திங்கள், ஏப்ரல் 08, 2024

திருவள்ளுவரின் திருவுருவம்பிரான்சிஸ் ஒயிட் எல்லீஸ்  ( Francis Whyte Ellis) (1777–1819) 

19 ஆம் வயதில் சென்னைக்கு வந்தார் எல்லிஸ். பின்னர் மாவட்ட ஆட்சியாளரானார். 1812ல் Madras Literary Society சென்னைக் கல்விச் சங்கம் உருவாக்கினார். திருவள்ளுவருக்கு முதன் முதலில் உருவம் கொடுத்தவர் எல்லீஸ். திருவள்ளுவரின் உருவம் பொறித்து பத்து ரூபாய் தங்கக் காசு வெளியிட்டார் எல்லீஸ். சென்னையின் நாணயசாலை எல்லீஸ் பொறுப்பில் இருந்த காலத்தில் வெளியிட்டார். எல்லீஸ் துரை தமிழை நன்கு கற்றவர். தமிழ் மீது கொண்ட காதலால் தனது பெயரை எல்லீசன் என தமிழ்ப்படுத்திக் கொண்டார். திருக்குறளில் அறத்துப்பாலின் முதல் 13 அதிகாரங்களை ஆங்கிலத்தில் 1819-ல் மொழிபெயர்த்து உரை எழுதி அச்சிட்டிருக்கிறார்.   அவருடைய மொழிபெயர்ப்பே ஆங்கிலத்தில் திருக்குறளின் முதல் மொழிபெயர்ப்பாகும். திருக்குறள் சொற்ப பிரதிகளே அச்சிடப்பட்டது. அவர் பழங்குடியினரிடையே  அதிகம் வாழ்ந்தார் அவர்களின் சிந்தனை பழக்க வழக்கங்கள் முழுமையான அறிவை கொண்டிருந்தார்.


 

திருவள்ளுவரின் திருமேனி தாங்கிய தங்கக்காசு

இந்த நாணயத்தின் ஒரு புறம் திருவள்ளுவரின் உருவமும் மற்றொரு புறம் நட்சத்திரமும் பொறிக்கப்பட்டுள்ளது. காசின் முன்புறத்தில் ஒரு பீடத்தின் மீது தியான நிலையில் அமர்ந்திருக்கிறார்.  வலது கை தொடை மீதும் இடது கை ஒரு சுவடியை ஏந்தியும் உள்ளது.  இடையில் தட்டுச் சுற்றாக வேட்டியும் இடது தோளில் மடித்துப் போட்ட துண்டும் அணிந்துள்ளார். மழித்த தலை; தலைக்கு மேலே ஒரு குடை. பீடத்துக்கு முன் ஒரு தீர்த்த பாத்திரம் காணப்படுகிறது.

 நாணய காலம்

அரசு சென்னை ஜார்ஜ் கோட்டையில் முதன் முதலாக 1807-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் இயந்திர நாணய சாலையை நிறுவி தங்கம், வெள்ளி மற்றும் செப்புக் காசுகளை வெளியிடத் தொடங்கியது. 1817-ம் ஆண்டும் டிசம்பர் மாத இறுதியில் தங்க வராகன்கள் அச்சடிப்பது நிறுத்தப்பட்டு விட்டது. ஆகையால் இக்காசு 1807-ம் ஆண்டு முதல் 1817-ம் ஆண்டு வரையிலான பத்தாண்டு காலத்துக்குள் வெளியிடப்பட்டிருக்க வேண்டும் என்று நிச்சயமாகச் சொல்ல முடியும்

  திருக்குறள் மூல சுவடியை கொடுத்தது யார்?

திருவள்ளுவர் யார் என்ற நூலின் ஆசிரியர் கௌதம சன்ன பதிவு. கொடியாண்டி என்ற கந்தப்பன் (மகா பண்டிதர் அயோத்திதாசரின் பாட்டனார்) மைலாப்பூரில் இருந்த மருத்துவர். அவர் கந்தப்பனார், கந்தப்பன் பிள்ளை எனவும் அழைக்கப்பட்ட்டர். அவர் ஏராளமான தமிழ் ஓலை சுவடிகளை பாதுகாத்து வைத்திருந்தார்அவர் George Harrington ஆரிங்க்டன் என்னும் ஆங்கில அதிகாரியிடம் பட்லராக பணியாற்றினார். 1810  ஆரிங்க்டன் அவர்களுக்கு திருக்குறள் ஓலை   சுவடியை கொடுத்தார். 

ஆரிங்க்டன் எல்லிஸ் அவர்களுக்கு தான்  கந்தப்பனாரிடம் இருந்து  பெற்ற திருக்குறள் ஓலை சுவடியை கொடுத்தார்.  திருக்குறள் ஆரிங்க்டன் மற்றும் எல்லிஸ் ஆகியோரால் அச்சில் ஏறியது.

எல்லிஸ் அவருடைய மொழிபெயர்ப்பே ஆங்கிலத்தில் திருக்குறளின் முதல் பதிப்பு எல்லிஸ் என்பது தவறு. 

வீரமாமுனிவர் (Constantine Joseph Beschi) லத்தின் மொழியில் 1730ல் திருக்குறளை வெளியிட்டார்.


என். ஈ கின்டர்ஸ்லி (Nathaniel Edward Kindersley) 1794ல்   ஆங்கிலத்தில் வெளியிட்டார். 


Dr ஆகஸ்ட் பிரடெரிக்   காமரர் Dr August Friedrich Caemmerer 1803ல்  ஜெர்மனில் திருக்குறளை வெளியிட்டார்.

திருவள்ளுவருக்கு முதன்முதலாக உருவம் கொடுத்து தங்கக்காசு வெளியிட்ட ஆங்கிலேயர்l

ஆங்கிலேயத் தமிழறிஞரின் சாலை

கருத்துகள் இல்லை :

கருத்துரையிடுக