வெள்ளி, செப்டம்பர் 11, 2020

வரலாற்று சிறப்பு மிக்க பூனா ஒப்பந்தம்

 

வரலாற்று சிறப்பு மிக்க பூனா ஒப்பந்தம் 

POONA PACT

ஒவ்வொரு மாதமும் மூன்றாவது ஞாயிற்றுக்கிழமை மாலை ஒரு சொற்பொழிவு ABIல் நிகழ்த்தப்படும். தலைப்பு டாக்டர் அம்பேத்கர் அவர்களின் பேச்சும் எழுத்தும் அல்லது பௌத்தம் குறித்த பேச்சு. இதற்கிடையில் முக்கிய நிகழ்வுகளில் ஞாயிறு அல்லது விடுமுறை நாட்களில் ஒரு சிறப்பு பேச்சு நடத்தப்படும். அவ்வாறு நடந்த சிறப்பு பேச்சுகளில் ஒன்று பூனா ஒப்பந்தம் குறித்து

காந்தியின் மனைவி கஸ்தூரிபாய் அவர்கள் டாக்டர் அம்பேத்கர் அவர்களின் கால்களை பிடித்து தமது தாலி பாக்கியத்தை காப்பாற்றுங்கள் என்று வேண்டியதாக தன் சிறுவயது முதல் கேட்டு இருக்கிறேன்.

பம்பாயில் 1936ஆம் ஆண்டு கறுப்பு கொடி காட்டியது போல வேலூர் மாவட்டம் வாணியம்பாடி கோணம்பேடு பகுதியிலும் 500 பேர் காந்திக்கு எதிராக கறுப்பு கொடி காட்டிய வரலாறு நான் கேள்விப்பட்டு இருக்கிறேன்.

இதைப்போன்று 1932ஆம் ஆண்டு காந்தி வாணியம்பாடி பகுதி வழியாக போனபொழுது தேசதுரோகியே திரும்பி போ என்று வாணியம் பாடி தாழ்த்தப்பட்ட மக்கள் கறுப்பு கொடி காட்டி கலவரம் செய்தார்கள் என்பது காவல் குறிப்புகளில் உள்ளது என்று இந்நிகழ்வு துவங்கியது .

காந்தி ஒரு சிறந்த நடிகர் 

01. காந்தி மதுரைக்கு காமராஜர் மற்றும்  கக்கன்  அவர்களுடன் சேர்ந்து 1934 வருகிறார்கள். மதுரை மீனாட்சியம்மன் கோவில் அருகில் வந்த போது காந்திக்கு கோவிலுக்கு செல்லவேண்டும் என்று ஒரு ஆசை வருகிறது, கோவிலுக்குள் நுழையும் போது காந்தியை தடுத்து நிறுத்தி நீங்கள் மட்டுமே உள்ளே வரலாம், காமராஜரும் கக்கனும் கோவில் உள்ளே வர அனுமதியில்லை, அவர்கள் கோவிலுள் வந்தால் கோவில் தீட்டு பட்டு விடும் என்றனர். எப்பொழுது நீங்கள் காமராஜரையும் கக்கனையும் கோவிலுக்குள் செல்ல அனுமதி அளிக்கும் போது தான் நான் கோவிலுக்குள் வருவேன் என்று சென்று விட்டார் காந்தி.

02. அதன் பிறகு காந்திக்கு குற்றாலத்தில் குளிக்கவேண்டும் என்று ஆசை வந்தது. துண்டு ஒன்றை கட்டிக்கொண்டு குளிக்க சென்றார். அப்பொழுது அவர் ஒரு வினா எழுப்பினார். இங்கு தாழ்த்தபட்ட மக்கள் குளிக்க அனுமதியுள்ளதா என்று?. இங்கு அனுமதியில்லை நாங்கள் குளித்த தண்ணீர் 50 அடி தாண்டி வரும் இடத்தில்தான் குளிக்க அனுமதி, இங்கு குளிக்க அனுமதியில்லை என்றனர். எப்பொழுது நீங்கள் தாழ்த்தபட்ட மக்களை இங்கு குளிக்க அனுமதியளிக்கிறீரோ அப்பொழுது நான் இங்கு குளிப்பேன் என்று சென்றுவிட்டார் காந்தி.

காந்தி இங்கு அனைவரையும் அனுமதிக்கவேண்டும் என்று போராடவில்லை. தீண்டாமை என்பது தவறு என்று சொல்லவில்லை. தீண்டாமையை ஒழிப்பேன் ஒழிப்பேன் என்று காந்தி சொல்லியதை தவிர செயலில் ஏதும் செய்யவில்லை  


வரலாற்று சிறப்பு மிக்க பூனா ஒப்பந்தம் இல்லை - தமிழ் மறையான்

பூனா ஒப்பந்தம் மிக மட்டமான அறிக்கை. டாக்டர் அம்பேத்கர் அவர்களால் உரைக்கப்பட்டு, பிரிட்டிஷ் பிரதமர் (MacDonald) மேக் டொனல்ட் அவர்களால் அங்கீகரிக்கப்பட்ட (Communal Award) தனிவாக்குரிமை / இரட்டை வாக்குரிமை பூனா ஒப்பந்தத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்டால் அது வரலாற்று சிறப்பு என்று சொல்லலாம். காந்தியடிகள் நடத்திய உண்ணாவிரத திருவிளையாடல் தான் பூனா ஒப்பந்தம்.

அடக்கி ஒடுக்கப்பட்டு கிடந்த மக்களுக்கு வாக்குரிமை பெற்றுத்தர வேண்டும், அதுவும் ஒன்றல்ல இரண்டு வாக்குரிமை பெற்றுத்தரவேண்டும் என்று

01. ஒன்று தங்கள் பிரதிநிதிகளை தாங்கள் மட்டுமே தேர்ந்து எடுப்பது

02. மற்றோன்று பொது தொகுதி வேட்பாளராக நிற்பவரை தேர்ந்தெடுப்பது

இதனால் சாதி இந்துக்கள் நமக்கு வாக்கு அளிப்பார் என்று வேண்ட தேவையில்லை. ஆனால் பொது தொகுதி வேட்பாளர் தமக்கு ஒட்டு அளிக்கும்படி கேட்க வேண்டும். பிரிட்டிஷ் அரசு அனுமதியளித்ததை தட்டி பறித்தவர் காந்தி. 

 

அபி -(ABI-Ambedkar Buddhist intellectuals) நிறுவனர் திரு ஜெயராஜ்

பூனா ஒப்பந்தம் குறித்து இருவேறு கருத்துக்கள் உள்ளது. பூனா ஒப்பந்தம் வரலாற்று சிறப்புமிக்க ஒப்பந்தம் என்று சொல்வதற்கு உள்ள அடிப்படையான காரணங்கள்.

தாம் செய்த சாதனைகளை, சாதனைகள் என்று எண்ணும்பொழுது அதில் உள்ள குறைகளை நீக்கி மேலும் சாதனை படைக்க சென்ற நிலையைத்தான் வரலாற்று சிறப்புமிக்க ஒப்பந்தம் என்று சொல்லப்படுகிறது. டாக்டர் அம்பேத்கரே பூனா ஒப்பந்தம் என்பது ஒரு அற்பமான ஒப்பந்தம் (ஆங்கில தொகுதி 9) என்றுரைக்கும் பொழுது நாம் அனைவரும் அதனை மாற்றி சொல்ல வாய்ப்பில்லை.

பூனா ஒப்பந்தம் என்பது ஓர் அற்பமான ஒப்பந்தம் என்பதற்கு மூன்று செய்திகள் உள்ளது.

01) மேக் டொனால்ட் காந்திக்கு பதில் எழுதுகிறார். நீ இந்துக்களை ஒழுங்குபடுத்த தனிவாக்குரிமை (Communal Award) பயன்படுத்தவில்லை. (Double Voting System) இரட்டை வாக்குரிமை ஒற்றுமைக்கு வாய்ப்பு அளித்தது. ஆனால் எதற்க்காக இதை எதிர்த்தார் என்றால் தாழ்த்தப்பட்ட மக்கள் தங்கள் துயரினை மாற்றிக்கொள்ள அவர்கள், அவர்களுக்கான வலுவான நம்பிக்கைக்குரிய பிரதிநிதிகளை தேர்ந்து எடுக்கும் முறையை எதிர்த்து அவர்கள் அடுத்த கட்டத்திற்கு முன்னேறிவிடக்கூடாது என்பதற்காக நீங்கள் இந்த உண்ணாவிரத்தத்தை முன் எடுத்து இருக்கிறீர்கள். இது தான் வரலாறு. பிரிட்டிஷ் அரசாங்கம் டாக்டர் அம்பேத்கருக்கு சூட்டிய மகுடம்  


02. வட்ட மேஜை மாநாடு அட்டவாணை படுத்தப்பட்ட இன மக்களை அங்கீகரித்து அதன் சார்பாக பிரதிநிதிகளை பங்குகொள்ளச்செய்து ஒரு அரசியல் முக்கியத்துவம் கொண்டது. 

03. பூனா ஒப்பந்தம் எழுதி முடிக்கும்பொழுது தனிவாக்குரிமை (Communal Award) அதன் பயன்பாட்டை பூனா ஒப்பந்தம் மூலம் இந்துக்கள் சாற்றை முழுவதும் உறிந்துவிட்டு அதன் சக்கையை நம் மீது போட்டுவிட்டார்கள் என்றுரைக்கிறார் டாக்டர் அம்பேத்கர்டாக்டர் அம்பேத்கர் இந்த தவற்றை சரிசெய்ய மாற்று திட்டம் (Separate Electorate) வேண்டும் என்று 1949 அட்டவணைப்படுத்தப்பட்ட மக்கள் மாநாட்டில் பேசினார்.வழக்கறிஞர் - கௌதமன் : 
வட்டமேஜை மாநாட்டை தெரிந்துகொண்டால் தான் பூனா ஒப்பந்தம் பற்றி புரிந்துக்கொள்ளமுடியும் என்று தன் உரையை துவக்கினார்.


01. ஏன் வட்டமேஜை மாநாடு நடந்தது?

1927ல் ராயல் கமிஷனில் (Royal Commission) இந்தியர்கள் யாரும் கலந்துக்கொள்ளவில்லை. ஏன் இந்தியர்கள் யாரும் கலந்துக்கொள்ளவில்லை என்றால்இந்தியர்கள் அனைவரும் பங்கு ஏற்கத்தக்க அளவில் அரசியல் மாற்றம் பெறுவதற்கு நாங்கள் ஒரு மாநாட்டை நடத்தயிருக்கிறேம். அதற்க்கு வட்டமேஜை மாநாடு என்று பெயர் என்று காங்கிரஸ் பதிலுரைத்தது

 02. எத்தனை வட்ட மேஜை மாநாடுகள் நடந்தது

01. முதல் வட்ட மேஜை மாநாடு ( 12/11/1930 )

02. இரண்டாவது வட்ட மேஜை மாநாடு ( 07/09/1931 )

03. மூன்றாவது வட்ட மேஜை மாநாடு ( 17/11/1932 )

03. வட்ட மேஜை மாநாட்டின் சிறப்பு என்ன?

இந்தியாவில் SC இன மக்கள் ஒரு அரசியல் சிறுபான்மை (Political Minority) என அறிவித்த இந்திய வரலாற்றில் முதன் முறையாக அழைக்கப்பட்டது வட்ட மேஜை மாநாட்டில் தான்

  04. காந்தி ஏன் இரண்டாவது வட்ட மேஜை மாநாட்டில் மட்டும் கலந்துகொண்டார்?

மூன்று வட்ட மேஜை மாநாட்டிலும் கலந்துகொண்டவர்கள் டாக்டர் அம்பேத்கர் மற்றும் தாத்தா இரட்டை மலை சீனிவாசன். வட்ட மேஜை மாநாட்டில் கலந்துகொண்டவர்கள் மொத்தம் 89 பேர். இதில் காந்தி முதல் மற்றும் மூன்றாவது வட்டமேஜை மாநாட்டில் கலந்துக்கொள்ளவில்லை, இரண்டாவது வட்டமேஜை மாநாட்டில் மட்டுமே கலந்துகொண்டார். ஏன் இரண்டாவது வட்டமேஜை மாநாட்டில் மட்டும் கலந்துகொண்டார் என்றால்

01. முதல் வட்டமேஜை மாநாட்டில் நடந்த நிகழ்ச்சிகள்

02. முதல் வட்டமேஜை மாநாட்டின் கதாநாயகனாக (Hero) இருந்தார் டாக்டர் அம்பேத்கர் என்று உலக பத்திரிகைகள் புகழ்ந்துரைத்தது.

03. முதல் வட்டமேஜை மாநாட்டில் அரசியலமைப்பு அறிஞர்கள் (Constitutional Experts) கலந்துகொண்டனர்.

மேற்கூறிய காரணத்தால் காந்தி இரண்டாவது வட்டமேஜை மாநாட்டில் கலந்துகொண்டார்.
05. டாக்டர் அம்பேத்கர் மற்றும் தாத்தா இரட்டை மலை சினீவாசன் இருவரும் ஒரு மனுவினை வட்ட மேஜை மாநாட்டில் கொடுத்தார்கள். அதில் குறிப்பிடப்பட்டவை என்ன?

A. சமமான குடியுரிமை

B. சம உரிமைகளை சதந்திரமாக அனுபவித்தல்

C. அடிப்படை உரிமைகள்

 A. சமமான குடியுரிமை 

சமமான குடியுரிமையை டாக்டர் அம்பேத்கர் எங்கிருந்து எடுத்தார் என்றால் 

01. உலகளாவிய அரசியலமைப்பு 14வது திருத்தங்கள் (Universal Constitution 14 Amendments)

02.அயர்லாந்து அரசு சட்டம் 1920 (Ireland Government Act 1920) இல் 10 மற்றும் 11 வது பிரிவு

03. ஜெர்மானியில் 5வது ஜெர்மனி அத்தியாயம் (Germany Chapter) 67இல் பிரிவு 5(2)

 B. சம உரிமைகள் சுதந்திரமாக அனுபவித்தல்

01. தங்கும் இடங்கள்

02. அனுகூலங்கள்

03. வசதிகள்

04. விடுதிகள்

05. கல்வி நிறுவனங்கள்

06. சாலை

07. நடைபாதை

08. தீ

09. 

10. கிணறுகள்

11. நிலம், நீர் மற்றும் வான் வழி போக்குவரத்து

12. இதர பொழுதுபோக்குகள்

13. புகலிடங்கள்

 

06. எதன் அடிப்படையில் டாக்டர் அம்பேத்கர் சம உரிமைகள் சுதந்திரமாக அனுபவித்தல் கேட்கிறார் ?

1911இல் சென்னையில் நடந்த நிகழ்வை டாக்டர் அம்பேத்கர் குறிப்பிடுகிறார். A மற்றும் B என்ற இருவகுப்பினருக்கும் பெரும் சண்டை ஏற்பட்டது. A வகுப்பினர் தாங்கள் தான் தேரை இழுத்துக்கொண்டு செல்வோம் என்று வாதிட்டனர். இதனால் B வகுப்பினர் வழக்கு பதிவுசெய்தனர். உயர்நீதி மன்றம் A வகுப்பினருக்கு மட்டுமே தேரை இழுத்து செல்லும் உரிமையை வழங்கியது. A தேரை இழுத்து செல்லவேண்டிய அனைத்து பணிகளையும் முடித்துவிட்டனர். இரவு ஏழு மணியானது, தேர் வெளியே வரவில்லை. B வகுப்பினர் கலவரம் செய்யவில்லை, கல் எடுத்து எரியவில்லை. பின் ஏன் தேர் நகரவில்லையென்றால் B வகுப்பினர் தேர் வரும் தெருக்களில் நின்றிருந்தனர். இதனால் தெரு தீட்டாகிவிட்டது. தீட்டான இடத்தில் தேரை இழுத்து செல்ல முடியாது என்று நிறுத்திவிட்டனர். இதன் அடிப்படையில் தான் டாக்டர் அம்பேத்கர் சம உரிமைகள் சுதந்திரமாக அனுபவித்தல்கேட்கிறார்.

 சம உரிமைகள் சுதந்திரமாக அனுபவித்தலை யாராவது தடுத்தால் என்ன செய்வது?

இதனை தடுப்பவர்கள் மீது 5 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கவேண்டும் என்றுரைத்தார் டாக்டர் அம்பேத்கர்


 03.

04. சட்டமன்றங்களில் போதுமான பிரதிநித்துவம் 

05. அரசு பணிகளில் போதுமான பணிகள் - 11/08/1943 ல் தான் முதன் முதலில் ஒதுக்கீடு வந்தது (Reservation)

06. ஊறுவிளைவிக்கதக்க செயல்பாட்டுக்கான எதிரான பரிகாரங்கள் 

07. துறைசார்ந்த சிறப்பு அக்கறை 

08. அமைச்சரவையில் பிரதிநித்துவம் 

 

07. இந்துக்கள் யார்?

நாங்கள் இந்து மதத்தின் உட்பரிவு இல்லை. நாங்கள் ஒரு தேசிய இனம். நாங்கள் இந்துக்கள் இல்லை  என்பது டாக்டர் அம்பேத்கரின் கருத்து. பேசும் பொழுதும் கூட நாங்கள் வேறு இந்துக்கள் வேறு என்று தான் பயன்படுத்தி இருக்கிறார்.

ஏன்  நாங்கள் இந்துக்கள் இல்லை? பிராமணர்கள், சத்திரியர்கள், வைசியர்கள் மற்றும் சூத்திரர்கள் இந்நால்வரும் தீண்டத்தகுந்தவர்கள். இந்நால்வரும் நான்கு வருண கோட்பாட்டின் படி வருபர்கள். இந்து மதத்தில் பிராமணர் மற்றும் பிராமணர் அல்லாதவர் ஆகிய இருவரும் வந்து விடுவார்கள்.  

வருண கோட்பாட்டின்படி உள்ளவர்கள் மற்றும் அதில் வராத அவர்ணர்கள் இருவரையும் சேர்த்து இந்துக்கள் என்று குறிப்பிடுகின்றனர். இதனை டாக்டர் அம்பேத்கர் மறுக்கிறார். நாங்கள் அல்ல எங்கள் முன்னோர்களும் இந்துக்கள் அல்ல. நாம் எல்லாம் அவர்ணர்கள்.என்றுரைக்கிறார் டாக்டர் அம்பேத்கர் .

 08. காந்தி யார்?

காந்தி இந்துக்களின் பிரதிநிதியாக வந்து கலந்துகொண்டார். இந்தியாவின்  பிரதிநிதியாக யாரும் கலந்துக்கொள்ளவில்லை. டாக்டர் அம்பேத்கர் அட்டவணை படுத்தப்பட்ட மக்களின் பிரதிநிதியாக கலந்துகொண்டார் . 

மோகன் தாஸ் கரம்சந்த் காந்தி தன் மகனையே இந்துவாக வைத்து இருக்க முடியவில்லை. காந்திக்கு நான்கு மகன்கள் 01. ஹரிலால் காந்தி 02. மணிலால் காந்தி 03. தேவதாஸ் காந்தி 04.ராமதாஸ் காந்தி 

முதல் குழந்தை வயிற்றில் இருக்கும் போது தாறுமாறாக உடலுறவு கொண்டார்.  ஹரிலால் காந்தி  என்ன செய்தார் என்றால் 1946ல் காந்தி வருகிறார், அங்கிருந்தார்கள் அனைவரும் காந்திக்கு ஜெ , காந்திக்கு ஜெ    என்று புகழ்ந்துரைத்தனர். இந்த புகழுரையை கிழித்து ஒரு குரல் வந்தது கஸ்தூரிபாய்க்கு ஜெ  என்று. மேலும் ஹரிலால் காந்தி, காந்தியை பார்த்து, நீ ஒரு பெரிய ஆள் என்று நினைத்துக்கொள்ளாதே, அம்மா  கஸ்தூரிபாய்  இல்லை என்றால் நீ ஒன்றுமில்லாதவன் (zero) என்றுரைத்தார். ஹரிலால் காந்தி  இஸ்லாம் மதத்தை ஏற்றுக்கொண்டான். ஹரிலால் காந்தி உடன் காந்தியால் பேசவே முடியவில்லை. 

தன் சொந்த மகனையே இந்து மதத்தில் வைத்திருக்க முடியாத காந்தி ஒரு இனத்தையே படு பாதாளத்தில் தள்ளினார். A Worst Person காந்தி ஒரு மோசமான மனிதர். 

அனைத்தையும் ஒன்றுபடுத்தும் சக்தி என்று பெயர் பெற்ற காந்தி தன் மகனையே ஒன்றுபடுத்த முடியவில்லை. Pity minded person அறிவாற்றல் என்ற கண்ணோட்டத்தில் காந்தி விவரமற்றவராக இருந்தார்  தீண்டத்தகாதவர்  மீது காந்தி போரை தொடுத்தார்  

09. தீண்டத்தகாதவர்களுக்கு எதிராக செய்த கொடுமைகளுக்கு எங்களின் மண்டைகளை உடைத்து இருக்கவேண்டும் என்றைத்தார் காந்தி (பக்கம் 71)

காந்தி சொல்லிய வேலையை செய்தவர் அங்கம்பாக்கம் குப்புசாமி. அவர் ஒரு முன்னாள் இராணுவ வீரர் (Ex Service Man) அவர் ஒரு பௌத்தர். அவர் பௌத்தம் பற்றி மக்களுக்கு போதித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார். அங்கு வாழும் மக்கள் பெரும்பாலும் வட்டிக்கு வாங்கி தங்கள் குடும்பத்தை நடத்தி வந்தனர். அவ்வாறு இருக்கும் பொழுது அங்கம்பாக்கம் குப்புசாமி அவர்கள் அம்மக்களிடம் கடன்களை வாங்க கூடாது, குழந்தைகளை நன்றாக படிக்க வையுங்கள் என பல அறிவுரைகளை வழங்கினார். மேலும் மக்கள் பௌத்தம் நோக்கி சென்றனர்.

வட்டி வருமானத்தை அழித்த அங்கம்பாக்கம் குப்புசாமி மீது  பெரும் கோபமடைந்தனர். அதிகாலை பலர் அங்கம்பாக்கம் குப்புசாமி வீட்டை பூட்டி வீட்டை கொளுத்திவிட்டனர். பெரும் கலவரத்தில் ஈடுபட்டனர். அங்கம்பாக்கம் குப்புசாமி அவர் வீட்டின் குறைமீது ஏறி தான் வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து அவர்களை நோக்கி சுட்டார். இதனால் பலர் கீழே விழுந்தனர் ஐந்து பேர் அந்த இடத்திலேயே மரணமடைந்தனர். 1925 காந்தி கொள்கையை செய்தவர் அங்கம்பாக்கம் குப்புசாமி அவர்கள்   

10. காந்தி இந்து மதத்தில் இருந்து தீண்டதகாத மக்கள் வெளியேறுவதை எதிர்த்தது ஏன்?

வட்ட மேஜை மாநாட்டில் பேசப்பட்டது, இந்துக்கள், இந்துக்கள் இல்லை என்பது மட்டுமே. டாக்டர் அம்பேத்கர் நாங்கள் இந்துக்கள் இல்லை என்பதை வலுவாக எடுத்துரைத்தார்.  

ரோம் வழியாக இந்தியா வருகிறரர் காந்தி. ரோமாபுரி   செய்தியாளார் ஒருவர் காந்தியிடம் ஒரு வினாவை எழுப்புகிறார். நீங்கள் இந்தியா சென்று என்ன செய்யப்போகிறீர் என்று? நான் இந்தியாவிற்கு சென்று சட்ட மறுப்பு இயக்கத்தை துவங்கப்போகிறேன் என்று பேட்டி கொடுத்தார். 

காங்கிரஸ் கட்சி தலைவர் ஒரு அறிக்கையை வெளியிடுகிறர். காந்தி வெற்றி பயணத்தை முடித்து இந்தியா வருகிறார். தீண்டத்தகாத மக்கள் அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்று கொட்டுக்கொண்டார். வட்ட மேஜை மாநாட்டில்   தீண்டத்தகாத மக்களுக்கு எதிராக இருந்த காந்தியை இந்தியாவில்  தீண்டத்தகாத மக்களுக்கு  உழைத்தார் என்று பதிவிட்டனர். ஆனால் காந்தி இந்தியா வந்த பிறகு பெரும்கலவரம் நிகழ்கிறது. எங்களுக்கு எதிராக பேசிவிட்டு எங்களை ஒன்று கூட கேட்கிறாயா என்று பெரும் கலவரம் நிகழ்ந்தது 

காந்தி வல்லபாய் பட்டேல்  சிறைச்சாலையில் உள்ளனர். ஏற்கனவே நேரு சிறைச்சாலை சென்றுவிட்டார். நான் சாகும் வரை உண்ணாவிரதம் இருக்க போகிறேன் என்று காந்தி கடிதம் எழுதினார். அவரின் கடிதத்திற்கு பதில் ஏதும் எழுதவில்லை. எனவே மீண்டும் காந்தி பிரேத மந்திரிக்கு கடிதம் எழுதுகிறார் நான் உண்ணா விரதத்தை தொடரப்போகிறேன் என்று. மேக் டொனல்ட் பதிலுரைத்தார் உண்ணா விரதம் இருந்தாலும் இல்லாவிட்டாலும் கவலையில்லை என்று. நீங்கள் ஒற்றுமையாக வாங்க என்று முடித்தார் மேக் டொனல்ட். மீண்டும் காந்தி கடிதம் எழுதுகிறார், ஆனால் பதில் ஏதும் வரவில்லை. என்ன வென்றால் காந்திக்கு உயிர் வாழ வேண்டும் என்பது தான் ஆசை    

என் உயிரே போனாலும் எதிர்ப்பேன், எனக்கு இந்து மதம் தான் முக்கியம், எனவே இந்து மதத்தில் இருந்து தீண்டதகாத மக்கள் வெளியேறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. எந்த சூழ்நிலையிலும் அதிக மக்கள் தொகுதி தொகுதியாக பாகுபாடு ஏற்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது என்றுரைத்தார் காந்தி .

 11. அகிம்சா மூர்த்தி காந்தி ஏன் எரவாடா சிறைக்கு சென்றார்

பூனா ஒப்பந்தம் மாற்றம் செய்தனர் தொகுதியில் 4 பேர் நிற்கட்டும் இந்த நான்கு பேருக்கு (Scheduled Caste Federation) பட்டியல் சாதி கூட்டமைப்பு  பத்தில் நான்கு பேரை தேர்ந்து எடுக்கும். இந்த நான்கு பேரை பொது தொகுதியில் நிற்க, சாதி இந்துக்கள் இந்த நான்கு பேருக்கு ஓட்டு போடுவர். இதில் அதிக ஓட்டு பெற்றவர் வெற்றி பெறுவார்.

சாதி இந்துக்கள் ஓட்டை நம்பி டாக்டர் அம்பேத்கர் பயணித்து இருக்க முடியாது ஏன் என்றால் சாதி இந்துக்களுக்கும் ஷெட்யூல்டு இன மக்களுக்கும் இன்றுவரை தொடர்பு ஏதுமில்லை மற்றும்  இன்றுவரை ஓட்டு போடுவதில்லை, பேசுவார்கள் ஆனால் ஓட்டு போடுவதில்லை.

12. இந்தியாவில் ஒரே ஒரு மாவீரர் என்று அண்ணா யாரை?  ஏன் குறிப்பிடுகிறார்?

நிக்கோலஸ் டாக்டர் அம்பேத்கர் காந்தியை ஒரு எதிரியாக பார்த்தார் என்று பதிவிட்டுள்ளார்.  அண்ணா அவர்கள் காந்தியை, காந்(தி) "தீ" காந்தியை என்று குறிப்பிட்டுள்ளார்.  

04/03/1945 11/03/1945 25/03/1945 01/04/1945 திராவிடநாடு என்ற இதழில் அறிஞர் அண்ணா குறிப்பிடுகிறார். ஒரே ஒரு மாவீரர் தான் இந்தியாவில் அவர் தான் டாக்டர் பி ஆர் அம்பேத்கர் என்று அறிஞர் அண்ணா பதிவிட்டுள்ளார்

01. பழங்குடி மக்களின் பாதுகாவலர்

02.கொள்கைப்படி நடப்பதில் வீரம் மிக்கவர்

03.விடுதலை வீரர்

04. உரிமைப்போர் தளபதி

05. நற்பண்புகளை கொண்டவர்

06. அறிவாற்றல் கொண்டவர்

07. அச்சமின்றி மனதில் பட்டதை தயங்காமல் கூறுவார்

08. இந்துமதத்தின் அவலங்களை கண்டித்தவர்

09. கீதையை கொளுத்த வேண்டும் என்று சொன்னவர்

10.பயந்து பணிபவர் அல்ல

11. உயர்சாதி இந்துக்களின் கொடுமைக்கு ஆளாகி தவிக்கும் பழங்குடி மக்களின் நிலையை மாற்றி அவர் மனித உரிமை பெற்று வாழ வழி காண்பதே மகத்தான சேவை என்று கருதிய மாவீரர்

6 கோடி பேர் பெற்ற ஆதிதிராவிடர் நந்தன் காலம் முதல் நமது காலம் வரை தீண்டத்தகாதவன் என்று வழங்கினர். அந்த உழைப்பை புரிந்து கொள்கிறோம். ஊருக்கு வெளியே வாழ்கின்றனர், உடை இல்லை உணவில்லை, மரியாதை இல்லை, படிப்பு இல்லை. இவை ஏன் என்று டாக்டர் அம்பேத்கர் மனதில் எழும் போது உண்மையை சொல்லிதானே தீர்வார்

அவர் பல காலம் சிந்தித்து பார்த்து கண்டம் முடிவு இந்து மதத்திலேயே சிக்கி சிதைந்து ஆதிதிராவிட மக்களை இந்துமத கூண்டில் இருந்து வெளியேற்றி அவர்களை ஒன்று திரட்டி அவர்களுக்கு தனி வாழ்வு கிடைக்கும்படி செய்தவர்.  வேறு வழியில்லை என்பதால் தான் அதுதான் உண்மை. 

 

//நாம் இந்துக்கள் அல்ல என்பதுதான் பூனா ஒப்பந்தத்தின் சாரம்//

 

சனி, ஆகஸ்ட் 29, 2020

நந்தனும் நந்தனாரும்

 

தமிழ் பௌத்த மறுமலர்ச்சி மாதம்" காணொளிக் கருத்தரங்க நேரலையின் இருபத்தி 17வது அமர்வில் "நந்தனும் நந்தனாரும்" என்னும் தலைப்பில் மிகச்சிறப்பான உரையினை வழங்கினார் எழுத்தாளர் ஸ்டாலின் ராஜாங்கம் 


வியாழன், ஆகஸ்ட் 27, 2020

பெண் விடுதலை அரசியல்

அயோத்திதாசர்-அம்பேத்கர் வாசகர் வட்டம் நடத்தும் தமிழ்பெளத்த மறுமலர்ச்சி மாத காணொளி கருத்தரங்க நேரலை -19.

பெளத்த மறுமலர்ச்சியில் பெண் விடுதலை அரசியல்.

சிறப்பு உரையாளர்: பேராசிரியர் அரங்க. மல்லிகா தமிழ்த்துறை, எத்திராஜ் கல்லூரி,சென்னை.

பங்கேற்றுச் சிறப்பித்தவர்கள் 

வாழ்த்துரை: பேராசிரியர் அரச.முருகுபாண்டியன் 

பண்ணிசை: தமிழிசைவாணர் செல்லங்குப்பம் டாக்டர் சுப்பிரமணி ...

பங்கேற்றுச் சிறப்பித்தவர் பாக்யலெட்சுமி அக்கா 

செவ்வாய், ஆகஸ்ட் 25, 2020

கேரளாவில் பௌத்தம்

 திரிபீடகத் தமிழ் நிறுவனம்

நடத்தும் 'மானுடம் தேடும் அறம்'

தம்ம உரை - 26

உரை :கேரளாவில் பௌத்த மதம்

பௌத்த ஆய்வாளர், திரு. இ.ஜெயபிரகாஷ்

உதவி பேராசிரியர், லயோலா கல்லூரி, சென்னை.

நாள் : 24/08/2020
பண்டிதர் அயோத்திதாசரும் ஆத்திசூடி மீள் வாசிப்பும்


அயோத்திதாசர் - அம்பேத்கர் வாசகர் வட்டம் தமிழ் பௌத்த மறுமலர்ச்சி மாதம்" காணொளிக் கருத்தரங்க நேரலையின் இருபத்தி இரண்டாவது அமர்வில் "பண்டிதர் அயோத்திதாசரும் ஆத்திசூடி மீள் வாசிப்பும்" என்னும் தலைப்பில் மிகச்சிறப்பான உரையினை வழங்கினார் மா.அமரேசன் அவர்கள். அவர் பீகார் மாநில ஊரக வாழ்வாதாரத் திட்டத்தின் முதுநிலை நெறியாளர், பௌத்த ஆய்வாளர் மற்றும் எழுத்தாளர்.

பங்கேற்றுச் சிறப்பித்தவர்கள் 

01. அம்பேத்கரியச் செயற்பாட்டாளர், விடுதலைக் கலை இலக்கியப் பேரவையின் மாநிலச் செயலாளர் கவிஞர் யாழன் ஆதி அவர்கள்

02. பௌத்த ஆய்வாளரும் பேராசிரியருமான இ.ஜெயபிரகாஷ் அவர்கள்

03. பாக்கியலட்சுமி அக்கா, ஸ்ரீதர்கண்ணன் ஐயா அவர்கள்

 
வியாழன், ஆகஸ்ட் 20, 2020

அண்ணல் அம்பேத்கரின் பொருளாதாரச் சிந்தனைகள்

அயோத்திதாசர்-அம்பேத்கர் வாசகர் வட்டம் நடத்தும் தமிழ்பெளத்த மறுமலர்ச்சி மாத காணொளி கருத்தரங்க நேரலை -9 அண்ணல் அம்பேத்கரின் பொருளாதாரச் சிந்தனைகள்.

சிறப்பு உரையாளர்:
பேராசிரியர் இ.ஜெயபிரகாஷ் தமிழ் துறை, இலயோலா கல்லூரி.

ஞாயிறு, ஆகஸ்ட் 02, 2020

மெய்யறம் தாசரியப் பார்வை 

பௌத்த ஆய்வாளர் டாக்டர் சாக்யமோகன்


தமிழ் பௌத்த மறுமலர்ச்சி மாதம்" காணொளிக் கருத்தரங்க நேரலையின் பதினான்காவது அமர்வில் "மெய்யறம்: தாசரியப் பார்வை" என்னும் தலைப்பில் மிகச்சிறப்பான உரையினை வழங்கினார் அம்பேத்கரியச் செயற்பாட்டாளர் பௌத்த ஆய்வாளர் டாக்டர் சாக்யமோஹன் (City of Philadelphia, Commonwealth State of Pennsylvania, USA) 

வாழ்த்துரை  பேராசிரியர் அரச.முருகு பாண்டியன் ஐயா
                               பேராசிரியர் அரங்கமல்லிகா 

நிகழ்வின் தொடக்கத்தில் எழுச்சிமிகு அண்ணலின் பாடலை வழங்கினார் ஐயா தலித் சுப்பையா

பங்கேற்றுச் சிறப்பித்தவர்கள் :
01. அக்கா பாக்கியலெட்சுமி,
02.  பேராசிரியர் சாக்கியசக்தி .


 
      

அயோத்திதாசரும் அவர் வாழ்ந்த காலமும்தமிழறிஞர் பொ.வேல்சாமி

தமிழ் பௌத்த மறுமலர்ச்சி மாதம்- இணைய வழி காணொளிக் கருத்தரங்கம் நேரலை இருபத்தைந்தாவது  அமர்வில் "பண்டிதர் அயோத்திதாசரும் அவர் வாழ்ந்த காலமும்" என்னும் தலைப்பில் மிகச் சிறப்பாக உரையாற்றினார் பெருமதிப்புமிகு ஐயா தமிழறிஞர் பொ.வேல்சாமி. அறிமுகம் மற்றும் வாழ்த்துரை வழங்கினார் பேராசிரியர் அரச.முருகு பாண்டியன் ஐயா. 

பங்கேற்றுச் சிறப்பித்தவர்கள்
01. பேராசிரியர் ஜெயபிரகாஷ்,
02. அக்கா பாக்கியலட்சுமி, 
03. ஆசிரியர் செந்தில்,
04. பொய்யாமொழி முருகன்


ஞாயிறு, ஜூலை 26, 2020

சீலம் - பௌத்த நிலம் ஆவணப்படம்


சேலம் பௌத்த வரலாற்று ஆய்வு 

பா.இரஞ்சித்


செவ்வாய், ஜூலை 14, 2020

தீக்சாபூமி


தீக்சா பூமி செல்லவேண்டும் என்பது நீண்ட நாள் ஆசை. அரையாண்டு கணக்கு முடிக்கும் பெரிய பணி உள்ளது, எனவே தீக்சா பூமி செல்ல வாய்ப்பு இல்லை. சென்ற முறை சென்றேயாகவேண்டும் என்று முடிவு எடுத்திருந்தேன். (ABI அபி (Ambedkar Buddhist intellectuals) மூலம் சென்று பெருமகிழ்ச்சி உடன் திரும்பிவந்தேன். முதல் நாள் ஒரூ சில இடங்களையும் இரண்டாவது நாள் தீக்சா பூமிக்கு செல்ல முடிவு எடுத்திருந்தோம். 

முதல் நாள் சென்ற இடங்கள் 
01. யூவாங் சுவாங் மையம் 
02.  விஷ்வ சாந்தி ஸ்துபா
03. சாந்திவன் சிசோலி 
04. பறக்கும் நாகம் அரண்மனை 
05. நாகலோகா

இரண்டாம் நாள் சென்ற இடங்கள் 
01. தரம்பேத் புத்த விகார்
02. தீக்சா பூமி 


01. யூவாங் சுவாங் மையம் (The Ven.Hsuen Tsang Retreat Centre)
அமைவிடம் : போர்தரன் Bor-Dharan, செல்லோ வட்டம் (Taluka Seloo), வார்தா மாவட்டம் (District Wardha) மகாராட்டினம் மாநிலம்.  நாக்பூரிலிருந்து 62 கி.மீ தூரத்தில் அமைந்துள்ளது.

திரைலோக்யா புத்த மகாசங்கா சாயகா கான (Trailokya Bauddha Mahasangha Sahayaka Gana)  வண. யுவான் எக்ஸ் இயன் (Ven.Yuan Xian) யூவாங் சுவாங்  மையத்தை திறந்து வைத்தார். யூவாங் சுவாங் சிலையை சீன பிக்கு வண.ஷின் தாவோ (Ven.Shin Tao) வழங்கினார். போதி மரம் ஒன்றை டாக்டர் H.C யோ (Dr.H.C.Yo) அவர்களால் நடப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு தம்மச்சரி லோகாமித்ரா 25 அக்டோபர் 1993 தலைமை தாங்கினார். யூவாங் சுவாங் ஓய்வு மையம் திரிரத்னா புத்த சமூகத்தின் ஒரு பகுதியாகும்.
 

இஸ்துப

சம சீரான உயரமுள்ள நான்கு புத்தர் சிலைகள் நான்கு முத்திரைகளுடன் அமைக்கப்பட்டுள்ளது.
01. வழங்கும் கை
02. சிந்தனை கை 
03. நிலத்தை தொடும் முத்திரை 
04. காக்கும் கை.

மிக அமைதியான இடமாகவும், இந்த இஸ்துபவை சுற்றி அழகான செடிகள் வளர்க்கப்பட்டு இருந்தது. இந்த அமைதி எங்களை தியானத்தில் அமரவைத்தது


விஷ்வ சாந்தி ஸ்துபா  (Vishwa Shanti Stupa) 

அமைவிடம் : விஷ்வ சாந்தி ஸ்துபா (Vishwa Shanti Stupa) பியூஜி குருஜி நினைவு அறக்கட்டளை (Fuji Guruji Memorial Trust) கோபுரி மாவட்டம் (Gopuri District) வார்த (Wardha) 442114    யூவாங் சுவாங் மையத்திலிருந்து 32 கி.மீ தூரத்தில் அமைந்துள்ளது விஷ்வ சாந்தி ஸ்துபா

விஷ்வ சாந்தி ஸ்துபா உலக அமைதி ஸ்தூப என்று அழைக்கப்படுகிறது. ஏழு அமைதி சாந்தி ஸ்தூபங்கள் இந்தியாவில் உள்ளன.
01.விஷ்வ சாந்தி ஸ்துபா  - லடாக்
02.விஷ்வ சாந்தி ஸ்துபா  -ராஜ்கீர்
03.விஷ்வ சாந்தி ஸ்துபா  -டெல்லி
04.விஷ்வ சாந்தி ஸ்துபா  -தவுலி கிரி Dhauli Giri
05.விஷ்வ சாந்தி ஸ்துபா  -வைஷாலி
06.விஷ்வ சாந்தி ஸ்துபா -வர்தா
07.விஷ்வ சாந்தி ஸ்துபா  -டார்ஜிலிங்
 

முன் பக்கம் உள்ள புத்தர் சிலை அஞ்சலி முத்திரை உடன் உள்ளது 

அறவாழி முத்திரை 

சித்தார்த்தர் 

மகாபரிநிப்பாணம் 


சாந்திவன் சிசோலி (Shantivan Chicholi)
சாந்திவன், சிசோலி கிராமம், ஃபெடாரி சாலை நாக்பூர். நாக்பூரிலிருந்து சுமார் 18 கிலோமீட்டர் தொலைவில் உள்ள சிசோலி கிராமத்தில் அமைந்துள்ளது சாந்திவன் சிசோலி. 1985-ல் திரு வாமன்ராவ் காட்போல் (Wamanrao Godbole) என்பவரால் சாந்திவன் நிறுவப்பட்டது, ஆரம்ப கட்டத்தில் சாந்திகுடில் என்று பெயரிடப்பட்ட குடிசை ஒன்றை கட்டினார்.

சாந்திவன் அருங்காட்சியம்
டாக்டர் அம்பேத்கரை அறிந்த நானக் சந்த் ராட்டு (Nanak Chand Rattu) பாபாசாகேப் இயற்கை எய்தும் வரை ஆறு ஆண்டுகள் அவரது சொந்த செயலாளராக பணியாற்றியவர். டாக்டர் அம்பேத்கருக்கு சொந்தமான அனைத்து பொருட்களும் வாங்கிவைத்திருந்தார். இந்த அருங்காட்சியகத்தில் 988 பொருட்கள் உள்ளன.

கோட், தட்டச்சு (Type Writer), காலணி, டாக்டர் அம்பேத்கர் உட்கார்ந்து இந்திய அரசியலமைப்பை எழுதிய நாற்காலி மற்றும் பிற பொருட்கள் அருங்காட்சியகம் அமைக்கப்பட்டுள்ளது. 

சாந்திவன் புத்த விஹார்
புத்த விஹாராவில் 14 ஜன்னல்கள் ஏன்?
01. டாக்டர். அம்பேத்கர் 14 வயது மகன்
02. 14 ஏப்ரல் மாதம் பிறந்தார்
03. அக்டோபர் 14 அன்று பௌத்த மதத்தை வளர்த்தார்
04. தீக்சாபூமி என்று அழைக்கப்படும் நாக்பூரில் 14 ஏக்கர் நிலத்தை பெற்றார்

புத்தவிஹர் 56 அடி ஏன்?
டாக்டர். அம்பேத்கர் 1956 பௌத்தம் ஏற்றார். எனவே புத்தவிஹர் 56 அடி நீளம் கொண்டது.

சாந்திவன் புத்தர் விஹார் தாமரை விடுப்பு 109 ஏன்? 
சாந்திவன் புத்தர் விஹார் தாமரை விடுப்பு 109 செதுக்கி கட்டப்பட்டுள்ளது. 109 தாமரை விடுப்பு என்பது டாக்டர். பாபாசாகேப் அம்பேத்கர் பிறந்த நாளை குறிக்கிறது (14-4-91=109).

விஹாரின் உச்சியில் 35 இலைகள் செதுக்கப்பட்டுள்ளன ஏன்?.
புத்த பகவான் 35 வயதில் ஞானத்தை அடைந்தார் மற்றும் டாக்டர். அம்பேத்கர் 1935 ஆம் ஆண்டு இயோலாவில் மதம் மாற்றம் அறிவித்தார். நான் இந்துவாக பிறந்தேன் ஆனால் இந்துவாக இறக்க மாட்டேன். எனவே விஹாரின் உச்சியில் 35 இலைகள் செதுக்கப்பட்டுள்ளன.
பறக்கும் நாகம் அரண்மனை (Dragon Palace Temple 
அமைவிடம் : தாதாசாகேப் கும்பரே பாரிசர் (Dadasaheb Kumbhare Parisar)புதிய கம்டி (New  Kamptee), நாக்பூர் மாவட்டம்  மகாராட்டினம் 441002

பறக்கும் நாகம் அரண்மனை நாக்பூரின் தாமரை கோயில் என்றும் அழைக்கப்படுகிறது. ஜப்பானை தளமாகக் கொண்ட ஒகாவா சொசைட்டியின் நிதியுடன் 1999 ஆம் ஆண்டில் இந்த விகார் நிறுவப்பட்டதுநாகலோகம் 
அமைவிடம் : நாகலோகம், திரிரத்னா, காம்ப்டே சாலை, நாக்பூர் மாவட்டம்  மகாராட்டினம் 440026

நாகலோக நிலம் 1994 இல் வாங்கப்பட்டது, முதல் கட்டிடம், புத்த சூர்ய விஹாரா 1997 இல் நிறைவடைந்தது, பின்னர் பிற வசதிகள் படிப்படியாக கட்டப்பட்டன. உள்ளூர் தம்ம நடவடிக்கைகள் 1997 இல் தொடங்கப்பட்டன, 2002 ஆம் ஆண்டில் ஒரு வருட குடியிருப்பு பயிற்சி திட்டம் திறக்கப்பட்டது. தள பகுதி 26 ஏக்கர், கட்டடப்பரப்பு 106,500 சதுர அடி. 36 அடி உயர வெண்கல ‘நடைபயிற்சி புத்தர்’ சிலை அமைக்கப்பட்டுள்ளது.
தரம்பேத் புத்த விகார்  (Dharampeth Buddha Vihar)

அமைவிடம் : புத்த விகார் மார்க்,டாக்டர் அம்பேத்கர் நகர், தரம்பேத், நாக்பூர் மாவட்டம்  மகாராட்டினம் 440010

ஒவ்வொரு ஆண்டும் தரம்பேத் புத்த விகார் மற்றும் பிற அமைப்புகள் பல்வேறு சமூக மற்றும் கலாச்சார நடவடிக்கைகளை விகாரில் நடத்தி வருகின்றனர். சுட சுட உணவு தயாரித்து கட்டணமின்றி அளிக்கப்படுகிறது.  சில அமைப்புகளிலிருந்து வருபர்கள் தானம் அளிக்கின்றனர். தமிழகத்திலிருந்து வருபவர்கள் பலர் இங்கு வந்து செல்கின்றனர் 
 
தீக்சா பூமி 

அமைவிடம்: தீக்சாபூமி, S அம்பாசரி சாலை, அபயங்கர் நகர், நாக்பூர், மகாராடிர மாநிலம் 440020. தீக்சாபூமி அஜ்னி ரயில் நிலையத்திற்கு அருகில் (சுமார் 3.5 கி.மீ) உள்ளது. 


1956 அக்டோபர் 14 ஆம் நாள் டாக்டர்.பி.ஆர்.அம்பேத்கர் இந்து மதத்தை கைவிட்டு புத்த மதத்தை ஏற்றுக்கொண்ட (தீக்சா பெற்ற) வரலாற்று இடம் இது. இந்த இடத்தில் லட்சக்கணக்கான மக்களுக்கு டாக்டர்.பி.ஆர்.அம்பேத்கர் தம்ம தீட்சை வழங்கினார். இந்த தம்ம தீட்சையில் 22 உறுதிமொழிகள் மேற்கோள்ளப்பட்டன.

இந்தியாவின் சுற்றுலா மையங்களில் முதன்மையான இடங்களில் ஒன்றாகத் திகழ்கிறது தீக்சாபூமி. இந்திய இரயில்வே நாக்பூரிலிருந்து கயா செல்லும் தொடர்வண்டிக்கு தீக்சாபூமி விரைவுவண்டி எனப்பெயரிட்டுள்ளது. இந்த ஸ்தூபத்தை டிசம்பர் 18, 2001 அன்று இந்திய ஜனாதிபதி கே. ஆர். நாராயணன் திறந்து வைத்தார்.

இங்குள்ள தூபி மற்றும் நுழைவாயில்கள் மத்தியப்பிரதேசத்தில் உள்ள சாஞ்சி ஸ்தூபத்தை ஒட்டி வடிவமைக்கப்பட்டுள்ளது. இது ஒரு பெரிய இரண்டு மாடி அரைக்கோள கட்டிடங்களைக் கொண்டுள்ளது, இது சாஞ்சி வாயிலை ஒத்த வாயில்களைக் கொண்டுள்ளது. இது உலகின் அனைத்து ஸ்தூபங்களுக்கிடையில் மிகப்பெரிய வெற்று ஸ்தூபமாகும் Hallow Stupa). உள் வட்ட மண்டபம் 4000 சதுர அடி பரப்பளவில் உள்ளது. தரை தளத்தில், 211 x 211 அடி பெரிய சதுர மண்டபம் உள்ளது. இந்த மண்டபத்தின் மையத்தில், புத்தரின் சிலை வைக்கப்பட்டுள்ளது.  

புத்தர் மற்றும் டாக்டர்.பி.ஆர் அம்பேத்கரின் வாழ்க்கையில் நடந்த நிகழ்வுகளின் நூலகம் மற்றும் புகைப்பட கண்காட்சி உள்ளது. ஸ்தூபத்தில் நான்கு திசைகளை எதிர்கொள்ளும் கதவுகள் உள்ளன. கதவுகள் பெரிய வளைவுகளில் திறக்கப்படுகின்றன, அவை அசோக் சக்கரங்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளன, குதிரைகள், யானைகள் மற்றும் சிங்கங்களின் சிலைகள். அம்பேத்கரின் சிலைகளும், புத்தரின் சிலைகளும் ஸ்தூபியின் முன் உள்ளன. ஸ்தூபியின் வலது பக்கத்தில் (Right Side) போதி மரம் உள்ளது.

கட்டணமில்லா  இலவச நுழைவு, சுத்தமான இடமாக அமைந்துள்ளது. ஸ்தூபத்திற்குள் செல்ல காலணிகளை அகற்ற வேண்டும்.   புகைப்படம் எடுக்க அனுமதி இல்லை, ஸ்தூபத்திற்கு வெளியில் இருந்து புகைப்படம் எடுக்க அனுமதிக்கப்படுகிறது. கூட்ட  நெரிசலில்லா பார்வையாளர்களின் எண்ணிக்கை அதிகம். ஜெய் பீம் முழக்கங்கள். குடும்பத்துடன் பார்வையிடலாம். வாழ்நாளில் ஒரு முறையாவது  தீக்சாபூமியை பார்வையிட வேண்டும், 

.  


பதந்த் நாகார்ஜுன் ஆர்யா சுரை சசாய் (Bhadant Nagarjun Arya Surai Sasai): 
சுராய் சசாய் 30 ஆகத்து 1935 ஜப்பானில் பிறந்தார். அவர் தனது 14 வயதில் பிக்குவானார். பகவன் புத்தர் அளித்த விபாசனா தியானத்தை கற்றறிய 1966 ஆம் ஆண்டில் தாய்லாந்து சென்றார். 
 
சசாய் 1966 இல் இந்தியா வந்து நிச்சிடாட்சு புஜியை சந்தித்தார். நாக்பூரில், 1956 இல் பி. ஆர். அம்பேத்கருக்கான மாற்று விழாவை ஏற்பாடு செய்திருந்த வாமன்ராவ் காட்போலை (Wamanrao Godbole) சந்தித்தார். காட்போலின் வீட்டில் பி. ஆர். அம்பேத்கரின் புகைப்படத்தைப் பார்த்தபோது, ​​அம்பேத்கர் தனது கனவில் தோன்றியதை உணர்ந்ததாக சசாய் கூறுகிறார்.
 
முதலில், நாக்பூர் குடியிருப்பாளர்கள் சூரை சசாயை மிகவும் விசித்திரமாகக் கருதினர், ஆனால் அவர் அவர்களை "ஜெய் பீம்" (அம்பேத்கருக்கு வெற்றி) என்று வாழ்த்தவும், விகாரைகளை கட்டவும் தொடங்கிய பின்னர் அவர் பிரபலமடைந்தார்.
 
1987 ஆம் ஆண்டில், சசாய் தனது பார்வைக்கு அதிகமாக இருந்ததற்காக கைது செய்யப்பட்டார், ஆனால் அவரது பின்தொடர்பவர்கள் நாடு கடத்தப்படுவதை எதிர்த்து அவரது ஆதரவாளர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். அவரை நாடு கடத்த நீதிமன்ற வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது, அவருக்கு இந்திய குடியுரிமை வழங்கப்பட்டது, இது அவருக்கு ஜப்பானிய குடியுரிமை இழந்தது.
 
புத்த கயாவில் உள்ள மகாபோதி விகாரை இந்து கட்டுப்பாட்டிலிருந்து விடுவிக்கும் பிரச்சாரத்தின் முக்கிய தலைவர்களில் சசாய் ஒருவர். ஆர்யா பதந்த் சுரை சசாய் டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர் ஸ்மாரக் சமிதி தீக்ஷபூமியின் தலைவர். அவர் பெரிதும் விரும்புபவர் வண. போதிதருமர்,  வண. நாகார்ஜுன். ஆர்யா சுரை சசாய் பிக்கு அவர்கள் டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர் நினைவு குழுவின் தலைவர். 84 வயது முதிர்ந்தவர்.
 
பௌத்தம் ஏற்பவர்கள் பலர் தொடர்ந்து வருகை தந்து அவரிடம் தீக்சை பெற்று பௌத்தரானார். ஆண், பெண் என தொடர்ந்து வருகை புரிந்தனர். இந்த  தீக்சை பார்க்கவேண்டும் என்று அமர்ந்து கவனித்ததோம். பின்னர் அவரை நன்கறிந்த ஐயா ஜெயராஜ் அவர்களுடன் சென்று அவரை வணங்கி சென்றோம்


நாக்பூரிலிருந்து   சென்னை திரும்புதல்