காஞ்சீவரம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
காஞ்சீவரம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், பிப்ரவரி 20, 2025

உலக திரிபிடகம் ஓதும் மாநிகழ்வு

International Tipitaka Chanting in South India at Conjeevaram

உலக திரிபிடகம் உச்சரிப்பு -காஞ்சீவரம்

Tipitaka Saddhamma Sajjhayana 


உலக திரிபிடகம் பாடும் மாநிகழ்வு ஒவ்வொரு ஆண்டும் ITCC நடத்தி வருகிறது. பெரும்பாலும் பகவான் புத்தருடன் நெருங்கிய தொடர்புடைய இடங்களில் லும்பினி, சாரநாத், புத்த கயா, குஷிநகர் திரிபிடகம் பாடுதல் நிகழவும். 

ITCC இந்தியா, பங்களாதேஷ், கம்போடியா, லாவோஸ், மியான்மர், தாய்லாந்து ஆகிய நாடுகளுடன் 10/05/2008ஆம் தேதி கையொப்பமிட்டது. 18வது உலக திரிபிடகம் உச்சரிப்பு புத்த கயாவில் 02/12/2023 to 12/12/2023 நடைபெற்றது. 19வது உலக திரிபிடகம் உச்சரிப்பு புத்த கயாவில் 02/12/2024 to 12/12/2024 நடைபெற்றது. அதன் பிறகு தென்னிந்தியாவில் நடத்த திட்டமிட்டது.  

ITCC 06/02/2025 முதல் 18/02/2025 வரை மூன்று மாநிலங்களில் (தெலுங்கானா, கர்நாடக மற்றும் தமிழ் நாடு) புனித திபிடக சத்தம்மா சஜ்ஜாயனத்தை ஏற்பாடு செய்து நடத்தியது. தெலுங்கானாவில் 07/02/2025 முதல் 10/02/2025 வரை நான்கு நாட்கள் உலக திரிபிடகம் பாடும் மாநிகழ்வு நடந்தது. பின்னர் கர்நாடகாவில் 11/02/2025 முதல்  16/02/2025 வரை  ஆறு நாட்கள் உலக திரிபிடகம் பாடும் மாநிகழ்வு நடந்தது. தமிழகத்தில் 18/02/2025 ஒரு நாள் கஞ்சிவரத்தில் நடந்தது. தமிழ்நாடு அரசு சிறுபான்மையினர் ஆணையம் ஒத்துழைப்பில் பௌத்தர்கள் சங்க பேரவை சார்பில் திரிபிடகம் பாடுதல் நிகழ்வு என்று முடிவானது.  

தெலுங்கானா

01. புத்தவனம் - 07/02/2025 

02. நாகார்ஜுன கொண்டா-  08/02/2025   

03. ஹைதராபாத் மகாபோதி - 09/02/2025

04. ஹுசைன் சாகர் ஹைதராபாத் 10/02/2025

கர்நாடக

01. கலபுரகி 11/02/2025 Kalaburagi 

02. சன்னாட்டி - Sannatti  12/02/2025

03. பைலாகூப் - Bylakuppe - 13/02/2025 

04. மைசூர் - 14/02/2025 

05. வடக்கு பெங்களூரு 15/02/2025 

06. பெங்களூரு மகாபோதி 16/02/2025 

தமிழ் நாடு 

காஞ்சிபுரம் - 18/02/2025 


அமைப்புகள் 

இங்கு கலந்துகொண்ட அமைப்புகள்

01. International Tipitaka Chanting Council (ITCC) சர்வதேச திபிடகா மந்திரப் பேரவை

02. Light of Buddha Dharma Foundation International (LBDFI) புத்த தர்ம அறக்கட்டளை சர்வதேச ஒளி

03. (Government of Tamil Nadu - State minorities commission (TSMC)) தமிழ்நாடு அரசு சிறுபான்மையினர் ஆணையம். 

04. Tamil Nadu Buddhist Sanga Council (TNBSC)  தமிழ்நாடு பௌத்தர்கள் சங்கப் பேரவை 

ITCC  நோக்கம்

01. புத்தர் ஞானம் பெற்ற போத்கயாவில் அல்லது பிற புனித தலங்களில், பாலி திபிடகம் என்று அழைக்கப்படும் புத்தரின் புனித நூல்களை ஆண்டுதோறும் உச்சரிப்பதை ஆதரித்தல், ஊக்குவித்தல் மற்றும் ஒழுங்கமைத்தல்.

02. அனைத்து நாடுகளிலிருந்தும் நன்கொடையாளர்கள் மற்றும் ஆதரவாளர்களைத் தேடுதல் மற்றும் ஆண்டுதோறும் திபிடக மந்திர விழாவில் தேரவாத பாரம்பரியத்தின் மகாசங்கத்தினரை ஒன்று திரட்டுதல். 

03. புத்தரின் அசல் போதனைகளை ஆர்யதேசத்தின் புனித பூமி முழுவதும் பரப்புதல் மற்றும் இந்த உலகத்திலும் முழு பிரபஞ்சத்திலும் உள்ள அனைத்து உணர்வுள்ள உயிரினங்களுக்கும் தகுதியை அர்ப்பணித்தல். 

04. புத்தரின் போதனைகள் மற்றும் தத்துவம் மூலம் அனைத்து மனிதகுலத்தின் அமைதி, நல்லிணக்கம் மற்றும் சகோதரத்துவத்தை அடைய உதவுதல். 

05. அனைத்து நாடுகளிலும் உள்ள தேரவாத சங்கத்தினரிடையே ஒத்துழைப்பு, ஒற்றுமை மற்றும் நல்லெண்ணத்தை ஊக்குவித்தல். 

06. ஆண்கள் மற்றும் பெண்களின் உலகளாவிய ஒத்துழைப்பு மூலம் அனைத்து உயிரினங்களிடையேயும் பரஸ்பர மரியாதையை ஊக்குவித்தல். 

07. சுகாதாரம், கல்வி மற்றும் பிற அடிப்படைத் தேவைகளை வழங்குவதன் மூலம் சமூக நலனை ஊக்குவித்தல்.

08. சர்வதேச திபிடக மந்திரப் பேரவையின் நோக்கத்தைப் போன்ற செயல்பாடுகளில் ஈடுபட்டுள்ள பிற அமைப்புகள், அறக்கட்டளைகள், படிப்பு மையங்கள், தொண்டு நிறுவனங்கள் மற்றும் மடாலயங்களுடன் ஆதரவளித்து ஒத்துழைத்தல். 

09. பௌத்தக் கொள்கைகளைப் பரப்புவதற்கும் பரப்புவதற்கும் இலக்கியங்களை வெளியிட்டு விநியோகித்தல் மற்றும் பிற உதவிகளை வழங்குதல்.

வையாவூர் சாலை புத்த விகார்


புத்த விகார், காமாட்சி நகர், வையாவூர் சாலை, காஞ்சீவரம் என்ற முகவரியில் அமைந்துள்ள புத்த விகாரில் திரிபிடகம் பாடும் மாநிகழ்வு 18-02-2025 செவ்வாய் கிழமை காலை 8 மணி துவங்கி மலை 6 மணியளவில் நடந்தது. இவ்விகார் நிறுவனர் திரு திருநாவுக்கரசு.

குறைந்தபட்சம் காஞ்சீவர புத்தர் சிலையாவது காட்சிப்படுத்தி இருக்கலாம். பள்ளூர் புத்தர் சிலையை கௌதம சன்ன இங்கு கையாண்டுள்ளார்.

இந்த விகாரில் வண.போதிதர்மா, வண.மணிமேகலை சிலைகள் வைத்து வழிபடப்பட்டுள்ளது. சாஞ்சியை நினைவுறுத்தும் அளவுக்கு சாஞ்சி வடிவத்தை அமைக்கப்பட்டுள்ளது. 


 





தம்ம ஊர்வலம் 

காலை 8 மணிக்கு காஞ்சிவரம் பூக்கடை பேருந்து நிலையத்திலிருந்து துவங்கி வையாவூர் புத்த விகார் வரை சென்றது.  பிக்கு, உபாசகர், உபாசிகள் இந்த ஊர்வலத்தில் கலந்துகொண்டனர்.  இந்தியா, வியட்நாம், கம்போடியா, இலங்கை, மியான்மர், தாய்லாந்து, பர்மா நாடுகளைச் சேர்ந்த பிக்குகள் அவர்களுக்குரிய உடையுடனும், உபசகர்கள், உபாசிகள் வெள்ளை நிற ஆடையுடனும் கலந்துகொண்டனர். ஊர்வலத்தின் போது பஞ்சசீலக் கொடிகளை கையில் ஏந்தி, பெரிய புத்தர் சிலையை வண்டியில் வைத்து அழைத்தும், சிறிய புத்தர் சிலைகளை கையில் ஏந்தியும், குட்டையேந்தியம் ஊர்வலம் சென்றது.


 ஸ்தூபி திறப்பு விழா

இவ்விகார் முகப்பில் புத்த கயாவில் உள்ள பகவன் புத்தரின் சாம்பல் சிறு பகுதி ஒரு சிட்டிகை (இன்ச்) அளவு வைத்து ஸ்தூபி நிறுவப்பட்டுள்ளது. ஸ்தூபியை வணங்கி திரிபிடக பாடும் நிகழ்வுக்கு சென்றனர்.


திரிபிடகம் உச்சரித்தல்/பாடுதல்

திரிபிடகம் முழுவதையும் பாடுதல் என்பது இயலாது. திரிபிடகத்தில் ஏதாவது ஒரு பகுதியை படுவது வழக்கம். இங்கு தம்மபதம் எடுத்துக்கொள்ளபட்டது. தம்மபதம் 26 அத்தியாயம் கொண்டுள்ளது. அதில் காலை இரண்டும் மதியம் எட்டும்  என 10 அத்தியாயங்கள் பாடப்பட்டது. பிக்கு சோமானந்த அவர்களின் நூல் தம்ம பதம் என்ற நூல் அளிக்கப்பட்டது.  பாலியில் உள்ள பாடலை பாடும் பொழுது புத்தகத்தை கவனிக்க வேண்டும். பாலியல் பாடிய பின் அதன் பொருளை ஆங்கிலத்தில் அளிக்கப்பட்டது. அதன் பின்னர் தமிழில் விளக்கப்பட்டது. பின்னர் அடுத்த அத்தியாயம் பாடப்பட்டது. 

 காலையில் 11.30 மணியளவில் முடிந்தது

1. இரட்டைச் செய்யுட்கள் / யமகவக்கம் 
2. கருத்துடைமை / அப்பமாத வக்கம்
 
மதியம் 3.30 மணியளவில் முடிந்தது
3. சிந்தனை / சித்த வக்கம்
4. புஷ்பங்கள் / புப்ப வக்கம்
5. பேதை / பால வக்கம்
6. ஞானி / பண்டித வக்கம்
7. முனிவர் / அர்ஹந்த வக்கம்
8. ஆயிரம் / ஸஹஸ்ஸ வக்கம்
9. தீயொழுக்கம் / பாப வக்கம்
10. தண்டனை / தண்ட வக்கம்

 


மதியம் மத்திய உணவு, தண்ணீர் அளிக்கப்பட்டது, மலையில் தேனீர் அளிக்கப்பட்டது. பின்னர் சங்க தானம் அளிக்கப்பட்டது. நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் - கௌதம சன்ன, வி சி க தலைவர் -திருமாவளவன் MP,  மாநில சிறுபான்மை ஆணைய உறுப்பினர் எஸ். வசந்த, இவ்விகார் நிறுவனர் திரு திருநாவுக்கரசு    என பலரும் கலந்து கொண்டனர்

கௌதம சன்னாவின் கீழ்த்தரமான உரை: 

இவரின் உரை பலரை வெறுப்படைய செய்தது. தமிழ் நாட்டில் பௌத்தம் தழைத்தோங்க செய்த பண்டிதர் அயோத்திதாசர் மற்றும் மத மாற்றத்தில் உலக சாதனை செய்த பாபா சாகேப் அம்பேத்கர் அவர்கள் செய்யாததை இவர் செய்ததை போல தம்பட்டம் அடித்துக்கொண்டதை ஜீரணிக்க முடியவில்லை.    

பாபா சாகேப் அவர்கள் 1955ல் மே 5 ஆம் தேதி Buddhist Society of India (BSI) என்ற பௌத்த சங்கத்தை தோற்றுவித்ததை திரித்து பாபா சாகேப் சங்கத்தை தோற்றுவிக்கவில்லை கௌதம சன்ன தான் முதன் முதலில் பௌத்த சங்கத்தை தோற்றுவித்ததாக கூறியதை கேட்ட போது கீழ்த்தரமான உரையாக இருந்தது.

வி சி க தலைவர் -திருமாவளவன் உரை:

மிக குறைவான நேரம் எடுத்துக்கொண்டார். தமிழில் மேம்பட்ட பல வார்த்தைகளை பயன்படுத்தினார். அதில் சில குறைகளை கண்டேன்.      

01. தமிழகத்தில் பௌத்தம்  முற்றாக துடைத்து எறியப்பட்டது: பௌத்தம் தமிழ்நாடு மட்டுமல்ல இந்தியா முழுவதும் செழித்திருந்தது. மாமன்னர் அசோகருக்கு பின்னர் மிகஅப்பெரிய எழுச்சியை பெற்றது. இன்று தமிழகத்தில் முற்றாக துடைத்து எறியப்பட்டது.   

02. கடவுளை மறுக்கின்ற கருத்தியல்: புத்தர் காலத்திலேயே மிகப்பெரிய எதிர்ப்பு இருந்தது. புத்தரை சாத்தான், பேய், பிசாசு என்று அழைத்தனர். பௌத்தத்தை நாத்திக மதம் என்றுதான் அழைக்கப்பட்டது. கடவுளை மறுக்கின்ற கருத்தியல் தான் அதன் அடிப்படை. பௌத்தமும் ஜைனமும் இரண்டும் கடவுள் நம்பிக்கை கொண்டவையல்ல. கடவுளை பற்றிய போதனைகள், ஆய்வுகள் இல்லை. எனவே வழிபாடு சடங்கு சம்பிரதாயங்கள் பௌத்திலும்  ஜைனத்திலும்  ஏதுமில்லை.  

03. தம்மாவை வைக்க உருவம் தேவையில்லை: வழிபாட்டுக்கு உரியது அறம் என்று போதித்தவர் புத்தர். அறம் தான் தம்மம் என்று பாலி மொழியில் அழைக்கப்படுகிறது. தர்மம் என்று வடமொழிலும், அறம்  என்று  தமிழிலும் அழைக்கப்படுகிறது. கடவுள் வைக்க வேண்டிய இடத்தில் தம்மாவை வைத்தது தான் பௌத்தம். தம்மாவை வைக்க உருவம் தேவையில்லை. 

.04. கடவுளை பற்றி பேசாத புத்தரை கடவுளாகிவிட்டோம்: அக்காலத்தில் கடவுள் இல்லை என்று சொன்னவர்களை தேடி தேடி அழித்து ஒழித்தனர். கடவுளுக்கு எதிரான கருத்துக்களை கூறியவர்களை உயிருடன் வைக்கமாட்டார்கள். இந்த பூமி உருண்டை என்று சொன்ன கலிலோவை கொன்றார்கள். நீ பைபிளுக்கு எதிராக பேசுகிறாய். பைபிளில் அவ்வாறு இல்லை என்று சொல்லி கொல்லப்பட்டார். 80 வயது வரை புத்தர் வாழ்ந்தார் என்பதே ஒரு சாதனை தான். பகுத்தறிவு கருத்துக்களை போதித்தார் என்பது ஒரு புரட்சி. காலப்போக்கில் கடவுளை பற்றி பேசாத புத்தரை கடவுளாகிவிட்டோம் நாம்.    

05.கடவுள் யாரால் அறிமுகப்படுத்தப்பட்டது: நபிகள் நாயகம் கடவுள் இல்லை. யேசுநாதரும் கடவுள் இல்லை. ஆனால் இந்துமதம் சிவன், விஷ்ணு, பிரம்மா என்று கடவுள் இருக்கிறார்கள் என்று வேறு முன்வைக்கிறார்கள். அவற்றை போதித்தது யார் என்று தெரியாது. கிருஷ்ணரை கடவுள் என்று சொன்னவர் யார் என்று தெரியாது. யாரால் அறிமுகப்படுத்தப்பட்டது,  சொல்லப்பட்டது என்று தெரியாது. 

06. பௌத்தம் ஒரு சங்கம் மதமல்ல: நபிகள் நாயகம் அல்லா என்று ஒருவர் இருக்கிறார் ஆனால் அவர் ஆணா பெண்ணா என்று தெரியாது என்றுரைக்கிறார். அதனால் தான் கௌதம புத்தருக்கு பின்னால் வந்தவர்கள் பௌத்தத்தை சங்கம் என்று சொன்னார்கள். மதம் என்று சொல்லவில்லை , பௌத்தம் ஒரு சங்கம் அது மதமல்ல 

07. மகாவிஷ்ணுவின் அவதாரம் தான் கௌதம புத்தர் மகாயானம்:  பௌத்தத்தில் பல பிரிவுகள் தோன்றியுள்ளன. தேரவாதம் ஹீனயானம் என்று அழைக்கப்படுகிறது. மகாயானம் தேரவாதம் சொன்ன அதே கருத்தை சொன்னாலும் அது மகாவிஷ்ணுவின் அவதாரம் தான் கௌதம புத்தர் என்று நம்பிய பௌத்தம். 

08. பௌத்தம் இந்து மதத்தின் ஒரு கிளை: இந்தியாவை பொறுத்தவரை பௌத்தத்தை இந்து மதத்தின் ஒரு கிளை என்று பரப்பிக்கொண்டு இருக்கின்றனர். இந்திய அரசியல் அமைப்பு சட்டப்படி பௌத்தம் இந்து மதத்தின் ஒரு கிளை என்று திருத்தம் செய்து இணைத்து இருக்கின்றனர். அதனால் தான் பௌத்தராக இருந்தால் இட ஒதுக்கீடு உண்டு. இஸ்லாத்திற்கும், கிறித்துவத்திற்கும் இட ஒதுக்கீடு இல்லை. ஆனால் பௌத்தத்திற்கு மாறினால் இட ஒதுக்கீடு உண்டு. அது நம்மீது காட்டுநின்ற கருணையில்லை. அது நம்மை விழுங்கி செரிக்கின்ற சதி. 

09. Dr.அம்பேத்கர் நவயானம் என்னும் புதிய பாதையை உருவாக்கினார்: புத்தரால் போதிக்கப்பட்ட மாதமாக பௌத்தம் இல்லை என்பதால் தான் புத்தரும் அவர் தம்மமும் என்ற நூலை அம்பேத்கர் எழுதினார். இல்லையென்றால் மகாயானம் (அ) தேரவாதம் உரைகளே போதும் என்று இருந்திருப்பர். எந்த நாட்டையும் பின்பற்றாமல்   புதிதாக ஒன்றை உருவாக்க வேண்டும்  என்று சிந்தித்து தான் புத்தரும் அவர் தம்மமும் என்ற நூல்.   அது தான் நமக்கான புனித நூல். அந்த நூலுக்கு தான் நவயானம் என்று பெயர் வைத்தார்  

ஹீனயானம் - எளிய பாதை,

மகாயானம் - பெரிய பாதை

நவயானம் - புதிய பாதை 

10 சுதந்திரம், சமத்துவம் மற்றும் சகோதரத்தும்: தம்மத்தை முதன்மை படுத்தியது. தனிமனித ஒழுக்கத்தை வலியுறுத்தியது, இந்திய அரசியலமைப்பு முகப்புரையில் உள்ள மூன்று சொற்கள் (சுதந்திரம், சமத்துவம் மற்றும் சகோதரத்தும்) மீது கடுமையான விவாதங்கள் எழுந்தது. எல்லோரும் நினைத்தார்கள் இந்த மூன்று சொற்களும் பிரஞ்சு புரட்சியில் இருந்து எடுக்கப்பட்டது என்று. ஆனால் இந்த மூன்று சொற்களும் பகவன் புத்தரின் போதனைகளில் இருந்து எடுத்து கையாண்டேன் என்றுரைத்தார் Dr அம்பேத்கர். 

வி சி க தலைவரின் சில கருத்துக்களை ஏற்க முடியவில்லை. பௌத்தம் மதமல்ல சங்கம், மகாவிஷ்ணுவின் அவதாரம் தான் புத்தர் என்றது மகாயானம், நவயானம் என்னும் புதிய பாதையை பாபா சாகிப் உருவாக்கினார் என்ற கருத்துக்கள்.

01. பௌத்த சங்கம் தான் மதம்: மதம் என்றால் கடவுள் வேண்டும். கடவுள் இல்லை அங்கே தம்மம் இருக்கிறது என்பதால் தான் பௌத்தம் மதமல்ல சங்கம் என்றுரைக்கிறார். ஆனால் பௌத்தத்தை மாதமாக ஏற்றுக்கொள்ள கூடாது சங்கமாக தான் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பது பாபா சாகேப் கருத்துக்கு முரணானது. 

02. மகாவிஷ்ணுவின் அவதாரம் தான் புத்தர் என்றது மகாயானமில்லை வைதிக மதம். மகாயானம் புத்தரை கடவுளாகியது அவதாரமாக்கவில்லை. மகாயானம் எந்த பதிவில் உள்ளது மகாவிஷ்ணுவின் அவதாரம் தான் புத்தர் என்று. சாரநாத்தில்லுள்ள மகா போதி சங்க அலுவலகத்தில் பகவன் புத்தர் மகா விஷ்ணுவின் அவதாராம் என்ற பொய்யை திரும்பப் பெற்றுக்கொள்வதாக ஜகத்குரு சங்கரச்சாரியாவும் காஞ்சிபுரம் சங்கரமடத்தலைவர் ஜெயேந்திர சரசுவதிவும் விபாசன ஆசிரியர் S.N. கோயங்க  ஒரு ஒப்பந்தத்தில் கைஎழுத்திட்ட வைத்தது ஏன்? எந்த பிக்கு, போதிசத்துவர், அரகந்தர், பௌத்த சங்கம் மகாவிஷ்ணு புத்தரின் அவதாரம் என்று ஏற்று இருக்கிறது?

03. நவயானம் என்று பாபா சாகிப் உருவாக்கவில்லை: நவாயானம் புத்த மதத்தின் ஒரு  புதிய கிளையாகக் கருதப்படவில்லை. பாபா சாகிப் தனது புத்த மதப் பதிப்பை நவாயானம் அல்லது "நவ-பௌத்தம்" என்று அழைக்கவில்லை.  

அம்பேத்கர் பவுத்தம் தழுவ இருக்கும் முன்தினம் அதாவது அக்டோபர் 13 ஆம் நாளன்று பத்திரிகையாளர்களுக்கு நேருரை அளித்தார்: “நான் தழுவவிருக்கும் பவுத்தம் புத்தர் புகட்டியபடி இருக்கும். பண்டைய நாளில் ஏற்பட்ட ஈனயானம், மகாயானம் ஆகிய கருத்துச் குழப்பங்களில் நான் மக்களை ஒருபோதும் ஈடுபடுத்த மாட்டேன். என்னுடைய பவுத்தம், புத்தரின் அசலான ஒரு புதிய பவுத்தம் ஆக இருக்கும்'' என்றார். பௌத்தத்தை ஏற்கும் மக்களுக்கு இது புதிய பாதை எனக்கு பகவன் புத்தர் போதித்த போதனைகள் தான். பாபா சாகிப் பௌத்தத்தில் எந்த ஒரு பிரிவையும் உருவாக்கவில்லை

நவயானம் என்று கூறுவது வரலாற்றுப் பிறழ்வா? மறைந்த ஐயா ஜெயராஜ் அவர்களின் உரையை கேளுங்கள்.

 



வியாழன், ஜனவரி 23, 2025

காஞ்சீவரம் தொன்மையான பௌத்த தளம் XXVII தேவரியம்பாக்கம்

 தேவரியம்பாக்கம்

அமைவிடம் 

ஸ்ரீநிவாச பெருமாள் கோவில், தேவரியம்பாக்கம் கிராமம்

தேவரியம்பாக்கம் ஊராட்சி, வாலாஜாபாத் வட்டம்,

காஞ்சிபுரம் மாவட்டம் 631605


இங்குள்ள பெருமாள் கோவிலில் புத்தர் சிலை உள்ளதாக அறிந்த வாலாஜாபாத் வட்டார வரலாற்று ஆய்வு மையத்தின் தலைவர் அஜய்குமார் தலைமையிலான குழுவினர் கள ஆய்வு மேற்கொண்டனர். 

புத்தரின் சிலை தேவரியம்பாக்கத்தில் பஜனைக் கோவில் எனப்படும் பெருமாள் கோவிலில் ஓரம் கட்டி வைக்கப்பட்டிருந்த பழைய பொருட்களுடன் கிடத்தப்பட்டிருந்தது. பொங்கல் விழாவிற்கு, கோவிலை சுத்தம் செய்த போது, பளிங்கு கல்லாலான புத்தர் சிலை கண்டெடுக்கப்பட்டது. 



சிலையமைப்பு

அழகிய வெண்மை நிற பளிங்குக் கல்லால் ஆன புத்தர் சிலை. அமர்ந்த நிலையில் தியானத்தில் உள்ள சிலை. ஓரடி உயரமுள்ள சிலை. காதுகள் இரண்டும் தோள்வரை நீண்டுள்ளன. மூக்கு சற்று சேதமடைந்த நிலையில் உள்ளது. சுருள் சுருளான தலைமுடி. இடப்புறத் தோள்பட்டை முதல் இடுப்பு வரை சீவர ஆடை உள்ளது. இச்சிலையின் தலையில் சுருள் முடி போன்ற அமைப்பும், பின்புற மேலாடை (சீவர ஆடை) நேர்த்தியாகத் தெரியும் வகையிலும் அமைக்கப்பட்டுள்ளது. வலது கால், இடது தொடையின் மீதும், இடது கை, வலது கால் மீதும் வைத்த நிலையில் காணப்படுகிறது. மேலும், வலது கையின் விரல்கள் தரை நோக்கி உள்ளது (நிலத்தை தொடும் முத்திரை - புமிஸ் பரிசா முத்திரை).

900 ஆண்டுகள் பழமை வாய்ந்த சிலை. காலம் கி.பி 11 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்ததாக இருக்க வாய்ப்புள்ளது என தொல்லியல் துறை உதவி தொல்லியல் ஆய்வாளர்கள் ரமேஷ், உதவி கல்வெட்டாய்வாளர்கள் நாகராஜன் மற்றும்  பிரசன்னா ஆகியோரும் உறுதி செய்தனர்.

ஸ்ரீநிவாச பெருமாள் கோவில்
புத்தர் சிலை கிடைக்கப்பெற்ற தேவரியம்பாக்கம் பெருமாள் ஆலயம் 100 ஆண்டுகளுக்கு முன் ஓலைக் குடிசையாக இருந்ததாகவும், அதில் சீனிவாச பெருமாள் புகைப்படத்துடன் இச்சிலையை வைத்து வணங்கி வந்ததாகவும் முன்னோர்கள் சொல்லியதாக இவ்வாலயம் அருகே வசித்துவரும் இதே கிராமத்தைச் சேர்ந்தவர் தெரிவித்தார். 

 

சனி, நவம்பர் 02, 2024

புத்தவர்மன்

The Indian Antiquary 1880
குணபதேச செப்பேடு இது சர் வால்டர் எலியட்டுக்கு (Sir Walter Elliot) சொந்தமான அசல் தட்டுகளிலிருந்து உரை எடுக்கப்பட்டது. அவர் பக்தவாட்சலியா (Baktavatchaliah) என்பவரிடமிருந்து இந்த தட்டை பெற்றார். பக்தவாட்சலியா அவர்கள் குண்டூர் மாவட்டத்தில் உள்ள 'கோண்டகூரில்' 'குணபாதேயா'வில் இந்த தட்டை கண்டுபிடித்தார். ( The Indian Antiquary – A Journal of Oriental Research Vol IX- 1880 by JAS. BURGESS, LL.D., F.R.G.S., M.R.A.S. பக்கம் 100)  
டாக்டர் மா.இராசமாணிக்கம் 1944 
பிராக்ருத மொழிகளில் தங்கள் பட்டயங்களை வெளியிட்ட பல்லவர் முதற்காலப் பல்லவர் ஆவர் (கி.பி. 300-340). இவர்கள் பட்டயங்களைக் கொண்டு முதற்காலப் பல்லவர் பெயர்கள் 
01. சிவஸ்கந்தவர்மன்
02. விஜயஸ்கந்தவர்மன்
03. இளவரசன் புத்தவர்மன்
04. புத்யங்குரன்.
விஜய ஸ்கந்தவர்ம ஆட்சிக்காலத்தில் இளவரசனாக இருந்தவர் புத்தவர்மன். புத்தவர்மனின் மனைவி சாருதேவி மகன் புத்யங்குரன். இச்சாருதேவி தெலுங்க நாட்டில் தாலூராக் கிராமத்தில் உள்ள பெருமாள் கோவிலுக்கு நிலதானம் செய்தாள். அதனைத் தெரிவிப்பதே ‘குணப தேயப் பட்டயம்’ என்றுரைக்கிறார். (பல்லவர் வரலாறு 1944 5. முதற்காலப் பல்லவர் பக்கம் 43-49)
இந்திய வரலாற்று காலாண்டு  தொகுதி 31ல் 1955 பக்கம் 118
கோவிலில் உள்ள ஆண்டவர் நாராயணாக்கு நிலம் வழங்கப்பட்டது. தங்களின்  வாழ்க்கை மற்றும் வலிமையின் அதிகரிப்புக்காக இந்த நில தானம் வழங்கப்பட்டது. காஞ்சிபுரத்தின் பல்லவ அரச குடும்பத்தைச் சேர்ந்தவர் வேத சடங்குகள் மற்றும் பலியிடுதல் செயல்பட்டனர் என கூறப்பட்டாலும் மேற்கண்ட பதிவுகள் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்படுகின்றன. மறுபுறம் சில பெண் உறுப்பினர்கள் 4-ஆம் நூற்றாண்டில் வாசுதேவ வழிபாட்டுக்கு அர்ப்பணித்தனர்.

T.A கோவிந்த ராவ் 1979
இந்த தட்டுகளிலிருந்தும் ஆரம்பகால சங்கிருத கதாபாத்திரங்களிலிருந்தும் விஜயஸ்கந்தவர்மனுக்கு விஜய புத்தவர்மன் மற்றும் விரவர்மன் என்ற இரண்டு மகன்கள் இருந்ததாகத் தெரிகிறது, விஜய புத்தவர்மன் மூத்தவர். விஜய புத்த வர்மானுக்குப் பின் வந்த புத்தங்குரரின் ஆட்சி பற்றி எதுவும் தெரியாது. (Buddhisim in Tamil Country Page 168)
டாக்டர் மு.ராஜேந்திரன் 
ஓர் அரசகுல பெண் பிராமணர் அல்லாத ஒரு விவசாயிக்கு வழங்கிய நில தானம் என்றுரைக்கிறார்.
குணபதேச செப்பேடு (Gunapadeya Copper Plate) 
100 வருடங்களுக்கு முன்பு சர் வால்டர் எலியட் (Sir Walter Elliot) என்ற ஆங்கில ஆட்சியாளர் பழைய பொருட்கள் பலவற்றை வாங்கி சேகரித்து வைத்திருந்தார். அந்தக் குவியலில் இந்தச்  செப்பேடு இருந்தது. பின்னர்  செப்பேடு டாக்டர் ஹூல்ஸ், டாக்டர் ப்ளிட் என்பவர்களால் படிக்கப்பட்டு கட்டுரையாக வெளிவந்தது.
முதல் ஏட்டின் முன்பக்கம் இரண்டாம் ஏட்டின் இருபக்கம் மற்றும் மூன்றாம் ஏட்டின் உட்புறம் என 16 வரிகள் எழுதப்பட்டு இருந்தது. பிராகிருதம் மற்றும் சமஸ்கிருதம் ஆகிய இரு மொழிகளில் எழுதப்பட்டுள்ளது.
ராஜாதடாகத்தின் அருகிலுள்ள குடிநீர் கிணற்றின் வலதுபுறம் ஆதுகன் என்பவன் பயிரிட்டு வந்த நிலத்தில் நாலு நிவர்த்தனம் பூமியை தாதுரம்  என்ற இடத்தில் கட்டப்பட்டிருக்கும் நாராயணனுடைய கோயிலுக்கு தனது ஆயுள் பலம் கூடுவதற்கு அளிக்கப்பட்டது. இந்நிலத்திற்கு முழு வரி விலக்கு அளிக்கப்பட்டது. 
அரசர்கள் மட்டுமே நிலதானம் வழங்குவது, வரி விலக்கு அளிப்பது என்று இருந்தது. மேலும் (செப்பேட்டின் மூலம்) தானங்கள் பிராமணருக்கு மற்றும் கோவிலுக்கு மட்டுமே அளிக்கப்படும். தனது புகழையும் ஆயுளையும் அதிகரிப்பதற்காக தானம் அளிக்கப்படும்.
இந்த நடைமுறையை தகர்த்த மிகப் பழமையான செப்பேடு குணபதேச செப்பேடு. இராணி சாருதேவி (Charudevi) தனது இளம் வயது மகனின் சார்பாக ஆட்சி நடத்திய போது இந்த தானம் வழங்கப்பட்டது. நிலதானமும் பிராமணருக்கோ அல்லது கோவிலுக்கோ அளிக்காமல் ஒரு விவசாயிக்கு வழங்கப்பட்டது. 
முதலாம் யுவமகாராஜா சிவஸ்கந்தவர்மனுக்கு இரண்டு மகன்கள். மூத்த மகன் புத்தவர்மன், இளைய மகன் முதலாம் குமார விசுணு. புத்தவர்மன் அரசனாகவில்லை என்பதற்கு ஆதாரமகா இருப்பது குணபதேச செப்பேடு. இச்செப்பேடு தற்பொழுது லண்டன் பிரிட்டிஷ் அருங்காட்சியகத்தில் உள்ளது (The British Museum Plates of Queen Charudevi) .
சாருதேவி தன்னை யுவமகாராஜாவின் (யுவமகாராஜா விஜய புத்தவர்மன்-Yuvamaharaja Sri Vijaya Buddhavarman)  மனைவி என்றும் புத்தயன் குராவின் (Buddhayankura) தாய் என்றும் அறிவித்து குணபதேச செப்பேட்டை அளித்து உள்ளாள். 
அரசி நில தானம் வழங்கியதாக சொல்லும் நான்காம் நூற்றாண்டை சேர்ந்த மிகப் பழமையான  குணபதேச செப்பேடு. தனது புகழையும் ஆயுளையும் அதிகரிப்பதற்காக தானம் என்று சொல்லாததிலிருந்து புத்த வர்மன் அரசனாக இல்லை என்பது உறுதியாகிறது.  
குணபதேயம்- கொண்டக்கூர் தாலுக்கா, குண்டூர் மாவட்டம், ஆந்திர மாநிலத்தில் உள்ளது.  (பல்லவர் காலச் செப்பேடுகள்)