மகாராஷ்டிரா நாசிக்கில் உள்ள போலீஸ் அணிவகுப்பு மைதானத்தில் நடைபெற்ற (2026) 77வது குடியரசு தின விழாவில், தேசியக் கொடியேற்றத்திற்குப் பிறகு மகாராஷ்டிர நீர்வள அமைச்சர் கிரிஷ் மகாஜன் (Girish Mahajan) (BJP) உரையாற்றும் போது, இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் தந்தை டாக்டர் பி.ஆர்.அம்பேத்கரின் பெயரை தவிர்க்கப்பட்டது. இந்த செயலுக்கு வனத்துறை பெண் அரசு அதிகாரி மாத்வி ஜாதவ் கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.
BJP அமைச்சரின் ஆணவப் பேச்சு
01. சமத்துவம் மற்றும் நீதிக்கான அரசியலமைப்பு டாக்டர் அம்பேத்கரின் படைப்புகளிலிருந்து உருவானது என்றும் குடியரசு தினத்தன்று அவரது பெயர் ஏன் குறிப்பிடப்படவில்லை என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.
02.நாட்டின் அரசியலமைப்போடு தொடர்பில்லாத பல தலைவர்களைக் குறிப்பிட்ட அமைச்சர் வேண்டுமென்றே டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் பெயரைத் தவிர்த்ததாகக் மன்னிப்பு கேட்க வலியுறுத்தினார்.
03. குடியரசு தினம் என்பது அரசியலமைப்பின் கொண்டாட்டம் என்றும், இது டாக்டர் அம்பேத்கரின் பணியிலிருந்து உருவானது என்றும், அவரது பெயரை விடுபட்டதை அவர் ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் அவர் வலியுறுத்தினார்.
மேலும் இடையூறு ஏற்படாமல் இருக்க பெண் காவல்துறையினர் அவரைத் தடுத்து நிறுத்தி, அவரைக் காவலில் எடுத்தனர். பின்னர் அவர் காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார், அங்கு அவர் ஒரு விண்ணப்பத்தை சமர்ப்பித்து அமைச்சருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கோரினார்.
01.அரசியலமைப்புச் சட்டத்தின் தந்தை டாக்டர் பி.ஆர் அம்பேத்கரின் பெயரையும், அவர் உருவாக்கிய அரசியலமைப்பையும் யாராலும் அழிக்க முடியாது.
02.இன்று நாம் அனைவரும் அவரால் தான் இங்கே பதவியில் இருக்கிறோம்,
03.இதற்காக என்னை இடைநீக்கம் (Suspend) செய்தாலும் பரவாயில்லை, நான் அதைப்பற்றிக் கவலைப்படவில்லை. ஆனால், அம்பேத்கரின் அடையாளத்தை மறைப்பதை என்னால் ஏற்க முடியாது," என்று அவர் ஆவேசமாகத் தெரிவிக்கிறார்.
அமைச்சர் கிரிஷ் மகாஜன், டாக்டர் பி.ஆர். அம்பேத்கரின் பெயர் விடுபட்டது கவனக்குறைவினால், வேண்டுமென்றே அல்ல என்றும் தெளிவுபடுத்தினார். பெயர் தற்செயலாகத் தவறவிடப்பட்டது. இதற்குப் பின்னால் எந்த வேண்டுமென்றே நோக்கமும் இல்லை. நான் 'பாரத் மாதா கி ஜெய்', 'வந்தே மாதரம்', 'சிவாஜி மகாராஜ் கி ஜெய்' போன்ற கோஷங்களை மட்டுமே முழக்கமிட்டேன். அவரது பெயரைப் புறக்கணிக்கும் எண்ணம் எனக்கு இல்லை. யாருடைய உணர்வுகள் புண்பட்டிருந்தால் நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் என்று மகாராஷ்டிரா நீர்வள அமைச்சர் கிரிஷ் மகாஜன் பதிலளித்தார்.
01.டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கரின் பெயரை உச்சரிப்பது ஒரு ஃபேஷனாகிவிட்டது என்று மாநிலங்களவையில் இந்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கருத்து தெரிவித்தார். பாபா சாகிப் உருவாக்கிய இந்திய அரசியல் சாசன படி உறுதிமொழி எடுத்துவிட்டு அரசியலமைப்புச் சட்டத்திற்கு கட்டுப்பட மறுக்கின்றவர் என்பதை சொல்லாமல் சொல்கிறார்.02.அரசியலமைப்பு சட்டத்தை அவமதிக்கும் சென்னை உயர் நீதிமன்ற மதுரை அமர்வு நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் திருப்பரங்குன்றம் மலையில் உள்ள தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற அனுமதிக்க கோரி, ராம ரவிக்குமார் என்பவர் தொடர்ந்த வழக்கை விசாரித்து, குறிப்பிட்ட அந்த தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற உத்தரவு பிறப்பித்து இருந்தார். அரசியல் அமைப்புச் சட்டத்திற்கும், நீதித்துறை சட்டங்களுக்கும் மதிப்பளிப்பதை விட தன்னை ஒரு சனாதனி என்று கூறிக்கொண்டு அதன் படி நடப்பதில் பெருமைப்படுகிறார். எனவே தான் கீழக்கட்டு பதிப்பகம், 'திருப்பரங்குன்றம் விவகாரம்- ஜி.ஆர்.சுவாமிநாதன் நீதிபதியா அல்லது ஆர்.எஸ்.எஸ்., ரவுடியா' என்ற தலைப்பில் நுால் வெளியிட்டுள்ளது. அட்டைப்படம், நீதிபதியை ஒரு கை திரிசூலத்தை பிடித்து கொண்டு, மற்றொரு கை காவி கொடியை பிடித்து கொண்டு கேலிச்சித்திரமாக்குகிறது.
03. 2023ஆம் ஆண்டு ஜூலை மாதம் சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் உயர் நீதிமன்றப் பதிவாளர் வெளியிட்ட சுற்றறிக்கையில், நீதிமன்ற வளாகங்களில் காந்தி மற்றும் திருவள்ளுவர் படங்களைத் தவிர மற்ற படங்களை வைக்க அனுமதி மறுக்கப்பட்டது. அண்ணல் அம்பேத்கரின் உருவப்படங்களை அகற்ற வேண்டும் என்ற உத்தரவு, நீதிமன்றப் பதிவாளர் ஒரு சுற்றறிக்கை வெளியிட்டார். பின்னர் டாக்டர்.அம்பேத்கரின் படங்கள் அகற்றப்படாது என தலைமை நீதிபதி உறுதி அளித்தார்.
04.ஜனவரி 26, 2022 அன்று கர்நாடகாவில் ராய்ச்சூர் நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்ற குடியரசு தின விழாவில், அம்பேத்கர் படத்தை அகற்ற நீதிபதி மல்லிகார்ஜுன கவுடா உத்தரவிட்டதாகக் கூறப்பட்டது. ஆனால் பின்னர் உயர் நீதிமன்றம் அம்பேத்கர் படத்தை வைக்க உத்தரவிட்டது.
05. ஜனவரி 2023-ல் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி, மாநில அரசு தயாரித்து வழங்கிய உரையிலிருந்த டாக்டர் பி.ஆர். அம்பேத்கர், மற்றும் சில தலைவர்களின் பெயர்களைச் சட்டமன்றத்தில் வாசிக்காமல் தவிர்த்தார். அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்கிய டாக்டர்.அம்பேத்கர் பெயரை ஆளுநர் உச்சரிக்க மறுத்தது, அவரை அவமதிக்கும் செயல் என சபாநாயகர் அப்பாவு மற்றும் திமுகவினர் விமர்சித்தனர்.
06.காவி உடை அணிந்து உத்தரப் பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், மதச்சார்பற்ற கொள்கைக்கு மாறாகச் செயல்படுகிறார்.
