சட்டமாகிறது. இது தான் Article 16 ஆகா நிற்கிறது. இட ஒதுக்கீடு என்பது சமவாய்ப்பு. 

(Minimum qualification is compulsory) குறைந்தபட்ச கல்வித்தகுதி கட்டாயம். தகுதியை நிர்ணயிக்கும் போது  அந்த வரையறைக்குள் உள்ளவர்கள் தான் இட ஒதுக்கீட்டில் தேர்ந்து எடுக்கப்படுகின்றனர். சமவாய்ப்பு பயன்படுத்தினார்கள் என்றால் திறன் (Efficiency) இல்லை என்று எடுத்துக்கொள்ள முடியாது.

பல ஆண்டுகள் ஒரு வகுப்பினர் புறக்கணிக்கப்பட்டவர்கள். அவர்களுக்கு இந்த மாதிரியான சட்ட அங்கீகாரம் இல்லை என்றால் அவர்கள் தொடர்ந்து புறக்கணிக்கப்படுவார்கள் எனவே சமத்துவத்தை உறுதிப்படுத்தவே இந்த இட ஒதுக்கீடு என்றுரைக்கிறார் பாபா சாகேப் 

அரசியல் சாசனத்தை மீறுவதற்கு யாருக்கும் அதிகாரம் இல்லை