வெள்ளி, ஜூன் 29, 2012

புத்தரின் திருவுருவம்

பகவன் புத்தரின் திருவுருவம் நடைமுறைக்கு வருவதற்கு முன்பாக, பல்வேறு ஞாபக சின்னங்கள் (அ) குறியீடுகள் வணங்கப்பட்டன (BC 480 – AD180). அந்த ஞாபக குறியீடுகள் பகவன் புத்தரின் வாழ்க்கையோடு தொடர்புடையது.































நினைவு சின்னங்கள்

அறிவர் அண்ணல் அம்பேத்கர் கீழ்கண்ட பௌத்த நினைவு குறியீடுகளை 22 சூலை 1947ல் அரசமைப்புச் சட்டப்பேரவை மூலம் நம் நாட்டு நினைவு சின்னங்களாக கொண்டுவந்தார்.
தேசியக் கொடியின் மத்தியில் தம்மச்சக்கரம்
 நம் நாட்டு தேசியக்கொடியின் மையத்தில் தம்மச்சக்கரம் பொறிக்கப்பட்டுள்ளது. தம்ம சக்கரத்தில் உள்ள 24 கம்பிகளும் வாழ்க்கை சுழற்சியை தோற்ற வரிசையில் 12 சார்புகளையும் மறைவு வரிசையில் 12 சார்புகளையும் குறிப்பிடுகிறது. 12 சார்புகள் 01. பேதமை, 02. செய்கை, 03. உணர்வு, 04. அருவுரு, 05. வாயில், 06. ஊரு 07. நுகர்வு, 08. வேட்கை 09.பற்று, 10. பவம், 11. தோற்றம், 12. வினைப்பயன்
தேசிய மலர் 
தாமரை தூய்மையின் அடையாளம். அதனால் தான் பகவன் புத்தர் மலர்ந்த தாமரை மீது அமர்ந்திருக்கிறார். தூய்மை பாதையின் அம்சங்கள்
சம்சாரம்- தாமரை சேற்றில் இருந்து வளர்கிறது
தூய்மை- சேற்று தண்ணீரில் வளர்ந்தாலும் மேற்பரப்பில் தூய்மையானதாக இருக்கும்.
மெய்ஞானம் - இறுதியில் அழகிய மலரை தருகிறது
தேசிய சின்னம்
அசோகரின் சாரநாத் (உத்திரபிரதேசம்) தூபியில் உள்ள சிங்கம்.
நான்கு சிங்கங்களும் நான்கு திசைகளை நோக்கி இருக்கும்
நான்கு வேவ்வேறு விலங்குகள் பொறிக்கப்பட்டிருக்கும்
கிழக்கு திசை - ஒரு யானை
மேற்கு திசை - ஒரு காளை
வடக்கு திசை - ஒரு சிங்கம்
தெற்கு திசை - ஒரு குதிரை
இந்நான்கு விலங்குகளும் நான்கு தம்மச்சக்கரத்தினால் பிரிக்கப்பட்டு இருக்கும்.
புத்தரின் திருவுருவம்
பகவன் புத்தரின் திருவுருவம் அவரின் போதனைகளை நினைவுறுத்துவதாக உள்ளது. இந்தியாவில் முதன் முதல் மனித உருவச்சிலை வணங்கப்பட்டது என்றால் அது பகவன் புத்தர் தான்.  ‘மேலும் கிறித்துவ சகாப்தத்தின் துவக்கத்தில் மகாயான பௌத்தர்களால் முதன் முதலாக அறிமுகப்படுத்தப்பட்டது.  புத்தரின் உருவச்சாயல் வெவ்வேறு நாடுகளில் வெவ்வேறு தோற்றம் கொண்டிருக்கிறது. பௌத்த அரசர்களும் பல்வேறு சிற்ப மையத்தை திறமையான கலைஞரிடமிருந்து தேர்வு செய்தனர் அதனால் பல்வேறு கலைகள் நிறுவப்பட்டது.’ (02/ப63)
காந்தாரக் கலைஞர்களே முதன் முதலில் புத்தரின் மானிட உருவத்தை வடிவமைத்தனர்
01. காந்தாரக் கலைஞர்களே முதன் முதலில் புத்தரின் மானிட உருவத்தை வடிவமைத்தனர். அல்பிரேட் எ பௌசேர் (03) ஜி.சி சாலி(Chauley) (04 /ப98).

02. புத்த பகவானது திருவுருவத்தை இந்திய சிற்பிகள்(மதுரா கலைஞர்கள்) , கிரேக்க உருவங்களை பார்த்தே அமைத்தனர். ஆனால் புத்த பகவானது திருவுருவம் இந்திய நாட்டுப் பண்டைய சிற்ப முறைகளைப் பின்பற்றியே அமைக்கப்பெற்றதாகும். Dr. ஆநந்தக் குமாரசுவாமி (01/ப73 )

03. ‘மனித உருவத்தின் அழகையும் வளர்ச்சியையும் சிற்பகலையில் நன்றாய் பொருத்தி அந்தக் கலையை மிக உன்னத நிலையில் வளர்த்து உலகிலேயே பெரும் புகழ் படைத்தவர் கிரேக்கரும் ரோமரும் ஆவர்.(05) கிரேக்க தேசம், உரோமாபுரி முதலிய மேல்நாடுகளிலே மனித தத்ருப சிற்ப உருவங்கள் (Portrait Sculptures) சிற்ப வளர்ச்சி பெற்றது போல நமது நாட்டில் மனித தத்ருப சிற்பகலை ஓரளவு பயிலபட்டதேயல்லாமல் முழுவளர்ச்சி யடையவில்லை (06/ப39)
 காந்தராக்கலைக்கும் மதுராக்கலைக்கும் உள்ள வேறுபாடுகள் 
புத்தர் தலைமுடி 
 புத்தர் துறவு மேற்கொள்ளும் போது தமது வாள் கொண்டு தமது முடியை வெட்டினார். அவரது தலை முடியின் நீளம் இரண்டு அங்குலமாக குறைக்கப்பட்டு, வலது பக்கம் சுருண்டு, அது நெருக்கமாக அவரது தலையில் இட்டிருந்தது. அதனால் மேலும் தலையை மழிக்கும் எந்த தேவையும் எழவில்லை. ரைஸ் டேவிட்ஸ்(08)

32 அங்க அடையாளங்கள்
பகவன் புத்தரின் 32 அங்க அடையாளங்களை பற்றி நீண்ட பேருரையிலும் (தீக நிகாயத்தில்) (DN30) இலட்சன சுத்தத்திலும் இடைப்பட்ட பேருரையிலும் (மஜ்ஜிம நிகயத்தில்) (MN91) பிராமயு சுத்தத்திலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
01 நன்றாக ஊன்றி கால்கள்
02. பாதத்தின் அடியில் சக்கர குறியீடு
03.முனைப்புமிக்க குதிக்கால்
04 நீண்ட வீரல்கள்
05 மென்மையான நுண்ணிய கை கால்கள்
06. ரேகைகள் நிறைந்த கை கால்கள்
07 வளைந்த பாதம்
08 மான் மூட்டுகள்

09. வளையாமலே முழங்கால்களை அடையக்கூட்டிய கைகள்
10. உறையால் மூடப்பட்டிருக்கும் மறைக்கப்பட்ட உறுப்பு
11.பொன்னிற மேனி
12. மென்மையான சருமம்
13. ஒவ்வொரு மயிர்க்கண்களிலும் ஒரு முடி
14. நேராக நின்றிருக்கும் உடல் முடி
15. நேரான மூட்டுகள்
16 ஏழுபுடைப்புகள் (கைகள், பாதங்கள், தோள்கள் மற்றும் உடல்)

17 உடலின் முற்பகுதி ஒரு சிங்கம் போன்ற தோற்றம்
18 பறந்து விரிந்த தோள்கள்
19 ஆலமரத்தினுடைய உருண்டை
20 நன்றாக வட்டமான உடற்பகுதி
21 அனைத்து உணவு சுவை அதிகரிக்கக்கும் உமிழ்நீர்
22 சிங்கத்தாடை
23 நாற்பது பற்கள்
24 சரிசமமான பற்கள்

25 இடைவெளியில்லாத பற்கள்
26 வெண்ணிற பற்கள்
27 நீளமான நாக்கு
28  குரல், ஆழமான மற்றும் ஒத்ததிர்வு
29 கருமையான கண்கள்
30 பசுவினை ஒத்த கண் புருவம்
31 புருவங்களின் மத்தியில் உள்ள ஒரு வெள்ளை முடி
32 மண்டை ஓட்டில் காணப்படும் ஓர் முகிழ்ப்பு (07/ப291)
முத்திரைகள் 
வலக்கர முத்திரை (Right Hand Mudra)
01. காக்கும் கை (அபய முத்திரை)
01.அச்சமின்மை, பாதுகாப்பு மற்றும் அன்புருநேயம்
02. வானோக்கிய உள்ளங்கை
03.விரல்கள் மேல்நோக்கி நீண்டிருக்கும்    
04. கை சற்று வளைந்திருக்கும்
05. வலது கை தோள்பட்டை உயரத்திற்கு எழுப்பியிருக்கும்

02. நிலத்தை தொடும் முத்திரை (புமிஸ் பரிசா முத்திரை)
01. பூமியை தொட்டு (அ) பூமியின் சாட்சியாக அழைப்பு எனவும் அழைக்கப்படுகின்றது
02. இது தீய சக்தியான மாரவை வெற்றிக்கொண்டதற்க்கு அடையாளமாகும்
03. வலது கை வலது முழங்கால் மீது கீழே தொங்கியிருக்கும்
04. கை பாதம் உள்நோக்கி காணப்படும்
05. அனைத்து விரல்களும் கீழ்நோக்கி நீண்டு தாமரை அரியணையை தொட்டுக்கொண்டிருக்கும்
06.இடதுகை வானோக்கிய வண்ணம் மடிமீது அமைந்திருக்கும்

03. வழங்கும் கை (வரத முத்திரை)
01. நற்பணி, இரக்கத்தின் சின்னம்
02. கை கிழ்நோக்கிய வண்ணம் அணைத்து வழிகளிலும் நீண்டிருக்கும்
03. வானோக்கிய உள்ளங்கை

04. கற்பிக்கும் கை - (விதர்க்க முத்திரை)
01. வியக்கான முத்திரை எனவும் அழைக்கப்படுகின்றது
02. பாதி அறவாழி கை (தம்ம சக்கர முத்திரை)
03. புத்தர் தனது போதனைகளை விளக்கும் போது அடிக்கடி பயன்படுத்தப்பட்டது
04. அறிவுசார்ந்த வாத, விவாதத்திற்கான குறியீடு
05. கட்டை விரல் மற்றும் ஆள்காட்டி விரல் முனைகளில் ஒரு வட்டம் உருவாகும்
06. மற்ற எல்லா விரல்களும் வானோக்கிய வண்ணம் நீண்டிருக்கும்

இருக்கரங்கள் காட்டும் முத்திரை
01.சிந்தனைக்கை- (தியான முத்திரை)
01. சமாதி முத்திரை என்றும் அழைக்கப்படும்
02. தியானக்குறியீடு
03. மிக பிரபலமாக காணப்படும் முத்திரை
04.  இரு கரங்களும் மடிமீது இருக்கும்
05. வலக்கை இடக்கையின் விரல்கள் மீது முழுமையாக நீண்டிருக்கும்
06.வானோக்கிய உள்ளங்கையும் கால் பாதங்களும்  
07. அரையளவு மூடிய கண்கள், மூக்கின் நுனியை பார்த்து கொண்ட்டிருப்பது போல் காட்சியளிக்கும்

02. அறவாழிக்கை - (தர்மச்சக்கர முத்திரை)
01. கற்பிக்கும் குறியீடு
02. இதற்கு சக்கரத்தை சுழற்றுதல் என்பது பொருள்
03. கட்டை விரல் மற்றும் ஆள்காட்டி விரல் முனைகளில் ஒவ்வொரு கரங்களிலும் ஒரு வட்டம் உருவாகும்
04. வலது கை வானோக்கியிருக்கும் 
05. இடது கை உள்நோக்கி காணப்படும்
05. மார்பின் அருகே இரண்டு கரங்களும் இருக்கும்

கால்களின் நிலைகள்
01. இந்திய பாணி
 காலை குறுக்காக மடக்கி வைத்து அமர்ந்திருத்தல் 
02. ஐரோப்பிய பாணி
இரண்டு கால்களும் தொங்கிய நிலையில் அமர்ந்திருத்தல்

புத்தருக்கும் தீர்தங்கருக்குமுள்ள உருவ வேறுபாடுகள் 
அனைத்து தீர்தங்கரும்
01 - ஆடையின்றி இருப்பர்
02 - தலைக்குமேல் முக்குடை இருக்கும்
03. முக்குடைக்குமேல் மரம் இருக்கும்
04. சாமரம் வீசுவோர் இருவர் இருப்பர்
05. பீடத்தில் தீர்த்தங்கரின் குறியிடு  இருக்கும்
06 தலைக்கு மேல் நாகம்
     - 7வது தீர்தங்கர் - சுபர்சுவநாதர்
    -23 வது தீர்தங்கர் - பார்சுவநாதர்
                   
05 பீடத்தில் தீர்த்தங்கரின் குறியிடுகள் 
பௌத்த உருவத்திற்கும் பிராமிணிய உருவத்திற்குமுள்ள வேறுபாடுகள் 
ஒரு சிலர் உருவ வழிபாட்டுமுறை வேத காலத்திலிருந்து துவங்கியது என கருதுகின்றனர்.  எனினும் அது பௌத்த நடைமுறையிலிருந்து வந்தது என்பது தான் ஒருமித்த கருத்து. (01/ப29) (02/ப10),  பிராமணியத்தில் உருவ வழிபாடென்பது பெரும்பாலும் குப்தர் காலத்திலிருந்து துவங்கியது (02/ப10). அவர்களின் வழிபாட்டு முறையென்பது முதன்மையாக திறந்த வெளியில் அக்னி குண்டத்தை மையமாக கொண்டிருந்தது. மேலும் ‘கண்ணுக்கு புலப்படாமல் அருவமாக இருக்கிற கடவுளுக்கு உருவத்தை கற்பித்துவைக்க அக்காலத்தில் விரும்பவில்லை’(5/ப23).

பௌத்தத்தை பின்பற்றி முதலில் மறைபொருளும் பின்பு உருவமும் வணங்கப்பட்டது.
மறைபொருள் (அ) அடையாளம்  
'முருகனுக்கு வேலாயுதம், சிவபெருமானுக்கு திரிசூலம் பிறகு இலிங்கம் , திருமாலுக்கு திருவாழி (சக்கரம்) அடையாளமாக வணங்கப்பட்டன. (05/ப21)
உருவங்கள் 
'உருவங்களும் மனித உடல் வளர்ச்சிப்படி உறுப்புகளை அமைத்துக் காட்டுவது வழக்கமில்லை. மனித உருவத்திற்கு அப்பாற்பட்டது அவ்வுருவம் என்பதை காட்டவே' (05/ப23). விலங்கின் தலை (விலங்கின் தலையுடைய கடவுள்கள் 01. விநாயகன் - யானை, 02. அனுமான் - குரங்கு, 03. நரசிம்மன் - சிங்கம், 04. வராக -காட்டுபன்றி) பல தலைகள்,  பல கைகள் காட்டப்படுகிறது.
பல கைகள் 
புத்தரின் உருவத்திற்கும் ஜைனரின் தீர்த்தங்கரின் உருவத்திற்கும் இரண்டு கைகள் மட்டுமே உண்டு. ஆனால் அவர்களின் சிறு தெய்வங்களுக்கு (போதி சத்துவர் - பௌத்தம்) நான்கு அல்லது எட்டு கைகள் உள்ளன.உதாரணம்
பௌத்தத்தில் - அவலோகித்தர், தாரை ஜைனத்தில் இந்திரன், ஜிவாலாமாலினி.

இதற்கு நேர்மாறான அமைப்பு சைவ வைணவ உருவங்களில் காணப்படுகின்றன. சிவன் அல்லது திருமால் உருவங்களுக்கு நான்கு அல்லது எட்டு கைகள் இருக்கின்றன. ஆனால் சைவ வைணவ சிறு தெய்வங்களுக்கு இரண்டு கைகள் மட்டும் இருக்கின்றன. சிவன் அல்லது திருமால் உருவங்களுக்கு முதன்மை கொடுக்கும் போது அவ்வுருவங்களுக்கு நான்கு அல்லது எட்டு கைகளைக் கற்பித்து அவர்களின் சக்தியாகிய அம்மன், தேவி உருவங்களுக்கு இரண்டு கைகள் மட்டும் கற்பிக்கிறார்கள். ஆனால் அம்மன் தேவிக்கு முதன்மை கொடுக்கும் போது அவ்வுருவங்களுக்கு நான்கு அல்லது எட்டு கைகளை கற்பித்து சிற்ப உருவம் அமைக்கிறார்கள். (06ப

நூல் குறிப்புகள் 
01.இலங்கையிற் கலை வளர்ச்சி - கந்தையா நவரத்தினம்
02.திருப்தி பாலாஜி ஒரு பௌத்த கோவில் - ஜெ .ஜமன்தாஸ்
03.ஆரம்ப கால பௌத்த கலை மற்றும் அணிகோநிசிம் கோட்பாடு - எஸ். எல் ஹன்ட்டிங்டன்
04.பௌத்த கலைவரலாறு - Dr.G .சேதுராமன்
05.நுண் கலைகள் - மயிலை சீனி வேங்கடசாமி
06.தமிழர் வளர்த்த அழகு கலைகள் - மயிலை சீனி வேங்கடசாமி
07 புத்தரின் வரலாறு - சங்கமித்திரை 

08.தலைமுடியும் ஞானமுடியும் புத்தரும் தீர்த்தங்கரும்- சந்தா , ராமப்ரசாத்
09.பௌத்தமும் கலைகளும் - முனைவர் க. குளத்தூரான்

2 கருத்துகள் :

  1. பல அரிய கருத்துக்களைத் தொகுத்து வெளியிட்டுள்ளீர்கள். தமிழக புத்தர் சிலைகளைப் பொறுத்தவரை தலையில் தீச்சுடர் வடிவிலான முடி, இடுப்பிலும் மார்பிலும் ஆடை, நெற்றியில் திலகக்குறி, உள்ளங்கையில் தர்மசக்கரக்குறி போன்ற கூறுகளைக் கொண்டுள்ளன. நான் நேரில் பார்த்த சுமார் 50க்கும் மேற்பட்ட புத்தர் சிலைகளில் இவற்றில் சில கூறுகளோ அனைத்துக்கூறுகளுமோ உள்ளன. அமர்ந்த நிலையில் உள்ள சிலைகள் அதிகம். நின்ற நிலையில் உள்ளவை தமிழகத்தில் நான்கு அல்லது ஐந்து சிலைகள்தான். எனது வலைப்பூவில் தாங்கள் பார்த்தீர்களேயானால் தேவையான நூல்களைக் குறிப்புதவி நூல்களாகத் தந்துள்ளேன். அது உங்களுக்கு உதவும். எனது வலைப்பூ முகவரி www.ponnibuddha.blogspot.com. தங்களின் முயற்சி மென்மேலும் சிறப்பாக வெற்றிபெற வாழ்த்துக்கள். ஜம்புலிங்கம்.

    பதிலளிநீக்கு
  2. மிகவும் பயனுள்ள தகவல்கள்.பௌத்தம் பற்றி அறியாத பல விடயங்களைத் தெரிந்து கொண்டேன்.நன்றி

    பதிலளிநீக்கு