இயல் 4 தங்க திட்டத்திற்கு வழிகோலுதல்
உலகில் உள்ள நாடுகளை நாணய முறை அடிப்படையில் மூன்று வகையாக பிரிக்கலாம்.
- ஒன்று தங்க நாணயங்களை பயன்படுத்தும் நாடுகள்
- இரண்டாவது வெள்ளி நாணயங்களை பயன்படுத்தும் நாடுகள்
- மூன்றாவது தங்கம் வெள்ளி ஆகிய இரண்டு நாணயங்களை பயன்படுத்தும் நாடுகள்.
தங்க நாணயங்களை பயன்படுத்தும் நாடுகள்: தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்வதால் அந்த நாடுகளின் வாங்கும் திறன் (Purchasing Power) அதிகரிக்கிறது. அதாவது அந்த நாட்டின் நாணயத்தின் மதிப்பு உயர்கிறது. எனவே அவர்கள் தங்க நாணயங்களை விரும்புகின்றனர்.
வெள்ளி நாணயங்களை பயன்படுத்தும் நாடுகள்: தங்கத்திற்கு தலைகீழானது வெள்ளி. வெள்ளியின் விலை தொடர்ந்து வீழ்வதால் அந்த நாடுகளின் வாங்கும் திறன் குறைகிறது. அதாவது அந்த நாட்டின் நாணயத்தின் மதிப்பு குறைகிறது. எனவே வெள்ளியை பயன்படுத்தும் நாடுகள் பல தங்க நாணயத்தை பயன்படுத்த முடிவு செய்தது. இதனால் தங்கத்தின் விலை மேலும் உயர்ந்தது.
தேவையும் அளிப்பும் (Demand and Supply)
விலை என்பது தேவை மற்றும் அளிப்பு இந்த இரண்டையும் பொறுத்து அமையும். பொருளின் தேவை அதிகமாக இருக்கும் பொழுது அதன் அளிப்பு குறைவாக இருந்தால் அந்த பொருளின் விலை அதிகரிக்கும்.
அளிப்பு அதிகமாக இருக்கும் பொழுது அதன் தேவை குறைவாக இருந்தால் அந்த பொருளின் விலை வீழ்ச்சியடையும்.
அளிப்பும் தேவையம் சமமாக இருக்கும் பொழுது விலையில் பெரிய மாற்றம் ஏதும் இருக்காதுவெள்ளியை பயன்படுத்தும் நாடுகள் தங்கத்தை இறக்குமதி செய்ய முந்தியடித்தது. அதற்க்கு இரண்டு கரணங்கள் இருந்தது
01. தங்கத்தின் அளிப்பு/இருப்பு (Supply) குறைவாக (limited) இருக்கிறது ஆனால் தேவை அதிகரித்து கொண்டே இருந்தது.
02. வெள்ளியின் மதிப்பு வீழ்ச்சியடைவதால் அரசின் செலவு அதிகரிக்கும். போர், பஞ்சம் மற்றும் வறட்சி காலத்தில் ஏற்படும் இழப்புகள் எல்லாம் தற்காலிகமானது, அதனை சரிசெய்து கொள்ளமுடியும். ஆனால் நாணய வீழ்ச்சியில் ஏற்படும் விளைவுகள் கடுமையாக இருக்கும்.உலகில் உள்ள முக்கிய நாடுகள் தங்க திட்டத்தை ஏற்றுக்கொண்டது. ஆனால் இந்தியா தங்க திட்டத்திற்கு செல்லவில்லை ஏன்னென்றால் இரட்டை நாணய முறைதான் தீர்வு என்று கருதியது. மேலும் இரட்டை நாணய முறையை கொண்டு வர அமைக்கப்பட்ட பன்னாட்டு மாநாட்டை நம்பி இருந்தது. நம்பி ஏமாந்தது.
தங்கம் வெள்ளி ஆகிய இரண்டு நாணயங்களை பயன்படுத்தும் நாடுகள்: இந்த பிரச்சனைக்கு தீர்வு காண மூன்று பன்னாட்டு மாநாடுகள் நடந்தது.
பண பயன்பாட்டிற்கு தேவையான நாணய அளவு, உலோக உற்பத்தி அளவு இவற்றினை சார்ந்து தான் கிரோசம் விதி செயல்படுகிறது எனவே இரட்டை நாணய முறை ஆதரவாளர்களின் கருத்து வெறும் கண் துடைப்பு. இரட்டை நாணய முறை ஆதரவாளர்களுக்கு இரு வழிகள் மட்டுமே இருந்தது.
- முதல் மாநாடு 1878ல் நடைபெற்றது.
- இரண்டாவது மாநாடு மூன்று ஆண்டுகள் கழித்து 1881ல் நடைபெற்றது.
- மூன்றாவது மாநாடு 11 ஆண்டுகள் கழித்து 1892ல் நடைபெற்றது.
இந்த மூன்று பன்னாட்டு நாணய முறை மாநாட்டால் எந்த பயனும் விளையவில்லை. அவை வெறும் வெட்டி பேச்சாக இருந்தது. எந்த மாற்று திட்டமும் அவர்கள் முன்வைக்கவில்லை என்றுரைக்கிறார் பாபா சாகிப். ஏன் அவர்களால் எந்த திட்டமும் முன்வைக்க முடியவில்லை என்றால், வெள்ளியின் உற்பத்தி விகிதத்தில் வேறுபாடு காணப்பட்டாலும் அதன் பரிமாற்று விகிதம் (Exchange Rate)ல் வேறுபாடு அதிகம் இல்லை. எனவே அவர்களால் எந்த திட்டமும் முன்வைக்க முடியவில்லை என்றுரைக்கிறார் பாபா சாகிப்.
இரட்டை நாணய முறை ஆதரவாளர்களின் கருத்து என்னவாக இருந்தது என்றால் வெள்ளி விகிதத்தில் ஏற்படும் உயர்வும் தாழ்வும் வாங்கி இருப்பை (Reserve) தான் பாதிக்கும் அது பொது மக்களை பாதிக்காது என்று. பாபா சாகிப் இதனை வெறும் கண்துடைப்பு என்றுரைக்கிறார். கிரோசம் விதி மூலம் விளக்குகிறார்.
- ஒன்று நிலையான மாற்று விகிதம் Fixed Exchange Ratio
- மற்றோன்று இரட்டை உலோக முறை Double Standard.
நிலையான மாற்று விகிதம் தேர்ந்து எடுத்தால் இரட்டை நாணய முறை பயன்பாடு இல்லாமல் போய்விடும். இரட்டை உலோக முறை செயல்படுத்துவது என்பது இயலாத காரியம்.
கிரோசம் விதி
ஹென்றி டுனிங் மெகிலாட் (Henry Dunning Macleod) என்பவர் தான் கிரோசம் விதி (Gresham's Law) என்று பெயரிட்டார். 16 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த சர் தாமஸ் கிரேஸ்ஹாம் (Sir Thomas Gresham) என்பவரின் நாணயவில் குறித்த கருத்தை தான் Gresham's Law என்று பெயரிட்டார். இது இரண்டு நாணயங்களை பயன்படுத்தும் நாடுகளுக்கான விதி (Double Standard).
கிரோசம் விதி என்பது ஒரு கெட்ட நாணயம் நல்ல நாணயத்தை அழித்து விடும் என்பது தான் அல்லது மதிப்பற்ற நாணயம் மதிப்பு மிக்க நாணயத்தை அழித்து விடும் என்பது தான். (Bad money drives out good money).
கிரோசம் விதி என்பது நமக்கு புதிதல்ல நம் தாய் தந்தை, தாத்தா பட்டி, மற்றும் முன்னோர்கள் குறிப்பிடுவது தான், அவனோடு சேராத அவன் ஒழுங்கீனமாக இருக்கிறான். அவனோடு நட்பு கொண்டால் நீயும் ஒழுக்கமில்லாதனவா மாறிவிடுவாய் என்று. இந்த விதியை மோடி அரசு கொண்டுவந்த GSTல் கூட காணலாம்.
01. ஒருவர் வரி விதிப்புகுள்ளான ஒரு பொருளை (Taxable Supply) வாங்கும் பொழுது, GST வசூலிக்கப்படுகிறது. ஒருவர் வரி விலக்கு அளிக்கப்பட்ட ஒரு பொருளை (Exempted Supply) வாங்கும் பொழுது GST வசூலிக்கப்படுவதில்லை. ஒருவர் வரி விதிப்புக்குளான பொருளையும் வரி விலக்கு அளிக்கப்பட்ட பொருளையும் வாங்கும் பொழுது வரி விலக்கு பெற்ற பொருளும் சேர்த்து GST வசூலிக்கப்படுகிறது.
01. ஒருவர் 5% GST பொருளை வாங்கும் பொழுது 5% GST வசூலிக்கப்படுகிறது. ஒருவர் 12% GST பொருளை வாங்கும் பொழுது 12% GST வசூலிக்கப்படுகிறது. ஒருவர் 5% மற்றும் 12% பொருளை வாங்கும் பொழுது 12% GST வசூலிக்கப்படுகிறது. (Refer Mixed Supply Section 8(b))மதிப்பிடுகளை மூன்று வகையாக பிரிக்கலாம்.
01. உண்மையான மதிப்பு (Real value). சந்தை விலையோடு வேறுபடாமல் இருக்கும் விலைக்கு உண்மையான மதிப்பு (Real value)
02. அதிகமாக மதிப்பிடப்பட்டவை (Over Value).உண்மையான மதிப்புவை விட சந்தை மதிப்பு (Market Value) அதிமாக இருந்தால் அது அதிகமாக மதிப்பிடப்பட்டவை (Over Value)
03.குறைவாக மதிப்பிடப்பட்டவை (Under value).உண்மையான மதிப்புவை விட சந்தை மதிப்பு (Market Value) குறைவாக இருந்தால் குறைவாக மதிப்பிடப்பட்டவை (Under value)இந்த Over valued நாணயத்தை கெட்ட நாணயம் என்றும் Under valued நாணயத்தை நல்ல நாணயம் என்றும் அழைக்கப்படுகிறது. ஒருவரிடம் overvalued coin இருந்தால் அதனை அவர் வைத்து இருக்க விரும்புவதில்லை. அவருக்கு under valued coin கிடைக்குமானால் முதலில் அதனை வாங்கி வைத்துக்கொள்வார். பயன்பாட்டிற்கு Money Circulationக்கு அனுப்பாமல் பதுக்கி வைத்துக்கொள்வார். எனவே ஒவ்வொருவரும் இதை போன்று செய்வதால் under valued coin என்று அழைக்கப்படும் நல்ல நாணயம் புழக்கத்தில் இருந்து மறைந்து போய்விடும்.
இரு நாணய முறை கைவிடல்
இரு நாணயங்களை பயன்படுத்தும் நாட்டில் தங்க நாணயம் அதிக அளவு பயன்பாட்டிற்கு வந்தால் பாதிப்பு ஏதுமில்லை. ஆனால் நடந்தது என்னவென்றால் வெள்ளி நாணய பயன்பாடு அதிகரித்தது. இதனால் அச்சறுபட்ட பெருநாடுகள் இரு உலோக நாணய முறையை செயல்படுத்தாமல் விட்டது.
இங்கிலாந்து மட்டும் இரு உலோக நாணய முறையை கடைபிடிக்க முன்வந்திருக்குமானால் ஏனைய நாடுகள் செம்மறி ஆடுகளை போன்று அதனை தொடர்ந்து இருக்கும். எனவே இரு நாணய முறை கைவிடபட வேண்டியதாக இருந்தது. இங்கிலாந்தின் பிடிவாதம் காரணமாக இரு உலோக நாணய திட்டம் நிறுவ இயலாமல் போனது. இரட்டை உலோக முறை தான் தீர்வு என்று நம்பியிருந்த இந்தியாவின் நம்பிக்கைக்கு பலத்த அடிவிழுந்தது. மேலும் 1893 ஆம் ஆண்டு வெள்ளியின் மதிப்பில் 35% அளவுக்கு குறைந்து விட்டது. இந்தியாவிற்கு இது பெரும் அடியாக இருந்தது.
இந்தியாவிற்கு தங்க திட்டத்தை கொண்டுவருதல்
(I) 1872 Sir Richard Temple
1872 இந்தியாவின் நிதியமைசராக இருந்த Sir Richard Temple இந்தியாவிற்கு தங்கத்தை கொண்டுவருவதற்க்கான திட்டத்தை அளித்தார். இவருக்கு முன்பிருந்த அமைச்சர்கள் இந்தியாவிற்கு பிரிட்டன் சவரனை (பிரிட்டன் நாணயத்தை) இந்திய நாணய முறையாக கொண்டு வர முயன்றனர். ஆனால் சர் டெம்பிள் இந்தியாவுக்கு என்று தனி தங்க நாணயம் மேகரா என்னும் பெயரில் வேண்டும் என்றார். ஏனெனில் இந்தியா நெடுங்காலமாக மெகார் என்னும் தங்க நாணயத்தையே பயன்படுத்தி வந்தது. அதனை சரியாக மதிப்பீடும் வந்தனர். ஆனால் பிரித்தானிய சவரன் நாணயத்தை இந்தியருக்கு மதிப்பிட தெரியாது.
(II) 1876 Colonel JT Smith Plane கர்னல் சுமித் திட்டம்சர் டெம்பிள் திட்டத்திற்கு பிறகு உலகம் முழுவதும் ஒரே நாணய முறை வேண்டும் என்ற கோரிக்கைக்கு ஆதரவு இல்லை. 10 ரூபாய் வெள்ளி நாணயம் 120 குண்டுமணி (கிராம் சவரனுக்கு) 1/12 கழிவு நீங்கி 110 குண்டுமணி கிராம் சவரனுக்கு சமம் என்ற விகிதத்தை கொண்டுவந்தார். இவரது திட்டம் வெள்ளி நாணயம் வீழ்ச்சியடைவதற்கு முன்பு அளிக்கப்பட்ட திட்டம். இந்த திட்டத்தை செயல்படுத்தவில்லை
1876ல் வெள்ளியின் மதிப்பு திடீர் வீழ்ச்சியடைந்தது. அப்பொழுது இந்திய நாணய சாலை தலைவராக இருந்தவர் (Mint Master) கர்னல் சுமித் அவர்கள். கர்னல் சுமித் அவர்களின் திட்டம் வெள்ளியின் வீழ்ச்சியின் போது பெருமளவு ஆதரவு கிடைத்தது.
அவரது திட்டம் என்பது செயற்கையாக (Artificial) இந்தியாவின் ரூபாயை அதிக மதிப்பு உடையதாக்குவது. (Over value than the real value of the silver reserve). புழக்கத்தில் ஒரு தங்க நாணயம் கூட இல்லாமல், தங்கத்தின் இருப்பின் அடிப்படையில் காகித நாணயம் மற்றும் வெள்ளி நாணயத்தை வெளிடுதல் (Transition stage). தங்க நாணயங்களை வார்க்க முடியும் என்ற நிலை வரும் வரை வெள்ளி நாணயத்தையே பயன்படுத்த வேண்டும். அதன் பிறகு வெள்ளி நாணயத்தை நிறுத்த வேண்டும். தங்க நாணய சாலையை திறக்க வேண்டும். அவரது திட்டம் என்பது வெள்ளி நாணயத்தை நிறுத்தாமல் தங்க நாணயத்தை நிறுவுதல்.
1877- Sir William Muir சர் வில்லியம் மூர்இந்திய வணிகத்தின் மூலம் கிடைக்கும் தங்கத்தை கருத்தில் கொண்டு இந்த திட்டத்தை அளித்தார். இந்தியாவின் உள்நாட்டு வணிகம் (Domestic Trade) தொடர்ந்து அதிகரித்து வந்தது. 38 ஆண்டுகளில் ஆண்டு ஒன்றுக்கு சராசரி 50 Lakhs ஸ்டெர்லிங் பவுண்ட் அளவுக்கு பெருகியது. அயல் நாட்டு வணிகத்தில் (Foreign Trade) 20 ஆண்டுகளில் ஆண்டு ஒன்றுக்கு சராசரி 40 Lakhs ஸ்டெர்லிங் பவுண்ட் அளவுக்கு பெருகியது. எனவே நாணய புழக்கம் அதிகரித்தது. இந்த இரண்டவது திட்டத்தையும் செயல்படுத்தவில்லை
சர் வில்லியம் மூர் கர்னல் சுமித் திட்டத்தை ஏற்கவில்லை. வெள்ளி நாணய உற்பத்தியை நிறுத்துவதன் மூலம் அந்த நாணயம் சட்ட பூர்வமான தகுதியை இழக்கும். புதிய நாணயத்தை புகுத்துவதன் மூலம் ஏற்கனவே இருக்கும் நாணயம் அதன் சட்ட பூர்வ தகுதியை இழக்கும் என்று இந்த திட்டத்தை செயல்படுத்தவில்லை .
இது தான் உண்மையான கரணம் என்றால் இந்த பரிந்துரையை உள்ளடக்கிய கர்னல் சுமித் திட்டத்தை ஏன் ஏற்கவில்லை என்ற வினாவை எழுப்புகிறார் பாபா சாகிப். உண்மையான கரணம் என்னவென்றால் நாணய குழப்பத்திற்கு வேறு கரணம் இருக்கிறது என்று அரசு கருதியது. சர் வில்லியம் மூர்க்கு சிந்தனை வறண்டு இருந்தது என்றுரைக்கிறார் பாபா சாகிப். மேலும் நாணய சீர்திருத்தத்திற்கு பரிந்துரைப்போருக்கு அரசு எச்சரிகை விட்டது. அரசின் நிலைப்பாடு என்னவென்றால் தங்கத்தின் மதிப்பு உயர்வதால், தங்க திட்டம் உள்ள நாடுகளே சீர்திருத்தம் செய்யவேண்டும். இந்தியா வெள்ளி திட்டத்தை கொண்டது, எனவே நாணய சீர்திருத்தம் ஏதும் செய்யவேண்டியதில்லை என்று கருதியது.
1878ல் மீண்டும் இந்திய அரசு செயல் படுத்த விரும்பிய திட்டத்தை அறிவித்ததுசெலவாணியில் சீர்திருத்தம் செய்யாமல் இருப்பது தவறு என்றுரைக்கிறார் பாபா சாகிப். போரில் ஒருவரின் வலிமை குறைவு மற்றவரின் வலிமையாக இருக்கும். ஆனால் செலாவணி என்பது அது ஒரு நாட்டின் வீழ்ச்சி. எனவே போதுமான நடவடிக்கை எடுக்காமல் இருக்கும் இந்தியாவை பேரா. நிக்கல்சன் கூறுகிறார் நான் இருக்கும் அறையில் துளைகள் ஏதும் இல்லை. கப்பல் முழுவ வாய்ப்பு இல்லை என்று நிம்மதியாக உறங்க செல்வவனோடு தான் ஒப்பிட முடியும்.
01. முதன் முதலில் வெள்ளி நாணய உற்பத்தியை குறைக்கலாம் என்று முடிவெடுத்தது
02. ரூபாயின் மதிப்புக்கு ஈடாத் தங்கமாக பரிமாற்றம் செய்தலை கட்டுப்படுத்தும் அதிகாரத்தை எடுத்துக்கொண்டது
03. தங்கம் வெள்ளி இவற்றின் ஏற்றம் இறக்கம் இவற்றை பொருட்படுத்தாமல் ரூபாய் ஸ்டெர்லிங் நாணயங்களுக்கு இடையே நிலையான மாற்று வீதத்தை (Fixed Exchange Ratio) நிறுவியது.
04. ரூபாயை இரண்டு ஷில்லிங்க்கு சமமாக புழங்கவிட்டு, சிறுபகுதி தங்க நாணயங்களை புழக்கத்தில் விட்டு, தங்க திட்டத்தை செயல்படுத்து என்று முடிவு செய்தது.
சுமித் அவர்களின் திட்டம் எளிமை, சிக்கனம், பாதுகாப்பு ஆகிய நலன்களை அடங்கியிருந்தது. எனினும் முழுமையான வடிவில் புகுத்தபட்டிருந்தால் தோல்வியை அடைந்திருப்போம் என்றுரைக்கிறார் பாபா சாகிப். ஏன் என்றால் உலகில் தங்கத்தின் இருப்பு குறைந்து கொண்டு வருகிறது. குறைந்து கொண்டு வரும் தங்கத்தின் இருப்பில் இருந்து இந்தியாவிற்கு தேவையான தங்கத்தை பெறமுடியாது என்பதால் சுமித் அவர்களின் திட்டம் புகுத்தபட்டிருந்தால் தோல்வியை அடைந்திருப்போம் என்றுரைக்கிறார்.
இந்தியாவின் தேக்க நிலைஅரசின் இந்த திட்டம் (Sir William Muir) வெற்றி பெற வாய்ப்புகள் உள்ளது என்றுரைக்கிறார். ஆனால் இந்த திட்டத்தை கூட செயல்படுத்தவில்லை. குழு உறுப்பினர்கள் இந்த திட்ட முன்மொழிவுகளை செயற்கையாக தூக்கி நிறுத்த அரசு முனைவதாக கருதி குழு உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். செயற்கை நாணய கட்டுப்பாட்டு முறைக்கு பதிலாக இயற்க்கை நாணய கட்டுப்பாட்டை குழு ஏற்றது என்று குழு கருதியது. இந்த வெள்ளை குப்பையை இந்தியா ஏற்க மறுத்து விட்டது.
இரு உலோக நாணய முறை வெற்றியடையும் என்ற நம்பிக்கையில் இந்தியா இருந்தது. இரட்டை நாணய முறைதான் வரும் என்று நம்பி பல உறுதிமொழிகளை வாரிவழங்கியது இந்தியா. பன்னாட்டு நாணய முறை மாநாடு தோல்வியில் முடிந்தது. எனவே இந்தியா தங்க திட்டத்தை செயல்படுத்துவது என்று உறுதியாய் நின்றது.
வெள்ளி திட்டத்தையே பின்பற்றுமாறு இந்தியாவை வலிந்து பணியவைத்தது. 1893 ஆம் ஆண்டு வெள்ளியின் மதிப்பில் 35% அளவுக்கு குறைந்து விட்டது. நாட்டில் ஏராளமான அளவில் ரூபாய் நாணயங்கள் பழக்கத்தில் விட்டமையால் சுமித் திட்டம் வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் கூட மங்கிவிட்டது. 1878 ஆண்டிலே அத்திட்டம் நடைமுறை படுத்தபட்டியிருந்தால் புதிய நாணயங்கள் தங்கத்தில் உற்பத்தியாகிருந்தால் 1893 (15 வருடத்தில்) தாங்க நாணயங்கள் பெருமளவு பயன்பாட்டிற்கு வந்திருக்குமானால் தங்க திட்டத்தை செயல்படுத்துவது எளிமையாக இருக்கும். தங்க திட்டத்தை ஏற்கனவே கொண்டுள்ள நாடுகளுக்கு இணையாக நிலைப்பாட்டை பெற்று இருக்க முடியும். மாறாக 1893 ஏராளமான வெள்ளி நாணயங்களை புழக்கத்திற்கு வரவிடப்பட்டதால் இனி வெள்ளி நாணய உற்பத்தியை நிறுத்தி ருபாய் நிலைப்பாட்டுக்கு கொண்டுவர பல பத்தாண்டுகள் தேவைப்படும்.
மீண்டும் கர்னல் சுமித் திட்டம் ஹர்செல் குழுஇந்த தேக்க நிலையில் இருந்து இந்தியா மீள கிட்ட தட்ட ஆறு திட்டங்கள் அளிக்கப்பட்டது. இந்த திட்டம் எதையும் இந்தியா ஏற்கவில்லை. ஆனால் இந்த ஆறு திட்டங்களின் மைய நோக்கத்தை ஏற்றது. அதாவது ஏற்கனவே பயன்பாட்டில் உள்ள ருபாய் நாணயத்திற்கு பதிலாக தங்கத்தை பயன்படுத்தாமல் இந்தியவில் தங்கத்தை கொண்டுவருதல்.
எனவே கர்னல் சுமித் அவர்களின் திட்டத்தை செயல்படுத்த முடிவு செய்தது. வெள்ளி உற்பத்தியை நிறுத்தபடுவதற்கு முன் தங்க வெள்ளி உலோகங்கத்தின் மதிப்பு விகித அடிப்படையில் நாணய மாற்று விகிதம் நிறுவப்படவேண்டும். இந்த விகிதத்தை நிர்ணயம் செய்த பிறகு நாணய சாலைகள் மீண்டும் திறக்கப்பட வேண்டும். தங்க நாணய உற்பத்தி தொடங்கவேண்டும். தொடர்ந்து எல்லா தொகைக்கும் தங்க நாணயங்கள் சட்ட பூர்வமாக நிறுவப்படவேண்டும். இந்த முன்மொழிகள் ஆய்வுக்கு வைக்கப்பட்டது.ஹர்செல் குழு
இக்குழு இத்திட்டத்திற்கு திருத்தம் ஒன்றையும் கூறியது. போதுமக்களிடையே வழங்குவதற்கான வெள்ளி காசு உற்பத்தி தான் நிறுத்தப்படுகிறது. அரசு பரிமாற்றத்தில் வெள்ளி நாணய உற்பத்தி தொடரும். இம்மாற்று விகிதம் 1 ரூபாய்க்கு 1 ஷில்லிங் 4 பொன்னாக இருக்கலாம். 1893 ஜூன் 26 ல் செயல்பட்டது. இந்திய நாணய வரலாற்றில் மிக முக்கிய கட்டமாக இருந்தது.
1893 சட்டம் (VIII)
01) 1870 ஆம் ஆண்டு நாணய சட்டத்தை இரத்து செய்தது. 02) நாணய சாலைக்கு வரும் வெள்ளியணைத்தும் நாணயங்களாக வார்க்க நாணயசாலை அதிகாரிகளை பணித்தது. 03) பொது மக்கள் நாணய வற்புக்காக கொண்டுவரும் தங்கம் முழுவதையும் நாணய வார்ப்புக்காக பயன்படுத்த இச்சட்டம் வகைசெய்தது 04). 1882 காகித நாணய சட்டத்தில் சில பிரிவுகள் இரத்து செய்யப்பட்டது.
04.01-வெள்ளி நாணயத்திர்ற்கு பதிலாக காகித நாணயம் அச்சிட வேண்டும் என்ற சட்ட பிரிவு இரத்து செய்தது.
04.02 மொத்த காகித நாணய இருப்பில் 25% தங்க இருப்பு தேவை என வரையறுத்தது.
வங்கிகளில் பொது கடன் செலுத்தல்களுக்கு ஒரு சவரன் அரை சவரன் தங்க நாணயங்களை ஏற்றுக்கொள்ளும். ஒரு சவரன் 15 ரூபாய் அரை சவரன் 7 ரூபாய் 8 அனா.
கருவுலத்திற்கு அதிக அளவில் தங்கம் வந்தால், அதற்க்கு ரூபாய் நோட்டுகளை தரவேண்டும் ஒரு சவரனுக்கு 15 ரூபாய் என்று நாணய சாலையில் கொடுக்கப்படும் தங்க நாணயம் அல்லது தங்க கட்டிகளுக்கு தங்க சாலை அதிகாரிகள் உடமையாளர்க்கு ஒரு பற்றுசீட்டு தருவார். எவ்வளவு ருபாய் நோட்டுகளை தரலாம் என்ற சான்றிதழை வழங்குவார். இந்த சான்றிதழை கல்கத்தா, கருவுலத்தில் ஒரு குறிப்பிட்ட காலம் கழித்து காட்டி உரிய தொகையை பெற்றுக்கொள்ளலாம்.
இந்த திட்டம் வெற்றி பெரும் முன்பே அதனை குழி தோண்டி புதைக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது. இந்திய மீண்டும் பாலி காடாக ஆகா மறுத்துவிட்டது. தங்க திட்டத்திற்கு மாறிவிடுவது என்று இந்தியா உறுதியாய் இருந்தது.
மாற்று திட்டம்
இந்தியாவின் திட்டம் தங்க நாணய உற்பத்தி மூலம் தங்க நாணய முறையை நிறுவுதல். இந்தியாவிற்கு தங்க நாணய உற்பத்தியின்றி தங்க திட்டத்தை நிறுவுதல் என்னும் மாற்று திட்டம் அளிக்கப்பட்டது. ஒன்று திரு ப்ரோபின் மற்றோன்று திரு லிண்ட்சே.