திருவள்ளுவர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
திருவள்ளுவர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், செப்டம்பர் 23, 2025

மயிலாப்பூர் திருவள்ளுவர் கோயில்



அமைவிடம்:
திருவள்ளுவர் திருக்கோவில்,
முண்டகக்கண்ணியம்மன் கோவில் தெரு
(சமஸ்கிருத கல்லூரி அருகே)
திருமயிலை, சென்னை – 600004.


திருவள்ளுவர் பிறந்த இடம
திருவள்ளுவர் பிறந்த இடம சென்னை, மயிலாப்பூர். இங்கு 25 கிரவுண்டு பரப்பளவு கொண்ட திருவள்ளுவர் கோயில் அமைக்கப்பெற்றுள்ளது.

திருவள்ளுவர் கோயில்

குடியிருப்பு பகுதியின் நடுவே அமைந்திருப்பதால் இப்படி ஒரு கோவில் இங்கே இருக்கிறது என்பதே வெளியே பலருக்கு தெரியவில்லை.  

தற்போதைய கோயில் 16-ம் நூற்றாண்டின் முற்பகுதியில் கட்டப்பட்டது. 1970-களில் விரிவாகப் புனரமைக்கப்பட்டது. இக்கோவிலை மயிலாப்பூர் ஸ்ரீ முண்டகக்கண்ணி அம்மன் கோயிலின் சார்புக் கோயிலாக இந்து சமய அறநிலையத் துறை பராமரிக்கிறது. 20-ம் நூற்றாண்டு தமிழக அரசால் புனரமைக்கப்பட்ட பிறகு, இக்கோயிலில் உள்ள கற்சிலைகளைத் தவிர பண்டைய கோவிலின் வேறெந்தத் தடயங்களும் காணக்கிடைக்காமல் போய்விட்டன. (1989-ம் ஆண்டு திருமயிலையின் திருக்கோயில்கள் - பில் எஸ். ராஜேந்திரன்  நூல்)


சிலையமைப்பு 

1974 டிசம்பர் மாதம் திருவள்ளுவர் கோவிலை புதுப்பிக்கும் போது அடிக்கல் வைப்பதற்காக தோண்டும் போது பூமிக்கு கிழே நான்கு அடி ஆழத்தில் திருவள்ளுவர் கருங்கல் சிலை கிடைத்தது. 500 ஆண்டுகளுக்கு முந்தியதாக கருதப்படும் இச்சிலை தலை இடக்கை உடைந்து தனியாக இருந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டது


உடைந்த பகுதியை சேர்த்து பார்க்கும் பொழுது நீண்ட தாடி முறுக்கிய மீசையுடன் அமர்ந்த நிலையில் திருவள்ளுவர் காணப்படுகிறார். வலக்கை சின் முத்திரையுடன் அக்ஷமாலை (Aksha) ஏந்தியவாறு ஒரு பீடத்தின் மீது சிலை உள்ளது . இச்சிலை கிபி பதினான்கு அல்லது பதினைந்ததாம் நூற்றாண்டை சேர்ந்ததாக இருக்கலாம் என்று தொல் பொருள் ஆய்வு துறை இயக்குனர் இரா.நாகசாமி கருதுகிறார்.  (திருமயிலை திருத்தலம் இயக்கிய வரலாற்று பார்வை (Mylapore Through the Ages) டாக்டர் சு . ராஜசேகரன் - தமிழ் பேராசிரியர் நந்தனம் கலைக்கல்லூரி 1989). 

வைட் எல்லிஸ்

ஆங்கிலேய அரசாட்சியில் சென்னை மாகாணத்தின் அரசு ஊழியராக இருந்த எல்லீசனார் என்றழைக்கப்படும் பிரான்சிஸ் வைட் எல்லிஸ் 19-ம் நூற்றாண்டின் முற்பகுதியில் ராயப்பேட்டையில் உள்ள பெரியபாளையத்தம்மன் கோவிலில் எழுப்பிய கல்வெட்டில் மயிலாப்பூர் வள்ளுவர் கோயிலைப் பற்றிக் குறிப்பிட்டுள்ளார்.

எட்வர்ட்  எலியட்ஸ் சாலை டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலை என்று வழங்கப்படுகிறது.  (திருமயிலை திருத்தலம் இயக்கிய வரலாற்று பார்வை (Mylapore Through the Ages) டாக்டர் சு . ராஜசேகரன் - தமிழ் பேராசிரியர் நந்தனம் கலைக்கல்லூரி 1989). 

வெண்கல சிலைகள்

கோவிலில் உள்ள வெண்கல சிலைகள் 19-ம் நூற்றாண்டில் செய்யப்பட்டதாக அறியப்படுகிறது. தற்போது மாநில அரசின் இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் இருக்கும் இக்கோயில் அதற்கு முன் சிவஞான முதலியார் என்பவரின் ஆளுகைக்குள் இருந்து வந்தது.

 பல்வேறு தெய்வ சன்னதிகள்

இக்கோயில் வளாகத்தில் விநாயகர், சுப்ரமணியர், சிவன், பார்வதி, திருவள்ளுவர், வாசுகி, துர்கை, நவகிரகங்கள் எனப் பல்வேறு தெய்வங்களுக்கான தனித்தனி சன்னதிகள் உள்ளன.

 திருக்குறளில்  கடவுள்கள்

திருவள்ளுவர் திருக்குறளில் குறிப்பிட்ட கடவுள்கள் குறித்து எந்த கருத்தும் கூறவில்லை. 

கல்வெட்டுகள்

இக்கோயில் புகழ்பெற்ற முண்டகக் கண்ணியம்மன் கோயிலுக்கு அருகே அமைந்துள்ளது. மயிலாப்பூரில் திருவள்ளுவருக்கு 1935ல் கோவில் உருவானதாக அங்கிருக்கும் கல்வெட்டு சொல்கிறது.  

27/04/1973ல் முதல்அமைச்சர் கருணாநிதி கோவில் திருப்பணியை தொடங்கி வைத்திருக்கிறார். நெடுஞ்செழியன், கண்ணப்பன் ஆகியோர் முன்னிலை வகிக்க குன்றக்குடி அடிகள் தலைமையில் திருப்பணி குழுவும் அமைக்கப்பட்டிருக்கிறது. அப்போதைய அறநிலையத் துறை அமைச்சர் மு. கண்ணப்பன், கல்வி அமைச்சர் நெடுஞ்செழியன் உள்ளிட்டோர் இவ்விழாவில் பங்கேற்றனர் என்பது கோவிலில் காணப்படும் கல்வெட்டு மூலம் தெரியவருகிறது.

முதல்அமைச்சர் கருணாநிதி துவக்கிய திருப்பணி என்பதால் ஆலயம் என்ற சொல்லை தவிர்த்து நினைவாலயம் என்று பொறித்திருக்கிறார்கள் கடந்த 23.01.2001-ல் திருவள்ளுவர் கோயிலுக்கு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டுள்ளது. இதில் அப்போதைய இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் திரு.தமிழ்க்குடிமகன் உள்ளிட்ட பலர் பங்கேற்றதாக கோயில் கல்வெட்டு குறிப்பிடுகிறது. 

இந்து அறநிலையத் துறை

பரம்பரை பரம்பரையாக பல நூறாண்டுகளுக்கும் மேல் தனியாரிடம் இருந்தது இந்த கோவில். பல ஆண்டுகாலம் தினசரி பூஜைகள் நடைபெற்றுவந்துள்ளது. சுதந்திரத்துக்கு பிறகு தான் இந்து அறநிலையத் துறையின் கீழ் வந்தது.




புதன், ஆகஸ்ட் 06, 2025

திருவள்ளுவரின் திருவுருவம் II



1) 1904 - கோ. வடிவேலு செட்டியார்

01. 1904ல் (Hindu Theological Higher Secondary School) இந்து இறையியல் மேல்நிலைப் பள்ளியில் தமிழ்ப் பண்டிதராக இருந்த கோ. வடிவேலு செட்டியார் என்பவர், ‘திருக்குறள் மூலமும் பரிமேலழகருரையும்’ என்ற நூலை வெளியிட்டார்.

02. இரு பாகங்களாக வெளியான இந்தப் புத்தகத்தில் திருவள்ளுவரின் படம் ‘திருவள்ளுவநாயனார்’ என அச்சிடப்பட்டிருந்தது. அதில் ஜடா முடியுடனும் தாடி மீசையுடனும் மார்புக்குக் குறுக்காக யோகப் பட்டை எனப்படும் துண்டை அணிந்தபடியும் திருவள்ளுவர் காட்சியளித்தார். ஒரு கையில் சின் முத்திரையுடன் ஜெப மாலையும் மற்றொரு கையில் ஒரு ஓலைச் சுவடியும் இருந்தது. நெற்றியில் பட்டையும் நடுவில் குங்குமமும் இருந்தது.

03.ஏன் இப்படி ஜடா முடியுடன் கூடிய உருவம் கொடுக்கப்பட்டது என்பதற்கு ஒரு விளக்கமும் இந்த நூலில் இருக்கிறது. ‘நாயனார் சொரூபஸ்துதி’ என்ற பாடலை அடிப்படையாக வைத்தே இந்த உருவம் திருவள்ளுவருக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது.

04. கோ. வடிவேலு செட்டியார் வெளியிட்ட நூலில் இருந்த திருவள்ளுவரின் உருவப்படம். இதற்குப் பிறகு இந்த நூலின் ஆங்கிலப் பதிப்பு வெளியானபோது, அதிலும் ஒரு திருவள்ளுவர் படம் கோட்டுச் சித்திரமாக இடம்பெற்றிருந்தது. அதில் திருவள்ளுவர் ஒரு சைவ சமய அடியாரைப் போல காட்சியளிக்கிறார்.

02. சம்பந்தன்

கரங்களிலும் நெற்றியிலும் விபூதிப் பட்டையுடன் காட்சியளிக்கும் திருவள்ளுவர், ஒரு மரத்தடியில் அமர்ந்திருப்பதைப் போலவும் அவரை இரு அடியார்கள் தொழுவதும்போலவும் அந்தப் படம்  சம்பந்தன் என்பவர் வரைந்திருந்தார். இதற்குப் பிறகு சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம் வெளியிட்ட நூல்களில் திருவள்ளுவர் படங்கள் ஏறக்குறைய இதே தோற்றத்தில் இடம்பெற்றிருந்தன. 



2) 1950 - பாலு – சீனு

01. 1950களில் பாலு – சீனு என்ற சகோதரர்கள் கலை என்ற இதழை நடத்தினார்கள். அந்த இதழில் ஒரு திருவள்ளுவர் படம் இடம்பெற்றிருந்தது. அந்தப் படத்தில் திருவள்ளுவர் எந்த மதச் சின்னமும் இன்றி இருந்தார். 
 
02. வள்ளுவருக்கு இப்போதிருக்கும் சித்திரம் பதினெட்டாம் நூற்றாண்டின் இறுதியில் வரையப்பட்டது. திருக்குறள் தீபாலங்காரம்- ஜமீன்தாரிணி உரை என்னும் நூலில் இந்தப்படம் இருந்தது.  
 
 
உலகப்பொதுமறை தந்த வள்ளுவருக்கு ஓர் உருவம் கொடுக்க வேண்டும் என்பது புரட்சிக்கவிஞர் பாரதிதாசன், அறிஞர் அண்ணா உள்ளிட்ட பலரது விருப்பம். அந்த விருப்பத்தைப் பூர்த்தி செய்யும் பொறுப்பை அப்போதைய முதலமைச்சர் காமராஜர் ஏற்றுக்கொண்டார். அவருடைய உத்தரவின்படி ஓவியர் வேணுகோபால் சர்மா வரைந்த திருவள்ளுவர் ஓவியம் அதிகாரபூர்வ வள்ளுவர் ஓவியமாக 1959 ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்டது.


3) வேணுகோபால் சர்மா 1959
01. திருவள்ளுவர் என்றதுமே நீண்ட தாடி, கையில் எழுதுகோல், தீர்க்கமான பார்வையுடன் மரப்பலகையில் அமர்ந்திருக்கும் ஓர் உருவம் கம்பீரமாக நம் மனக்கண்ணில் தோன்றும். உருவமற்று இருந்த வள்ளுவனுக்கு முதன்முதலில் ஓவியம் மூலம் உயிர்கொடுத்தவர் ஓவியர் கே.ஆர்.வேணுகோபால் சர்மா
 
02.தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, கலைஞர் கருணாநிதி, எம்.ஜி.ஆர், கக்கன், தோழர் ஜீவா, நாவலர் நெடுஞ்செழியன், கிருபானந்த வாரியார், கவிமணி தேசிய விநாயகம் பிள்ளை, மு.வரதராசனார், கவியரசர் கண்ணதாசன், எஸ்.எஸ்.வாசன் எனப் பல்வேறு அறிஞர்கள் இந்த வள்ளுவர் படத்தைப் பார்த்து அங்கீகரித்திருக்கிறார்கள். 

 

 
03. அதன்பின், அந்த ஓவியம் 1964-ம் ஆண்டு பக்தவத்சலம் முதல்வராக இருந்தபோது, அன்றைய துணை ஜனாதிபதியாக இருந்த ஜாகீர் உசேனால் சென்னை சட்டசபையில் திறக்கப்பட்டது. இந்த ஓவியம்தான் தமிழக அரசால் அங்கீகரிக்கப்பட்டு நாட்டுடைமையாக்கப்பட்டது. இந்தப் படத்தை மத்திய அரசு அஞ்சல் தலையாகவும் வெளியிட்டது. 
 
04. வேணுகோபால் சர்மா, கிட்டத்தட்ட 40 ஆண்டுகளாகப் பல நூறு முறை முயன்று வள்ளுவருக்கு உருவம் கொடுத்தார். அப்படம் உருப்பெற்றதற்கான காரணங்களையும் நுட்பமாக எழுதி வைத்தார். சென்னைப் பல்கலைகழகம், அதை 2012-ம் ஆண்டு நூலாகப் பதிப்பித்து விழாவெடுத்து வெளியிட்டிருக்கிறது. 
 
திருவள்ளுவரின் உருவத்துக்கான அடிப்படை விஷயங்களை அவர் திருக்குறளின் தரவுகளிலிருந்துதான் எடுத்திருக்கிறார் என்பதும் அந்நூலில் தெளிவாகக் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

01. திருமுடி
திருவள்ளுவருக்குத் திருமுடி எவ்வாறு அமைந்திருக்கக்கூடும் சிறிதே முன் வழித்துப் பின்வளர்த்த பெருங்குடுமியா? நாகரிக ஒப்பனையுடன் வெட்டப்பட்ட சிகையா? இவையனைத்தும் தனித்தனிக் குழுவாரின் அடையாளமாக ஆகிவிட்டமையின், திருவள்ளுரின் கருத்துக்குப் பொருந்துவன ஆகாவாதலின், திருவள்ளுவருக்குத் திருமுடியும் நீவப்படாத தாடியும் இருத்தல் நன்று என்று கருதப்பட்டது. 

02.நெற்றி
ஓவிய இலக்கண முறைப்படி உயர்ந்த மதி படைத்தோருக்கு நெற்றி பரந்தும் உயர்ந்தும் இருக்க வேண்டுமென்பதோடு, அவர்கள் நாசியின் நீளத்திற்கொப்பாகவோ அல்லது சற்று அதிகமாகவோ அது இருத்தல் வேண்டுமென்பதால், அதற்கொப்ப திருவள்ளுவரின் நெற்றி அமைக்கப்பட்டது.
 
03. நாசி
நாசி, ஓணான் முதுகில் எவ்வளவு நுண்ணிய வளைவு தென்படுகிறதோ அவ்வளவு வளைந்திருக்க வேண்டுமென்பதோடு, நாசியின் நுனி மழுங்கியிராமல், அதன் பருமனுக்கேற்ற கூர்மையுடனிருந்தால் புத்திக் கூர்மையும், உண்மையை உய்த்துணரும் ஆற்றலும் உண்டு என்பதோடு, நாசித் துவாரத்தின் இரு பக்கத்து மேல் மூடிகளும் சற்று மேல் நோக்கி அகன்றிருக்க வேண்டும்.
 
04. உதடுகள்
வாய் அகன்றிருக்கக் கூடாது; குறுகியும் இருக்கக் கூடாது; மெல்லியதாய் இருத்தலும் கூடாது. அப்படி இருந்தால் வாய்மைத்திறன் வாய்க்காது. ஆகையால், தமக்கென்று ஏற்படுத்திக்கொண்ட பெரும் பணியை நிறைவேற்றுவதற்கான உறுதியைத் தெளிவாகக் காட்டுமாறு திருவள்ளுவரின் உதடுகள் அமைக்கப்பட்டன.

05.கண்கள்
உலகின் மீதுள்ள பெருங்கருணையால் தான் திருவள்ளுவர் திருக்குறள் இயற்றித் தந்தார் என்று கருதப்பட்டதால் ஆழ்ந்த சிந்தனை, கருணை, ஒளி, பொதுநோக்கு இவை நிரம்பிய கண்கள் படைக்கப்பட்டன.
 
06.வலது புருவம்
சிந்தனையிலுள்ளபோது திருவள்ளுவரின் வலது புருவம் சற்றே உயர்ந்து, உள்ளம் செயல்பட்டுக் கொண்டிருப்பதைக் குறிக்கிறது.
 
07.காதுகள்
அவரது நீண்டகன்ற காதுகள் பல ஆண்டுகாலமாக அவர் பெற்ற கல்வியினாலும் உலகியல் பயிற்சியினாலும் அவர் எய்திய அறிவுத் திறனையும், தேர்ந்த செவிச் செல்வத்தையும் காட்டுவனவாக உள்ளன.
 
08.ரோம வரிசைகள்
மார்பிலும், முன்கையிலும் அமைந்துள்ள ரோம வரிசைகள், தாம் ஏற்ற பணியை நிறைவேற்றிக்கொள்ளும் ஆண்மையைக் குறிப்பன. 
 
09.வெண்ணிற ஆடை
தூய்மை நிறைந்த உள்ளம், தூய்மை நிறைந்த நோக்கு, தூய்மை நிறைந்த வாக்கு, தூய்மை பெற்ற உடல், தூய்மையான குறிக்கோள். இவையிருப்பதால், திருவள்ளுவர் தூய்மையான வெண்ணிற ஆடை புனைந்திருத்தல் நன்று என்று கருதப்பட்டது.
 
10. வலக்கையில் எழுத்தாணி
வலக்கையில் எழுத்தாணியைப் பிடித்துள்ள அழுத்தம், மனித குலத்தின் உயர்வுக்காகத் தன் அறிவாற்றலால் தளராது உழைத்துத் தம் குறிக்கோளை நிறைவேற்றிக் கொள்ளும் ஊக்கத்தையும் நெஞ்சுறுதியையும் காட்டுவதாகும்.  
 
11.இடது கை ஓலையைத் தாங்கி நிற்பதாக
கலை நலம் நிரம்பப் பெற்று காண்போரின் அழகுணர்ச்சிக்கு விருந்தாகப் பொலியும் இடது கை, உலகப் பொதுப் பணியை ஈடேற்றி வைக்கும் பொறுப்புடன் ஓலையைத் தாங்கி நிற்பதாக அமைக்கப்பட்டது. 
 
12.வலதுகால் பெருவிரல்
வலதுகால் பெருவிரல் மட்டும் சற்று முன் வளைந்திருப்பது ஏனெனில், கால் பெருவிரல் அற்ப ஆசைகளைக் குறிப்பது. அந்த ஆசை வெளியில் தூக்கி எறியப்பட்டு விட்டது என்பதை வற்புறுத்த என்றால் நிராசையோடு உலகத்தினிடம் பயனேதும் கருதாது பணி செய்து கிடப்பதே தன் கடனென்று நினைத்தார் என்க. அல்லாமலும், எல்லோருக்குமே சிந்தனை தீவிரமாக இருக்கும் பொழுது கால் பெருவிரல் அடுத்த விரலுடன் நெண்டிக்கொண்டேயிருக்கும். 
 
13.சில சுவடிகளின் சில பகுதிகள் மட்டுமே தெரிவாக வரையப்பட்டுள்ளன
சிந்தனை சீர்பெற முடிந்ததும் ஒரு நிலையில் நின்று விடும். ஆகையால், அதற்கும் ஒப்ப அமைக்கப்பட்டது. ஏற்கனவே எழுதப்பட்ட திருக்குறளின் பல அதிகாரங்கள் அவருக்கு வலப்புறம் குவிக்கப்பட்டிருக்கின்றன. அவற்றைத் தொடர்ந்து, அப்பாலும் பல அதிகாரங்கள் குவிந்திருக்கின்றன என்று ஊகித்துக் கொள்ளும் பொருட்டு, சில சுவடிகளின் சில பகுதிகள் மட்டுமே தெரிவாக வரையப்பட்டுள்ளன.  
 
14.ஓலையில் ஒன்றும் எழுதாமல் விடப்பட்டது
கையில் பிடித்துள்ள ஓலையில் ஒன்றும் எழுதாததற்குக் காரணம் தமிழில் இலக்கிய வரம்பிற்குட்பட்டு நயம்பெற மிகச் சுருக்கமாக எப்படி எழுத வேண்டுமென்ற சிந்தனை திருவள்ளுவருக்கு இருந்திருக்க முடியாது. அப்படி சிந்தித்திருந்தால் திருக்குறளில் அவ்வளவு நீரோட்டமும், தெளிவும் இருக்க முடியாது. ஆகவே குறள்களை எழுத அவர் தம் விரல்களுக்கே தெரியும். ஓலையில் எழுத்தாணியை ஊன்றி விட்டால், குறள் முடிந்துதான் எழுத்தாணி இடம் விட்டுப் பெயறும். இந்நிலையில் மக்களுக்கு அடுத்து சொல்லப்பட வேண்டியது யாது என்னும் சிந்தனையிலிருக்கும் நிலையாக உருவகம் செய்து, கண்களை சிந்தனையில் ஆழ்ந்திருக்கச் செய்திருப்பதால், இந்த ஓலையில் ஒன்றும் எழுதாமல் விடப்பட்டது. 

15.அறிவுச்சுடர்
திருவள்ளுவர் தமக்கென வாழாதவர் என ஊகிக்கப்பட்டதால், அவர் ஆசையற்று இருந்திருக்க முடியும். ஆசையற்ற இடத்தில் துக்கம் இருக்க முடியாது. அவர் தூய கருத்துலகில், சிந்தனை வானில் வாழ்ந்தவராதலால், அவரது சூழ்நிலையும் தூய்மை என்பதைக் குறிக்கவே பின்புறம் - இருபக்கங்கள் - இவற்றில் மரம், செடி, கொடிகளோடு - வீடு வாசலோ எவற்றையும் அமைக்காமல், அவரது உருவத்திலிருந்து வெளிப்பட்டுப் பரவி நிற்கும் அறிவுச்சுடர் ஒன்று மட்டுமே இடம் பெறலாயிற்று.  
 
16.ஒளிவட்டம்
அநேகமாக மனித சக்திக்கு அப்பாற்பட்ட சக்தி உள்ளவர்களுக்கு சிரத்தைச் சுற்றிலும் ஒளிவட்டம் ஒன்று சித்திரத்தில் அமைப்பது மரபாக இருந்து வருகிறது. ஏனெனில் அவர்களிடத்தில் பேரறிவின் ஒளி வீசுகிறது என்பதைக் காண்பிக்க. ஆனால், திருவள்ளுவருக்கு அந்த ஒளியை வட்டமாக அமைக்காமல் தலையைச் சுற்றிலும் தூய நிறம் ஆரம்பித்து, அது எங்கு போய் முடிகிறது என்பதைக் காட்டாமல், சுற்றிம் உள்ள மங்கலான இடங்களில் சென்று பாய்ந்து முடிவு தெரியாமல் விடப்பட்டிருப்பதற்குக் காரணம், வள்ளுவரின் ஒளி மற்றையோர் போல வட்டமாகத் தனக்கு மட்டும் நின்று விடாமல் வெளி உலகிற்கு ஊடுருவிப் பாய்கிறதைக் காட்டுகிறது.  
 
17.மண் தரையில் மரப் பலகையின் மீது வள்ளுவர் அமர்ந்திருத்தல்
மண் தரையில் மரப் பலகையின் மீது வள்ளுவர் அமர்ந்திருத்தல் ஏனெனில், எதையும் உயராது இழுக்கும் பூமியின் ஆற்றலும் அவரது சிந்தனை உயர்வதைத் தடுப்பதற்கில்லை. அத்துடன் உலகத்தோடு ஒட்ட ஒழுகியும், உலகியலுக்குத் தாம் அடிமையாகாமல் தனித்து நின்று தனிப்பெரும் அறநெறியை வகுத்துத் தந்த தனிப்பெருந்தகையான அவர்தம் தூய்மையுற்ற உணர்வு செயல், ஆடை முதலியனவற்றை எந்த வகையிலும் அழுக்கு தீண்ட இடந்தருவது இழுக்காகுமெனக் கருதியதாகும்.

அரசு அங்கீகாரம் செய்த திருவள்ளுவரின் திருவுருவத்தில் விபூதி, சந்தனப் பொட்டு, பூணூல், கையில் சின் முத்திரை, உருத்திராட்ச மாலை போன்ற அடையாளங்கள் ஏதுமில்லை. திருவள்ளுவர் மேல் ஆடை அணிந்து திருவுருவம் உருவாக்கப்பட்டது. வேணுகோபால் சர்மா வரைந்த இந்த திருவள்ளுவர் படம் தமிழக அரசால் அங்கீகரிக்கப்பட்டது. இந்த படத்தினைத் தான் அரசு அலுவலகங்களிலும், பள்ளிக் கூடங்களிலும் மற்றும் அரசு உதவி பெறும் நிறுவனங்களிலும் வைக்க வேண்டும் என்று அரசு ஆணை பிறப்பிக்கப்பட்டது. 

வியாழன், பிப்ரவரி 13, 2025

பொன்னூர் மலை

குந்த குந்தாச்சாரியார்

திருவள்ளுவர்  வந்தவாசியில் வாழ்ந்தவர்




அமைவிடம்

பொன்னூர் மலை, பொன்னூர் கிராமம்,

வந்தவாசி வட்டம், திருவண்ணாமலை மாவட்டம் 604408 


பொன்னூர் மலை

பொன்னூர் மலை (அ) குந்தாச்சாரியார் மற்றும் மஹாவீரர் காண படிகளின் தொடக்கத்தில் தர்ம சக்கர ஸ்தூபி  உள்ளது.  


பொன்னூர் மலைகளில் உள்ள ஒரு சிறிய இயற்கை குகையில் குந்த குந்தாச்சாரியார் தவம் செய்து பனை ஓலைகளில் சமண மதம் குறித்து சுமார் 84 புத்தகங்களை எழுதியுள்ளார். அவர் தமிழர் இல்லை. ஆந்திர மாநிலத்தை சேர்ந்தவர். அவர் எழுதிய நூல்கள் பிராகிருத மொழியில் உள்ளது. 


குந்த குந்தாச்சாரியார் பெருமைகள்

01. குந்த குந்தாச்சாரியார் 11 வது வயதில் துறவு ஏற்றார். துறவற ஒழுக்கம், கடுந்தவம் ஆகியவற்றில் தலை சிறந்து விளங்கினார்.  

02.ஆசாரியார்களும் ஆகமங்களாலும் பெரிதும் போற்றப்படும் கவியுக வைர்வஜனாக திகழ்ந்தார்.   

03. பகவான் மகாவீரரும், கௌதம கணதரருக்கும் அடுத்தவராக மூன்றாம் இடத்தில் வைத்து போற்றப்படும் முதன்மை ஆச்சாரியராக  விளங்குபவர்.  

04.தரை  பூமிலிருந்து 4 அங்குல உயரத்தில் எதையும் தொடாமல் அந்தரத்தில் செல்லும் அற்புத சக்தி பெற்றவர்.  

05. திருக்குறள், சமய சாரம், நியம சாரம், சித்தாந்த பாகுடம், மோட்ச பாகுடம், தத்துவார்த்த சூத்திரம் முதலான தத்துவ நூல்களை படைத்தவர். 

06.கருதகேவலி பத்ரபாகுவிற்கு பின்னர் சமணம் இரண்டாக பிளவுபட்டது. திகம்பர சுவேதாம்பர (வெண்ணிற ஆடை மகா சாது) ஏற்பட்ட விவாதத்தின் போது (குஜராத்தில்) திகம்பர தம்மமே மூல நிர்கந்த தம்மம் என்பதை நிலைநாட்டினார். குஜராத்தில் பல சுவேதாம்பரர்களை  திகம்பரர்களாக மாறுவதற்கு காரணமாக இருந்தவர்.  

07. மேலும் பிளவுகள் இருக்கக்கூடாது என்று சாதுக்களை நான்காக பிரிக்கப்பட்டது. 01. திராவிடகணம் (தேசிய கணம்) 02. சேனகணம் 03. காலோக்கணம் 04. பலோத்ரகணம் என பெயரிட்டனர். இந்நான்கும் 01. நந்தி சங்கம் 02. சேனசங்கம் 03. வீரசங்கம் 04. தேவசங்கம் என்ற சங்கங்களாக இயங்கியது. குந்த குந்தர் நந்தி சங்கத்தை சார்ந்தவர் (திராவிட கணம்). 

08.விடுதலை பெறுவதற்கு நிர்வாணம் (ஆடையின்றி) இன்றியமையாதது.  பெண்கள் நிர்வாணமாக அலைய முடியாது. அதனால் பெண்கள் முக்தி அடைய முடியாது. 

 



குந்த குந்தாச்சாரியார் காலம்

குந்த குந்தாச்சாரியார் காலத்தை கணிப்பதிலும் கருத்து வேறுபாடுகள் உள்ளது. கிமு மூன்றாம் நூற்றாண்டு முதல் கிபி ஆறாம் நூற்றாண்டு வரை இவர் காலத்தை குறிப்பிடுகின்றனர். 

கிபி ஆறாம் நூற்றாண்டு டாக்டர் கே வி பாடக் குந்த குந்தாச்சாரியார் கி.பி 528ல் தோன்றி இருக்கக்கூடும் என்றுரைக்கிறார். ராஷ்டிரகூட மன்னர்கள் வம்சத்தில் தோன்றிய மூன்றாவது கோவிந்த மன்னர் காலத்தில் வடிவமைக்கப்பட்ட கிபி 797 முதல் 802 ஆண்டு காலத்தை சார்ந்த செப்புத் தகடுகளை ஆதாரமாக குறிப்பிடுகிறார்.  

கிபி மூன்றாம் நூற்றாண்டு பண்டிட் நாதுராம் பிரேமி அவர்கள் இந்திர நந்தி ஆசாரியரின் கருத அவதாரத்தை ஆதாரமாகக் கொண்டு மகாவீரர் பரிநிர்வாணம் அடைந்த பின் சுமார் 683 ஆண்டுகள் கழித்து ஆசாரிய குந்தகுந்தர் தோன்றி இருக்கக்கூடும் என்று குறிப்பிடுகிறார்.  
 
மேலும் தமது சூத்திர பாகுடத்தில் பெண்கள் முக்தி அடையமுடியாது. திகம்பர துறவிகளே உண்மையான அறவோர் என்று குந்த குந்தாச்சாரியார் கூறியுள்ளார்.  
 
ஆச்சாரியர் குந்தகுந்தர் காலத்தில் அடைந்த கிரியா திகம்பர சுவேத மரங்களுக்கு இடையே வாதம் நடைபெற்றது என்று கூறுவதனால் கூறுவதைக் கொண்டே இவர் காலத்தில் சமணம் பிரிந்தது.    

கிபி முதல் நூற்றாண்டு பேராசிரியர் திரு சக்கரவர்த்தி ஐயனார் நந்தி சங்க பட்டா வழியை ஆதாரமாகக் காட்டி குந்தகுந்தர் முதல் நூற்றாண்டை சார்ந்தவர் என்று உரைக்கிறார். ஆசாரியர் தமிழகத்தை சார்ந்தவர் என்றும் கூறுகிறார்.

பொதுமறையாம் திருக்குறளை படைத்தவர் குந்த குந்தாச்சாரியார். அவரது சீடர் திருவுள்ளம் நாயனார் மதுரை தமிழ்ச்சங்கத்தில் திருக்குறளை அரங்கேற்றியதாகவும், திருக்குறளை அரங்கேற்றிய திரு உள்ளம் நாயனாரின் இப்பெயர் மருவி பிற்காலத்தில் திருவள்ளுவர் ஆயிற்று. மேலும் அவரே திருக்குறளை எழுதினார் என்று கருதும் பரவலாயிற்று என்பர் திருக்குறள் காலம் கிபி முதல் நூற்றாண்டில் என்பதால் ஆசாரிய குந்தகுந்தர் காலமும் என பேராசிரியர் குறிப்பிடுகிறார். 

டாக்டர் ஏ.என் உபாத்யே குந்தகுந்தர் முதல் நூற்றாண்டை சார்ந்தவர் ஆனால் திருக்குறளை இயற்றினார் என்பதற்கு ஆதாரம் ஏதுமில்லை என குறிப்பிடுகிறார்.
 
குந்த குந்தாச்சாரியார் பிறப்பு/ வாழ்விடம்
ஆந்திரப் பிரதேசத்தின் குண்டக்கல் அருகே வைரகரூரில் உள்ள கொனகொண்டலா என்ற சிறிய கிராமத்தில் பத்மநந்தியாக ஆச்சார்ய குண்ட் குண்ட் பிறந்தார். ஆனால் அவர் கிராமத்தின் பெயரால் குண்ட் குண்ட் என்று அழைக்கப்பட்டார். 

திகம்பர துறவிகள் எப்பொழுது ஒரே இடத்தில் இருந்து தவம் புரிந்தார் என்று கூறமுடியாது. ஆனால் குந்த குந்தாச்சாரியார் நிலகிரி மலையில் (பொன்னூர் மலை) அதிக நாட்கள் தங்கி இருந்தார். 

திருக்குறள் குறித்து சமண ஆய்வுகள்

திருவள்ளுவர் சென்னை மயிலாப்பூர் வாழ்ந்தவர், வந்தவாசியில் வாழ்ந்தவர் என்கிறார்கள் சமணர்கள். திருக்குறள் குறித்து சமண ஆய்வுகள் என்ன சொல்கின்றன என்று காண்போம். 

திருவள்ளுவர் மயிலாப்பூரில் வாழ்ந்ததாகச் சொல்லப்படும் அதே காலகட்டத்தில்தான் அந்த மலையில் ‘குந்தக் குந்தர்’ என்னும் சமண முனிவர் வாழ்ந்ததாகக் கூறப்படுகிறது. சமண மதத்தில் ‘திரி’ என்கிற சொல்லாடல் புழக்கத்தில் உண்டு. 'குந்தக் குந்தர்’ அந்த மலையில் அமர்ந்து எழுதிய ‘திரிகுறள்’ தான், திருக்குறளாக மாற்றம் அடைந்துவிட்டதாகக் குறிப்பிடுகிறார்கள். தமிழகத்தில் உள்ள சமண கோவில்களில் திருக்குறள் எழுதப்பட்டுள்ளது. 
 
குந்தக் குந்தர் சீடர் திருவுள்ளம் நாயனார் மதுரை தமிழ்ச்சங்கத்தில் திருக்குறளை அரங்கேற்றியதாகவும், திருக்குறளை அரங்கேற்றிய திரு உள்ளம் நாயனாரின் இப்பெயர் மருவி பிற்காலத்தில் திருவள்ளுவர் ஆயிற்று மேலும் அவரே திருக்குறளை எழுதினார் என்று கருதும் பரவலாயிற்று. 





தமிழ் ஆராய்ச்சி பேரறிஞர் மயிலை சீனி வேங்கடசாமி அவர்களும் திருக்குறள் சம சமயத்தை சார்ந்தது என்றுரைக்கிறார்    

01.ஆதிபகவன் என்பது முதல் தீர்த்தங்கரர் பெயர். ரிஷபநாதர் தான் முதல் தீர்த்தங்கரர்.  

02.பொறிவாயில் ஐந்தவித்தான் மற்றும் மலர்மிசை ஏகினான்,  அறவாழி அந்தனன் (தர்மசக்கரம் அறவாழி, விதி,  வினை) சமணத்தை குறிக்கும் சொற்கள். 

03.தாமரை சமண சமய அடையாளம். தீர்த்தங்கரர் நடக்கும்பொழுது அவருடைய திருவடிகளை தாமரை மலர்கள் தாங்குகின்றன. 

04.அகிம்சை என்றால் அன்புடைமை, தீங்கு செய்யாமை, கொல்லாமை,    புலால் மறுத்தல். பொய்மையும் வாய்மை இடத்த புரைதீர்ந்த நன்மை          பயக்கும் எனின். பொய் சொல்லினால் பொய் சொல்லியாயினும் கொலையை தடுக்கலாம்.

05.பெருவலி யாவுள மற்றொன்று சூழினும் தானம் முன் தரும். ஊழலையும் உப்பக்கம் காண்பர் உலைவின்றித் தாழாது இன்று. பவர் தவிர மற்ற மதத்தினர் யாரும் திருக்குறள் எங்கள் வேதம் எங்கள் ஓட்டு என்று கூறவில்லை

06. நீலகேசி என்னும் நூலில் மொக்க சுருக்கத்தில் அறுபதாம் செய்யுள் உரையிலேயே சமய சிவஞான முனிவர் என்னும் ஜெனர் பொய்மையும் வாய்மை படர்ந்த புரைதீர்ந்த நன்மை பயக்கும் எனின் என்பது எம் ஒத்து எங்கள் வேதம் என்று உரைக்கிறார்

(சமயங்கள் வளர்த்த தமிழ் - மயிலை சீனி வேங்கடசாமி-பத்தொன்பதாவது தலைப்பில் "ஜைன மதமும் திருக்குறளும்" என்ற தலைப்பு)


மறுக்க வேண்டிய தகவல்கள்

01. அற்புத சக்தி

தரை  பூமிலிருந்து 4 அங்குல உயரத்தில் எதையும் தொடாமல் அந்தரத்தில் செல்லும் அற்புத சக்தி பெற்றவர்.  க்ருத்தபிச்சர்  என்பது மற்றொரு பெயர். அவர் வான் வழியாக சென்ற போது அவரது மயில் பீலிகை தவறி கடலில் வீழ்ந்து விட அருகில் இருந்த தீவு ஒன்றில் காணப்பட்ட கழுகுகளின் இறகுகளை  பீலிகையாக  கொண்டார்.  

இது உயர்வு படுத்தி சொல்ல பயன் படுத்தியது. பௌத்தத்திலும் இலங்கை வரலாற்றை கூறும் தீபவம்சம், மகாவம்சம் நூல்கள் பகவன் புத்தர் இலங்கைக்கு மூன்று முறை வருகை புரிந்ததாக குறிப்பிடுகிறது. மூன்று முறையும் பகவன் புத்தர் வான்வழியாக இலங்கை சென்றதாக குறிப்பிடுகிறது. பெருபான்மையான பௌத்த அறிஞர்கள் மற்றும் வரலாற்று அறிஞர்கள் இக்கருத்தை ஏற்கவில்லை. 

02. திருக்குறள் நூலை படைத்தவர் 

01. திரி குறளை படைத்தது தமிழர் அல்ல என்பது ஏற்புடையது இல்லை. 

02. குந்த குந்தர் எழுதிய நூல்கள் இப்ராகிருத மொழில் உள்ளது. திரி குறளை மட்டும் தமிழில் எழுத கரணம் என்ன?  

03.பெண் பிறவியைத் தாழ்ந்த பிறவியாகச் சமண சமயம் சித்திரிக்கிறது. ஒருவன் யாரையாவது வஞ்சிப்பானானால் (ஏமாற்றுதல் போல்வன) அவன் அடுத்த பிறப்பில் பெண்ணாகப் பிறப்பான் என்பது சமண சமயக் கொள்கை ஆகும். 

பெண்ணாகப் பிறந்த ஒருவர் வீடுபேறு அடைவதற்கு வழியே இல்லை என்பது திகம்பரச் சமணர்களின் முடிவாகும். எனவே, வீடுபேறு அடைய விரும்பும் பெண், அடுத்த பிறவியில் ஆணாகப் பிறந்து துறவு மேற்கொண்டு ஒழுக வேண்டும் என்பது இப்பிரிவினரின் கருத்தாகும்.  

சமணர்களுள் ஒரு பிரிவினரான சுவேதாம்பரர், பெண்கள் துறவு நெறி மேற்கொண்டு மன உறுதியுடன் செயல்பட்டால் அவர்கள் வீடுபேறு அடைய முடியும் என்று நம்பினர். 

04.சமணர்களின் கூற்றுப்படி, உயிரினங்களைக் கொல்வது தடைசெய்யப்பட்டுள்ளது. மருத்துவர்கள் மற்றும் விவசாயிகள் வன்முறையாளர்களாகவே கருதப்படுகின்றனர். மருத்துவர்கள் தடுப்பூசிகளை வழங்குவதால், உயர் வாழ்க்கையைப் பாதுகாக்க மருத்துவர்கள் உயிரை எடுக்கிறார்கள். விவசாயிகள் உழவு மற்றும் பயிர்களை நடவு செய்யும் போது உயிரைப் பறிக்கிறார்கள்.

~திருக்குறள் மறுப்பை பிறகு பார்க்கலாம்~

குறிப்பு 
01. குந்த குந்தாச்சாரியர்  வரலாறு - திரு இ ஜம்புகுமாரன் ஜெயின் 
02.  சமயங்கள் வளர்த்த தமிழ் - மயிலை சீனி வேங்கடசாமி

திங்கள், ஏப்ரல் 08, 2024

திருவள்ளுவரின் திருவுருவம்



பிரான்சிஸ் ஒயிட் எல்லீஸ்  ( Francis Whyte Ellis) (1777–1819) 

19 ஆம் வயதில் சென்னைக்கு வந்தார் எல்லிஸ். பின்னர் மாவட்ட ஆட்சியாளரானார். 1812ல் Madras Literary Society சென்னைக் கல்விச் சங்கம் உருவாக்கினார். திருவள்ளுவருக்கு முதன் முதலில் உருவம் கொடுத்தவர் எல்லீஸ். திருவள்ளுவரின் உருவம் பொறித்து பத்து ரூபாய் தங்கக் காசு வெளியிட்டார் எல்லீஸ். சென்னையின் நாணயசாலை எல்லீஸ் பொறுப்பில் இருந்த காலத்தில் வெளியிட்டார். எல்லீஸ் துரை தமிழை நன்கு கற்றவர். தமிழ் மீது கொண்ட காதலால் தனது பெயரை எல்லீசன் என தமிழ்ப்படுத்திக் கொண்டார். திருக்குறளில் அறத்துப்பாலின் முதல் 13 அதிகாரங்களை ஆங்கிலத்தில் 1819-ல் மொழிபெயர்த்து உரை எழுதி அச்சிட்டிருக்கிறார்.   அவருடைய மொழிபெயர்ப்பே ஆங்கிலத்தில் திருக்குறளின் முதல் மொழிபெயர்ப்பாகும். திருக்குறள் சொற்ப பிரதிகளே அச்சிடப்பட்டது. அவர் பழங்குடியினரிடையே  அதிகம் வாழ்ந்தார் அவர்களின் சிந்தனை பழக்க வழக்கங்கள் முழுமையான அறிவை கொண்டிருந்தார்.


 

திருவள்ளுவரின் திருமேனி தாங்கிய தங்கக்காசு. 

இந்த நாணயத்தின் ஒரு புறம் திருவள்ளுவரின் உருவமும் மற்றொரு புறம் நட்சத்திரமும் பொறிக்கப்பட்டுள்ளது. காசின் முன்புறத்தில் ஒரு பீடத்தின் மீது தியான நிலையில் அமர்ந்திருக்கிறார்.  வலது கை தொடை மீதும் இடது கை ஒரு சுவடியை ஏந்தியும் உள்ளது.  இடையில் தட்டுச் சுற்றாக வேட்டியும் இடது தோளில் மடித்துப் போட்ட துண்டும் அணிந்துள்ளார். மழித்த தலை; தலைக்கு மேலே ஒரு குடை. பீடத்துக்கு முன் ஒரு தீர்த்த பாத்திரம் காணப்படுகிறது.

 நாணய காலம்

அரசு சென்னை ஜார்ஜ் கோட்டையில் முதன் முதலாக 1807-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் இயந்திர நாணய சாலையை நிறுவி தங்கம், வெள்ளி மற்றும் செப்புக் காசுகளை வெளியிடத் தொடங்கியது. 1817-ம் ஆண்டும் டிசம்பர் மாத இறுதியில் தங்க வராகன்கள் அச்சடிப்பது நிறுத்தப்பட்டு விட்டது. ஆகையால் இக்காசு 1807-ம் ஆண்டு முதல் 1817-ம் ஆண்டு வரையிலான பத்தாண்டு காலத்துக்குள் வெளியிடப்பட்டிருக்க வேண்டும் என்று நிச்சயமாகச் சொல்ல முடியும்

  திருக்குறள் மூல சுவடியை கொடுத்தது யார்?

திருவள்ளுவர் யார் என்ற நூலின் ஆசிரியர் கௌதம சன்ன பதிவு. கொடியாண்டி என்ற கந்தப்பன் (மகா பண்டிதர் அயோத்திதாசரின் பாட்டனார்) மைலாப்பூரில் இருந்த மருத்துவர். அவர் கந்தப்பனார், கந்தப்பன் பிள்ளை எனவும் அழைக்கப்பட்ட்டர். அவர் ஏராளமான தமிழ் ஓலை சுவடிகளை பாதுகாத்து வைத்திருந்தார். அவர் George Harrington ஆரிங்க்டன் என்னும் ஆங்கில அதிகாரியிடம் பட்லராக பணியாற்றினார். 1810  ஆரிங்க்டன் அவர்களுக்கு திருக்குறள் ஓலை   சுவடியை கொடுத்தார். 

ஆரிங்க்டன் எல்லிஸ் அவர்களுக்கு தான்  கந்தப்பனாரிடம் இருந்து  பெற்ற திருக்குறள் ஓலை சுவடியை கொடுத்தார்.  திருக்குறள் ஆரிங்க்டன் மற்றும் எல்லிஸ் ஆகியோரால் அச்சில் ஏறியது.

எல்லிஸ் அவருடைய மொழிபெயர்ப்பே ஆங்கிலத்தில் திருக்குறளின் முதல் பதிப்பு எல்லிஸ் என்பது தவறு. 

வீரமாமுனிவர் (Constantine Joseph Beschi) லத்தின் மொழியில் 1730ல் திருக்குறளை வெளியிட்டார்.


என். ஈ கின்டர்ஸ்லி (Nathaniel Edward Kindersley) 1794ல்   ஆங்கிலத்தில் வெளியிட்டார். 


Dr ஆகஸ்ட் பிரடெரிக்   காமரர் Dr August Friedrich Caemmerer 1803ல்  ஜெர்மனில் திருக்குறளை வெளியிட்டார்.

திருவள்ளுவருக்கு முதன்முதலாக உருவம் கொடுத்து தங்கக்காசு வெளியிட்ட ஆங்கிலேயர்l

ஆங்கிலேயத் தமிழறிஞரின் சாலை