புதன், மார்ச் 02, 2011

இந்தியாவில் பௌத்தம் ஒரு பூர்வாங்க கண்ணோட்டம்

1954 டிசம்பர் 4 ம் தேதி சர்வ தேச பௌத்த மாநாடு பர்மாவில் உள்ள ரங்கூனில் நடைபெற்றது. அறிவர் அண்ணல் அம்பேத்கர் அந்த மாநாட்டில் கலந்து கொண்டு நிகழ்த்திய உரை.

01 . இந்தியாவுக்கு வெளியே பௌத்தத்தை பரப்புவது சாசனக் கவுன்சிலின் குறிக்கோள்களில் ஒன்றாக இருக்க வேண்டும். இவ்வகையில் இந்தியாவை தங்களது முயற்சிக்கான முதல் நாடாகத் தேர்ந்து எடுத்துக் கொள்ளவேண்டும். இந்தியாவை போல் வேறு எந்த நாடும் இந்த அளவுக்கு உருப்படியான பலனை தராது. இதற்கான காரணம் தெளிவானது.

   -இந்தியா பௌத்த மார்க்கத்தின் பிறப்பிடம்

   -கி.மு 543 லிருந்து கி.பி 1400 வரை ஏறத்தாழ 2000
   ஆண்டுகாலம் அது அங்கு செழித்து வளர்ந்தது. அங்கு
   எல்லையற்ற மரியாதையோடு போற்றப்படுகிறது.

   -இந்தியாவில் பௌத்தம் பட்டுப் போன ஒரு தாவரமாக
    இருக்கக்கூடும். ஆனால் அது தனது வேர்களை இழந்து
   மடிந்து  போய்விட்டதாக எவரும்  கூற முடியாது.

   -புத்தர் விஷ்ணுவின் அவதாரமாக இந்துக்களால்
    கருதப்படுகின்றது

   -நேபுர்ச்நேரரர் யூதர்களிடையே தமது கடவுளர்களுக்குச்
    செய்ய வேண்டி  இருப்பதை போல் ஒரு புதிய தீர்க்கதரிசியின்
    பால் பயபக்தியை உண்டாக்க வேண்டிய அவசியம்
   ஏற்ப்படவில்லை.    தாங்கள் செய்ய  வேண்டியதெல்லாம்
   அவருடைய மார்க்கத்தை திரும்ப கொண்டு வருவது தான்.

   -ஒரு பயனுள்ள முயற்சிக்கு இத்தகைய எளிய
   சூழ்நிலைமைகளை வேறு எந்த நாட்டிலும் காண
  முடியாது.மற்ற நாடுகளில் நீண்ட நெடுங்காலமாக
  வேரூண்டி போன மதங்கள் இருக்கின்றன.

   -இந்நிலையில்தான் அந்நாடுகளில் பௌத்தம் பயண
    அனுமதிச் சிட்டு இல்லாத அழையா விருந்தாளியாகத்தான்
    நுழைந்தது. இந்தியாவை பொறுத்தமட்டில் புத்தருக்குப்
    பயண அனுமதிச் சிட்டோ அல்லது நுழைவு  உரிமைச்
   சிட்டோ தேவையில்லை.

 02 . இந்து மதத்தை விட்டு வெளியேறி பௌத்த மார்க்கத்தை தழுவ விரும்பும் பல பகுதியினர் இந்துக்களில் இருக்கின்றனர். தீண்டப்படாதர்களையும், பின் தங்கிய வகுப்பினர்களையும் இவ்வகையில் முக்கியமாகக் குறிப்பிட வேண்டும். படிநிலை அடிப்படையில் அமைந்த ஏற்றத்தாழ்வு சித்தாந்தங்களை இந்து மதம் கடைபிடிப்பதால் இம்மதத்தை அவர்கள் எதிர்கின்றனர். அறிவுத்துறை பெரிதும் வளர்ச்சி அடைந்துள்ள இன்றைய காலக்கட்டத்தில் இந்த வகுப்பினர் இந்து மதத்துக்கு எதிராகப் போர்கோடி தூக்கினார்கள். அவர்களது அதிருப்தியை பயன்படுத்திக் கொள்வதற்கு இது ஒரு நல்ல தொரு சந்தர்ப்பமாகும்.

கிறித்துவ மதத்தை விட பௌத்தத்தை விரும்புவதற்கு 3 காரணங்கள் உண்டு.

 01 . புத்தரும் அவரது போதனைகளும் இந்தியாவிற்கு
      அன்னியமானதமல்ல.

02 . புத்தரின் கோட்பாட்டின் மையக் கருத்து அல்லது
       அவரது சித்தாந்ததின் மையக் கருத்து சமத்துவம் ஆகும்.
      இதைத் தான் அவர்கள் விரும்புகின்றனர்.

03 . புத்தரின் போதனைகள் பகுத்தறிவை சார்ந்தது. அதில்
      மூட நம்பிக்கைக்கு இடமில்லை.

ஆரம்ப கட்டத்தில் பௌத்தத்தில் சேருபவர்கள் பெரும்பாலோர் கீழ்தட்டு வர்க்கங்களை சேர்ந்தவர்களாக இருப்பார்கள் என்பதற்காக இயக்கத்தை தொடங்குவதில் எந்த வித தயக்கமும் காட்டக்கூடாது.

இந்தியாவில் கிறிஸ்துவ மதத்தினர் செய்த தவறை சாசன கவுன்சில் செய்யக்கூடாது. கிறிஸ்துவ மதத்தை பரப்பியவர்கள் முதலில் பிரமணர்களை மதம் மாற்றம் செய்யும் முயற்சியோடு தங்கள் பணிகளை துவக்கினார்கள். பிரமணர்களை முதலில் மதம் மாற்றம் செய்து விட்டால் இந்துக்களில் மற்றவர்களை கிறிஸ்துவ மதத்தின் பிடியில் கொண்டு வருவது எளிது என்று அவர்கள் நம்பினர்.

பிரமணர்களை முதலில் மதம் மாற்றம் செய்யப்பட்டால் பிராமணர்கள் அல்லாதோரிடம் நாம் சென்று பிராமணர்கள் கிறிஸ்துவ மதத்தை ஏற்று கொண்டு விட்டார்கள், அதே போல் நீங்களும் ஏன் கிறிஸ்துவ மதத்தை ஏன் ஏற்றுகொள்ள கூடாது என்று கூறி அவர்களை நம் பக்கம் இழுக்கலாம் என்பது அவர்களின் திட்டமாக இருந்தது.

கிறிஸ்துவ சமய பணியாளர்களின் இந்த திட்டம் அவர்களுக்குள் ஒரு சிலருக்கு எட்டிகாயைப் போல் கசப்பாக இருந்தது. பிராமணர்களை ஏன் நாம் நம் பக்கம் கொண்டுவர வேண்டும் ?. அவர்கள் தான் சுளை சுளையாக எத்தனயோ சலுகைகளை அனுபவித்து கொண்டிருக்கின்றார்களே என்று அவர்களுக்குள் கருத்து வேறுபாடு நிலவியது. கிறிஸ்துவ சமய பணியாளர்கள் தங்கள் தவறான கொள்கையை நீண்ட நாட்களுக்கு பின்னரே உணர்ந்தனர்.

பிராமணர்களை மதம் மாற்றம் செய்வதில் நூற்றுகணக்கான

ஆண்டுகளை வீண் விரையம் செய்த பிறகு தங்கள் கவனத்தை தீண்டதகதவர்கள் பக்கம் திருப்பினர். 
இதற்குள் நாட்டில் பெறும் மாற்றம் ஏற்பட்டிருந்தது. தேசபக்தி உணர்வு நாடு முழுவதும் கொழுந்து விட்டு எரிந்தது. அந்த கால கட்டத்தில் கிறிஸ்துவ சமயம் உட்பட அந்நியமானவையாக கருதப்பட்டது. இதன் விளைவாக தீண்டப்படாதோரில் ஒரு சிலரை தான் கிறிஸ்துவ சமயம் மதமற்றம் செய்ய முடிந்தது. சமய பணியாளர்கள் எவ்வளவோ முயற்சி செய்த போதிலும் 400 ஆண்டு காலத்தில் இந்தியாவில் கிறிஸ்துவ மக்கள் தொகை மிகவும் குறைவாகவே இருந்தது. மதமற்ற முயற்சியை அவர்கள் முதலில் தீண்டப்படதவர்கள் மற்றும் பின் தங்கிய மக்களிடம் இருந்து துவங்கி இருந்தால் அவர்கள் அனைவரையும் மத மற்றம் செய்து இருக்க முடியும்.

ரோமபுரில் கிறிஸ்துவ மதம் அடியெடுத்து வைத்த  வரலாற்றை
இப்போது நாம் நோக்க வேண்டும். என்னென்றால் இது நமக்கு நல்ல படிப்பினை அள்ளிக்க கூடியதாய் இருக்கக்கூடும். ரோம் சம்ராஜத்தின் சிதைவும் விழ்ச்சியும் எனும் ஜப்பானின் நூலில் இருந்து ஒரு விஷயம் தெள்ள தெளிவாகிறது. அதாவது ரோமபுரி மக்களில் மிகவும் கீழ்த்தட்டு வர்க்கத்தினரிடம் தான் கிறிஸ்துவ மதம் முதலில் பரவியது என்பது தான் அந்த செய்தி.

மேல் தட்டு வர்க்கத்தினர் இதற்கு பிறகுதான் கிறிஸ்துவத்திற்கு வந்தார்கள். கிறிஸ்துவ மதத்தை ஏழைகளின் மதம் என்று கிப்பான் என்பவர் தனது நூலில் ஏளனம் செய்துள்ளார். கிப்பனின் இந்த கருத்து மிகவும் தவறானதாகும். ஏழைகளுக்குத்தான் மதம் தேவை என்பதை அவர் உணர்ந்து கொள்ள தவறிவிட்டார்.

மேலும் விரிவாக படிக்க கிழ்க்கண்ட தொடர்பை அழுத்தவும்


நன்றி " The Master Key "

கருத்துகள் இல்லை :

கருத்துரையிடுக