செவ்வாய், மார்ச் 18, 2014

தியாகனூர் புத்தர் சிலைகள்

அமைவிடம்
தியாகனூர் கிராமம் (ஆத்தூர் அருகில்)
தலைவாசல் வட்டம்
சேலம் மாவட்டம்.

தியாகனூரில் இரு புத்தர் சிலைகள் உள்ளது.
01. தியாகனூர் பேருந்து நிறுத்தத்தில் உள்ள புத்தர் சிலை (மேலே குறிப்பிட்டுள்ள சிலை)
02. திறந்த வெளியில் உள்ள புத்தர் சிலை

தியாகனூர் பெயர் காரணம் 
இப்புத்தரை தியாகன் என்றே அப்பகுதியில் வாழ்ந்த மக்கள் குறிப்பிட்டு வந்தனர். அதற்கு காரணம் புத்தர் பெருமானின் துறவு வாழ்க்கை. ஞானம் பெறுவதற்காக தம்முடைய மனைவி, மக்கள், உறவினர்கள், அரச வாழ்க்கை ஆகிய அனைத்தையும் தியாகம் செய்ததால் தியாகன் என அழைக்கப்பட்டார். எனவே இவ்வூர் தியாகன் + ஊர் = தியகனூர் எனப் பெயர் பெற்றது.
01. தியாகனூர் பேருந்து நிறுத்தத்தில் உள்ள புத்தர் சிலை

சிலையமைப்பு 
கை - சிந்தனை கை, கால் - அரை தாமரை அமர்வு, ஞான முடி தீப்பிழம்பாக இல்லாமல் ஞான முடி சற்று புடைப்புடன் இருக்கிறது, தலைமுடி - சுருள் சுருளான முடிகள், கழுத்து கோடுகள் -மூன்று, உயரம் 8 அடி, அகலம் 4 ½ அடி நூற்றாண்டு 5 ஆம் நூற்றாண்டு
இச்சிலையின் மூக்கு மற்றும் வலது கையில் உள்ள பெருவிரல் சிதைவுற்று காணப்படுகிறது. இப்புத்தர் சிலை புகைபடத்தை தமிழ் ஆராட்சி பேரறிஞர் திரு மயிலை சினி வேங்கடசாமி தமிழும் பௌத்தமும் என்ற நூலில் குறிபிட்டுள்ளார். பக்கம் 325
இச்சிலை கோவிலில் உள்ளது. இக்கோயிலின் முன் பெரிய அரசமரம் உள்ளது. இக்கோவில் 100 வருடத்திற்கு முன்பாக அவ்வூர் மக்களால் கட்டப்பட்டது. இது 30 அடி நீளமும் 12 அடி அகலமும் கொண்டது. கோயிலின் மேலுள்ள கோபுரத்தில் நான்கு உருவங்கள் பொறிக்கப்பட்டுள்ளது.
கிழக்கு (அ) கோயிலின் முன் பக்கத்தில்: புத்தர் உருவம்
தெற்கு : கண்ணனின் உருவம்
மேற்கு : திருமாலின் நரசிம்ம அவதாரம்
வடக்கு :கிருஷ்ண அவதாரம்
புத்தர் திருமாலின் அவதாரம் என்ற தவறான கருத்தினால் கண்ணன், நரசிம்மன் மற்றும் கிருஷ்ணன் போன்ற உருவங்கள் பொறிக்கப்பட்டுள்ளது
02. திறந்த வெளியில் உள்ள சிலை 
தியாகனூரின் தென்பகுதியில் உள்ள வயல்பகுதியில் உள்ள வேப்பமரத்தடியில் ஒரு புத்தர் சிலை உள்ளது. 
சிலையமைப்பு 
கை - சிந்தனை கை, கால் - அரை தாமரை அமர்வு, ஞான முடி தீப்பிழம்பாக தலைமுடி சுருள் சுருளான முடிகள், கழுத்து கோடுகள் மூன்று, பீடத்தின் உயரம் மிக சிறியது, உயரம் 5 அடி, அகலம் 3 அடி, நூற்றாண்டு 5 ஆம் நூற்றாண்டு ~*~மூக்கு சிதைந்து காணப்படுகிறது
நிலத்தின் உரிமையாளர் இச்சிலையை பாதிக்காத வண்ணம், இச்சிலையை சுற்றி உள்ள நிலத்தை விவசாயத்திற்கு பயன்படுத்தி வந்து இருக்கின்றார். விவசாயி கே துரைசாமி புத்த விகார் அமைக்க 1955 இல் 20 சென்ட் நிலம் தனமாக வழங்கினார். 
பெங்களூரில் உள்ள பௌத்த பிக்குகள் இக்கிராம மக்களுக்கு முறையான வழிமுறையை பயிற்சி அளிக்க விரும்பினர். இதற்கு ஆகும் செலவினங்கள் அனைத்தும் அவர்கள் ஏற்பதாக உறுதியளித்தும் மக்கள் விருப்பம் இல்லாததால் தமக்கு தெரிந்த முறையில் இன்றும் வணங்கி வருகின்றனர்.

பல நூற்றாண்டுகளாக திறந்த வெளியில் இருந்த இச்சிலைக்கு 50 இலட்சம் ரூபாயில் ஒரு தியான மண்டபம் கட்டப்பட்டுள்ளது. இத்தியான மண்டபத்தை சேலம் மாவட்ட ஆட்சியாளர் மகரபூஷணம் போதி கன்று ஒன்றை நட்டு 28 ஜூன் 2013ல் திறந்து வைத்தார்.100 பேர் அமரும் அளவிற்கு இத்தியான மண்டபம் உள்ளது. - தினமலர் நாளிதழ் 28/06/2013

தியாகனூர் பேருந்து நிறுத்தத்தில் உள்ள புத்தர் சிலைக்கான காணொளி
http://www.youtube.com/watch?v=MsJXY8D7uEY&list=UUppaK1uqALtjRqhta8L0EKw
http://www.youtube.com/watch?v=-Hba3p2Pd_c&list=UUppaK1uqALtjRqhta8L0EKw

தியாகனூர் திறந்த வெளியில் இருந்த புத்தர் சிலைக்கான காணொளி
http://www.youtube.com/watch?v=ovn2BfjBq_8&list=UUppaK1uqALtjRqhta8L0EKw
http://www.youtube.com/watch?v=t9ctlkVo8Xk

மேலும் விரிவாக படிக்க - தியாகனூர் புத்தர் சிலை ஓர் ஆய்வு என்ற நூல் இணைப்பை பார்க்கவும். copy and past the following links
https://drive.google.com/file/d/0B2WMRIF-1cD3ZkRsNUVYNW9INHc/view?usp=sharing