ஏகாம்பரேஸ்வர் கோயில் - I
அமைவிடம்
ஊர் : பெரிய காஞ்சிபுரம்
வட்டம் : காஞ்சீவரம் வட்டம்
மாவட்டம் : காஞ்சீவரம் மாவட்டம்
நகர பேருந்து அருகில் (ஒரு கிலோமீட்டர் தொலைவில்) ஏகாம்பரேஸ்வர் கோயில் உள்ளது.
மதிற்சுவர்
கோவில் வெளிமதில் சுவர் விஜயநகர அரசனான கிருஷ்ணதேவராயரால் (1509-1530)ல் கட்டப்பட்டது. இக்கோயிலின் வெளிமதில் (கிழக்கு வெளிச்சுற்று சுவர்) கி.பி.1799ல் ஹாச்ஸன் (HODGSON)என்பவரால் புதுப்பிக்கப்பட்டது. அதில் புத்தர் பரிநிர்வாணம் உருவ சிலை கோயில் மதிற்சுவரின் கீழே வைத்துக் கட்டப்பட்டிருக்கிறது.
A ) வெளிச்சுற்று சுவரில் உள்பக்கமாக உள்ள புத்தர் சிலைகள்
கோவிலின் வெளிச்சுற்று சுவரில் உள்பக்கமாக தெற்கு கோபுரத்தின் அருகில் ஏழு புத்தர் புடைப்பு சிற்பங்கள் காணப்படுகின்றன. அதாவது உலோகத்திருமேனிகள் (சிலைகள்) காப்பக மையம் (Icon Safety center) அருகில் அமைந்துள்ள மதிற் சுவரில் ஏழு புத்தர் புடைப்பு சிற்பங்கள் காணப்படுகின்றன. ஏழு புத்தர் புடைப்பு சிற்பங்கள் சிந்தனை கையில் அமைந்துள்ளது. கால்கள் செம்பாதி தாமரை அமர்வில் உள்ளது. ஒரு அடி உயரம் கொண்டது. கி.பி எட்டாம் நூற்றாண்டை சேர்ந்தது. ஏழு சிற்பங்களில் மூன்று சிற்பங்கள் இரு தோரணங்களை கொண்டும் நான்கு சிற்பங்கள் ஒரே ஒரு தோரணத்தை கொண்டும் உள்ளது.
B ) வெளிச்சுற்று சுவரில் வெளிபக்கமாக உள்ள புத்தர் சிலை
இக்கோயிலின் வெளிச்சுற்று சுவரில் (கிழக்கு) வெளிபக்கமாக பகவன் புத்தர் பரிநிர்வாண சிலை இருந்தது. தென்னிந்தியாவில் பரிநிர்வாண கோலத்தில் உள்ள புத்தர் சிலை இந்த சிலை மட்டுமே (Story of Buddhism with special reference to South India (Published by the Commissioner of Museums, Govt Museum, Egmore, Chennai பக்கம் 100)). இந்த அறிய புத்தர் சிலையின் முகம் மிக மோசமாக சிதைக்கப்பட்டுள்ளது. இந்த பரிநிர்வாண சிலையை கோவில் நிர்வாகம் பழுது பார்த்து சீரமைக்க வெளிச்சுற்று சுவரிலிருந்து எடுத்து வைத்துள்ளது. இன்று வரை இந்த அறிய பகவன் புத்தர் சிலையை கோவில் நிர்வாகம் மீண்டும் புதுப்பித்து வைக்கவில்லை.
சிலையமைப்புசமகிடக்கை (சமசயனம்) இரு கால் பாதங்களும் இரு தாமரையின் மீது பதிந்தும், தலைக்கு ஒரு தலையணை காலுக்கு ஒரு தலையணை என இரு தலையணைகளை கொண்டு சமபடுக்கையில் உள்ளது. ஞான முடி தீப்பிழம்பாக உள்ளது, தலைமுடி சுருள் சுருளான முடிகள் கழுத்து கோடுகள் மூன்று ஒளிவட்டம் இரு தோள்கள் வரை உள்ள தோரணம் அமைக்கப்பட்டுள்ளது சிலை உயரம் 3 அடி உயரம் நூற்றாண்டு கி.பி 8ஆம் நூற்றாண்டு, அரசு சோழர் கால சிற்பம்.
காலின் வலது புறத்தின் முடிவில் மற்றும் இரு தாமரைக்கு கீழே மிக சிறிய உருவம் ஒன்று பதிக்கப்பட்டுள்ளது. வணங்கும் முத்திரையுடன் பகவன் புத்தரை வணங்கும் அந்த உருவம் வணக்கத்திற்குரிய ஆனந்தாரக இருக்கலாம். (D.C Ahir Buddhisim in South India பக் 137)
முன்பிருந்த சிலை - (வண .ஆனந்தரை காணலாம்)
தற்பொழுது இருக்கும் சிலையின் நிலை
முனைவர் சி.இரத்தினம்
முனைவர் சி.இரத்தினம் அவர்கள் காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயில் - ஓர் ஆய்வு என்ற தம் முனைவர் பட்ட நூலில் (ஆண்டு 1998) பக்கம் 83ல் அவர் குறிப்பிட்டுள்ளதை மறுப்பதற்கான காரணங்கள்.
01. வெளி சுற்று சுவரின் உட்புறத்தில் தீர்த்தங்கர் சிற்பங்கள் சில பொருத்தி வைக்கப்பட்டுள்ளது.
முனைவர் சி.இரத்தினம் அவர்கள் பகவன் புத்தர் சிலைகளை தீர்த்தங்கர் சிலைகள் என தவறாக குறிப்பிட்டுள்ளார். பரிநிர்வாண நிலையில் தீர்த்தங்கர் சிலைகள் இதுவரை வடிக்கப்படவில்லை. சிந்தனை கையில் அமைந்துள்ள சிலைகளில் சீவர ஆடையும், ஞான முடியும் மிக தெளிவாக தெரிகிறது. சிலையின் படம் பார்க்க இந்த தொடர்பு பயனளிக்கும்
02.01. ஆராட்சி பேரறிஞர் மயிலை சினி வேங்கடசாமி: பழைய புத்தர் கோயில்களை இடித்து அக்கற்களைக்கொண்டு இந்த மதிற்சுவர் கட்டியிருக்க வேண்டும். அதனால்தான் இப்புத்த உருவங்கள் இச்சுவரில் காணப்படுகின்றன.
02.02 தொல்லியல் அகழாய்வு எகாம்பரேஸ்வர் கோயில் அருகில் உள்ள ஞானப்பிரகாசு சுவாமிகள் மாடத்தின் வளாகத்தில் 1969-70 ஆண்டு நடைபெற்ற தொல்லியல் அகழாய்வு ( KCM -2, KCM-2A, KCM -3) இந்த இடங்கள் பௌத்த இடங்கள் என்று சான்றளிக்கிறது.
02.03 C. மீனாட்சி: ஏகாம்பரேசுவர் கோவிலில் புத்தர் சிலை கண்டுபிடிக்கப்பட்டன. எனவே இதனைச்சுற்றி உள்ள பகுதியில் புத்த மடாலயம் இருந்திருக்க வேண்டும். (பௌத்த கலை வரலாறு G சேதுராமன் பக்கம் 190)
கரிகால சோழன்முனைவர் சி.இரத்தினம் அவர்கள் காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயில் - ஓர் ஆய்வு என்ற தம் முனைவர் பட்ட நூலில் (ஆண்டு 1998) பக்கம் 83ல் அவர் குறிப்பிட்டுள்ளதை மறுப்பதற்கான காரணங்கள்.
01. வெளி சுற்று சுவரின் உட்புறத்தில் தீர்த்தங்கர் சிற்பங்கள் சில பொருத்தி வைக்கப்பட்டுள்ளது.
முனைவர் சி.இரத்தினம் அவர்கள் பகவன் புத்தர் சிலைகளை தீர்த்தங்கர் சிலைகள் என தவறாக குறிப்பிட்டுள்ளார். பரிநிர்வாண நிலையில் தீர்த்தங்கர் சிலைகள் இதுவரை வடிக்கப்படவில்லை. சிந்தனை கையில் அமைந்துள்ள சிலைகளில் சீவர ஆடையும், ஞான முடியும் மிக தெளிவாக தெரிகிறது. சிலையின் படம் பார்க்க இந்த தொடர்பு பயனளிக்கும்
02. தீர்த்தங்கரின் உருவச்சிலை எவ்வாறு ஏகாம்பரநாதர் கோவிலுக்கு வந்தன என்பது சரிவர தெரியவில்லை. காஞ்சிபுரம் சமணர் வாழ்ந்த ஊர். அங்கு பல சமண பள்ளிகள் இருந்தன. இக்கோவிலுக்கு திருப்பணி நிகழ்ந்த பொழுது சமணர் பள்ளியிலிருந்து தீர்த்தங்கர்கள் உருவச்சிலைகள் கொண்டுவந்து பொருத்தியிருக்கலாம். அவர் எழுப்பும் ஐயத்திற்கு அவருக்கு முன்பிருந்த அறிஞர்கள் அளித்துள்ள விளக்கங்கள்.
02.01. ஆராட்சி பேரறிஞர் மயிலை சினி வேங்கடசாமி: பழைய புத்தர் கோயில்களை இடித்து அக்கற்களைக்கொண்டு இந்த மதிற்சுவர் கட்டியிருக்க வேண்டும். அதனால்தான் இப்புத்த உருவங்கள் இச்சுவரில் காணப்படுகின்றன.
02.02 தொல்லியல் அகழாய்வு எகாம்பரேஸ்வர் கோயில் அருகில் உள்ள ஞானப்பிரகாசு சுவாமிகள் மாடத்தின் வளாகத்தில் 1969-70 ஆண்டு நடைபெற்ற தொல்லியல் அகழாய்வு ( KCM -2, KCM-2A, KCM -3) இந்த இடங்கள் பௌத்த இடங்கள் என்று சான்றளிக்கிறது.
02.03 C. மீனாட்சி: ஏகாம்பரேசுவர் கோவிலில் புத்தர் சிலை கண்டுபிடிக்கப்பட்டன. எனவே இதனைச்சுற்றி உள்ள பகுதியில் புத்த மடாலயம் இருந்திருக்க வேண்டும். (பௌத்த கலை வரலாறு G சேதுராமன் பக்கம் 190)
02.03.01. திரு W.I. தேவாரம் IPS C. மீனாட்சி அவர்களின் கருத்திற்கு சான்றளிப்பதாக ஏகாம்பரேசுவர் கோவிலுக்கு அருகில் உள்ள இடத்தில் காவல் நிலையத்தைக் கட்டத் தொடங்கிய காலத்தில் கிடைத்த பகவன் புத்தர் சிலையை காவல் துறை மாநில உயர் அலுவலர் திரு W.I. தேவாரம் IPS அவர்கள் 1992 ஆம் ஆண்டு சிவக்காஞ்சி காவல் நிலையத்தில் நிறுவியதை கூறலாம். சிவக்காஞ்சி காவல் நிலையம்
02.03.02. G சேதுராமன்: இக்கோவிலின் வெளிப்பிரகார வடக்கு சுவரின் உட்பகுதியில் உள்ள நந்தவனத்தை ஒட்டிய ஒரு மடத்தில் புத்தரின் உருவம் காணப்படுகிறது. (பௌத்த கலை வரலாறு பக்கம் 191) இச்சிலை தற்பொழுது அங்கு காணப்படவில்லை. வடக்கு சுவர் இடிந்து விழுந்ததால், அச்சிலை சேதமடைந்து விட்டது .என கோவில் நிர்வாகம் எனக்கு பதிலுரைத்தது,
02.02.03 போதி தேவவரம்: இக்கோவிலின் குளம் எதிரில் அமர்ந்த நிலையில் உள்ள புத்தர் சிலை காணப்படுகிறது. (தமிழ் பௌத்தம் பக்கம் 41). இச்சிலை தற்பொழுது அங்கு காணப்படவில்லை.
02.03.04 Dr.K.சிவராமலிங்கம்: உடைந்த ஒரு சிறிய புத்தர் சிலை தலைபகுதி இக்கோவில் உள்ள ஒரு அறங்காவலர்களிடம் பாதுகாப்புடன் இருக்கிறது. (Archaeological atlas of the antique remains of Buddhism in Tamil Nadu பக்கம் 72).
கரிகால சோழன் இக்கோவிலை பூர்வத்தில் புதுப்பித்ததாக சொல்லப்படுகிறது. கரிகால சோழன் பற்றிய மேற்கோள் பாடல் காஞ்சி காமாட்சியம்மன் கோயில் உள்ளது. கரிகால சோழன் சிலை ஏகாம்பரநாதர் கோயில் உள்ளது. மேற்கோள் பாடல் விளக்கம், கரிகால சோழன் பகவன் புத்தரிடமிருந்து (சாத்தான் (அ) சாஸ்தா) தாமரை செண்டை பெற்றுக்கொண்டு இமய மலையில் தனது வெற்றி அடையாளத்தைப் பொறித்தான் என்று குறிப்பிடுகிறது. சாஸ்தா என்னும் புத்தர் சிலை சென்னை அரசு அருங்காட்சியில் இருக்கிறது.
கருத்துகள் இல்லை :
கருத்துரையிடுக