திரு ஒரிசா பாலு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
திரு ஒரிசா பாலு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, மார்ச் 22, 2026

கடலியல் ஆய்வாளர் திரு. ஒரிசா பாலு


தமிழர் தொன்மைக்காகத் தன் வாழ்நாளையே அர்ப்பணித்த ஐயா ஒரிசா பாலு அவர்களின் நினைவைப் போற்றும் வகையில், மார்ச் 21, சனிக்கிழமை, சென்னையில் எழும்பூரில் உள்ள இக்சா (ICSA) அரங்கதில் "தமிழர் தேசிய ஒளியூட்டி நாள்" நிகழ்ச்சியில் ஐயா ஒரிசா பாலு அவர்களின் திருவுருவப்படத்தை திறந்து வைத்தது தமிழர் நடுவம்.

கடலியல் ஆய்வாளர் திரு. ஒரிசா பாலு
01.தமிழர்களின் தொன்மை வெறும் இலக்கியத்தோடு நின்றுவிடாமல், அது கடல்சார் அறிவியலோடும், நிலவியல் மாற்றங்களோடும் பிணைக்கப்பட்டது என்பதை உலகிற்கு உரக்கச் சொன்னவர் திரு. ஒரிசா பாலு அவர்கள்.

02.ஒரிசா பாலு அவர்கள் 1963-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 7-ஆம் தேதி, திருச்சி உறையூரில் பிறந்தார். இவரது தந்தை ஒரு காவல் அதிகாரி என்பதால், தமிழகத்தின் பல்வேறு ஊர்களான விழுப்புரம், புதுச்சேரி, நெய்வேலி மற்றும் சென்னை போன்ற இடங்களில் வளரும் வாய்ப்பைப் பெற்றார்.

03.இயற்பியல் துறையில் பட்டம் பெற்ற இவர், பின்னர் பொறியியல் துறையில் நிபுணத்துவம் பெற்றார். குறிப்பாக, சுரங்கம் மற்றும் வெளிநாட்டு இயந்திரங்களைப் பழுது பார்க்கும் பணிக்காக ஒரிசா மாநிலத்திற்குச் சென்றார். அங்கு பல ஆண்டுகள் பணியாற்றியதால், "ஒரிசா பாலு" என்ற பெயர் நிலைத்தது.

கடல்சார் ஆய்வுகளும் குமரிக்கண்டத் தேடலும்
01.ஒரிசா பாலு அவர்களின் தேடல் வெறும் தொழிலோடு நின்றுவிடவில்லை. ஒரிசா கடற்கரையில் ஆமைகள் முட்டையிட வருவதைக் கவனித்த அவர், அந்த ஆமைகளின் இடப்பெயர்ச்சிக்கும் தமிழர்களின் கடல்வழிப் பயணத்திற்கும் உள்ள தொடர்பை ஆராயத் தொடங்கினார்.

02.லெமூரியா மற்றும் குமரிக்கண்டம் தமிழ் இலக்கியங்கள் கூறும் "கடல் கொண்ட தென்னாடு" மற்றும் "தென்புலத்தார்" போன்ற கருத்துகளை வெறும் கற்பனையாகக் கருதாமல், நவீன அறிவியல் தரவுகளோடு ஒப்பிட்டார்.

03.செயற்கைக்கோள் (Satellite) படங்கள் மற்றும் நவீன கடல்சார் தொழில் நுட்பங்களைப் பயன்படுத்தி, ஒரு காலத்தில் நிலப்பகுதியாக இருந்து கடல் மட்டம் உயர்வால் மூழ்கிய பகுதிகளை அடையாளம் கண்டார்.

04.கடலில் மீன்கள் மற்றும் ஆமைகள் குறிப்பிட்ட இடங்களுக்குத் தேடிச் செல்வதை அடிப்படையாகக் கொண்டு, பண்டைய தமிழர்களின் கடல் வழிப்பாதைகளை (Sea routes) உலகிற்கு விளக்கினார்.

05.தமிழர்கள் வெறும் தமிழகத்திற்குள் மட்டும் முடங்கியவர்கள் அல்ல, அவர்கள் உலகெங்கும் கடல் வழியாகப் பயணம் செய்து நாகரிகத்தைப் பரப்பியவர்கள் என்பதைத் தனது ஆய்வுகள் மூலம் நிரூபிக்க முயன்றார். ஆசியா முதல் அமெரிக்கா வரை தமிழர்களின் தொன்மை அடையாளங்கள் சிதறிக் கிடப்பதை அவர் ஆவணப்படுத்தினார்.

தமிழர் தொன்மை
சிந்து நாகரிகம், கிரேக்க நாகரிகம், சீன நாகரிகம் எகிப்து நாகரிகம் என எல்லாவற்றிலும் தமிழருடைய ஊடுருவல் இருக்கிறது என்று கூறியிருக்கிறார். கொரியாவைப் பார்க்கும் போது கொரிய மொழியில் 4000 சொற்கள் தமிழிலிருந்து எடுக்கப்பட்டதாக இருக்கிறது. இது மட்டுமில்லாமல் சீனா, பர்மா, தாய்லாந்து, மலேசியா என வெகுவான மரபுகளில் தமிழர்களுடைய மரபு கலந்திருக்கிறது.

இவர் மீன் வளம், பாய்மரக் கப்பல், நீர்மூழ்கிகள், மானுடவியல், விலங்கு மற்றும் தாவரம், கடல் சார் தொல்லியல், வரலாறு, பண்பாடுகள், ஆமைகள் பற்றிய ஆய்வு, பாறை ஓவியங்கள், இயற்கை சார்ந்த புவி சுழற்சி தொடர்பாகச் செய்தி குழுமம், கடல் சார் குழுமம் மற்றும் ஏனைய அமைப்புகளில் உறுப்பினராகவும் இருந்திருக்கிறார். 

இயற்கை எய்தினார்
இருதய நோய் காரணமாக  (Rela ரெலா மருத்துவமனையில்) 06.07.2023 மாலை இயற்கை எய்தினார். 

திருஉருவபடம் திறப்பு
கம்யூனிஸ்ட் திரு பாவலர் அவர்கள் ஐயா ஒரிசா பாலு அவர்களின் திருவுருவ படத்தை திறந்து வைத்தார். ஆனால் ஒரிசா பாலுவை அவர்களை பற்றி ஏதும் பேசவில்லை. அமைப்பாளர் திரு தங்கராஜ் பாண்டியன் ஒரிசா பாலுவை  பற்றி பேசினார். ஒரிசா பாலு அவர்களின் மனைவி ராஜேஸ்வரி அவர்கள், ஒரிசா பாலுவை பற்றி பேசினார்கள். ஐயா ஒரிசா பாலு அவர்கள் புத்தகமாக ஏதும் எழுதவில்லை, சமூக ஊடகங்களை தான் பயன்படுத்தினார் என்று. 

நான் பேரார்வத்துடன் சென்று இருந்தேன். ஐயா ஒரிசா பாலு அவர்கள் இறப்பதற்கு முன் 13 நூல்கள் எழுதியுள்ளேன் என்றுரைத்தார். ஒவ்வொரு நூலும் 120-160 பக்கங்கள் இருக்கும்.
1. கலிங்கத்தில் தமிழ்
2. ஆமைகளும் தமிழர்களும்
3 குமரிக்கண்டம்
4 கடலில் ஒரு தேடல்
5 தமிழர் மதம்
6  தமிழால் எழுந்தோம்
7. உலகத்தில் தமிழர்
8 தென்புலத்தார்
9 ராவணன்
10 வேந்தன் மரபினர்
11 நோயால் விழவில்லை 
13 தமிழ்தேயம்.
அந்நூல்கள் வெளிவரவில்லை. 

இக்சா (ICSA) அரங்கம்

சோழ நாட்டில் பௌத்தம் என்ற வலைத்தளம் ஆய்வாளர் திரு ஜம்புலிங்கம் எனக்கு அறிமுகம் அளித்தது இக்சா (ICSA) அரங்கம். மிக குறைந்த நேரம் தான் அவர்களிடம் பேசியது. என் வலைதளத்தின் ஆணிவேர் அவர்கள். ASI Director அவர்களிடம் ஒரு வினா எழுப்பி அஞ்சல் அனுப்பி இருந்தேன். என்னை யார் என்றும் தெரியாமல் என் வினாக்களுக்கு பதில் அளித்தவர். அதை போன்று தான் ஐயா ஒரிசா பாலு அவர்கள், மிக எளிமையானவர், என் வினாக்களுக்கு விளக்கம் அளித்தார். உடல் முதிர்ச்சி மற்றும் அறிவு முதிர்ச்சி உடைவார்கள் நீண்ட நாள் வாழ வேண்டும்    

ஐயா ஒரிசா பாலு அவர்களின் பேச்சு இக்சா (ICSA) அரங்கத்தில்

புதன், பிப்ரவரி 01, 2017

கடல்சார் ஆய்வாளர் திரு ஒரிசா பாலு

குடியரசு தின நாள் 26-01-2017 அன்று சென்னை எழும்பூரில் வண. போதிபாலா (பிக்கு) மற்றும் பேராசிரியர் முனைவர் க. ஜெயபால் அவர்கள் இணைந்து எழுதிய மனித மன வகைபாடுகள் (புக்கல பஞ்ஞதி அபிதம்மா பீடகத்தின் நான்காம் பிரிவு) நூல் வெளியிட்டு விழாவில் முதல் நூலை பெற்று சிற்றுரையாற்றினார் திரு ஒரிசா பாலு அவர்கள். அவரின் உரை

இமயம் முதல் குமரி வரை என்ற சொற்றோடர் எந்த மொழியில் அதிகமாக பயன்படுத்தப்பட்டுள்ளது என்றால் அது தமிழ் மொழியில் தான். ஒரு அலுவலகம் என்று எடுத்துக்கொண்டாலும் அல்லது ஒரு அருங்காட்சியகம் என்று எடுத்துக்கொண்டாலும் சரி அங்கு ஒரு புத்தர் சிலையை காணலாம்.
பௌத்தத்தில்  தமக்கு ஆர்வம் ஏற்பட்ட காரணம்
01. தாய்லாந்தில் இருந்தபொழுது மணிமேகலை தெய்வத்தை தாய்லாந்து மக்கள் மணிமேகலை என்று வணங்குவது
02. தென்கிழக்கு ஆசிய நாடுகளான ஜப்பான், சீனா, கம்போடியா, லாவோஸ், வியட்நாம், பர்மா, மலேசியா என எத்துணை நாடுகள் இருக்கின்றனவோ அத்துணை நாடுகளுக்கும் இந்த கடலோடிகளுக்கும், பௌத்தத்திற்கும் தொடர்பு இருக்கிறது. இதனை யாராலும் மறுக்க முடியாது.
(Zen Buddhisim) ஜென் பௌத்தம் என்பதனை சிலர் தென் பௌத்தம் என்றுரைக்கின்றனர்.  அவ்வாறு அழைப்பதற்கு ஒரு அடிப்படை காரணம் இருக்கிறது. சீன மக்கள் இந்த தென் கிழக்கு ஆசிய பகுதிகளை இன்று கூட ஆசிய டெங்கா (Tenka) என்று அழைக்கின்றனர். ஆசியா டெங்கா என்றால் ஆசியா தென்கரை என்று பொருள். மலேசியாவிலும் டெங்கா என்ற சொல் தென்கரையை குறிக்கிறது.   டெங்கா  என்பது கடற்கரை சார்ந்த சொல். 

உலகம் முழுவதும் தமிழ் கடந்து இருக்கிறது. பல நாடுகளில் தமிழ் சமூகத்தை பார்த்து இருக்கிறேன். உலகிலே மிக பழமையான நாகரிகம் எது என்றால் அது தமிழ் நாகரிகம் மட்டுமே. அது உலக நாடுகள் அனைத்துணையுடன் தொடர்புடையது. கடலை முதன்மை வேலையாக கொண்டு தமிழ் நாகரிகம் எல்லா திசைகளிலும் பரவியிருக்கிறது. தமிழ் பெயர்கள் கொண்ட ஊர்கள் உலகம் முழுவதும் உள்ளது.  

மணிமேகலை வான் வழியாக சென்றதாக கூறப்படுகிறது. விமானம் இல்லாமல் எப்படி சென்று இருக்க முடியும். மணிமேகலை கடல் வழிதான் சென்றிருக்கவேண்டும்.   கணகம் என்பதின் பொருள் எளிதில் கடக்க முடியாத பாதை. இன்றும் மீனவர்கள் பயன்படுத்தும் சொல் ( தனுஷ்கோடி, மலத்திவு என பல மீனவர்கள்). கடலில் காற்று மற்றும் சுழல் அதிகமாக இருக்கும் பாதைக்கு  கணக பாதை என்று பொருள்.

ஜாவா, ஜப்பான், பர்மா, சீனா, கொரியா போன்ற நாடுகளுடன் தொடர்புடைய பௌத்தம் என்பது அதன் அடிப்படை வேர் தமிழ் பௌத்தம். கடலுக்கு சென்று திரும்பி வந்த சமூகம் என்றல் அது தமிழ் சமூகம் தான். திரைமீலன் என்பது எங்கும் கிடையாது. திரைமீளன் என்றால் கடலுக்கு சென்று திரும்பி தான் இருந்த இடத்திற்கு திரும்புபவன். இந்த திரைமீளன் தான் திரமிளா  என்றும் திரவிடா என்றும் மருவியது .

சமஸ்கிருத எழுச்சி காலம் என்பது கனிஷ்கார் காலம் முதல் குப்தர் காலம் வரைதான். இதற்கு முன் எல்லோருக்கும் தெரிந்த மொழியாக இந்தியாவில் தமிழ் மொழி இருந்தது. உதாரணம் சிந்து சமவெளியில் 600 தமிழ் பெயர் கொண்ட ஊர்கள் இருக்கின்றன, தாம் மட்டும் 44,6௦௦ தமிழ் பெயர் கொண்ட ஊர்கள் கண்டறிந்ததாகவும் அதில் சுமார் 12,000 தமிழ் பெயர் கொண்ட ஊர்கள் இந்தியாவில் இருக்கிறது  என்றும் உரைத்தார்.                
   
பண்டித அயோத்திதாசரை இன்று பலர் அறிந்து இருக்கின்றனர் (முக அடையாளம்) ஆனால் அவரின் சிந்தனைகளை படித்து அறிந்துணர்ந்தவர்கள் அரிதாக இருக்கின்றனர். பண்டிதரின் சிந்தனைகள் மூன்று தொகுதிகள் வந்துள்ளது. தமிழகத்தில் லோட்டஸ் சுத்தாவை பற்றி அறிந்தவர்கள் அரிதாகவே இருக்கின்றனர்.  கற்று உணருங்கள்.

மேலும் விரிவாக இது தொடர்பாக படிக்க