கை சிந்தனை கை. கால் செம்பாதி தாமரை அமர்வு. ஞான முடி தீப்பிழம்பாக தலைமுடி சுருள் சுருளான முடிகள். இடப்புற தோள் மட்டும் சீவர ஆடையால் போர்த்தப்பட்டு இருக்கிறது சிலை உயரம் 2 அடி உயரம் இரு தோள்கள் வரை தோரணம். நூற்றாண்டு கி.பி 14 நூற்றாண்டு.
மீஞ்சூர் அருகே உள்ள தேவதானம் ஊராட்சியில் குமரசிறுளப்பாக்கம் கிராமம் உள்ளது. இங்கு அரசு தொடக்கப்பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளி கட்டிடம் பழமையானதால் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கட்டிடம் அகற்றப்பட்டது. மீண்டும் அதே பகுதியில் புதிய பள்ளி கட்டிடம் கட்டுவதற்கான பூமி பூஜை நடந்தது. இந்த நிலையில் எந்திரம் உதவியுடன் பள்ளம் 08/08/22 தோண்டப்பட்டது. அப்போது மண்ணில் அந்த பள்ளத்தில் சுமார் இரண்டரை அடி புத்தர் சிலை கண்டெடுக்கப்பட்டது. பொன்னேரி தாசில்தாரிடம் புத்தர் சிலை ஒப்படைக்கப்பட்டது. கண்டெடுக்கப்பட்ட புத்தர் சிலை கி.பி.14-ஆம் நூற்றாண்டை சேர்ந்த மிக பழமையானது என தொல்லியல் துறையினர் தெரிவித்துள்ளனர்.
சேலம் பெரியேரியில் இருப்பது புத்தர் சிலை தான்! தொல்லியல் துறை
அமைவிடம்
தலைவெட்டி முனியப்பன் கோவில்,
சேலம் அரசு மருத்துவ மனைக்கு எதிர், கோட்டை சாலை
பெரியேரி கிராமம், சேலம் மாவட்டம்,
உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல்
சேலம் அரசு மருத்துவ மனைக்கு எதிரே புத்தர் சிலை இருந்தது. பழைய பதிவேடுகளிலும் அச்சிலை புத்தர் டிரஸ்டுக்குச் சொந்தமானது என்றே உள்ளது. இப்பொழுது அது தலை வெட்டி முனியப்பன் கோவிலாக மாற்றப்பட்டது. பழைய ஆவணங்கள் கிழிக்கப்பட்டு, திருத்தப்பட்டுள்ளன. அங்குள்ள சிலைக்கு வழிபாடு நடத்தப்பட்டு வருகிறது. ஆனால், கோவிலில் உள்ளது புத்தர் சிலை என 2008ல் சர்ச்சை எழுந்தது.
இதனால் இந்திய புத்த சங்கத்தின் (Buddhist Society of India) சேலம் மாவட்ட அமைப்பாளர் திரு.பி.ரங்கநாதன் அவர்கள் அங்குள்ள, 26 சென்ட் நிலமும், புத்த சங்கத்துக்குச் சொந்தமானது. அந்த இடத்தை மீட்டு, புத்த சங்கத்திடம் மீண்டும் ஒப்படைக்கக்கோரி, அறநிலையத் துறைக்கும், முதல்வர் தனிப்பிரிவுக்கும் மனு அளித்தார். எந்த நடவடிக்கையும் இல்லை என்பதால் 2011ல் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
தொல்லியல் துறை அறிக்கை
இந்த மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், சம்பந்தப்பட்ட இடத்தில் இருப்பது தலைவெட்டி முனியப்பன் சிலையா அல்லது புத்தர் சிலையா என ஆய்வு செய்து ஆய்வு அறிக்கை அளிக்க வேண்டும் என்று தமிழக தொல்லியல் துறைக்கு உத்தரவிட்டது.
தொல்லியல் துறை, ஹால்ஸ் சாலை, எழும்பூர், சென்னை 8.
28/07/2021 10 மணியளவில் கூட்டு ஆய்வு குழு சிற்பத்தை ஆய்வு செய்தது. பூசாரி மற்றும் உதவியாளர் மூலம் சிலையின் மீது பூசப்பட்டிருந்த மஞ்சள், குங்குமம், சாம்பல் மற்றும் எண்ணெய் அகற்றி முழுமையாக சுத்தம் செய்யப்பட்டது. தொல்லியல் துறை அறிக்கை தாக்கல் செய்தது. அந்த சிற்பம் மகா லட்சணங்களை கொண்டுள்ள புத்தர் சிலை தான் என்று.
01. தலைவெட்டி முனியப்பன் கோவில் கட்டடம் நவீன தோற்றம் உடையது. இது சிமெண்ட், செங்கல் மற்றும் கான்கிரீட்டால் கட்டப்பட்டுள்ளது.02. சிலை கடினமான கல்லாலானது.
03. தாமரை பீடத்தில் அர்த்தபத்மாசனம் எனப்படும் அமர்ந்த நிலையில் சிலை உள்ளது.
04. கைகள் தியான முத்ரா கொண்டு உள்ளன.
05. தலை சுருள் முடி போன்று இருந்தது. ஞான முடி இருந்தது உயரம் 7 CM
06. நீளமான காது,
07. நெற்றியில் வெள்ளை முடி அ திலகம் தெரியவில்லை.
08. உடற்பகுதியில் இருந்து தலை துண்டிக்கப்பட்டது.
09. சிலை உயரம் 108 CM .
10. சிலை எந்த கலை வேலையும் இல்லாமல் தட்டையாக இருந்தது
நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் உத்தரவு
பெரியேரியில் இருப்பது புத்தர் சிலை தான் என்பதை தொல்லியல் துறை தெளிவாகவும் திட்டவட்டமாகவும் தன் அறிக்கையில் குறிப்பிட்டு உள்ளது. எனவே
01. தலைவெட்டி முனியப்பன் சிலை என அறநிலையத் துறை கருத அனுமதிக்க முடியாது.
02.புத்தர் சிலை உள்ள இடத்தை தமிழக தொல்லியல் துறை தன் கட்டுப்பாட்டில் எடுக்க வேண்டும். அங்குள்ளது புத்தர் சிலை தான் என அறிவிப்பு பலகை வைக்க வேண்டும். அந்த இடத்தில் பொது மக்களை அனுமதிக்கலாம், ஆனால், புத்தர் சிலைக்கு பூஜை உள்ளிட்ட பிற சடங்குகள் செய்ய அனுமதிக்கப்படவில்லை என்பதை தொல்லியல் துறை உறுதி செய்ய வேண்டும்.
03.அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள நிலத்தை தமிழ்நாடு அகழாய்வுத்துறையிடம் ஒப்படைக்க வேண்டுமென உத்தரவிட்டுள்ளது.
தொல்லியல் துறை இயக்குநர் அறிஞர் திரு Dr D தயாளன்
2017 ஆம் ஆண்டு வெளியிட்ட தம் நூலில் (Buddhist remains of south india Page 205) கீழ்க்கண்டவாறு குறிப்பிடுகிறார்.
சிற்பம் முற்றிலும் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. தலை துண்டிக்கப்பட்டு, சில ஆண்டுகளுக்கு முன்பு மீண்டும் சரி செய்யப்பட்டது போல் தெரிகிறது. கால்கள் மற்றும் கைகளும் ஓரளவு உடைந்துள்ளன. சிலையின் காலம் 10-11 நூற்றாண்டுகள். சிற்பம் அசல் இடத்தில் இருந்து அகற்றப்பட்டு நவீன கோவிலில் வைக்கப்பட்டுள்ளது.
பணியில் இருக்கும் தொல்லியல் துறை ஆய்வாளர் அவர்கள் சிலையின் மீது போர்த்தப்பட்ட ஆடையை நீக்கி படம் எடுக்க முடியவில்லை என்னும் பொழுது கோவில் நிர்வாகத்தினர் அதிராகம் நன்கு தெளிவாகின்றது.
சேவா பி.எஸ்.என்.எல் SC/ST பணியாளர்கள் நலச் சங்கம் (SEWA BSNL SC/ST Employees Welfare Association) ஒரு நாள் கருத்தரங்கம் 26/01/2022 அன்று இக்சா மையம் (ICSA) ஜீவன ஜோதி வளாகம், எழும்பூர், சென்னை-8ல் இரு தலைப்புகளில் நடத்தியது.
முதல் அமர்வு காலை 10.00 மணி முதல் 1.00 மணி வரை "பாபா சாகேப் அம்பேட்கர் அவர்களின் இந்திய அரசமைப்புச் சட்டமும் குடியரசு தினமும்" என்ற தலைப்பில் கருத்துரை வழங்கியவர் S.ஜெயராஜ் MA ML அகில இந்திய பொதுச் செயலாளர் BSNL SEWA & தலைவர் ABI.
இரண்டாம் அமர்வு மதியம் 02.00 மணி முதல் 5.00 மணி வரை "பாபா சாகேப் அம்பேட்கர் அவர்களும், பூனா ஒப்பந்தமும்" என்ற தலைப்பில் கருத்துரை வழங்கியவர் N.முத்துராமன் பயிற்சியாளர் BSP BVF
அதன் பிறகு பகுஜன் சமாஜ் கட்சி (BSP) மாநில தலைவர் திரு K.ஆம்ஸ்ட்ராங் அவர்கள் மாலையில் உரையாற்றினார். பூனா ஒப்பந்தம் (1932) 90 ஆண்டுகளுக்கு முன் என்ன நடந்தது, குடியரசு தினம் (1950) 72 ஆண்டுகளுக்கு முன் என்ன நடந்தது என்பதை ஒரு நாள் கருத்தரங்கமாக நடத்திய SEWA BSNL வாழ்த்தி உரையை துவங்கினார்.
குடியரசு நாளுக்கும் காந்திக்கும் எந்த தொடர்புமில்லை
01) இரண்டு வாரமாக செய்தித்தாள்களில், தொலைக்காட்சிகளில் தமிழக தலைவர்களின் புகைப்படங்கள் தாங்கிய வாகனங்கள் ஒன்றிய அரசால் நிராகரிக்கப்பட்டதை விவாதமாக நடத்தப்பட்டுள்ளது. குடியரசு நாள் தினத்திற்கும் நிராகரிக்கப்பட்ட தலைவருக்கும் எந்த தொடர்புமில்லை.
02) 1967லிருந்து சமூக ஆட்சியை அமைத்தோம் என்னும் திராவிட ஆட்சி குடியரசு நாள் அன்று காந்தி படத்தை வைத்து கொடியேற்றியதும் உண்டு. 15/08/1947 சுதந்திரம் பெற்ற நாள். 5 மாதம் கழித்து 30/01/1948ல் காந்தியின் வாழ்வு முடிந்துவிட்டது. 26/01/1950 குடியரசு நாள். காந்தியின் இறப்புக்கு பின் குடியரசு நாள். காந்திக்கும், குடியரசு நாளுக்கும் எந்த தொடர்புமில்லை. ஆனால் காந்தி படத்தை வைத்து இன்றும் கொடியேற்றி குடியரசு தினம் கொண்டாடி வருகின்றனர்.
சட்ட நாள் (அ) Dr அம்பேத்கர் நாள் என்று கொண்டாடப்படவேண்டும்
குடியரசு தினத்திற்கும் சுதந்திர தினத்திற்கும் என்ன வேறுபாடு? திராவிட அரசியலை சார்ந்திருப்பதால் நாம் இதை தெரிந்துகொள்ளாமல் இருக்கிறோம். 2005ல் ஒன்றிய அரசு ஒரு GO (Government Order) கொண்டுவந்தது. நவம்பர் மாதம் 26ஆம் நாளை அரசியலமைப்பு தினமாக (Constitution Day) கொண்டாடவேண்டும் என்று. அன்று இருந்த உறுப்பினர்கள் பாராளுமன்றத்தில் இந்த GO கொண்டுவந்தனர். மற்ற நாடுகளில் அரசியலமைப்பு தினம் எப்படி கொண்டாடிவருகின்றனர். இந்தியாவில் மக்கள் எந்த விழிப்புணர்வும் இல்லாமல் இருக்கின்றனர். ஆகவே இந்த நாளை எப்படி கொண்டாடவேண்டும். ஆரம்ப பள்ளிகளிலிருந்து, நடுநிலைப்பள்ளிகளிலிருந்து, உயர்நிலை பள்ளிகளிலிருந்து, நிர்வாகத்திலிருந்து, மத்திய அரசு, மாநில அரசு, எப்படி கொண்டாடவேண்டும் என்று சுற்றறிக்கை (Circular) அனுப்பப்பட்டது. நவம்பர் மாதம் 26ஆம் நாள் அன்று கட்டுரை போட்டி, பேச்சு போட்டி, மாதிரி பாராளுமன்றம் நடைபெற வேண்டும், மக்கள் விழிப்புணர்வு கொண்டுவரவேண்டும். (Law Day or Dr Ambedkar Day) சட்ட நாள் (அ) Dr அம்பேத்கர் நாள் கொண்டாடப்பட வேண்டும் என்று 2005ல் சுற்றறிக்கை கொண்டுவரப்பட்டது.
நவம்பர் 26க்கும் ஜனவரி 26க்கும் என்ன வேறுபாடு?
இந்த கேள்வி IAS தேர்வு வினா. நவம்பர் 26ல் 15 சரத்துகள் (Articles) மட்டுமே நடைமுறைபடுத்தினர். மற்ற சரத்துகள் 380 (395-15) ஜனவரி 26ல் நடைமுறைபடுத்தப்பட்டது.
TT கிரிஷ்ணமாச்சாரி - இந்த நாடே Dr அம்பேத்கருக்கு நன்றி சொல்லவேண்டும்-
அரசியலமைப்பு தினம் என்று சொன்னால் Dr அம்பேத்கரை தவிர வேறு யாரையும் சொல்லமுடியாது. அரசியல் நிர்ணய சபையில் 7 பேர் கொண்ட உறுப்பினர்களை கொண்டது. ஒரு உறுப்பினர் பதவி விலகினார் (Resigned). ஒரு உறுப்பினர் இயற்க்கை எய்தினார் (Death). ஒரு உறுப்பினர் வெளிநாடு சென்றுவிட்டார் (America). இரு உறுப்பினர்கள் கலந்துக்கொள்ளவேயில்லை. ஒரு உறுப்பினர் உடல் நலம் குறைவு (Sick). இந்திய அரசியமைப்பு என்பது (One Man Job) ஒருவரால் உருவாக்கப்பட்டது. எனவே இந்த நாடே Dr அம்பேத்கருக்கு நன்றி சொல்லவேண்டும்.
முதலமைச்சர், பிரதம மந்திரி இவர்கள்Dr அம்பேத்கர் உருவாக்கிய சட்டத்தால் தான்
குடியரசு தினத்தை Dr அம்பேத்கர் தினமாக கொண்டாடப்படுகிறதா அல்லது பேசப்படுகிறதா? சமூக நீதியை கொண்டுவந்தவர் Dr அம்பேத்கர். Dr அம்பேத்கரை தவிர்ப்பது என்பது சமூக நீதியை தவிர்ப்பதாகும்.
குடியரசு என்பது SCக்கு, BCக்கு மட்டுமல்ல பிராமணருக்கும். குடியரசு என்பது அனைவருக்குமானது. இந்திரா காந்தி பிரதம மந்திரியாகியபோது நான் வணங்கும் கடவுள் என்னை பிரதம மந்திரியாக்கவில்லை. Dr அம்பேத்கர் உருவாக்கிய சட்டம் தான் என்னை பிரதம மந்திரியாகியது என்றுரைத்தார். இரண்டு ஆண்டுக்கு முன் குடியரசு தினத்தன்று மோடி (Modi) அவர்கள் தான் பிரதம மந்திரியாகியது Dr அம்பேத்கர் உருவாக்கிய சட்டத்தில் தான் என்றுரைத்தார்.
தமிழகத்தில் 1950க்கு முன் முதலமைச்சரானவர்கள் எல்லோரும் வைசியர்கள் தான். 1920லிருந்து பனங்கள் அரசர் முதல் ராஜகோபாலச்சரியர் வரை. காமராசர், எம். பக்தவத்சலம், அறிஞர் அண்ணா, கலைஞர் கருணாநிதி, MG ராமசந்திரன், ஜெயலலிதா, ஓ. பன்னீர்செல்வம், எடப்பாடி கே. பழனிச்சாமி இவர்கள் முதலமைச்சர் ஆனது Dr அம்பேத்கர் உருவாக்கிய சட்டத்தால் தான்.
வருண கோட்பாடு இல்லாத குடியரசு
நான்கு வருணம் என்பது கடவுளின் படைப்பு. எனவே நான்கு வருண கோட்பாட்டை நாம் ஏற்றுக்கொள்ளவேண்டும். என்றுரைத்தவர் காந்தி. அவரின் கருத்துப்படி பிராமணன் படிக்க வேண்டும், சத்திரியன் ஆட்சியாளக இருக்க வேண்டும், வைசியன் வியாபாரம் செய்ய வேண்டும், சூத்திரன் அடிமை தொழில் செய்யவேண்டும். இதனால் தான் பாபா சாகேப் காந்தியை மகாத்மா என்று ஏற்றுக்கொள்ளவில்லை. இந்த கருத்தை மறுத்து மாற்றத்தை கொடுத்தார் பாபாசாகேப்.
Dr.அம்பேத்கர் தன்னுடைய வாழ்க்கையை இரத்தின சுருக்கமாக நான்கு வார்த்தைகளில் சுருக்கமாக சொல்கிறார். நீதி, சுதந்திரம், சமத்துவம் மற்றும் சகோதரத்துவம் Justice, Liberty, Equality, Fraternity. இது தான் அரசியல் சாசனம் முன்னுரையில் (Premable) இருக்கும். இந்த சொற்கள் பிரெஞ்ச் புரட்சியில் இருந்து எடுக்கப்பட்டது என்றுரைக்கின்றனர் கம்யூனிஸ்ட்கள். ஆனால் இவை பகவன் புத்தர் புரட்சியில் இருந்து எடுக்கப்பட்டது.
இந்த அரசியல் நிர்ணய சபை
2 வருடம் 11 மாதம் 18 நாள் இந்திய அரசியல் சட்டம் உருவாக்க எடுத்துக்கொள்ளப்பட்ட நாட்கள்.
நான் ஒரு குழுவின் தலைவராக வருவேன் என்று எதிர்பார்த்தேன். ஆனால் இவ்வளவு பெரிய பொறுப்பை என்னிடம் ஒப்படைத்துவிட்டனர். என்னை விட அறிவில் சிறந்தவர் எல்லாம் இந்த அரசியல் நிர்ணய சபையில் இருக்கின்றனர். எண்ணத்திற்கு எட்டாத அளவிற்கு என்னை புகழ்ந்து வருகின்றனர். ஏன் இந்தியா அரசியல் சாசனம் எழுத ஒத்துக்கொண்டேன் என்றால் என் மக்களின் விடுதலைக்காக தான் என்றுரைத்தார் Dr.அம்பேத்கர்.
இந்திய அரசியல் சாசனம் உருவாக்க 299 இருந்தனர். எல்லோரும் இந்திய அரசியல் நிர்ணய சபையில் கூடுகின்றனர். Dr அம்பேத்கர் நுழைவாயிலிருந்து உள்ளே நுழைகிறார். 5 ஒட்டு பெற்றால் மட்டுமே Dr அம்பேத்கர் அரசியல் நிர்ணய சபையில் பங்கேற்க முடியும். Dr அம்பேத்கர் அவர்களிடம் அவரின் ஒரு ஓட்டு மட்டுமே உள்ளது. மண்டல் (Jogendra Nath Mandal) Dr அம்பேத்கரிடம் சொல்கிறார், நான் எல்லோரிடமும் உங்களுக்கு ஒட்டு போடச்சொல்லியிருக்கிறேன் (Canvas). நீங்கள் கண்டிப்பாக அரசியல் நிர்ணய சபைக்கு செல்கிறீர். ஆனால் Dr அம்பேத்கருக்கு நம்பிக்கை கிடையாது. மண்டல் எல்லோரிடம் சென்று பேசிவிட்டு வருகிறார். Dr அம்பேத்கருக்கு ஓட்டு போட வேண்டடியார்களை காங்கிரஸ் கடத்திவிட்டு சென்றுவிடுகின்றனர். வங்காளத்தில் இருந்த அந்த ஓட்டரை கடத்திவிடுகின்றனர். வங்க தேசத்தில் Dr அம்பேத்கர் முஸ்லீம் லீக் மூலம் போட்டியிட்டார் என்று சொல்லப்படுகின்றது. இது உண்மையல்ல. முஸ்லீம் லீக் மூலம் ஓட்டு போடவேண்டடியவரை மீட்டு மண்டலிடம் ஒப்படைத்து இருக்கின்றனர். 5 ஓட்டுக்கு 7 ஒட்டு பெற்று விடுகிறார். இது முதல் அரசியல் நிர்ணய சபை. பாகிஸ்தான் பிரிவினை வாதத்தால் இதனை புறக்கணித்து விடுகின்றனர்.
இரண்டாவது அரசியல் நிர்ணய சபை கூடுகிறது. பட்டேல் புறக்கணிக்கப்பட்டு Dr அம்பேத்கர் கலந்துகொள்ள முடியாமல் போகிறது. மும்பை முதலமைச்சருக்கு அவசர அவசரமாக எழுதி அனுப்பிவைக்கிறார். ஒருவரை ராஜனமா செய்து உடனடியாக அனுப்பிவைக்கிறார். ராஜனமாக செய்தது எனக்கு பெருமகிழ்ச்சி ஏனென்றால் எனக்கு பதில் ஒருவர் செல்கிறார். என்றைக்கு இருந்தாலும் அவருக்கு ஒரு வரலாறு இருக்கும். அவ்வரலாற்றில் இந்த MR ஜெயகர் (M. R. Jayakar Mukund Ramrao Jayakar) இருப்பார் என்று உரைத்தார்.
பெரியார் ஏன் அரசியல் சாசனத்தைஎரித்தார்?
பெரியார் தமிழ்நாட்டில் இருந்து பேசுகிறார் பச்சை பார்ப்பனர்கள் ஒன்றாக கூடி இருக்காங்க. அசல் மனுதரும சட்டத்தை எழுதுவதற்காக இந்திய அரசியல் சாசனம் கூடி இருக்கிறது. இந்த சட்டம் எழுதி வந்தால் நான் எரிப்பேன் என்று சொன்னார். அவ்வாறே எரித்தார். ஏன் எரித்தார் என்றால் பெரும்பான்மையாக பார்ப்பனர்கள் இருந்தனர் என்ற காரணத்திற்க்காகத்தான்.
நம் தலையெழுத்து அரசியல் சட்டத்தில் தான் இருக்கிறது
7635 (Amendments were proposed) முன்மொழிவுகள் வைக்கப்பட்டது. இதில் 2473 முன்மொழிவுகள் ஏற்றுக்கொள்ளப்பட்டது (Actually Discussed). 5162 நிராகரிக்கப்பட்ட முன்மொழிவுகள். 2473 முன்மொழிவுகள் முக்கியமானது 5162 முன்மொழிவுகள் முக்கியமானதல்ல என்று கருதவேண்டாம். 2473 முன்மொழிவுகள் மிக முக்கியமானது. இதிலிருந்து தான் 395 சரத்துக்கள் எழுதப்பட்டது.
அரசியல் சட்டம் வரைவுக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட காலம்
ஆஸ்திரேலியா 10 வருடம்
அமெரிக்கா 4 மாதம்
கனடா 2 வருடம் 10 மாதம்
இந்த நாடுகளில் முன்மொழிந்தது அப்படியே ஏற்றுக்கொள்ளப்பட்டது. ஆனால் நம் நாட்டில் அவ்வாறு நிகழவில்லை. ஒவ்வொன்றுக்கும் விவாதம் நடந்தது. ஏன் முற்றுப்புள்ளி, ஏன் காற்புள்ளிக்கு என்றுகூட விவாதம் நடந்தது. நம் தலையெழுத்து அரசியல் சட்டத்தில் தான் இருக்கிறது. சமூக நீதி வேண்டும் என்றால் பாபா சாகேப் நாம் கொண்டு செல்ல வேண்டும்.
திண்டிவனம்-புளியனுர் செல்லும் பேருந்துகள் இளமங்கலம் நிற்கும். திண்டிவனத்திலிருந்து இளமங்கலத்திற்கு இரண்டு மணி நேரத்திற்கு ஒரு பேருந்து செல்லும்.
திண்டிவனம் - விழுக்கம் 15.40 கி.மீ
திண்டிவனம்- செஞ்சி செல்லும் பேருந்துகள் விழுக்கம் முதன்மைச் சாலை செல்லும். இங்கிருந்து இளமங்கலத்திற்கு மாற்று வழியில் (Auto Rickshaw) செல்லலாம்.
திண்டிவனம் - தீவனுர் 13.10 கி.மீ
திண்டிவனம்-திருவண்ணாமலை செல்லும் பேருந்துகள் தீவனுர் செல்லும். இங்கிருந்து மாற்று வழியில் இளமங்கலத்திற்கு செல்லலாம்.
வரலாற்று ஆய்வாளர் ராஜ்பன்னீர்
தமிழகத்தில் இதுவரை பௌத்தம் சார்ந்து புத்தர் சிலை, தர்மசக்கரம் மட்டுமே கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பௌத்த கோவில் எழுப்பியதற்கான சான்றாக கண்டுபிடிக்கப்பட்டுள்ள முதல் கல்வெட்டாக இளமங்கலம் கல்வேட்டு உள்ளது. இளமங்கலம் என்ற இந்த ஊர் பெயர் தொடர் இயக்கமாக 1300 வருடமாக இந்த ஊர் பெயர் மாறாமல் அப்படியே இருக்கிறது.
.01. உச்சி பிள்ளையாா் கோயில்
30 அடி உயரமுள்ள தட்டை பாறையின் மீது சமீபத்தில் கட்டப்பட்டுள்ளது பிள்ளையார் கோவில். உச்சி பிள்ளையாா் கோயில் படிக்கட்டு அருகே பௌத்த கோயில் குறித்த செய்தியைக் கூறும் அரிய வகை கல்வெட்டு உள்ளது.
கல்வெட்டு
10 அடி உயரமுள்ள சதுர பலகை கல்லில் சக்கரத்துடன் கூடிய 11 வரி கல்வெட்டு உள்ளது. ஸ்ரீ கோவிசைய என தொடங்கும் இந்த கல்வெட்டு இரண்டாம் நந்திவர்மனின் 14ஆவது ஆட்சி ஆண்டு கல்வெட்டாகும். கி.பி.745 ஆம் ஆண்டு சிங்கபுரி நாட்டு கீழ்வழி இளமங்கலத்தில் உள்ள திருவடிகளுக்கு கற்றினி எடுப்பித்து, அத்தனிக்கு நந்தவனம் செய்து தந்ததாக கல்வெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனை அருவாரையர் காட்டிகன் மகன் கல்லறையோன் என்பவர் செய்ததாகவும், இத்தருமத்தை காப்பவர்களின் பாதத்தை தன் முடிமேல் வைத்து தாங்குவேன் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
தருமசக்கரம்
இந்த தருமசக்கரம் 16 கம்பிகளை கொண்டுள்ளது. இந்த கல்வெட்டில் உள்ள சக்கரம் மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள சாஞ்சியில் இருக்கும் புத்த ஸ்துாபியில் உள்ள தர்மசக்கரத்தை ஒத்து உள்ளது, இதே போன்ற சக்கர ஸ்துாபி இவ்வூரிலிருந்து 25 கி.மீ., தொலைவில் உள்ள தேசூரிலும், சென்னை அடுத்த திருவிற்கோலத்தில் இருப்பதும் குறிப்பிடத்தக்கது.
திருவடிகள்
கல்வெட்டில் பெரும்பாலும் சிவனுக்கு அல்லது பெருமாளுக்கு அல்லது சமணற்கு என்று குறிப்பிட்டு இருப்பர். ஆனால் இந்த கல்வெட்டில் அவ்வாறு குறிப்பிடாமல் திருவடிகளுக்கு இத்தலி எழுப்பித்து என்று குறிப்பிட்டுள்ளது. பாதத்தை வணங்குவது பௌத்தத்திலும், சமணத்திலும் வைணவத்திலும் உள்ளது.
திருவடிகள் தரவுகள் இங்கு உள்ளதா என்று பார்த்தபொழுது இங்குள்ள பஜனை கோவில் 1987ல் தான் கட்டப்பட்டுள்ளது. அதனை தவிர்த்து வைஷ்ணவத்தை குறிப்பிடும் தரவுகள் ஏதும் இல்லை. அனந்தநாதர் கோவில் என்னும் சமணர் கோவில் ஒன்று இங்குள்ளது. அந்த மூலவர் 1000 வருடம் பழமையானது. இக்கோவிலில் ஒரு பதமும் உள்ளது. 1976ல் இங்கு வந்தவர் ஒருவரின் பாதத்தை வைத்து வணங்குகின்றனர். சைவ சமயத்தில் திருவடிகளை வணங்கும் வழக்கம் இல்லையாதலால் சைவமாகக் கருதவும் இயலாது. எனவே இத்திருவடி பௌத்தத்துடன் தொடர்புடையதாக இருக்கலாம் என்று சொல்ல முடியம். இது தான் என்று அறிதிட்டு கூறமுடியாது
தருமராஜா திட்டு
இளமங்கலம் ஊரை சேர்ந்த மணிகண்டன் அளித்த தகவலின் பேரில், தர்மகர்த்தா சாமி என்ற பெயரில் தவ்வை சிற்பம் ஒரு வீட்டின் பின்புறம் வழிபாட்டில் உள்ளது. மாந்தன், மாந்தியுடன் காணப்படும் இச்சிற்பத்தில் தவ்வையின் தலைக்கு மேல் குடை காட்டப்பட்டுள்ளது. இச்சிற்ப அமைதியை வைத்து இதன் மூலம் 8ம் நுாற்றாண்டாக கருதலாம். செய்வாய் மற்றும் வெள்ளி கிழமைகளில் மஞ்சள், குங்குமம் வைத்து கோலமிட்டு பூஜை செய்து வணங்கி வருகின்றனர்.
பிரம்ம சாஸ்தா
இளமங்கலம் ஏரிக்கரையில் சுமார் 5 அடி உயரம் கொண்ட பிரமாண்ட பிரம்ம சாஸ்தா சிற்பம், எட்டு பட்டை கொண்ட சிதைந்த லிங்கத்தின் ஆவுடை மற்றும் தலையில்லா சிறிய சிலை ஒன்றும் உள்ளது.
ஏரியில் உள்ள சிலையை அம்மன் சிலை என்று தவறாக சொல்கின்றனர். 5 அடியில் உள்ள ஒரு பிரம்ம சாஸ்தா கையில் அக்கமாலை, வீரசங்கிலி அணிந்து காட்சிதருகிறார். இவர் முருகர். தான். கையில் அக்கமாலை என்கிற ஜபமாலை சாவடி போன்ற இரண்டு அணிகலன்கள் அணிந்துள்ளார். போர் வீரர் என்பதை காட்டும் சன்ன வீரம் என்ற வீர சங்கிலி. அவரது இடையில் உதர பந்தம் என்கிற பட்டையான (Blet) அணிந்துள்ளார். வலது அபய முத்திரையுடன் உள்ளது. இன்னொரு கை அவர் தன் ஆடை மீது வைத்துள்ளார்.
பிரம்ம சாஸ்தா அருகில் ஒரு ஆவுடை உள்ளது 3 அடி சுற்றளவு கொண்டது. இங்கு ஒரு மிகப்பெரிய சிவன் கோவில் ஏரிக்கரை ஓரம் இருந்து அழிந்துள்ளதை அறிய முடிகிறது. இதன் காலம் 9ம் நூற்றாண்டாகக் கருதலாம்.
ராஜ்பன்னீர் அவர்கள் பௌத்த சமயத்தை சார்ந்தது என கூற காரணங்கள்
01. கிடைத்த பெரும்பான்மையான தரவுகள் பௌத்தம் சமயம் சார்ந்ததாகத் தான் உள்ளது.
01. பௌத்த சமயத்தில் புத்தரின் பாதத்தை வணங்கும் முறை பரவலாகக் காணப்படுகிறது.
சமணத்தில் பாத வழிபாடுகள் இருந்த பொழுதிலும் இவ்வூரில் உள்ள அனந்தநாதர் கோவில் மிகவும் பிற்காலத்தவையே. அவ்வூருக்கு 1976ம் வருடம் வருகைபுரிந்த ஹரிராஜ் முனிகள் நினைவாகப் பாதம் வைத்து வழிபடுகின்றனர். எனவே சமணமாகக் கருதும் வாய்ப்பு குறைவே.
சைவ சமயத்தில் சக்கரம் மற்றும் திருவடிகளை வணங்கும் வழக்கம் இல்லையாதலால் சைவமாகக் கருதவும் இயலாது.
03.இவ்வூரில் 1987 ம் வருடத்தில் கட்டிய பஜனை கோவில் என்ற பெருமாள் கோவிலைத் தவிர வைணவம் சார்ந்த தரவுகள் சுற்று வட்டாரத்தில் இல்லை என்பதால் வைணவமாகக் கருத வாய்ப்பில்லை.
04. இவ்வூருக்கு மிக அருகாமையில் பள்ளிகுளம் , இந்திரசன்குப்பம் என்ற பௌத்த சொல்லாடல் உடைய ஊர்ப்பெயர்கள் உள்ளது.
05.பல்லவர்கள் காலத்தில் குறிப்பாக 7 மற்றும் 8 நூற்றாண்டில் காஞ்சியிலும் , நாகையிலும் பௌத்தம் சிறப்புற்று விளங்கிய ஏராளமான சான்றுகள் உள்ளது. குறிப்பாகச் சீன பயணி யுவான் சுவாங் காஞ்சிபுரம் பகுதியிலிருந்த பௌத்த விகார்களை பற்றி தனது குறிப்புகளில் குறிப்பிட்டுள்ளார்.
06. பௌத்தர்கள் வணிக தொடர்பு உடையவர்கள். காஞ்சிபுரத்தில் இருந்து சோழ நாட்டுக்குச் செல்லும் ராஜபாட்டை அமைந்த பகுதிகளில் ஆங்காங்கே பௌத்த தடையங்கள் உள்ளது குறிப்பிடத் தகுந்தது. இவ்வூரும் அந்த ராஜபாட்டையை ஒட்டி அமைந்த ஊராகும்.
07. இங்கே கிடைத்த தரவுகளை வைத்துப் பார்க்கையில் இரண்டாம் நந்திவர்மன் காலத்தில் கொடுக்கப்பட்டுள்ள இந்த தானமானது பௌத்த கோவிலுக்கு தந்த தானமாகவே கருத முடியும். இதன் மூலம் இரண்டாம் நந்திவர்மன் காலம் வரையிலும் பௌத்த சமயம் சிறப்புற்று விளங்கி இருந்துள்ளதை அறியமுடிகிறது.
விடுபட்ட தகவல்கள்
விழுக்கம் கிராமத்திலுள்ள உறவினர் ராமு என்பவருடன் 14/02/22 அன்று இளமங்கலம் சென்றோம். உச்சி பிள்ளையாா் கோயில், தருமராஜா திட்டு மற்றும் பிரம்ம சாஸ்தா இவை இளமங்கலம் கிராமத்தில் வெவ்வேறு இடங்களில் உள்ளது.
01. முனுசாமி அவர்களின் வீட்டின் பின்புறமுள்ள இடத்தில் உள்ள பல்லவர் காலத்து மூத்த தேவியை பார்த்தோம். அவர் அளித்த தகவல்கள். இவ்விடத்திற்கு தருமராஜா திட்டு என்று பெயர். இங்கு கிணறு வெட்டியபோது இச்சிலை கிடைத்தது. இக்கிணறு எப்பொழுது வெட்டப்பட்டது என்று தெரியவில்லை. தங்களின் சிறுவயது முதல் இச்சிலையை பார்த்துவருவதாகவும் சொல்கின்றனர். கிணறு அருகே வைத்து இன்றும் வணங்கி வந்துகொண்டு இருக்கின்றனர்.
02. ஏரிக்கரை அருகில் உள்ள திரு சேகர் என்பவரின் வயலில் இரு சிலைகளை பார்த்தோம். இரண்டும் நின்ற நிலையில் உள்ள சிலைகள். ஒன்று சிறிய சிலை மற்றொன்று பெரிய சிலை. சிறிய சிலை தலையின்றி இருந்தது. ஒரு கையுமில்லை. கழுத்து பகுதியில் இருந்து இடுப்பு பகுதி வரை (ஒரு அடி உயரமுள்ள சிலை) மண்ணிற்கு மேல் உள்ளது. கால் மற்றும் பிற பகுதி மண்ணில் புதைந்துள்ளது.