ஞாயிறு, ஜூலை 26, 2020

சீலம் - பௌத்த நிலம் ஆவணப்படம்


சேலம் பௌத்த வரலாற்று ஆய்வு 

பா.இரஞ்சித்


செவ்வாய், ஜூலை 14, 2020

தீக்சாபூமி


தீக்சா பூமி செல்லவேண்டும் என்பது நீண்ட நாள் ஆசை. அரையாண்டு கணக்கு முடிக்கும் பெரிய பணி உள்ளது, எனவே தீக்சா பூமி செல்ல வாய்ப்பு இல்லை. சென்ற முறை சென்றேயாகவேண்டும் என்று முடிவு எடுத்திருந்தேன். (ABI அபி (Ambedkar Buddhist intellectuals) மூலம் சென்று பெருமகிழ்ச்சி உடன் திரும்பிவந்தேன். முதல் நாள் ஒரூ சில இடங்களையும் இரண்டாவது நாள் தீக்சா பூமிக்கு செல்ல முடிவு எடுத்திருந்தோம். 

முதல் நாள் சென்ற இடங்கள் 
01. யூவாங் சுவாங் மையம் 
02.  விஷ்வ சாந்தி ஸ்துபா
03. சாந்திவன் சிசோலி 
04. பறக்கும் நாகம் அரண்மனை 
05. நாகலோகா

இரண்டாம் நாள் சென்ற இடங்கள் 
01. தரம்பேத் புத்த விகார்
02. தீக்சா பூமி 


01. யூவாங் சுவாங் மையம் (The Ven.Hsuen Tsang Retreat Centre)
அமைவிடம் : போர்தரன் Bor-Dharan, செல்லோ வட்டம் (Taluka Seloo), வார்தா மாவட்டம் (District Wardha) மகாராட்டினம் மாநிலம்.  நாக்பூரிலிருந்து 62 கி.மீ தூரத்தில் அமைந்துள்ளது.

திரைலோக்யா புத்த மகாசங்கா சாயகா கான (Trailokya Bauddha Mahasangha Sahayaka Gana)  வண. யுவான் எக்ஸ் இயன் (Ven.Yuan Xian) யூவாங் சுவாங்  மையத்தை திறந்து வைத்தார். யூவாங் சுவாங் சிலையை சீன பிக்கு வண.ஷின் தாவோ (Ven.Shin Tao) வழங்கினார். போதி மரம் ஒன்றை டாக்டர் H.C யோ (Dr.H.C.Yo) அவர்களால் நடப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு தம்மச்சரி லோகாமித்ரா 25 அக்டோபர் 1993 தலைமை தாங்கினார். யூவாங் சுவாங் ஓய்வு மையம் திரிரத்னா புத்த சமூகத்தின் ஒரு பகுதியாகும்.
 

இஸ்துப

சம சீரான உயரமுள்ள நான்கு புத்தர் சிலைகள் நான்கு முத்திரைகளுடன் அமைக்கப்பட்டுள்ளது.
01. வழங்கும் கை
02. சிந்தனை கை 
03. நிலத்தை தொடும் முத்திரை 
04. காக்கும் கை.

மிக அமைதியான இடமாகவும், இந்த இஸ்துபவை சுற்றி அழகான செடிகள் வளர்க்கப்பட்டு இருந்தது. இந்த அமைதி எங்களை தியானத்தில் அமரவைத்தது


விஷ்வ சாந்தி ஸ்துபா  (Vishwa Shanti Stupa) 

அமைவிடம் : விஷ்வ சாந்தி ஸ்துபா (Vishwa Shanti Stupa) பியூஜி குருஜி நினைவு அறக்கட்டளை (Fuji Guruji Memorial Trust) கோபுரி மாவட்டம் (Gopuri District) வார்த (Wardha) 442114    யூவாங் சுவாங் மையத்திலிருந்து 32 கி.மீ தூரத்தில் அமைந்துள்ளது விஷ்வ சாந்தி ஸ்துபா

விஷ்வ சாந்தி ஸ்துபா உலக அமைதி ஸ்தூப என்று அழைக்கப்படுகிறது. ஏழு அமைதி சாந்தி ஸ்தூபங்கள் இந்தியாவில் உள்ளன.
01.விஷ்வ சாந்தி ஸ்துபா  - லடாக்
02.விஷ்வ சாந்தி ஸ்துபா  -ராஜ்கீர்
03.விஷ்வ சாந்தி ஸ்துபா  -டெல்லி
04.விஷ்வ சாந்தி ஸ்துபா  -தவுலி கிரி Dhauli Giri
05.விஷ்வ சாந்தி ஸ்துபா  -வைஷாலி
06.விஷ்வ சாந்தி ஸ்துபா -வர்தா
07.விஷ்வ சாந்தி ஸ்துபா  -டார்ஜிலிங்
 

முன் பக்கம் உள்ள புத்தர் சிலை அஞ்சலி முத்திரை உடன் உள்ளது 

அறவாழி முத்திரை 

சித்தார்த்தர் 

மகாபரிநிப்பாணம் 


சாந்திவன் சிசோலி (Shantivan Chicholi)
சாந்திவன், சிசோலி கிராமம், ஃபெடாரி சாலை நாக்பூர். நாக்பூரிலிருந்து சுமார் 18 கிலோமீட்டர் தொலைவில் உள்ள சிசோலி கிராமத்தில் அமைந்துள்ளது சாந்திவன் சிசோலி. 1985-ல் திரு வாமன்ராவ் காட்போல் (Wamanrao Godbole) என்பவரால் சாந்திவன் நிறுவப்பட்டது, ஆரம்ப கட்டத்தில் சாந்திகுடில் என்று பெயரிடப்பட்ட குடிசை ஒன்றை கட்டினார்.

சாந்திவன் அருங்காட்சியம்
டாக்டர் அம்பேத்கரை அறிந்த நானக் சந்த் ராட்டு (Nanak Chand Rattu) பாபாசாகேப் இயற்கை எய்தும் வரை ஆறு ஆண்டுகள் அவரது சொந்த செயலாளராக பணியாற்றியவர். டாக்டர் அம்பேத்கருக்கு சொந்தமான அனைத்து பொருட்களும் வாங்கிவைத்திருந்தார். இந்த அருங்காட்சியகத்தில் 988 பொருட்கள் உள்ளன.

கோட், தட்டச்சு (Type Writer), காலணி, டாக்டர் அம்பேத்கர் உட்கார்ந்து இந்திய அரசியலமைப்பை எழுதிய நாற்காலி மற்றும் பிற பொருட்கள் அருங்காட்சியகம் அமைக்கப்பட்டுள்ளது. 

சாந்திவன் புத்த விஹார்
புத்த விஹாராவில் 14 ஜன்னல்கள் ஏன்?
01. டாக்டர். அம்பேத்கர் 14 வயது மகன்
02. 14 ஏப்ரல் மாதம் பிறந்தார்
03. அக்டோபர் 14 அன்று பௌத்த மதத்தை வளர்த்தார்
04. தீக்சாபூமி என்று அழைக்கப்படும் நாக்பூரில் 14 ஏக்கர் நிலத்தை பெற்றார்

புத்தவிஹர் 56 அடி ஏன்?
டாக்டர். அம்பேத்கர் 1956 பௌத்தம் ஏற்றார். எனவே புத்தவிஹர் 56 அடி நீளம் கொண்டது.

சாந்திவன் புத்தர் விஹார் தாமரை விடுப்பு 109 ஏன்? 
சாந்திவன் புத்தர் விஹார் தாமரை விடுப்பு 109 செதுக்கி கட்டப்பட்டுள்ளது. 109 தாமரை விடுப்பு என்பது டாக்டர். பாபாசாகேப் அம்பேத்கர் பிறந்த நாளை குறிக்கிறது (14-4-91=109).

விஹாரின் உச்சியில் 35 இலைகள் செதுக்கப்பட்டுள்ளன ஏன்?.
புத்த பகவான் 35 வயதில் ஞானத்தை அடைந்தார் மற்றும் டாக்டர். அம்பேத்கர் 1935 ஆம் ஆண்டு இயோலாவில் மதம் மாற்றம் அறிவித்தார். நான் இந்துவாக பிறந்தேன் ஆனால் இந்துவாக இறக்க மாட்டேன். எனவே விஹாரின் உச்சியில் 35 இலைகள் செதுக்கப்பட்டுள்ளன.
பறக்கும் நாகம் அரண்மனை (Dragon Palace Temple 
அமைவிடம் : தாதாசாகேப் கும்பரே பாரிசர் (Dadasaheb Kumbhare Parisar)புதிய கம்டி (New  Kamptee), நாக்பூர் மாவட்டம்  மகாராட்டினம் 441002

பறக்கும் நாகம் அரண்மனை நாக்பூரின் தாமரை கோயில் என்றும் அழைக்கப்படுகிறது. ஜப்பானை தளமாகக் கொண்ட ஒகாவா சொசைட்டியின் நிதியுடன் 1999 ஆம் ஆண்டில் இந்த விகார் நிறுவப்பட்டதுநாகலோகம் 
அமைவிடம் : நாகலோகம், திரிரத்னா, காம்ப்டே சாலை, நாக்பூர் மாவட்டம்  மகாராட்டினம் 440026

நாகலோக நிலம் 1994 இல் வாங்கப்பட்டது, முதல் கட்டிடம், புத்த சூர்ய விஹாரா 1997 இல் நிறைவடைந்தது, பின்னர் பிற வசதிகள் படிப்படியாக கட்டப்பட்டன. உள்ளூர் தம்ம நடவடிக்கைகள் 1997 இல் தொடங்கப்பட்டன, 2002 ஆம் ஆண்டில் ஒரு வருட குடியிருப்பு பயிற்சி திட்டம் திறக்கப்பட்டது. தள பகுதி 26 ஏக்கர், கட்டடப்பரப்பு 106,500 சதுர அடி. 36 அடி உயர வெண்கல ‘நடைபயிற்சி புத்தர்’ சிலை அமைக்கப்பட்டுள்ளது.
தரம்பேத் புத்த விகார்  (Dharampeth Buddha Vihar)

அமைவிடம் : புத்த விகார் மார்க்,டாக்டர் அம்பேத்கர் நகர், தரம்பேத், நாக்பூர் மாவட்டம்  மகாராட்டினம் 440010

ஒவ்வொரு ஆண்டும் தரம்பேத் புத்த விகார் மற்றும் பிற அமைப்புகள் பல்வேறு சமூக மற்றும் கலாச்சார நடவடிக்கைகளை விகாரில் நடத்தி வருகின்றனர். சுட சுட உணவு தயாரித்து கட்டணமின்றி அளிக்கப்படுகிறது.  சில அமைப்புகளிலிருந்து வருபர்கள் தானம் அளிக்கின்றனர். தமிழகத்திலிருந்து வருபவர்கள் பலர் இங்கு வந்து செல்கின்றனர் 
 
தீக்சா பூமி 

அமைவிடம்: தீக்சாபூமி, S அம்பாசரி சாலை, அபயங்கர் நகர், நாக்பூர், மகாராடிர மாநிலம் 440020. தீக்சாபூமி அஜ்னி ரயில் நிலையத்திற்கு அருகில் (சுமார் 3.5 கி.மீ) உள்ளது. 


1956 அக்டோபர் 14 ஆம் நாள் டாக்டர்.பி.ஆர்.அம்பேத்கர் இந்து மதத்தை கைவிட்டு புத்த மதத்தை ஏற்றுக்கொண்ட (தீக்சா பெற்ற) வரலாற்று இடம் இது. இந்த இடத்தில் லட்சக்கணக்கான மக்களுக்கு டாக்டர்.பி.ஆர்.அம்பேத்கர் தம்ம தீட்சை வழங்கினார். இந்த தம்ம தீட்சையில் 22 உறுதிமொழிகள் மேற்கோள்ளப்பட்டன.

இந்தியாவின் சுற்றுலா மையங்களில் முதன்மையான இடங்களில் ஒன்றாகத் திகழ்கிறது தீக்சாபூமி. இந்திய இரயில்வே நாக்பூரிலிருந்து கயா செல்லும் தொடர்வண்டிக்கு தீக்சாபூமி விரைவுவண்டி எனப்பெயரிட்டுள்ளது. இந்த ஸ்தூபத்தை டிசம்பர் 18, 2001 அன்று இந்திய ஜனாதிபதி கே. ஆர். நாராயணன் திறந்து வைத்தார்.

இங்குள்ள தூபி மற்றும் நுழைவாயில்கள் மத்தியப்பிரதேசத்தில் உள்ள சாஞ்சி ஸ்தூபத்தை ஒட்டி வடிவமைக்கப்பட்டுள்ளது. இது ஒரு பெரிய இரண்டு மாடி அரைக்கோள கட்டிடங்களைக் கொண்டுள்ளது, இது சாஞ்சி வாயிலை ஒத்த வாயில்களைக் கொண்டுள்ளது. இது உலகின் அனைத்து ஸ்தூபங்களுக்கிடையில் மிகப்பெரிய வெற்று ஸ்தூபமாகும் Hallow Stupa). உள் வட்ட மண்டபம் 4000 சதுர அடி பரப்பளவில் உள்ளது. தரை தளத்தில், 211 x 211 அடி பெரிய சதுர மண்டபம் உள்ளது. இந்த மண்டபத்தின் மையத்தில், புத்தரின் சிலை வைக்கப்பட்டுள்ளது.  

புத்தர் மற்றும் டாக்டர்.பி.ஆர் அம்பேத்கரின் வாழ்க்கையில் நடந்த நிகழ்வுகளின் நூலகம் மற்றும் புகைப்பட கண்காட்சி உள்ளது. ஸ்தூபத்தில் நான்கு திசைகளை எதிர்கொள்ளும் கதவுகள் உள்ளன. கதவுகள் பெரிய வளைவுகளில் திறக்கப்படுகின்றன, அவை அசோக் சக்கரங்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளன, குதிரைகள், யானைகள் மற்றும் சிங்கங்களின் சிலைகள். அம்பேத்கரின் சிலைகளும், புத்தரின் சிலைகளும் ஸ்தூபியின் முன் உள்ளன. ஸ்தூபியின் வலது பக்கத்தில் (Right Side) போதி மரம் உள்ளது.

கட்டணமில்லா  இலவச நுழைவு, சுத்தமான இடமாக அமைந்துள்ளது. ஸ்தூபத்திற்குள் செல்ல காலணிகளை அகற்ற வேண்டும்.   புகைப்படம் எடுக்க அனுமதி இல்லை, ஸ்தூபத்திற்கு வெளியில் இருந்து புகைப்படம் எடுக்க அனுமதிக்கப்படுகிறது. கூட்ட  நெரிசலில்லா பார்வையாளர்களின் எண்ணிக்கை அதிகம். ஜெய் பீம் முழக்கங்கள். குடும்பத்துடன் பார்வையிடலாம். வாழ்நாளில் ஒரு முறையாவது  தீக்சாபூமியை பார்வையிட வேண்டும், 

.  


பதந்த் நாகார்ஜுன் ஆர்யா சுரை சசாய் (Bhadant Nagarjun Arya Surai Sasai): 
சுராய் சசாய் 30 ஆகத்து 1935 ஜப்பானில் பிறந்தார். அவர் தனது 14 வயதில் பிக்குவானார். பகவன் புத்தர் அளித்த விபாசனா தியானத்தை கற்றறிய 1966 ஆம் ஆண்டில் தாய்லாந்து சென்றார். 
 
சசாய் 1966 இல் இந்தியா வந்து நிச்சிடாட்சு புஜியை சந்தித்தார். நாக்பூரில், 1956 இல் பி. ஆர். அம்பேத்கருக்கான மாற்று விழாவை ஏற்பாடு செய்திருந்த வாமன்ராவ் காட்போலை (Wamanrao Godbole) சந்தித்தார். காட்போலின் வீட்டில் பி. ஆர். அம்பேத்கரின் புகைப்படத்தைப் பார்த்தபோது, ​​அம்பேத்கர் தனது கனவில் தோன்றியதை உணர்ந்ததாக சசாய் கூறுகிறார்.
 
முதலில், நாக்பூர் குடியிருப்பாளர்கள் சூரை சசாயை மிகவும் விசித்திரமாகக் கருதினர், ஆனால் அவர் அவர்களை "ஜெய் பீம்" (அம்பேத்கருக்கு வெற்றி) என்று வாழ்த்தவும், விகாரைகளை கட்டவும் தொடங்கிய பின்னர் அவர் பிரபலமடைந்தார்.
 
1987 ஆம் ஆண்டில், சசாய் தனது பார்வைக்கு அதிகமாக இருந்ததற்காக கைது செய்யப்பட்டார், ஆனால் அவரது பின்தொடர்பவர்கள் நாடு கடத்தப்படுவதை எதிர்த்து அவரது ஆதரவாளர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். அவரை நாடு கடத்த நீதிமன்ற வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது, அவருக்கு இந்திய குடியுரிமை வழங்கப்பட்டது, இது அவருக்கு ஜப்பானிய குடியுரிமை இழந்தது.
 
புத்த கயாவில் உள்ள மகாபோதி விகாரை இந்து கட்டுப்பாட்டிலிருந்து விடுவிக்கும் பிரச்சாரத்தின் முக்கிய தலைவர்களில் சசாய் ஒருவர். ஆர்யா பதந்த் சுரை சசாய் டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர் ஸ்மாரக் சமிதி தீக்ஷபூமியின் தலைவர். அவர் பெரிதும் விரும்புபவர் வண. போதிதருமர்,  வண. நாகார்ஜுன். ஆர்யா சுரை சசாய் பிக்கு அவர்கள் டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர் நினைவு குழுவின் தலைவர். 84 வயது முதிர்ந்தவர்.
 
பௌத்தம் ஏற்பவர்கள் பலர் தொடர்ந்து வருகை தந்து அவரிடம் தீக்சை பெற்று பௌத்தரானார். ஆண், பெண் என தொடர்ந்து வருகை புரிந்தனர். இந்த  தீக்சை பார்க்கவேண்டும் என்று அமர்ந்து கவனித்ததோம். பின்னர் அவரை நன்கறிந்த ஐயா ஜெயராஜ் அவர்களுடன் சென்று அவரை வணங்கி சென்றோம்


நாக்பூரிலிருந்து   சென்னை திரும்புதல்