பாபா சாகிப் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பாபா சாகிப் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், மே 14, 2026

நீர் மற்றும் நதி வழிப்போக்குக் கொள்கையின் சிற்பி டாக்டர் அம்பேத்கர்

தாமோதர் பள்ளத்தாக்கு திட்டங்களில் பாபாசாகேப்பின் பங்கு

01.1948 ஆம் ஆண்டு ஜூலை மாதம் தாமோதர் பள்ளத்தாக்குத் திட்டம் (DVC-Damodar Valley Project) நிறுவப்பட்டது. இந்தியாவின் முதல் பல்நோக்கு ஆற்றுப் பள்ளத்தாக்குத் திட்டம் தாமோதர் பள்ளத்தாக்கு திட்டம் தான். தாமோதர் நதியானது ஹூக்ளி நதியின் துணை நதிகளில் ஒன்றாகும். இது மேற்கு வங்காளம் மற்றும் ஜார்கண்ட் மாநிலங்களில் அமைந்துள்ளது. இத்திட்டம் ஜார்கண்ட் மாநிலத்தின் ஹசாரிபாக் மாவட்டத்தில் அமைந்துள்ள கோனார் ஆற்றின் குறுக்கே திறம்படக் கட்டமைக்கப்பட்டது.

02.பாபா சாகிப் டாக்டர் அம்பேத்கர் மார்ச் 1944 இல் CWINC மத்திய நீர்வழி மற்றும் நீர்ப்பாசன ஆணையத்தை (Central Waterways, Irrigation and Navigation Commission) அங்கீகரித்தார். அதைத் தொடர்ந்து ஏப்ரல் 4, 1945 இல் வைஸ்ராயால் அங்கீகரிக்கப்பட்ட.து.

03.தாமோதர் பள்ளத்தாக்குத் திட்டத்தை நிறுவுவதற்கான முயற்சிகளை மேற்கொண்ட இந்தியாவின் முதல் நபர் பாபா சாகிப் டாக்டர் அம்பேத்கரே ஆவார். இந்தியாவில் பல்நோக்கு நதித் திட்டங்களின் முன்னோடியாகத் திகழ்ந்தவர் அவரே.

Ambedkar poses for a photo with other members of the Viceroy’s Council

04. எல்லாவற்றிற்கும் மேலாக, டாக்டர் பாபாசாகேப் பின்வரும் திட்டங்களை உருவாக்குவதில் முக்கியப் பங்காற்றினார், அவற்றிற்கான வரைவுத் திட்டங்களை வகுத்தார். 

1) தாமோதர் பள்ளத்தாக்குத் திட்டம் (இந்தியாவின் முதல் பல்நோக்கு நதிப் பள்ளத்தாக்குத் திட்டம்) — 1944-ஆம் ஆண்டில், 'டென்னசி பள்ளத்தாக்கு ஆணையத்தின்' (Tennessee Valley Authority) மாதிரியை அடிப்படையாகக் கொண்டு இது உருவாக்கப்பட்டது.

2) பக்ரா-நங்கல் அணை (இந்தியாவின் மிகப்பெரிய பல்நோக்கு நதிப் பள்ளத்தாக்குத் திட்டம்; இந்தியாவின் மிக உயரமான ஈர்ப்பு விசை அணை Highest gravity dam in India  ).

3) சோன் நதிப் பள்ளத்தாக்குத் திட்டங்கள்.

4) ஹிராகுட் அணை (இந்தியாவின் மிக நீளமான அணை Longest dam in India ).

05. டாக்டர் பாபாசாகேப் வழிகாட்டுதலின் கீழ் உருவாக்கப்பட்ட திட்டத்தைச் செயல்படுத்திய திட்டமிடுபவர்களுக்கும் பொறியாளர்களுக்கும் உரிய வழிகாட்டுதல்களை வழங்கினார். 1946 ஆம் ஆண்டு வரை, தாமோதர் பள்ளத்தாக்குத் திட்டத்திற்கான பொறுப்பு பாபாசாகேப் அவர்களிடமே இருந்தது. அதன் பிறகு, அணை தொடர்பான முழுப் பணிகளும் 'தாமோதர் மேம்பாட்டுக் கழகத்திடம்' (Damodar Development Corporation) ஒப்படைக்கப்பட்டன.

06. 1945-ஆம் ஆண்டு ஏப்ரல் 23 மற்றும் 24 ஆகிய தேதிகளில், புது தில்லியில் பாபாசாகேப் அவர்களின் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், தாமோதர் நதித் திட்டத்தின் கீழ் முதல் அணையின் கட்டுமானப் பணிகளை உடனடியாகத் தொடங்குவதற்காக 55 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப் பரிந்துரைக்கப்பட்டது.

தாமோதர் பள்ளத்தாக்கு திட்டம் 
01.நம் நாட்டின் பல பகுதிகளில் இருந்த அணை திட்டங்களை படித்தறிந்தார் பாபா சாகிப். பிறகு வெளிநாட்டு அணை திட்டங்கள் பலவற்றையும் ஆழ்ந்து படித்தறிந்தார். பிறகு தாமோதர் பள்ளத்தாக்கு  திட்டத்திற்கான அடிப்படைப் பணிகள் பாபா சாகிப் அம்பேத்கர் அவர்களால் தொடங்கப்பட்டுள்ளன. 

02.எகிப்து நாட்டில் ஆஸ்வான் ஆற்றின் மீது கட்டுமானப் பணிகளை மேற்கொண்ட ஆங்கிலேய பொறியாளரை அழைக்கலாம் என்று வைஸ்ராய் வேவல்  பாபாசகிப்பிற்கு ஆலோசனை வழங்கினார். அவரின் ஆலோசனையை நிராகரித்தார் பாபாசாகிப். ஒரு இந்தியப் பொறியாளர் ஒருவரால் தான் இப்பணி நிறைவேற்றப்பட வேண்டும்  என்பது பாபா 
சாகிப்பின்  விருப்பம். 

03.பஞ்சாபில் இருந்த தலைமைப் பொறியாளர் ஏ.என். கோசலா A. N. Khosla (Ajudhia Nath Khosla) அவர்களிடம் தாமோதர் பள்ளத்தாக்கு திட்டப்பொறுப்பை அளிக்க முன்வந்ததார். ஆனால் அப்பொறியாளர் பாபாசகிப் அம்பேத்கரின் தலைமையின் கீழ் பணியாற்ற முடியாது என்று மறுத்தார். இந்தியரால் தான் இப்பணி நிறைவேற்றப்பட வேண்டும் என்ற அம்பேத்கரின் பார்வையைப் புரிந்து கொண்ட பின்னரே ஏ.என்.கோசலா அப்பணியினை ஏற்றுக் கொள்ள சம்மதித்திருக்கிறார். 

04.தாமோதர் நதி பள்ளத்தாக்கு திட்டம் பாபாசகிப் அம்பேத்கரால் தொடங்கி நிறைவேற்றப்பட்டிருக்கிறது. ஆனால், இந்திய வரலாறு அத்திட்டத்துடன் தந்தையான அம்பேத்கரை இணைத்துப்பேச மறுத்து, கள்ள மவுனம் சாதிக்கிறது.

தாமோதர் பள்ளத்தாக்கு திட்ட பயன்கள்

01.வெள்ளப்பெருக்குப் பிரச்சினைகளின் காரணமாக, தாமோதர் பள்ளத்தாக்கு 'வங்காளத்தின் துயரம்' Sorrow of Bengal என்று அழைக்கப்பட்டது. வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் கொண்ட மேற்கு வங்கம் மற்றும் ஜார்கண்ட் ஆகிய மாநிலப் பகுதிகளில் வெள்ளக் கட்டுப்பாட்டு முறைகளை இத்திட்டம் வெகுவாக மேம்படுத்தியுள்ளது. 


02. விவசாய வளர்ச்சி, தொழில் வளர்ச்சி, மீன் வளர்ப்பு, காடு வளர்ப்பு மற்றும் பொழுதுபோக்கு வசதிகளை மேம்படுத்துவதிலும் இப்பள்ளத்தாக்குத் திட்டம் துணைபுரிகிறது.

03.நிலக்கரியை எரிபொருளாகக் கொண்டு இயங்கும் அனல் மின் நிலையங்களை அமைப்பதிலும், நீர்ப்பாசன வசதிகளை மேம்படுத்துவதிலும் தாமோதர் நதிப் பள்ளத்தாக்குத் திட்டம் குறிப்பிடத்தக்க முக்கியத்துவம் வாய்ந்ததாகத் திகழ்கிறது.

ரயில்போக்குவரத்தும் நீர்வழிப் போக்குவரத்தும்

01. இந்தியாவின் வனங்களும் (Forests) நதிகளும் (Rivers) மத்திய அரசாங்கத்தின் பொறுப்பின்கீழ் கொண்டுவரப்பட்டால், வெள்ளக்கட்டுப்பாடு, மண் பாதுகாப்பு போன்ற பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்கு பயனுள்ளதாக இருக்கும். 

02. நீர்வளம் சம்பந்தப்பட்ட நமது கொள்கை பாசன வசதி ஒன்றை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு இருந்து வருகிறது. ரயில் போக்குவரத்துக்கும் நீர்வழிப் போக்குவரத்துக்கும் இடையே வேறுபாடு எதுவும் இல்லை. ரயில்வேக்களுக்கு மாகாண எல்லைகள் ஏதும் இல்லையென்கிற போது ஆறுகளுக்கும் அதேபோல் மாகாண எல்லைகள் எவையும் இருப்பதற்கில்லை. ஒரு மாகாணத்திலிருந்து மற்றொரு மாகாணத்துக்கு பாய்ந்து செல்லும் ஆறுகளுக்கு முக்கியமாக இது பொருந்தும்.

04. இதற்கு மாறாக ரயில்வேக்களுக்கும் நீர்வழிப் போக்குவரத்துகளுக்கும் இடையே நமது அரசியலமைப்புச் சட்டத்தில் வேறுபாடு இடம் பெற அனுமதித்து விட்டோம். இதன் விளைவாக ரயில்வேக்கள் மத்திய அரசின் அதிகார வரம்புக்கு (Jurisdiction of the Central Government) உட்பட்டவையாகவும், ஆறுகள் மாநில அரசாங்கங்களின் அதிகாரவரம்புக்கு (Jurisdiction of the State Government)  உட்பட்டவையாகவும் ஆக்கப்பட்டுவிட்டன.

05. இந்தத் தவறால் ஏற்பட்ட பிரதிகூலங்கள், பாதகங்கள் அநேகம்; அவை கண்கூடானவை. இதற்கு இங்கு ஓர் உதாரணம்
ஒரு குறிப்பிட்ட மாநில அரசாங்கதுக்கு மின்விசை தேவைப்படுகிறது என்று வைத்துக்கொள்வோம். அப்போது இதன் பொருட்டு அந்த மாநில அரசு தனது நீர்வளங்களைப் பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறது. ஆனால் இதனை அது செய்ய முடியாது. ஏனென்றால் மின்விசை உற்பத்தி செய்வதற்கு அணைகட்ட வேண்டிய இடம் மற்றொரு மாநில அரசிடத்தில் அமைந்திருக்கிறது. அந்த மாநில அரசோ வேளாண்மையைப் பெரிதும் சார்ந்திருக்கும் மாநில அரசு அதற்கு மின்விசை தேவையில்லை. அதில் அதற்கு அக்கறையும் ஆர்வமும் இல்லை. மேலும் இந்தத் திட்டத்தை நிறைவேற்றுவதற்கு அதனிடம் போதிய பண வசதியும் இல்லை.

எனவே அணை கட்டுவதில் ஆர்வம் கொண்டுள்ள மாநில அரசை அவ்வாறு செய்ய அது அனுமதிக்காது. இது குறித்து நாம் என்ன புகார் செய்தாலும் சம்பந்தப்பட்ட அந்த மாநில அரசும் அதைப் பொருட்படுத்தாது. மாநில சுயாட்சி என்ற பெயரால் இத்தகைய நேசமற்ற போக்கை அது நியாயப்படுத்தவும் கூடும்.

06.ரயில்வேக்கள் விஷயத்தில் நாம் எத்தகைய நடைமுறையைக் கைக்கொள்கிறோமோ அதே நடைமுறையை நீர்வழிப் போக்குவரத்து விஷயத்திலும் பின்பற்றக்கூடிய விதத்தில் அரசியலமைப்புச் சட்டத்தைத் திருத்துவது மிகவும் பயனளிக்கக்கூடிய ஒரு மாற்றமாக இருக்கும்..


குறிப்பு
01. டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர் பேச்சும் எழுத்தும் நூல் தொகுப்பு, தொகுதி 18

02. Dr. Babasaheb Ambedkar Writings and Speeches English Volume 10 : Dr. Ambedkar as member of the Governor-General’s Executive Council (1942-46)




புதன், ஜனவரி 28, 2026

இந்திய அரசியல் அமைப்பு வருணாசிரமத்திற்கு எதிரானது


மகாராஷ்டிரா நாசிக்கில் உள்ள போலீஸ் அணிவகுப்பு மைதானத்தில் நடைபெற்ற (2026) 77வது குடியரசு தின விழாவில், ​​தேசியக் கொடியேற்றத்திற்குப் பிறகு மகாராஷ்டிர நீர்வள அமைச்சர் கிரிஷ் மகாஜன் (Girish Mahajan) (BJP) உரையாற்றும் போது, இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் தந்தை டாக்டர் பி.ஆர்.அம்பேத்கரின் பெயரை தவிர்க்கப்பட்டது. இந்த செயலுக்கு வனத்துறை பெண் அரசு அதிகாரி மாத்வி ஜாதவ் கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.



BJP அமைச்சரின் ஆணவப் பேச்சு

இந்தியாவின் அரசியலமைப்பின் தந்தை டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் பெயர் குடியரசு தின விழா உரையில் தவிர்க்கப்பட்டது. வனத்துறை பெண் அரசு அதிகாரி மாத்வி ஜாதவ் குரல் கொடுத்து கேள்வி எழுப்பினார்.

01. சமத்துவம் மற்றும் நீதிக்கான அரசியலமைப்பு டாக்டர் அம்பேத்கரின் படைப்புகளிலிருந்து உருவானது என்றும் குடியரசு தினத்தன்று அவரது பெயர் ஏன் குறிப்பிடப்படவில்லை என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.

02.நாட்டின் அரசியலமைப்போடு தொடர்பில்லாத பல தலைவர்களைக் குறிப்பிட்ட அமைச்சர் வேண்டுமென்றே டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் பெயரைத் தவிர்த்ததாகக் மன்னிப்பு கேட்க வலியுறுத்தினார்.

03. குடியரசு தினம் என்பது அரசியலமைப்பின் கொண்டாட்டம் என்றும், இது டாக்டர் அம்பேத்கரின் பணியிலிருந்து உருவானது என்றும், அவரது பெயரை விடுபட்டதை அவர் ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் அவர் வலியுறுத்தினார்.

மேலும் இடையூறு ஏற்படாமல் இருக்க பெண் காவல்துறையினர் அவரைத் தடுத்து நிறுத்தி, அவரைக் காவலில் எடுத்தனர். பின்னர் அவர் காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார், அங்கு அவர் ஒரு விண்ணப்பத்தை சமர்ப்பித்து அமைச்சருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கோரினார்.

01.அரசியலமைப்புச் சட்டத்தின் தந்தை டாக்டர் பி.ஆர் அம்பேத்கரின் பெயரையும், அவர் உருவாக்கிய அரசியலமைப்பையும் யாராலும் அழிக்க முடியாது.

02.இன்று நாம் அனைவரும் அவரால் தான் இங்கே பதவியில் இருக்கிறோம், 

03.இதற்காக என்னை இடைநீக்கம் (Suspend) செய்தாலும் பரவாயில்லை, நான் அதைப்பற்றிக் கவலைப்படவில்லை. ஆனால், அம்பேத்கரின் அடையாளத்தை மறைப்பதை என்னால் ஏற்க முடியாது," என்று அவர் ஆவேசமாகத் தெரிவிக்கிறார்.


குற்றச்சாட்டுகளுக்கு அமைச்சர் பதிலளித்தார்
அமைச்சர் கிரிஷ் மகாஜன், டாக்டர் பி.ஆர். அம்பேத்கரின் பெயர் விடுபட்டது கவனக்குறைவினால், வேண்டுமென்றே அல்ல என்றும் தெளிவுபடுத்தினார். பெயர் தற்செயலாகத் தவறவிடப்பட்டது. இதற்குப் பின்னால் எந்த வேண்டுமென்றே நோக்கமும் இல்லை. நான் 'பாரத் மாதா கி ஜெய்', 'வந்தே மாதரம்', 'சிவாஜி மகாராஜ் கி ஜெய்' போன்ற கோஷங்களை மட்டுமே முழக்கமிட்டேன். அவரது பெயரைப் புறக்கணிக்கும் எண்ணம் எனக்கு இல்லை. யாருடைய உணர்வுகள் புண்பட்டிருந்தால் நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் என்று மகாராஷ்டிரா நீர்வள அமைச்சர் கிரிஷ் மகாஜன் பதிலளித்தார்.


டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கரின் பெயரை வெறுக்கின்றனர்.
டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கரின் பெயரை வெறுக்கின்றனர். ஏன் எனில் பாபா சாகிப் உருவாக்கிய இந்திய அரசியல் அமைப்பு மட்டுமே அனைவரும் சமம், சமத்துவம், நீதி மற்றும் சகோதரத்துவத்தை வலியுறுத்துகிறது. இது வருணாசிரமத்திற்கு எதிராக உள்ளது. அரசியலமைப்புச் சட்டம்  தான் நாட்டை ஆளும்.

01.டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கரின் பெயரை உச்சரிப்பது ஒரு ஃபேஷனாகிவிட்டது என்று மாநிலங்களவையில் இந்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கருத்து தெரிவித்தார். பாபா சாகிப் உருவாக்கிய இந்திய அரசியல் சாசன படி உறுதிமொழி எடுத்துவிட்டு அரசியலமைப்புச் சட்டத்திற்கு கட்டுப்பட மறுக்கின்றவர் என்பதை சொல்லாமல் சொல்கிறார்.

02.அரசியலமைப்பு சட்டத்தை அவமதிக்கும் சென்னை உயர் நீதிமன்ற மதுரை அமர்வு நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் திருப்பரங்குன்றம் மலையில் உள்ள தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற அனுமதிக்க கோரி, ராம ரவிக்குமார் என்பவர் தொடர்ந்த வழக்கை விசாரித்து, குறிப்பிட்ட அந்த தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற உத்தரவு பிறப்பித்து இருந்தார். அரசியல் அமைப்புச் சட்டத்திற்கும், நீதித்துறை சட்டங்களுக்கும் மதிப்பளிப்பதை விட தன்னை ஒரு சனாதனி என்று கூறிக்கொண்டு அதன் படி நடப்பதில் பெருமைப்படுகிறார். எனவே தான் கீழக்கட்டு பதிப்பகம், 'திருப்பரங்குன்றம் விவகாரம்- ஜி.ஆர்.சுவாமிநாதன் நீதிபதியா அல்லது ஆர்.எஸ்.எஸ்., ரவுடியா' என்ற தலைப்பில் நுால் வெளியிட்டுள்ளது. அட்டைப்படம், நீதிபதியை ஒரு கை திரிசூலத்தை பிடித்து கொண்டு, மற்றொரு கை காவி கொடியை பிடித்து கொண்டு கேலிச்சித்திரமாக்குகிறது.

03. 2023ஆம் ஆண்டு ஜூலை மாதம் சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் உயர் நீதிமன்றப் பதிவாளர் வெளியிட்ட சுற்றறிக்கையில், நீதிமன்ற வளாகங்களில் காந்தி மற்றும் திருவள்ளுவர் படங்களைத் தவிர மற்ற படங்களை வைக்க அனுமதி மறுக்கப்பட்டது. அண்ணல் அம்பேத்கரின் உருவப்படங்களை அகற்ற வேண்டும் என்ற உத்தரவு, நீதிமன்றப் பதிவாளர் ஒரு சுற்றறிக்கை வெளியிட்டார். பின்னர் டாக்டர்.அம்பேத்கரின் படங்கள் அகற்றப்படாது என தலைமை நீதிபதி உறுதி அளித்தார். 

04.ஜனவரி 26, 2022 அன்று கர்நாடகாவில் ராய்ச்சூர் நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்ற குடியரசு தின விழாவில், அம்பேத்கர் படத்தை அகற்ற நீதிபதி மல்லிகார்ஜுன கவுடா உத்தரவிட்டதாகக் கூறப்பட்டது. ஆனால் பின்னர் உயர் நீதிமன்றம் அம்பேத்கர் படத்தை வைக்க உத்தரவிட்டது. 

05. ஜனவரி 2023-ல் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி, மாநில அரசு தயாரித்து வழங்கிய உரையிலிருந்த டாக்டர் பி.ஆர். அம்பேத்கர், மற்றும் சில தலைவர்களின் பெயர்களைச் சட்டமன்றத்தில் வாசிக்காமல் தவிர்த்தார். அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்கிய டாக்டர்.அம்பேத்கர் பெயரை ஆளுநர் உச்சரிக்க மறுத்தது, அவரை அவமதிக்கும் செயல் என சபாநாயகர் அப்பாவு மற்றும் திமுகவினர் விமர்சித்தனர்.

06.காவி உடை அணிந்து உத்தரப் பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், மதச்சார்பற்ற கொள்கைக்கு மாறாகச் செயல்படுகிறார். 

 
நீதிமன்ற நீதிபதிகளில் 78% உயர் வகுப்பைச் சேர்ந்தவர்கள். 640 நீதிபதிகள் ஒரே ஜாதி. உயர்நீதிமன்ற மற்றும் உச்சநீதிமன்ற நீதிபதிகளில் பெரும்பான்மையாக பதவி வகிக்கின்ற பார்ப்பனர்கள் இத்தகைய சட்டதிட்டங்களுக்கு கட்டுப்படுவதில்லை. இந்திய அரசியலமைப்புச் சட்டம் 124, 217 மற்றும் 224 ஆகியவற்றின் கீழ் நீதிபதிகள் நியமிக்கப்படுகிறார்கள், இதில் ஜாதி வாரியான இட ஒதுக்கீடு இல்லை. பெரும்பாலான நீதிபதிகள் உயர் சாதியினர் எனவே அவர்கள் மனுநீதியை முதன்மையாக கொள்கின்றனர்.

//குடியரசு தினத்தன்று டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கரைப் பற்றி குறிப்பிடுவது அவசியம். இந்த மக்கள் அரசியலமைப்பையும் அதன் படைப்பாளர்களையும் மதிக்க வேண்டும்.//

செவ்வாய், அக்டோபர் 14, 2025

மகாத்மா காந்தி Vs பாபாசாகிப் டாக்டர் அம்பேத்கர் -I

01.விடுதலைப் போராட்டம்

  • மோகன்தாஸ் கரம்சந்த் காந்தியின் விடுதலைப் போராட்டம் என்பது வெறும் நிலப்பரப்பு நோக்கியது. அவரின் போராட்டம் பிரிட்டிஷ்காரர்களுக்கு எதிரானது. காந்தியுடன் பல தலைவர்களும் தொழிலதிபர்களும் இருந்தனர். 
  • பாபாசாகிப் அம்பேத்கர் அவர்களின் விடுதலைப் போராட்டம் சமூக அதிகாரம், அரசியல் அதிகாரம், மற்றும் பொருளாதார அதிகாரம் நோக்கியது. அவரின் போராட்டம் இந்து பழக்கவழக்கங்களுக்கு எதிரானவை.  பாபாசாகிப் கிட்டத்தட்ட தனிமையில் போராடினார், ஆதரவின்றி இருந்தார். 
  • SC/ST இன மக்கள் இந்தியர்கள் இல்லையா? அவர்கள் உயர் சாதி சுரண்டலில் இருந்து விடுபடுவது அவசியமில்லையா, உண்மையில் அது அவசியம். ஆனால் மோகன்தாஸ் கரம்சந்த் அதை அவ்வளவு முக்கியமாகக் கருதவில்லை. விடுதலை பெற்றும் இன்றும் தீண்டாமை தொடர்கிறது. வேங்கைவயல் போல் தவறு செய்தவர்களை காப்பாற்றுகிறது அரசு. 
  • காந்தி அவர்கள் இதுவரை பிரிட்டிஷ்காரரை எதிர்த்து 21 முறை உண்ணாவிரதம் இருந்துருக்கிறார். சொந்த நாட்டிலே ஆடு மாடு பன்றி கூட தாகத்திற்கு ஒரு குளத்திலோ குட்டையிலோ இறங்கி நீரை பருகுகிறது.ஆனால் சொந்த நாட்டிலே மனிதர்கள் இறங்கி நீர் குடித்தால் தீண்டத்தகாவர் நீர் பருகியதால் குளம் குட்டை நீர் நிலைகள் தீட்டாகிவிட்டதென  கூறும். தீண்டாமையை எதிர்த்து ஒரு முறையாவது உண்ணாவிரதம் இருந்து இருக்கிறாரா என்றால் இல்லை. அப்படி இருந்திருந்தால் அவரை நான் மகாத்மா என்று அழைத்து இருப்பேன். அதனால் தான் நான் Mr.காந்தி என்று அழைக்கிறேன் என்று பதிலுரைத்தார் பாபாசாகிப் ஒரு பத்திரிகை நண்பருக்கு 
  • சுதந்திரம் பெற்று 75 ஆண்டுகள் கடந்தும் தீண்டாமை ஒழிக்கப்படவில்லை  

02. சமூக விடுதலை

  • மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி இந்தியாவின் விடுதலை என்கிற நோக்கை விடவும் ஒடுக்கப்பட்ட மக்களின் சமூக விடுதலையை எதிர்ப்பதில் முதன்மையாக இருந்தார். 
  • பாபாசாகிப் சம உரிமைகளை, சமூக உரிமைகளை மீட்டெடுக்க அதிகமாகப் போராடினார். ஆண்களுக்கும் பெண்களுக்கும் சம உரிமைகள் மற்றும் வாய்ப்புகளை உருவாக்கினார். பாபாசாகிப்  அவர்கள் தேசத்திற்காகப் பாடுபடும் போது தம் 5 குழந்தைகள் மற்றும் மனைவியை இழந்தார்.

03. மதம்

  • மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி ஒரு தீவிர இந்துவாதி.  வர்ணக் கோட்பாட்டை ஆதரித்தவர். சாதி வேறுபாட்டை ஏற்றுக்கொண்டவர். பகவத் கீதாவை தன் தாய் என்றார்.  பகவத் கீதா என்ற நூலை குஜராத்தில் மொழி பெயர்த்தார். 
  • பாபாசாகிப் இந்து மதத்தை முற்றிலுமாக நிராகரித்தார் .பௌத்தத்தை மனமுவந்து தழுவினார். புத்தரும் அவர் தம்மமும் என்ற நூல் அவரின் இறுதி நூல். இந்நூலுக்கு முன்னுரை எழுதிய பின் அந்த புத்தகத்தை தங்கியே இயற்க்கை எய்தினார்.  

04. சாதி ஒழிப்பு

  • மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி ஒரு பக்தியுள்ள இந்துவாக இருந்தார், இதன் காரணமாக அவர் சாதி அமைப்பு மற்றும் வர்ணாஸ்ரம தர்மத்தை ஒழிப்பதை ஆதரிக்கவில்லை. ஆனால் தீண்டாமையை ஒழிக்க விரும்பினார். 
  • தீண்டாமைக்கு சாதியே மூல காரணமாக இருப்பதாக அம்பேத்கர் கருதினார். சாதி என்பது இந்து வேதங்களின் அதிகாரத்தில் ஆழமான வேர்களைக் கொண்டுள்ளது. அவை சாதிப் படிநிலையை நியாயப்படுத்தி நிலைநிறுத்தின என்றும் அவர் வாதிட்டார். அவரைப் பொறுத்தவரை, இந்த வேதங்களின் அதிகாரத்தை நிராகரிப்பதன் மூலம் மட்டுமே சாதி அமைப்பையும், அதன் விளைவாக தீண்டாமையையும் அகற்ற முடியும்.

05. பர்தோலித் திட்டம்

  • மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி காங்கிரசுத் தலைமை தன் கட்சியினருக்கு அறிவுறுத்திய செயல்திட்டங்களில் ஒன்று தீண்டாமை ஒழிப்புக்கான பர்தோலித் திட்டம் ஆகும். மற்ற அனைத்துச் செயல்திட்டங்களையும் தாமே முனைந்து நிறைவேற்றிக் கொண்டிருக்கும் போது காங்கிரசாரால் தீண்டப்படாதோருக்கு இந்த ஒற்றைத் திட்டத்தைச் செயல்படுத்த மனமில்லாது போயிற்று. அதுவும் இப்பொறுப்பு இந்து மகா சபையிடம் ஒப்படைக்கப்பட்டது தான் பெரிய வேடிக்கை. 
  • எனவே தான் பாபாசாகிப் பர்தோலித் திட்டத்தை நண்டுக்கு நரியைக் காவல் வைப்பது போன்று என்றுரைத்தார்  

06.தனி வாக்காளர் தொகுதி

தனி வாக்காளர் தொகுதி இது இரட்டை வாக்குரிமை கொண்ட தேர்தல் முறையாகும்.
01. பட்டியல் சாதியினர் (SCs) ஒரு SC வேட்பாளருக்கு வாக்களிக்கவும்
02. பொது வாக்காளர் தொகுதியில் SCs வாக்களிக்கவும்
  • மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி தனி வாக்காளர் தொகுதியை எதிர்த்தார். ஏனெனில் அது சமூகத்தைப் பிரிப்பதன் மூலம் அது இந்து மதத்தை அழிக்கும், சாதி இந்துத் தலைமை அனுபவித்த அதிகாரத்தைக் குறைக்கும் என்று காந்தி உணர்ந்தார். 
  • பாபாசாகிப் SC/ST சாதியினருக்கு அதிகாரம் அளிக்க தனித் தொகுதிகளை பரிந்துரைத்து,  தனி வாக்காளர் தொகுதியை பெற்றார் 

07. கடவுளின் குழந்தைகள் 

  • மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி SC/ST இனமக்களை ஹரிஜன்கள் (கடவுளின் குழந்தைகள்) என்று பெயரிட்டார்.  
  • பாபாசாகிப் பிற சாதியினர் (FC/BC etc) சாத்தான்களின் குழந்தையா என்று வினவினார். 

தாழ்த்தப்பட்ட மக்களின் இழிநிலைக்கு இந்து மதம் தான் காரணம் என்று இந்து மதத்தை, வேதத்தை அம்பலப்படுத்தி, தாழ்த்தப்பட்ட மக்கள் இந்து மதத்தை விட்டு வெளியேற வேண்டும என்று அம்பேத்கர் எழுதிய கட்டுரைக்கு மறுப்பு தெரிவித்து காந்தி தனது அரிஜன் என்ற பத்திரிகையில் இந்து மதத்தில் யாரோ சிலர் செய்த தவறுக்காக இந்து மதத்தையே குறை சொல்வது தவறு. இந்து மதததிற்குள் இருந்துகொண்ட அதை திருத்தம செய்யவேண்டும் என்று அம்பேத்கருக்கு மறுப்பு எழுதுகிறார்.

இந்திய அரசு ஹரிஜன் என்ற வார்த்தையை அதன் இழிவான அர்த்தங்கள் காரணமாக அனைத்து அதிகாரப்பூர்வ தகவல் தொடர்புகளிலும் பயன்படுத்துவதை மீண்டும் மீண்டும் தடை செய்துள்ளது. 

08. கல்வியறிவு

  • மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி 1888 ஆம் ஆண்டு, சட்டம் படிக்க லண்டனுக்குச் சென்று ஒரு வழக்கறிஞரானார். 
  • பாபாசாகிப் பல்வேறு துறைகளில் ஏராளமான பட்டங்களைப் பெற்றார். அவற்றில் பம்பாய் பல்கலைக்கழகத்தில் இளங்கலை மற்றும் முதுகலை பட்டங்களும், கொலம்பியா பல்கலைக்கழகத்தில் முதுகலை மற்றும் முனைவர் பட்டங்களும், லண்டன் பொருளாதாரப் பள்ளியில் முதுகலை மற்றும் முதுகலை பட்டங்களும், லண்டனில் உள்ள கிரேஸ் இன்னில்சட்டத்தரணி பட்டமும் அடங்கும், மேலும் பல பல்கலைக்கழகங்களில் இருந்து கௌரவ முனைவர் பட்டங்களும் (LLD மற்றும் D.Litt.) பெற்றுள்ளார். "32 பட்டங்கள்" என்ற கூற்று, உலகெங்கிலும் உள்ள நிறுவனங்களிலிருந்து பெறப்பட்ட மற்றும் கௌரவப் பட்டங்களின் தொகுப்பைக் குறிக்கிறது, இது அவரது விதிவிலக்கான கல்வி சாதனைகளை எடுத்துக்காட்டுகிறது.   
Bachelor of Arts (BA): Bombay University (now University of Mumbai)
Master of Arts (MA): Columbia University, New York.
Doctor of Philosophy (PhD): Columbia University, New York.
Doctor of Science (DSc): London School of Economics and Political Science.
Barrister-at-Law: Gray's Inn, London.
Doctor of Laws (LL.D.): Columbia University. 
Doctor of Literature (D.Litt.): Osmania University (honorary)(honorary)
பொருளாதாரத்தில் முதல் முனைவர் பட்டம் (Phd) பெற்ற இந்தியர் பாபா சாகிப் தான். 

09. எழுதிய நூல்கள்

மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி எழுதிய நூல்கள் 
  1. The Story of My Experiments with Truth: (his autobiography) - எனது சத்திய பரிசோதனைகளின் கதை: (அவரது சுயசரிதை) 
  2. Hind Swaraj or Indian Home Rule: (1909) - ஹிந்த் ஸ்வராஜ் அல்லது இந்திய ஹோம் ரூல்: (1909) 
  3. Satyagraha in South Africa - தென்னாப்பிரிக்காவில் சத்தியாக்கிரகம் 
  4. The Constructive Programme - ஆக்கபூர்வமான திட்டம் 
  5. Village Swaraj - கிராம சுயராஜ்யம் 
  6. Key to Health - ஆரோக்கியத்திற்கான திறவுகோல் 
  7. From Yeravda Mandir, ashram observances - யெரவ்தா மந்திரிலிருந்து, ஆசிரம அனுசரிப்புகள் 
  8. Unto This Last: (an adaptation of John Ruskin's work) - இது வரை: (ஜான் ரஸ்கினின் படைப்பின் தழுவல்) 
  9. The India of My Dreams - என் கனவுகளின் இந்தியா 
  10. Truth is God - உண்மையே கடவுள். 
  11. All Men Are Brothers - எல்லா ஆண்களும் சகோதரர்கள் 
  12. Discourses on the Gita - கீதை பற்றிய சொற்பொழிவுகள் 
  13. Mahatma Gandhi on Non-Violence - அகிம்சை குறித்து மகாத்மா காந்தி

டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கரின் எழுத்துகள் மற்றும் உரைகள் (BAWS) ஆங்கிலத்தில், தமிழில் மற்ற பிற மொழிகளில் மஹாராஷ்டிர அரசு வெளியிட்டுள்ளது.
    1. டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கரின் எழுத்துகள் மற்றும் உரைகள் தொகுதி 1 - 13.
    2.  டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கரின் எழுத்துகள் மற்றும் உரைகள் தொகுதி 14 பகுதி 1 பகுதி 2 
    3. டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கரின் எழுத்துகள் மற்றும் உரைகள் தொகுதி 15 - 16 
    4. டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கரின் எழுத்துகள் மற்றும் உரைகள் தொகுதி 17 பகுதி 1 பகுதி 2 பகுதி 3
இதிலிருந்து டாக்டர் அம்பேத்கர் எழுதிய சில பிரபலமான புத்தகங்களின் பட்டியல் கொடுக்கப்பட்டுள்ளது

1. இந்தியாவில் சாதிகள்: அவற்றின் வழிமுறை, தோற்றம் மற்றும் வளர்ச்சி - 1916 
2. ரூபாயின் பிரச்சனை: அதன் தோற்றம் மற்றும் அதன் தீர்வு - 1923
3. சாதி ஒழிப்பு - 1936
4. சுதந்திரத்திற்கு எதிரான கூட்டமைப்பு - 1939
5. பாகிஸ்தான் பற்றிய சிந்தனைகள் - 1940
6. ரானடே, காந்தி மற்றும் ஜின்னா - 1943
7. திரு. காந்தி மற்றும் தீண்டத்தகாதவர்களின் விடுதலை - 1943
8.காங்கிரசும் காந்தியும் தீண்டத்தகாதவர்களுக்கு என்ன செய்தார்கள் - 1945
9. பாகிஸ்தான் அல்லது இந்தியப் பிரிவினை - 1945
10. மாநிலமும் சிறுபான்மையினரும் - 1947
11. சூத்திரர்கள் யார் - 1948
12. மகாராஷ்டிரா மொழியியல் மாகாணமாக - 1948
13. தீண்டத்தகாதவர்கள் - 1948
14. புத்தர் அல்லது கார்ல் மார்க்ஸ் - 1956
15. புத்தரும் அவரது தர்மமும் - 1957
16. இந்து மதத்தில் புதிர்கள் - 2008
17. மனுவும் சூத்திரர்களும்

10. இதழ்கள்
  • மோகன்தாஸ் கரம்சந்த் பல பத்திரிகைகளை வெளியிட்டார்.  01. யங் இந்தியா 02. அகிம்சை 03. இந்திய சுதந்திரம் 04. இந்தியன் ஒப்பீனியன் தென்னாப்பிரிக்காவில் 05. ஹரிஜன்
  • பாபாசாகிப் பல பத்திரிகைகளை வெளியிட்டார். 01. (மூக்நாயக்) ஊமைவாதிகளின் தலைவர் (1920) - மராத்தி - இருவார  இதழ். 02. (பஹிஷ்க்ருத் பாரத்) இந்தியா ஒதுக்கி வைக்கப்பட்டது (1927)  - மராத்தி 03. ஜனதா (1930) வாரப் பத்திரிகை 04. (பிரபுத்த பாரத்) விழித்தெழுந்த இந்தியா (1956).

11. கற்றறிந்த மொழிகள்

  • மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி தனது தாய்மொழியான குஜராத்தியை அறிந்திருந்தார், ஆங்கிலம், பிரஞ்சு, லத்தீன், சமஸ்கிருதம் மற்றும் தமிழ் உள்ளிட்ட பல மொழிகளையும் அறிந்திருந்தார். அவர் இந்துஸ்தானி மொழியைப் பற்றிய ஒரு செயல்பாட்டு அறிவைப் பெற்றார். 
  • பாபாசாகிப் டாக்டர் அம்பேத்கருக்கு இந்தி, பாலி, சமஸ்கிருதம், ஆங்கிலம், பிரெஞ்சு, ஜெர்மன், மராத்தி, பாரசீகம் மற்றும் குஜராத்தி போன்ற 9 மொழிகள் அறிந்திருந்தார். 
12. ஆடை 
  • மோகன்தாஸ் கரம்சந்த் எளிமையான ஆடை அணிந்திருப்பார்.  அவர் 9 வயதில் கூட ஒரு சூட் அணிய பணம் வைத்திருந்தார். ஆடையின்றி ஆசிரமத்தில் இருப்பார்,  நிர்வாணமாக தூங்குவார். 
  • பாபாசாகிப் அறிவால் உயர்ந்து அதனால் இப்படிக் கம்பீரமாக உடை அணிந்து நிற்கிறார். பாபாசாகிப் கடின உழைப்புக்குப் பிறகு அந்த சூட்டை சம்பாதித்தார். அம்பேத்கர் எப்போதும் ஆடை அணிந்தவராகவும், பூட்ஸ் அணிந்தவராகவும், நேர்த்தியான உடை மற்றும் டை அணிந்தவராகவும் இருந்தார்.

13. தந்தையின் மரணம் 

  • மோகன்தாஸ் கரம்சந்த் காந்தியின் தந்தை மிகவும் உடல்நிலை சரியில்லாமல் இருந்தார். அவர் அவருக்கு மசாஜ் செய்து கொண்டிருந்தார். பின்னர் அவர் தனது அறைக்குச் சென்றார். அங்கு அவர் தனது மனைவியுடன் உடலுறவு வைத்துக்கொண்டார். இந்த நேரத்தில், அவரது தந்தை இறந்துவிட்டார். அந்த நேரத்தில் அவரால் அவருடன் இருக்க முடியவில்லை. நீண்ட நேரம் கழிப்பதே வந்தார். காந்தி இதை தனது சுயசரிதையில் எழுதினார்.
  • பீம்ராவ் 1912 இல் இளங்கலைத் தேர்வில் தேர்ச்சி பெற்ற பிறகு, ஜனவரி 1913 இல் பரோடா மாநிலப் படைகளில் லெப்டினன்ட்டாக பரோடா மாநிலப் பணியில் சேர்ந்தார். பாபாசாகிப்புக்கு தனது தந்தை பம்பாயில் கடுமையாக உடல்நிலை சரியில்லாமல் இருப்பதாகத் தெரிவிக்கும் தந்தி வந்தது. தனது தந்தையின் உடல்நிலையைக் கவனிக்க உடனடியாக பரோடாவை விட்டு வெளியேறினார். பாபாஷேப் அம்பேத்கரின் தந்தை, சுபேதார் மேஜர் ராம்ஜி மலோஜி சக்பால்  இறுக பற்றி அனைத்து அன்று இறந்தார்.
14. மனைவின் மரணம்
  • மோகன்தாஸ் கரம்சந்த் காந்தியின் மனைவி நிமோனியாவால் பாதிக்கப்பட்டபோது, ​​பிரிட்டிஷ் மருத்துவர்கள் மோகன்தாஸ் கரம்சந்த் காந்தியிடம் பென்சிலின் ஊசி மூலம் குணமடையும் என்று கூறினர். இருப்பினும் காந்தி அவரது உடலில் பிற நாட்டு மருந்து செலுத்த மறுத்துவிட்டார். அதனால் அவர் மனைவி இறந்தார். விரைவில் காந்திக்கு மலேரியா ஏற்பட்டது மருத்துவர்கள் குயினின் மூலம் தனது உயிரைக் காப்பாற்றிக்கொண்டார். அப்பொழுது பிற நாட்டு மருந்தை எடுத்துக்கொண்டார்.
  • நீண்டகால உடல்நலக் குறைவால் அவதிப்பட்டு மே 27, 1935 அன்று ராமாய் இறந்தார். அம்பேத்கருக்கு, குறிப்பாக அவரது உயர்கல்வி மற்றும் பல ஆண்டு போராட்டத்தின் போது, ​​தொடர்ந்து ஆதரவளித்தார். அவரது மரணம் அம்பேத்கரை ஆழமாகப் பாதித்தது
    • ஒவ்வொரு வெற்றிகரமான ஆணுக்கும் பின்னால் ஒரு பெண் இருக்கிறாள் என்ற பிரபலமான கூற்று. அவரது மனைவி கணிசமான கஷ்டங்களைச் சுமந்தனர். அவர்கள் கடினமான வாழ்க்கையை வாழ்ந்தனர், குடும்பத்திற்கான முழுப் பொறுப்பையும் ஏற்றுக்கொண்டனர். இதனால் பாபா சாஹேப் SC/ST மக்களை மேம்படுத்துவதற்கான உன்னத நோக்கத்திற்காக தன்னை முழுமையாக அர்ப்பணிக்க முடிந்தது. டாக்டர் அம்பேத்கர் ரமாபாயை அன்புடன் "ராமு" என்று அழைத்தார், அதே நேரத்தில் அவர் அவரை "சாகேப்" என்று அழைத்தார். அன்புடன் நினைவுகூரப்படும் அன்னை ரமா, இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்கியவருக்கு அசைக்க முடியாத ஆதரவில் அமைதியாக நின்றார்.
15. சிறை
  • மோகன்தாஸ் கரம்சந்த் தென்னாப்பிரிக்காவிலும் இந்தியாவிலும் பல முறை சிறையில் அடைக்கப்பட்டார். 1908 முதல் 1944 வரை அவர் மொத்தம் 2,338 நாட்கள் சிறையில் கழித்ததாக மதிப்பிடப்பட்டுள்ளது. தென்னாப்பிரிக்கா (1908-1914), இந்தியா (1915-1944). மோகன்தாஸ் கரம்சந்த் ஒரு பழமைவாதி.
  • பாபாசாகிப் ஒருபோதும் சிறைக்குச் சென்றதில்லை. பிரிட்டிஷ் அரசாங்கத்துடன் நேரடி மோதலை விட கல்வி,   சட்ட உரிமை மற்றும் சமூக சீர்திருத்தத்தில் கவனம் செலுத்தினார். வன்முறை போராட்டங்கள் பதிலாக அரசியல் கட்டமைப்பிற்குள் பணியாற்றினார். பாபாசாகிப் தனது சட்ட அறிவை பயன்படுத்தினார். பாபாசாகிப் புரட்சிகரமானவர், பகுத்தறிவாளர், பெண்ணியவாதி, சாதி சீர்திருத்தவாதி, பொருளாதார அறிஞர், சட்ட மேதை.  பாபாசாகிப் காலாராம் கோயில் நுழைவாயிலில், அங்கு நிலவும் சூழ்நிலையைக் காண நீதிபதியும் இருந்தார்.

புதன், ஜனவரி 22, 2025

தீண்டாமை அடிமை முறையை விட மிக கொடுமையானது



அடிமையும் தீண்டாமையும் சமூக ஒழுங்கு இல்லாதது. அடிமையும் தீண்டாமையும் ஒன்று என்று குழப்பிக்கொள்கிறார்கள். தீண்டாமை அடிமை முறையை விட மிக கொடுமையானது

A.ரோமப் பேரரசில் அடிமைகளின் நிலை 

01. பெரும் எண்ணிக்கை: ரோமப் பேரரசில் பெரும் எண்ணிக்கையில் அடிமைப் பணியாளர்கள் இருந்தார்கள்.

02. பன்மொழித் திறமை பெற்றிருந்த அடிமைகள்:  கல்வி கற்ற அடிமைகள் வீட்டுக்கு அவசியமாயிருந்திருக்க வேண்டும். வழக்கறிஞர்கள், பொழுது போக்காகக் கவிதை எழுதுவோர், தத்துவ அறிஞர்கள், கல்விகற்ற கனவான்கள் முதலானவர்களுக்குப் படி எழுதுபவர்கள், வாசிப்பவர்கள், செயலாளர்கள் ஆகியோர் தேவைப்பட்டிருப்பார்கள். இத்தகைய ஆட்கள் இயல்பாகப் பன்மொழித் திறமையும் பெற்றிருந்தார்கள். சொல்வதைக் கேட்டு எழுதுபவர்கள் சாதாரணமாயிருந்தனர். தனியார் மற்றும் பொது நூலகங்களில் நூலகர்கள் இருந்தனர். பேரரசில் சுருக்கெழுத்து பணிக்கென அடிமைகள் அமர்த்தப்பட்டார்கள். 

03. பல கலைகள் நிகழ்த்துவோராக இருந்தனர்:  சமூகத்தில் சில பிரிவினரின் ரசனைகளுக்கு நடனக் கலைஞர்கள், பாடகர்கள், இசைக் கலைஞர்கள், பல கலைகள் நிகழ்த்துவோர், உடற்பயிற்சிப் பயிற்சியாளர்கள், உடல் பிடிப்பவர்கள் போன்ற பலருடைய சேவைகள் வேண்டியிருந்தன. இத்தகைய பணிகள் எல்லாவற்றையும் செய்த அடிமைகள் இருந்தனர். இவர்கள் இந்தத் துறைகளில் புகழ்பெற்ற ஆசிரியர்களிடம் பயிற்சி பெற்றிருந்தனர்.

04.வர்த்தகத்தில் அடிமைகள்: முகவர்களாகப் பெரும்பாலும் அடிமைகளே செயல்பட்டனர். வர்த்தகத்தில், ஓர் அடிமை தனது எஜமானருடன் அல்லது மற்றொருவருடன் ஒப்பந்தம் செய்து கொள்வது சாதாரணமாகக் காணப்பட்டது. எஜமானர் ஒரு வங்கியை அல்லது கப்பலைப் பயன்படுத்தும் தொழிலை அடிமையிடம் குத்தகைக்குக் கொடுக்கலாம். அடிமை சம்பாதிக்கும் பொருள் சட்டப்படி அவனுடைய சொந்தப் பணம் ஆகும். அதைச் சேமித்துப் பல வழிகளில் பயன்படுத்தலாம். மூன்றாம் மனிதர் ஒருவருடனும் அடிமை, ஒப்பந்தம் செய்து கொள்ளலாம். வர்த்தகத்தில் அடிமைகள் எண்ணற்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டனர். பலர் கடைகள் வைத்திருந்தார்கள்; இவற்றில் உணவு, ரொட்டி, இறைச்சி, உப்பு, மீன், மது, காய்கறிகள், தேன், தயிர், பன்றியிறைச்சி, வாத்துகள், மீன் முதலானவை விற்கப்பட்டன. வேறு சில கடைகளில் துணி, காலணிகள், அங்கிகள் முதலானவை விற்கப்பட்டன.

05.ராணுவத்தில் அனுமதிக்கப்படவில்லை:  பல சமயங்களில் அடிமை ஒரு சகதொழிலாளியாக இருந்தார். பெரும் எண்ணிக்கையில் அடிமைகளுக்கு ஆயுதப் பயிற்சி அளிப்பது ஆபத்தான பரிசோதனை ஆகிவிடும். எனவே ராணுவத்தில் சேர்ந்து போர் புரிய அவர்கள் அனுமதிக்கப்படவில்லை.

B.அமெரிக்காவில் அடிமைகள் (நீக்ரோக்கள்) 

01.வேறுபாடின்றி ஒன்றாக இருந்தனர்: புரட்சியின் போது வெள்ளையரும் கருப்பரும் ஆகிய கடற்படை வீரர்கள் ஒன்றாகப் போரிட்டு, ஒன்றாக உணவு உண்டனர். 

02.அடிமைகள் அதிக அறிவுத் திறன் உள்ளவர்கள்: அடிமைகளின் உழைப்பு எல்லாவிதமான வேலைகளிலும் பயன்படுத்தப்பட்டது. நீக்ரோக்களில் அதிக அறிவுத் திறன் உள்ளவர்கள் கைத்தொழில்களில் பயிற்சி அளிக்கப்பட்டு, அந்தத் தொழில்களில் பயன்படுத்தப்பட்டார்கள், அல்லது அவர்களது பணி மற்றவர்களுக்குக் குத்தகைக்கு விடப்பட்டது.

03.அடிமைகள் சுதந்திரத்தை வாங்கினார்கள்: தொழிலாளர்களை வேலைக்கமர்த்துவோர் சாதாரணத் தொழிலாளர்களைவிட அடிமைத் தொழிலாளர்களை அமர்த்திக் கொள்வதற்கு இரண்டு மடங்கு பணம் கொடுத்தார்கள். பல அடிமைக்கைத்தொழிலாளர்கள் தங்களிடம் எதிர்பார்க்கப்பட்டதற்கு அதிகமாகச் செய்த வேலைக்காகக் கூடுதலாக அனுமதிக்கப்பட்ட பணத்தைச் சேமித்து அதை விலையாகக் கொடுத்துத் தங்கள் சுதந்திரத்தை வாங்கினார்கள்.  

 C.அடிமை முறை தீண்டாமை கொடுமையை எவ்வாறு வேறுபட்டது

01.ஊதியம்: அடிமை வேலை செய்தாலும், செய்யாவிட்டாலும் அவனுக்குரிய ஊதியம் வழங்கப்பட வேண்டும். 

02.உணவு: பணியில்லை என்றால் அடிமைக்கு உணவில்லை என்பதில்லை, தமக்கே உணவில்லை என்றாலும் அடிமைக்கு உணவளிக்க வேண்டியது முதலாளியின் கடமை. 

02.அனுமதி: அடிமை இராணுவ பயிற்சி தவிர பிற எந்த துறையிலும் பயில அனுமதி மறுக்கப்படவில்லை. 

03.பாதுகாப்பு: அடிமையை பாதுகாப்பது முதலாளியின் மிக முக்கிய பணி. அடிமைக்கு உணவு, உடை மற்றும் இருப்பிடம் அளிக்கவேண்டியது முதலாளியின் கடமை.

04.அதிக ஊதியம்: அடிமைகள் பிற தொழிலாளியை விட அதிக ஊதியம் பெறுபவர்கள்

05.உரிமை: சொத்துரிமை, கல்வி உரிமை, ஏதும் மறுக்கப்படுவதில்லை. கல்வி, செல்வம், கலாச்சாரம் ஆகிய அனைத்தும் அடிமைக்கு சாத்தியம்.

06.விடுதலை: அடிமை, அடிமையாக இருக்க வேண்டும் என்பதில்லை. அவன் அடிமைதனத்திலிருந்து விடுதலை பெற முடியும்.

07.கீழ்படிதல்: அடிமை தன் முதலாளிக்கு மட்டுமே கீழ்படிய வேண்டுமே தவிர பிறருக்கு அவன் அடிமை இல்லை.

08.இலபம் இட்டுதல்: வணிக ஒப்பந்தங்களில் அடிமை தம் முதலாளியுடனோ (அ ) மூன்றாம் நபருடன் சேர்ந்து இலபம் இட்டலாம். 

09.கட்டாயம்: ஒருவர் அடிமையை வைத்துக்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அனால் அவர் அடிமையை வைத்துக்கொள்ள வேண்டும் என்ற எந்த கட்டாயமும் இல்லை.

10.அதிக மதிப்பு வாய்ந்தவர்கள்: அடிமையை ஒரு முதலிடகவே பார்க்கப்படுகிறது. அடிமைக்கு கல்வி அளிப்பதால் அடிமையின் சந்தை மதிப்பு உயர்கிறது. அடிமைகள் அதிக மதிப்பு வாய்ந்தவர்களாக கருதப்படுவதால், மேய்ச்சல் நிலங்களில், வயல்களில் அடிமைகளை பயன்படுத்துவதில்லை. மாற்றாக குறைந்த ஊதியத்தில் சுதந்திர மனிதர்கள் வேலைக்கமர்த்ப்படுகின்றனர்.

11.கடமை: தீண்டாமை கடமையாக்கப்பட்டுள்ளது. அடிமை அவ்வாறு கடமையாக்கப்படவில்லை.


BAWS - பாபா சாகிப் பேசும் எழுத்தும் - தமிழ் - தொகுதி 9 - இயல் 3 

வியாழன், ஏப்ரல் 11, 2024

குடியரசு தினமே உண்மையான சுதந்திர தினம்


நம் நாட்டை ஆங்கிலேயர் ஆட்சி செய்தனர். இந்திய சுதந்திர தினத்திலிருந்து ஆங்கிலேயர்கள் இந்தியாவை ஆட்சி செய்யமாட்டார்கள். ஆனால் அவர்களின் அரசியலமைப்பு தான் இந்தியாவை ஆளும். 1947லிருந்து 1950வரை ஆங்கிலேயர் அரசியலமைப்பு படி இந்தியா இயங்கியது. 1950லிருந்து இந்தியா இந்திய அரசியமைப்பு படி இந்தியர்கள் ஆட்சி செய்கின்றனர். குடியரசு தினமே உண்மையான சுதந்திர தினம். இந்தியாவிற்கு வருட பிறப்பு என்பது 26 ஜனவரி (குடியரசு தினம்).         

உதாரணமாக அண்டை நாடான சிறிலங்கா சுதந்திரம் அடைந்தது 1948ல் ஆனால் அவர்களின் அரசியமைப்பு 24 ஆண்டுகள் கடந்து 1972ல் நடைமுறை படுத்தப்பட்டது. சுதந்திரமடைந்து 24 ஆண்டுகள் ஆங்கிலேயர் அரசியலமைப்பு படி சிறிலங்கா இயங்கியது. 

தேசியக் கொடி

கொடி உருவான வரலாறு 1947ல் இந்தியா சுதந்திரம் பெறுவதற்கு சில நாட்களுக்கு முன்னர், ராஜேந்திர பிரசாத்தை தலைவராகவும், மவுலானா அபுல் கலாம் ஆசாத், கே.எம். பணிக்கர், சரோஜினி நாயுடு, சி.ராஜகோபாலச்சாரி, கே.எம். முன்ஷி, மற்றும் பி.ஆர்.அம்பேத்கர் ஆகியோரையும் குழு நபர்களாக கொண்ட அமைப்பு, தேசியக் கொடியாக ஒரு கொடியை, நியமிக்க விவாதித்தது.

23 ஜூன் 1947 அன்று தொடங்கிய அவ்விவாதம், மூன்று வாரங்களுக்கு பிறகு, 14 ஜூலை 1947 அன்று முடிவடைந்தது. இந்திய தேசியக் கொடிக்கு எவ்வித மத சாயலும் இருக்கக் கூடாதென்று முடிவெடுக்கப்பட்டது.  இந்திய தேசியக் கொடி, முதல் முதலாக சுதந்திர இந்தியாவில், 15 ஆகஸ்ட் 1947ஆம் நாள் ஏற்றப்பட்டது. இந்தியா குடியரசு நாடான பிறகு, 1951-ல் இந்திய தரக்கட்டுப்பாட்டுத் துறையால் தேசியக்கொடிக்கு முதன்முதலாக அளவுமுறை நிர்ணயிக்கப்பட்டது.

தேசிய கொடியின் வண்ணம் மூன்று (காவி, வெண்மை, பச்சை) என்று தான் சொல்லிக்கொடுக்கப்படுகிறது.  தேசிய கொடியின் நடுவில் இடம் பெற்றுள்ள நீல நிற அசோக சக்கரம் சொல்லிக்கொடுக்கப்படுவதில்லை. தேசிய கொடியில் அசோக சக்கரம் வாழ்க்கை சுழற்சியை குறிக்கும் வகையில் அமைந்துள்ளது.

சுதந்திர தினம் மற்றும் குடியரசு தினம் வேறுபாடுகள்.

  • 15 ஆகஸ்ட்  1947 ஆம் ஆண்டு ஆங்கிலேயர் ஆட்சியில் இருந்து இந்தியா சுதந்திரம் பெற்ற நாள் சுதந்திரதினம்.
    • இந்திய அரசியலமைப்பு 26 ஜனவரி  1950 இல் நடைமுறைக்கு வந்த தேதியைக் குறிக்கிறது குடியரசு தினம்.
  • பிரிட்டிஷ் ஆட்சியிலிருந்து நள்ளிரவில் விடுதலை பெற்றது. ஆனால் நம் நாடு பிரிட்டிஷ் அரசியலமைப்பைப் பின்பற்றி பிரிட்டிஷ் மன்னரை அதன் தலைவராக அங்கீகரித்தது.
    • இந்திய அரசியலமைப்பைப் பின்பற்றி இந்திய குடியரசு தலைவர் அதன்  தலைவராக அங்கீகரித்தது. இந்தியாவில் அனைவரும் சமம் (ஆண்/ பெண், சாதி, மதம், மொழி, கலாச்சாரம்) என்று சொல்லும் ஒன்று.
  • செங்கோட்டை, புது தில்லியில் இந்தியப் பிரதமரால் கொடி ஏற்றுதல். சுதந்திர தினத்தில் நடைபெறும். கம்பத்தின் அடிப்பகுதியில் கொடி கட்டப்பட்டு செங்கோட்டையில் பிரதமர் கொடி ஏற்றுவார்.
    • ராஜ்பாத் , புது தில்லியில் இந்திய ஜனாதிபதியால் குடியரசு தினத்தன்று கொடி மூடப்பட்டு கம்பத்தின் உச்சியில் கட்டப்பட்டு முடிச்சை இழுப்பதன் மூலம் ஜனாதிபதி கொடியை இறக்குகிறார்.
  • சுதந்திர தினத்தில் பெரிய தேசிய இராணுவ அணிவகுப்பு இல்லை.
    • குடியரசு தினத்தன்று இராணுவ அணிவகுப்பு நடைபெறும்.
  • சுதந்திர தினத்தில் பொதுவாக தேசிய விருதுகள் வழங்கப்படுவதில்லை.
    • ஆனால் குடியரசு தினத்தன்று  தேசிய விருதுகள் வழங்குதல் நடைபெறும்
இந்திய குடியரசுதினத்தில் அதை படைத்தவர் பற்றி பேசுவதில்லை ஏன்?
இந்திய குடியரசு தினத்தில் குடியரசு தின படைப்பை பற்றி பேசப்படுகிறது. ஆனால் அதை படைத்தவர் பற்றி பேசுவதில்லை. இப்படி பேசாமல் இருந்தால் உயிரில்லா உடம்பு போன்றது, அது இயக்கமற்றது. அரசியல் சாசனம் எழுதியது SC இனத்தை சேர்ந்தவர் எனவே பேசுவதில்லை. அரசியல் சாசனம் SC இன மக்களுக்கா எழுதப்பட்டது? - S.ஜெயராஜ் MA ML.

குடியரசு நாளுக்கும் காந்திக்கும் எந்த தொடர்புமில்லை
01) இரண்டு வாரமாக செய்தித்தாள்களில், தொலைக்காட்சிகளில் தமிழக தலைவர்களின் புகைப்படங்கள் தாங்கிய வாகனங்கள் ஒன்றிய அரசால் நிராகரிக்கப்பட்டதை விவாதமாக நடத்தப்பட்டுள்ளது. குடியரசு நாள் தினத்திற்கும் நிராகரிக்கப்பட்ட தலைவருக்கும் எந்த தொடர்புமில்லை. 

02) 1967லிருந்து சமூக ஆட்சியை அமைத்தோம் என்னும் திராவிட ஆட்சி குடியரசு நாள் அன்று காந்தி படத்தை வைத்து கொடியேற்றியதும் உண்டு. 15/08/1947 சுதந்திரம் பெற்ற நாள். 5 மாதம் கழித்து 30/01/1948ல் காந்தியின் வாழ்வு முடிந்துவிட்டது. 26/01/1950 குடியரசு நாள். காந்தியின் இறப்புக்கு பின் குடியரசு நாள். காந்திக்கும், குடியரசு நாளுக்கும் எந்த தொடர்புமில்லை. ஆனால் காந்தி படத்தை வைத்து இன்றும் கொடியேற்றி குடியரசு தினம் கொண்டாடி வருகின்றனர். - (BSP) மாநில தலைவர் திரு K.ஆம்ஸ்ட்ராங் 

TT கிரிஷ்ணமாச்சாரி - இந்த நாடே Dr அம்பேத்கருக்கு நன்றி சொல்லவேண்டும்-  
அரசியலமைப்பு தினம் என்று சொன்னால் Dr அம்பேத்கரை தவிர வேறு யாரையும் சொல்லமுடியாது. அரசியல் நிர்ணய சபையில் 7 பேர் கொண்ட உறுப்பினர்களை கொண்டது. ஒரு உறுப்பினர் பதவி விலகினார் (Resigned). ஒரு உறுப்பினர் இயற்க்கை எய்தினார் (Death). ஒரு உறுப்பினர் வெளிநாடு சென்றுவிட்டார் (America). இரு உறுப்பினர்கள் கலந்துக்கொள்ளவேயில்லை. ஒரு உறுப்பினர் உடல் நலம் குறைவு (Sick). இந்திய அரசியமைப்பு என்பது (One Man Job) ஒருவரால் உருவாக்கப்பட்டது. எனவே இந்த நாடே Dr அம்பேத்கருக்கு நன்றி சொல்லவேண்டும். (BSP) மாநில தலைவர் திரு K.ஆம்ஸ்ட்ராங்

வியாழன், ஏப்ரல் 04, 2024

இந்தியாவில் சாதிகள்

இறுதி உரை

ஒவ்வொரு மாதம் மூன்றாவது ஞாயிறு மாலை அபியில் (BAWS)  பாபா சாகிப் எழுத்தும் பேசும்  ஒரு தலைப்பில் உரை நிகழ்த்தப்படும். பின்னர் அந்த உரையில் இருந்தது சந்தேகங்கள் கேட்கப்படும். கொரோனவால் நீண்ட நாள் உரை நிகழ்த்தப்படவில்லை. அபி உரை இந்த முறை அம்பேத்கர் அறிவாலயம், 40, பாரதி நகர், ஜாமின் பல்லாவரத்தில் 20/08/2023 அன்று இந்தியாவில் ஜாதிகளின் தோற்றம் இயக்கம் வளர்ச்சி - தொகுதி 1 முதல் அத்தியாயம்  உரையை அளித்தார் மகா உபாசகர் திரி ஜெயராஜ் MA ML அவர்கள். இந்த உரையே அவரின் இறுதி உரையாக அமைந்து விட்டது.

01) அம்பேத்கரிஸ மாற்றும் பௌத்த அறிஞர்கள் அறக்கட்டளை (ABI)ன் நோக்கம் என்ன?

இன்றுவரை எவரும் பாபா சாகிப் கட்டுரைக்கு எதிர்ப்பு கருத்தை அல்லது மாறுபட்ட கருத்தை சொன்னதில்லை. அதனால் பாபா சாகிப் எழுத்துக்களும் பேச்சுக்களும் மாறுதலிக்கமுடியாதவை. பாபா சாகிப் அம்பேத்கர் பட்டியல் இனத்தை சார்ந்தவர் என யாரும் நினைக்கக்கூடாது. அவரின் தத்துவங்களை வைத்துதான் நான் அவரை நேசிக்கிறேன். பகவன் புத்தர் மற்றும் பாபா சாகிப் போதித்த தத்துவங்களுக்கு ஈடு இணை ஏதுமில்லை. ஆகா இப்படிபட்டவரை LKG மற்றும் UKG படித்தர்களுடன் ஒப்பிட்டு, இறுதியில் இவர்களை பாபா சாகிப் அவர்களுக்கு கீழே வைத்துவிடுகின்றனர். அம்பேத்கரிஸ்ட் என்று சொல்பர்களும் இந்த தவறை செய்கின்றனர். இது கூடாது என்பதால் தான் ABI இந்த சிரமத்தை எடுத்துக்கொள்கிறது.

பாபா சாகிப் எப்படி பட்டவர், இந்த சமூகத்திற்கு எப்படி அற்பணித்துக்கொண்டார், என்னென்ன தியாகங்கள் கொண்டுவந்தார் என்பதை பாபா சாகிப் எழுத்தும் பேச்சும் படித்தால் போதும் புரிந்து கொள்ள முடியும்

02. இந்தியாவில் சாதிகள் இந்த தலைப்பில் பாபா சாகிப் ஆய்வு என்ன?

1916 (Caste in India) இந்தியாவில் சாதிகள் - பாபா சாகிப் எழுத்தும் பேச்சும் (English Volume 1 First 26 Pages தமிழ் தொகுதி1 35-40 பக்கங்கள்).

இந்த உரை 1917 அன்றே பதிவு செய்யப்பட்டு வெளியிடப்பட்டது. 107 ஆண்டுகள் கடந்தும் இந்த மாபெரும் தலைப்பு "இந்தியாவில் சாதிகள்" கவுண்டர், பறையர், நாயக்கர், ஐயர் என்று பேசுவதில்லை. கீழ் கண்ட தலைப்புகளில்  தான் பாபா சாகிப் ஆய்வு செய்கிறார்.

  • சாதி எவ்வாறு துவங்கப்பட்டது? 

  • சாதி உருவானதற்க்க்கான கரணங்கள் என்ன?

  • சாதியை இயக்கக்கூடிய வழிமுறைகள் என்ன?

  • இந்த நாட்டை ஆட்டி படைப்பதற்கான ஒரு கொடூரமான தத்துவமாக எவ்வாறு வந்தது?

மகாராஷ்டிராவில் பண்பாடு பழக்கவழக்கங்கள் இதைபற்றி பாபாசாகிப் ஆய்வு செய்ய இருந்தார். ஆனால் இந்தியாவின் பொதுநலன் கருதி இந்தியாவில் சாதிகள் அதன் அமைப்புத் தோற்றம் வளர்ச்சி என்று எழுதி அதனை சமர்ப்பித்தார். இக்கட்டுரை பார்த்தால் சாதாரண கட்டுரை போன்று தெரியும். ஆனால் அன்றைக்கு ஜாம்பவான் என்று அறியப்பட்ட (Nesfield)  நேசபையில்ட் (Risley) ரைசீலி கேட்கர் (Ketkar) ஜாம்பவான்களை என்ன பெரிதாய் சொல்லிட்டா பெரிய சுண்டைக்காய் மாதிரி என்று சொல்லி இந்த கட்டுரையை சமர்ப்பித்துள்ளார். 

ஒவ்வொரு துறையிலும் ஒவ்வொரு பொருளிலும் யார் யார் மிகப்பெரிய தத்துவங்களை அளித்தார்களோ அவர்களின் எழுத்துக்களை பார்ப்போம் என்றால் குறை சொல்லிவிட்டு பேசுவார். இந்த குறை ஏன் என்றால் காரண காரிய கோட்ப்பாடு ஆய்வுகளின் அடிப்படையில் பதிவு செய்து இருக்கிறார். இப்படி ஆழமான கருத்துக்கை அறிவுக்கு உட்படுத்தி அந்த கருத்துக்களை பாபா சாகிப் பின்னால் வைத்து பின்னர் அவர்களின் கருத்துக்களை பாபா சாகிப் கருத்துக்களுக்கு முன்னால் எடுத்து செல்வது மிக மோசமானது. 

03. ஜாதி என்றால் என்ன?

முதன்முதலில் இதனை வருணம் என்று சொன்னார்கள். இந்த வர்ணம் தான் ஜாதியாக பிரிந்து பிரிந்து செல்கிறது (Sub Division). பார்பனர்களில் 1300 + ஜாதிகள் இருக்கிறது. (பாபா சாகிப் தொகுதி 5ல் அதன் பட்டியலை தருகிறார்) தென் திசையில் உள்ள பேச்சு "எள்ளுவகை எண்ணாலும் பல்லுவகை எண்ணமுடியாது". ஜாதிகள் அவ்வளவு இருக்கிறது. 

Scheduled Caste (SC) என்ற சொல்லால் தான் பாபா சாகிப் நம்மை பயன்படுத்தார். தலித்துகள், தாழ்த்தப்பட்டவர்கள், ஹரிஜன் என்ற சொல்லாடலை பயன்படுத்தியதில்லை. 118 துணை பிரிவு 4 வருணங்கள். நான்கு வருணங்கள் தான் 6000 ஜாதிகளாக வந்துள்ளது. இந்தியா பிளவு பிளவு நோக்கி தான் சென்றுகொண்டு இருக்கிறது.

இந்த ஒவ்வொரு அலகும் (Unit  Enclosed) தனக்குள் மூடிக்கொள்வது. இந்த ஒரு அலகுக்கும் மற்றோரு அலகுக்கும் எந்த தொடர்பும் இல்லை (Gated Community) இந்த 6000 ஜாதிகள் லட்சமாக கூட போகும்.

ஜாதி என்பது பன்மை. ஒன்றுக்கும் மேற்பட்ட மக்கள் இருந்தால் தான் அது பிரிவினையாகும். இந்திய மக்கள் தொகை செயற்கை முறையில் பிரிவினை செய்கின்றனர். அதனால் இது ஒவ்வொன்றும் ஒரு அலகு (unit ) இந்த அலகு சிறிதாகவும் இருக்கலாம், பெரிதாகவும் இருக்கலாம். உதாரணமாக ஒவ்வொரு ஜாதி மக்கள் தொகை ஒவ்வொரு விதமாக இருக்கும் (வேறுபட்டு இருக்கும்). ஒவ்வொரு ஜாதியும் ஒரு அலகு. இந்திய மக்கள் தொகை செயற்கை முறையில் பிரிக்கப்பட்ட ஒரு அலகு. இந்த அலகு தான் ஜாதி.

04. இந்து திருமண சட்டம் கொண்டுவந்தவர் யார் ?

இந்து திருமண சட்டம் கொண்டுவருவதற்கு முன் சாதி விட்டு சாதி திருமணம் செய்துகொண்டால் நீதி மன்றம் அந்த திருமணம் செல்லாது என்று 1955 வரை தீர்ப்பு வழங்கிருக்கிறது. நீதி மன்றத்திலும் ஜாதி என்பது அங்கிரரிக்கப்பட்டது. இது இந்து மத கோட்பாட்டின் படி தீர்மானித்தது. 1955ல் தான் பாபா சாகிப் அம்பேத்கர் இந்து திருமண சட்டம் கொண்டுவந்தார். 

 


05. ஜாதி எப்பொழுது உருவானது?
இந்தியாவில் பல்வேறு இனக்குழுக்கள் இருந்தன. திராவிடர்கள், ஆரியர்கள், மங்கோலியர்கள், சிந்தியர்கள். இது போன்று பல்வேறு இனக்குழுக்கள் உள்ளது. இவைகள் தனிப்பட்ட பழக்கவழக்கங்கள் வைத்துகொன்று இருந்தனர். ஜாதி என்று ஒன்று வருவதற்கு முன் அவர்கள் தங்களுக்குள் திருமணம் செய்துகொண்டனர். புறமணம் (Exogamy)

அலகு மூடிக்கொண்டது, தங்களுக்குள் திருமணம் செய்துகொண்டது. இதற்கான அடையாளம் தான் பல சாதிகள் பிரிந்தது. இவர்கள் பிற அலகுடன் சேரமுடியாமல், சேராமல் அகமணம் (Endogamy) ஏற்பட்டது.  

தத்துவத்தை புரிந்துகொண்டு ஒரு மனிதனை தத்துவ ரீதியாக எடை போடவேண்டும் என்றைக்கிறார் பாபா சாகிப். வாழ்வியலை பற்றி ஒவ்வொரு மதமும் ஒவ்வொரு விதமாக சொல்வது தான் தத்துவம். இந்துவின் தத்துவம் இந்துத்துவா. இந்துவின் கோட்பாடு ஜாதி.  ஜாதி தான் இந்துத்துவ கோட்பாடு. கிறித்துவர்கள் யேசுநாதரின் கோட்பாட்டை ஏற்றுக்கொண்டனர். அவர்களுக்கு ஜாதி கிடையாது இதை போன்று தான் இஸ்லாம்.

பகவான் புத்தர் (Sutta Nibatha) சுத்த நிபாத அதற்கு மேல் அசலாய சுத்தா, வசுத்தே சுத்தாவில் இன விருத்தி என்பது பெண்ணின் கருவுக்கும் ஆணின் விந்துவுக்குமான உறவு தான் பிறப்பு. இந்த கருத்தை எந்த மதமும் சொல்லவில்லை. ஜாதி என்பது இங்கு செயற்கை.

இது கடவுளால் உருவாக்கப்பட்டது என்று இந்து மதம் போதிக்கிறது. இந்து என்று சொன்னால் அவன் ஜாதியை ஏற்றுக்கொண்டவன் என்று பொருள். இதனை மீற இந்துவுக்கு உரிமை இல்லை.  சமத்துவம் பேசும் யாரும் இந்துவாக இருக்க முடியாது. 

ஒரு குழு அந்த குழுவுக்குள் திருமணம் செய்துகொள்வது தான் ஜாதி என்றுரைக்கிறார் (Ketkar) கேட்கர். பௌத்தத்தில் ஜாதி என்றால் பிறப்பு என்று பொருள். இந்த பாலி மொழி சொல்லை வைதிகம் களவாடி கோச்சையாக  பயன்படுத்தி இருக்கிறது. பாபா சாகிப் இங்கே ஒரு தர்க்கம் (logic ) பயன்படுத்துகிறார். 

(A) ஒரு குழுவில் ஆண் மற்றும் பெண் சம எண்ணிக்கையில் இருக்கின்றனர் என்றால் அந்த குழுவில் அகமண  திருமணத்தில் எந்த பிரச்சனையும் இல்லை.  (ஆண் 50 =  பெண் 50) 

(B) இந்த குழுவில் ஒரு ஆண் இறந்து விடுகிறான் என்றால் ஒரு பெண் உபரியாக (Surplus) உள்ளார்.  (ஆண் 49 (50-1) =  பெண் 50). உபரி பெண்ணுக்கு  துணை கிடைக்காமல் போய்விடும்- அந்த பெண்ணிற்கான இணை வேறு ஒரு குழுவில் இருந்து தான் பெறமுடியும். புறமணத்திற்கு சென்றுவிடக்கூடாது. இதனை தடுக்க மூன்று வழிகள் பயன்படுத்தபடுகிறது.

  • (1) உபரியாக உள்ள பெண்ணை கொல்வது. கணவனை இழந்த பெண்ணை உடன்கட்டை (சதி) மூலம் கொல்வது. 

  • (2) கணவனை இழந்த பெண்ணை விதவையாக வைத்து இருத்தல்.  

  • (3) சிறுமி திருமணம். சிறு வயதிலே திருமணம் ஏற்பாடு (அ) துணையை நிச்சயம் செய்துவிடுதல்.  சிறுமி வயது அடைவதற்கு முன் துணையார் இறந்துவிட்டால் அச்சிறுமியும் விதவையாகிவிடுவாள். சாதியை நிலை நிறுத்த இந்த சமூக கொடுமைகளை புனிதமாக கருதுகின்றனர் 

(C) இந்த குழுவில் ஒரு பெண் இறந்து விடுகிறாள் என்றால் ஒரு ஆண் உபரியாக (Surplus) உள்ளார். (ஆண் 50 = பெண் 49 (50-1)). அந்த ஆணுக்கான இணை வேறு ஒரு குழுவில் இருந்து தான் பெறமுடியும். இதனை தடுக்க பெண்ணிற்கு பயன்படுத்திய முறையை பின்பற்ற முடியாது. ஏன் என்றால் ஆண் அதிகாரம் மிக்கவன். கட்டுப்பாட்டை மீறுவான்.  உபரியாக உள்ள ஆண் கட்டாய துறவு மேற்கொள்ளவேண்டும். உண்மையான சாமியாரால் எந்த பிரச்சனையும் இல்லை. கட்டாய துறவில் அவர்கள் ஒழுங்கீனமாக இருக்கிறார்கள். ஆண் ஆதிக்க சமூகத்தை சேர்ந்தவன்.  

சாதி என்பது அகமணமுறை. இந்த அகமணமுறை என்று சமூகத்தில் நிலைநிறுத்தப்பட்டதோ  அன்று தான் சாதி தோற்றுவிக்கப்பட்டது. சாதி என்பது அகமணமுறை (சதி, விதவை, சிறுவர் திருமணம் மற்றும் துறவு) துறவு என்பது வலுவானது இல்லை. துறவு வாழ்வு மிகக்குறைவு. துறவு வாழ்வில் ஒழுங்கீனம் தான் நடைபெறும் எனவே அகமண முறைக்கு இது உதவாது.

06. அகமண முறை இயக்கி எது?

இப்பொழுது இடுப்புக்கு கீழே தான் கால்சட்டை (Pant) வருகிறது. இதில் அணியும் பனியன் எல்லாம் வெளியே தெரியும். இதனை பார்க்க அருவெறுப்பாக இருக்கும். இது தான் பாணி (Style ஸ்டைல்) என்று ஒருவர் சொல்கிறான். அதனை அப்படியே காப்பி அடிக்கிறோம். இதற்கு முன்பு (Tight pant) இறுக்கமான பேண்ட் அணிந்துகொண்டு இருந்தோம். அதற்க்கு முன்பு பெல் பேண்ட்  அணிந்துகொண்டு இருந்தோம். அதற்க்கு முன்பு (Correct Fitting) சரியாக பொருத்தமாக அணிந்துகொண்டு இருந்தோம். இது எப்படி மாறுகிறது என்றால் காப்பி அடித்தல் முறையினால். காப்பி அடித்தல் முறையினால் சாதி அபிவிருத்தி அடைகிறது.

அவா வந்தா, அவா ஆபீஸ்க்கு வந்துட்டா என்று பெருமையாக பேசுவார். இந்த பேச்சு முறை பிராமணர்களின் பேச்சு முறை. பிராமணர்களை போல பேசுவதால் அவர்களை போன்று உயர்ந்தவர்கள் என்று தோற்றத்தை ஏற்படுத்துவர்   (Imitation) ஒருவரைப்போல் இன்னொருவர் மாற்றிக்கொள்வது காப்பி. இது (காப்பி) தான் அகமண முறை இயக்கி  (Mechanism)

07. முழுமையாக சதி, விதவை குழந்தை திருமணம் ஆகியவற்றை பின்பற்றுபவர் யார்?

ஆங்கில ஆய்வாளர் (Gabriel Tarde) கேப்ரியல் டார்டே காப்பி அடித்தலை மிக விஞ்சான பூர்வமாக ஆய்வு செய்து வெளியிட்டுருக்கிறார். எது உயர்வாக இருக்கிறதோ அதை தான் பின்பற்றுவர். எப்போதும் காப்பி அடித்தல் Higher to Lower. தரம் குறைந்தால் அதனை பின்பற்றுவதில்லை. பிசைக்காரன் போல் ஆடை அணிந்து கொண்டு செல்வார்களா? சாதி தெரிந்துவிடக்கூடாது, உயர்வான மதிப்பு அடையவேண்டும் என்று தான் காப்பி அடிக்கப்படுகிறது. 

அருகில் உள்ளவர்கள் காப்பி அடித்தல் அதிகமாகவும் தொலைவில் உள்ளவர்கள் காப்பி அடித்தல் குறைவாகவும் இருக்கும். பிராமணன், சத்திரியன், வைசியன் மற்றும் சூத்திரன் என்பது தான் நான்கு வருணம். இதில் SC மற்றும் ST இனமக்கள் இந்த வருண கோட்பாட்டில் வரவில்லை.

பிராமணனுக்கு மிக அருகில் இருப்பது சத்திரியன். ஆகா சத்திரியன்  பிராமணனை 80% to 90 % காப்பி அடிப்பர். சத்திரியனுக்கு அடுத்து வைசியன். வைசியன் பிராமணனை 60% to 70% காப்பி அடிப்பர். இந்த வருணைக்கோட்பாட்டில் இறுதில் உள்ளது சூத்திரன். சூத்திரன் பிராமணனை 30% to 40% காப்பி அடிப்பர்.

அருகில் இருப்பவர் வீரியமாகவும், அதிகமாகவும் (Higher) காப்பி அடிப்பர். தொலைவில் உள்ளவர்கள் வீரியமின்றி குறைந்த அளவு (Lower ) காப்பி அடிப்பர்.

பிராமணன் முழுமையாகவும், சரியாகவும் சதி, விதவை குழந்தை திருமணம் ஆகியவற்றை பின்பற்றுவான். அருகில் உள்ள சத்திரியன் சதியை பின்பற்றமாட்டான், ஆனால் விதவை மற்றும் குழந்தை திருமணத்தை பின்பற்றுவான். பின்னர் உள்ள வைசியன் சதி, விதவை முறையை பின்பற்ற மாட்டார்கள் ஆனால் குழந்தை திருமணத்தை பின்பற்றுவர். பின்னர் உள்ள சூத்திரன் சதி, விதவை முறையை பின்பற்ற மாட்டார்கள் ஆனால் குழந்தை திருமணத்தை பின்பற்றுவர்     

08. சாதியை  உருவாக்கியது யார்? 
இந்த அகமண முறையில் உள்ள மூன்று முறைகளை (சதி, விதவை, குழந்தை திருமணம்) உறுதியாக பின்பற்றுகின்றனரோ அவர் தான் சாதியை உருவாக்கி இருப்பர். அவர்கள் ஏற்படுத்திய சாதியை அவர்களே நீத்து போகசெய்யமாட்டார்கள். விதவைக்கு மொட்டை அடித்து, தலைக்கு முக்காடு போட்டு விடுவார்கள். நல்லது கேட்டது எதிலும் கலந்து கொள்ள செய்யமாட்டார்கள். அதை தாண்டி சென்றால் சமூகத்தில் மதிப்பளிக்க மாட்டார்கள்.  புழுங்கி புழுங்கி விதவை கோலத்தில் சாகவேண்டும். 

இப்பூ உலகில்    அதிக அனுகூலங்களை அனுபவிப்பவர்கள் பிராமணர்கள். அவர்கள் பூலோக கடவுள். அவர்களை வீட்டுக்கு அழைத்து நம்மை ஆசிர்வதிக்க வேண்டுவோம். 

சோனியா காந்தி கிறிஸ்துவமதத்தை சார்ந்தவர். பிராமணர்களை கூப்பிட்டு வேள்வி வளர்த்து பிரமணரிடம் ஆசீர்வாதம் பெற்றார். ஆசிர்வாதம் பெற்ற பின் MP பதவிக்கு மனு தாக்கல் செய்கிறார். நாங்கள் தான் (பிராமணர்கள்).புலோக கடவுள். நல்ல நாள் கெட்ட நாள் மற்றும் திருமண செய்துவைப்பர்.

09. சாதிய வளர்ச்சிக்கு கரணங்கள் யாவை?
01. காப்பி அடித்தல் (Imitation)

02.  சாதிய வன்மங்கள் (வன்முறைகள்) - Punishment

  
10.  சாதிய வன்மங்கள் (வன்முறைகள்) என்பது எப்படி தெரிகிறது?

அகமண முறையை மீறினால் கொலை செய். சாதி விட்டு சாதி திருமணம் செய்வது அகமண முறையை தகர்கின்ற செயல். எனவே (திருச்செங்கோடு கோகுல்ராஜ்) அவர் கொல்லப்பட்டார்.

சாதியால் ஒவ்வொரு சாதியும் என்ன செய்யவேண்டும் என்றிருக்கிறது. 

    1.  ஒவ்வொரு சாதியும் என்ன தொழில் செய்யவேண்டும்? 
    2. எந்த விதமான ஆடையை அணிய வேண்டும்? 
    3. எந்தெந்த உணவை எடுத்துக்கொள்ளவேண்டும்? etc 

    இதனை மீறக்கூடாது. நாங்குநேரியில் பள்ளி மாணவரை ஏன் அடித்தனர்? அவன் நன்றாக படிக்கிறான் என்பதால். SC இன மாணவன் நன்றாக படிக்கக்கூடாது. அதானல் சிகரெட் வாங்கிட்டு வா, இதை வாங்கிட்டு வா, அதை வாங்கிட்டு வா என்று எடுபிடி வேலையை கொடுத்து செய்ய செய்தார்கள். அதனால் அம்மாணவன் பள்ளிக்கூடம் செல்லவில்லை. இது தான் இந்து மனப்பான்மை.

    பாலத்தின் மேல் ஒரு SC இனத்தை சேர்ந்த ஒருவன் உட்கார்ந்து இருந்தான். அவ்வழியாக சென்ற வேறு சமூகத்தினர் அவனை அடித்து கொன்றனர். 

    இன்னொரு SC இனத்தை சேர்ந்த ஒருவன் சபரிமலை அருகில் சண்டை போட்டவர்களை விலக்கிவிட்டான். ஏண்டா விலக்கிவிட்டாய் என்று அவனை அடித்து துன்புறுத்தினர். இது எல்லாம் சாதி வன்மங்கள்   

    மகாராஷ்டிரத்தில் பிராமணர் வேட்டி அணிவது போன்று வேறு ஒரு சமூகம் அணிந்தது. இந்த இமிடேஷன் (காப்பி அடித்தல்) கூடாது என்று அரசு வரை கொண்டு சென்று தடுத்தனர்.

    நமஸ்காரம் என்பது பிராமணர்கள் பயன்படுத்திடும் சொல். இதை வேறு ஒரு சமூகம் பயன்படுத்த கூடாது என்று அரசு வரை சென்று தடுத்தனர்.

    இந்த சாதியினரை இப்படித்தான் புதைக்கவேண்டும் என்று இருக்கிறது. இறந்த உடலை எரிப்பது உயர் சாதிக்கு உரியது.  மீறி எரித்தால் பழிவாங்குவர்.  இந்த இமிடேஷன் சாதிக்கு உட்பட்டு இருக்கவேண்டும்.

    சாதி இருக்கும் வரை SC இன மக்களுக்கு முன்னேற்றம் இல்லை என்றுரைக்கிறார் Dr.அம்பேத்கர். இந்துக்கள் என்போர் சாதி வன்மனத்தில் திளைத்தோர்.  இதில் இருந்து விடுதலை பெற உங்களை இழிவு படுத்தும் மாதத்தில் இருந்து நீங்கள் வெளியேறவேண்டும். 

11. Gated Community 
    சாதியை படைத்தான் பிராமணன். அவன் தங்கள் கதவுகளை மூடிக்கொண்டான். கதவுக்கு வெளியே இருப்பவர்கள் அவர்களும் பிராமணன் செய்வது போன்று இமிடேட் காப்பி அடித்து தங்கள் கதவுகளையும் மூடிக்கொண்டனர்.  இப்படி ஒன்றை பார்த்து ஒன்று காப்பி அடித்து தங்கள் கதவுகளை மூடிக்கொண்டது.   சாதி விட்டு சாதி திருமணம் செய்து கொண்டால் அவர்களை சமூகத்தில் இருந்து விலக்கிவைத்து விடுவர்   
12. சாதியை ஒழித்தது யார்?
1955 க்கு முன் அகமண முறையே சட்டமாக இருந்தது. 1955 இந்து திருமண சட்டம் வந்த பின்பு புறமணம் சட்டம் ஆனது. சாதியை ஒழித்தது Dr.அம்பேத்கார். சாதி மறுப்பு திருமணத்திற்கு சட்டம் இயற்றியது 
Dr.அம்பேத்கார். வேறு ஒருவரையும் சாதி மறுப்பு திருமணத்திற்கு நாம் சொல்வோம்.  அவர் எங்கே என்ன செய்தார்?  எந்த சட்டத்தை கொண்டுவந்தார்? இதை நீங்கள் ஆய்வுக்கு எடுத்துக்கொள்ள வேண்டும்.  ஏன் என்றால் இதை கஷ்டப்பட்டு பாடுபட்டவர்க்கு பெருமை சேர்க்கவேண்டும் ஒழிய நிடுவில் நின்று விட்டு போனவருக்கு எல்லாம் பெருமை சேர்க்கக்கூடாது. 

13. இந்து திருமண சட்டம் எதிர்த்தவர் யார் யார்? ஏன்?

அன்று இருந்த இந்து பெண்கள் இந்து திருமண சட்ட சட்டத்தை எதிர்த்தனர். காரணம் சாதி என்ற காரணத்தை தவிர வேறு ஏதும் இல்லை.

Parliamentல் முஸ்லிம்கள் இந்து திருமண சட்ட சட்டத்தை  எதிர்த்தனர்.  காரணம்  Dr.அம்பேத்கர் மதத்தில் தலையிடுகின்றார். எங்களுடைய பழக்கவழக்கங்கள் தலையிடுகின்றார். இதை நாங்கள் ஏற்றுக்கொள்ளமாட்டோம் என்று எதிர்த்தனர். 

14. இந்து திருமண சட்டம் யார் யாருக்கு?
அம்பேத்கர் 1916 ல் கொடுத்த கட்டுரைக்கு 1955 ல் இந்த அகமண முறையை தகர்த்து சட்டம் கொண்டுவருகிறார். புறமண முறைக்கு கொண்டுசென்று விட்டார். இந்து திருமண சட்டம் என்பது  கலப்பு திருமணம்  மதங்களுக்கு இடையிலான திருமணம். 21 வயது அடைந்த ஒரு ஆண் 18 வயதை அடைந்த பெண்ணை திருமணம் செய்துகொள்ளலாம். அப்பெண் எந்த சாதியாகவும் இருக்கலாம், வருணத்திற்கு வெளியே உள்ள SC இனமாகவும்  இருக்கலாம், 

01. இந்து திருமண சட்டத்தில் விதவை மறுமணம் செய்துகொள்ளலாம் 
02. விவாகரத்து மனு Divorce Petition பெண்களும் போடலாம்   

இந்து, சீக்கியர், ஜைனர் மற்றும் பௌத்தம் ஆகிய நான்கு மதத்தவர்க்கும் தான் இந்து திருமண சட்டம். 21 வயது அடைந்த ஒரு இந்து ஆண் 18 வயது அடைந்த ஓர் இந்து பெண் அல்லது ஓர் சீக்கிய பெண் அல்லது ஜைன பெண் அல்லது பௌத்த பெண்ணை திருமணம் செய்து கொள்ளலாம். ஆகவே இது Inter Religious Marriage  

இந்து மதம் அழிந்து விடக்கூடாது என்பதற்காக புரட்சி வேடம் போட்டவர்கள், கம்யூனிஸ்ட் எல்லாம் இந்து என்று சட்டம் சொல்கிறது என்று எதிர்த்தனர். ஒருவர் இதில் இணைக்கப்பட்ட காரணத்தால் அவர் இந்து எனக்கருத முடியாது என்னும் ஒரு விதி இந்த சட்டத்தில் உள்ளது. Section 5A Hindu Marriage Act  

Article 25 இந்து என்ற இடத்தில் சீக்கியர் என்று போட்டுக்கொள்ளுங்கள். அவன் என்று நீங்கள் எது எழுதினாலும் அது பெண்ணாக இருக்கும் பொது அவள் என்பதையும் குறிக்கும். இந்து சீக்கியர் ஜைனர் மற்றும் பௌத்தர் திருமண சட்டம் என்று பெயர் கொள்ளவேண்டும். அனால் அப்பெயர் மிகப்பெரியது. பௌத்தம் இந்து மதத்தின் ஒரு பிரிவு என்று சொல்கின்றனர்.  அம்பேத்கர் 22 உறுதிமொழிகளை ஏன் கொடுத்தார்? அவை இந்து மதத்திற்கு எதிரானவை. குஜராத் மோடி 22 உறுதிமொழிகளை படமாக இருந்ததை ஏன் நீக்கினார்? பௌத்தம் இந்து மதத்தின் ஒரு பகுதி அல்ல. பௌத்தத்தை அழிப்பதற்காக உருவாக்கப்பட்ட சொல் அது. பௌத்த மத அடையாளங்கள், சான்றுகள் அழிப்பதற்காக உருவாக்கப்பட்டது.

  


ஜெய் பீம்