திருவள்ளூர் மாவட்டம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
திருவள்ளூர் மாவட்டம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், அக்டோபர் 01, 2025

நெற்குன்றம் புத்தர்


அமைவிடம்:
ஸ்ரீ ஆத்ம லிங்கேஸ்வரர் சிவன் கோவில்,
தயாசதன் சாலை, செந்தமிழ் நகர்
நெற்குன்றம், கோயம்பேடு, 
மதுரவாயல் வட்டம்
திருவள்ளுவர் மாவட்டம்

இந்த கோயில் கோயம்பேடு மெட்ரோ நிலையத்திலிருந்து 900 மீட்டர் தொலைவில் உள்ளது. கோயிலின் கருவறையின் பக்கச் சுவரில் நிறுவப்பட்டுள்ளது.



சிலையமைப்பு:  
ஞான முடி (உஷ்ணீஷா) தலையின் மேல் சிறிதாக உள்ளது. அரை தோரணம், அசோக கொடிகளும் மேலே உள்ளது, இடது தோளில் சீவர ஆடை மங்கலாகத் தெரிகிறது. .நெற்றி திலகம் உள்ளது. நீண்ட காது, தியான முத்திரை, அரை தாமரை அமர்வு, பீடத்தின் அடிவாரத்தில் ஒரு தர்ம சக்கரமும் மங்கலாகத் தெரியுகிறது. 

காணாமல் போன புத்தர் சிலை

கரோண காலத்தில் பதிவிட்டு இருந்தார் ஐயா வேலுதரன். சிலை பாதுகாப்பாக இல்லை. பார்க்க விரும்புபவர் உடனடியா பார்க்கவ வேண்டி பதிவிட்டு இருந்தார். மிக காலா தாமதமாக நேற்று தான் அவர் வலைப்பதில் நெற்குன்றம் புத்தரை கண்டேன். இன்று மலை (01/10/2025) சென்று அந்த கோவில் (ஜீவா சமாதி) பார்த்து புத்தர் சிலை இல்லாதது கண்டு வருந்தினேன். அங்கு பணியாற்றிய நபரை விசாரித்தேன். புத்தர் சிலை எடுத்து செல்லப்பட்டது யார் எங்கே என்றெல்லாம் தெரியாது என்றுரைத்தார் .     

 நன்றி: வேலுதாரன் - வலைப்பதிவு

புதன், மே 08, 2024

பழவேற்காடு புத்தர் சிலை

 பழவேற்காடு கடலில் ஐம்பொன் புத்தர் சிலை கண்டெடுப்பு



பொன்னேரியை அடுத்த பழவேற்காடு பகுதியில் 17/01/2017 காணும் பொங்கலை முன்னிட்டு திரளான பொதுமக்கள் குவிந்து இருந்தனர். மீஞ்சூரை அடுத்த திருநிலை கிராமத்தைச் சேர்ந்த சங்கர் மற்றும் அவரது உறவினரான சென்னை வண்ணாரப்பேட்டையை சேர்ந்த பெண் காவலர் சுமதி ஆகியோர் குடும்பத்தினருடன் பழவேற்காடு வந்து இருந்தனர்.


இவர்கள் அங்குள்ள கலங்கரை விளக்கம் குப்பம் (Light House) பகுதியில் கடலில் குளித்துக் கொண்டிருந்தனர். அப்போது ஒரு மர்ம பொருள் அவர்களின் காலில் தட்டுப்பட்டது. அதை கையில் எடுத்து பார்த்தபோது சுமார் 3 அடி உயரம் உள்ள ஐம்பொன் புத்தர் சிலை என்பது தெரியவந்தது.

கடலில் கண்டெடுத்த புத்தர் சிலையை திருப்பாலைவனம் காவல் ஆய்வாளரிடம் (Police Inspector) ஒப்படைத்தனர். அவர், பொன்னேரி தாசில்தாரிடம் ஒப்படைத்தார். அந்த சிலையை பெற்றுக்கொண்ட தாசில்தார், இதுபற்றி தொல்பொருள் ஆய்வு அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தார்.


தொல்பொருள் ஆய்வு அதிகாரிகளின் ஆய்வுக்கு பிறகே இந்த புத்தர் சிலை எந்த காலத்தில் செய்யப்பட்டது?, அதன் மதிப்பு என்ன? என்பது உள்ளிட்ட விவரங்கள் தெரியவரும் என பொன்னேரி வருவாய்த்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.


தற்பொழுது காஞ்சீவரம்  அருங்காட்சியகத்தில் உள்ளது இச்சிலை.




புதன், ஆகஸ்ட் 10, 2022

பொன்னேரி புத்தர்


அமைவிடம்:- 

குமரசிறுளப்பாக்கம் கிராமம், தேவதானம் ஊராட்சி 

மீஞ்சூர் ஊராட்சி ஒன்றியம், பொன்னேரி: 

திருவள்ளூர் மாவட்டம்


சிலையமைப்பு:-

கை சிந்தனை கை. கால் செம்பாதி தாமரை அமர்வு. ஞான முடி தீப்பிழம்பாக தலைமுடி சுருள் சுருளான முடிகள். இடப்புற தோள் மட்டும் சீவர ஆடையால் போர்த்தப்பட்டு இருக்கிறது சிலை உயரம் 2 அடி உயரம் இரு தோள்கள் வரை தோரணம். நூற்றாண்டு கி.பி 14 நூற்றாண்டு.



மீஞ்சூர் அருகே உள்ள தேவதானம் ஊராட்சியில் குமரசிறுளப்பாக்கம் கிராமம் உள்ளது. இங்கு அரசு தொடக்கப்பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளி கட்டிடம் பழமையானதால் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கட்டிடம் அகற்றப்பட்டது. மீண்டும் அதே பகுதியில் புதிய பள்ளி கட்டிடம் கட்டுவதற்கான பூமி பூஜை நடந்தது. இந்த நிலையில் எந்திரம் உதவியுடன் பள்ளம் 08/08/22 தோண்டப்பட்டது. அப்போது மண்ணில் அந்த பள்ளத்தில் சுமார் இரண்டரை அடி புத்தர் சிலை  கண்டெடுக்கப்பட்டது. பொன்னேரி தாசில்தாரிடம் புத்தர் சிலை ஒப்படைக்கப்பட்டது.  கண்டெடுக்கப்பட்ட புத்தர் சிலை கி.பி.14-ஆம் நூற்றாண்டை சேர்ந்த மிக பழமையானது என தொல்லியல் துறையினர் தெரிவித்துள்ளனர்.

பள்ளி கட்டிடம் கட்ட பள்ளம் தோண்டியபோது புத்தர் சிலை கண்டெடுப்பு

பள்ளி கட்டிடம் கட்ட பள்ளம் தோன்றியபோது 2 அடி புத்தர் சிலை கண்டெடுப்பு