வியாழன், மார்ச் 05, 2026

அயோத்தி அகழாய்வும் பௌத்தர்களின் உரிமைகோரலும்


இந்துக்களின் நம்பிக்கையும் குற்றச்சாட்டும்
உத்தரப் பிரதேச மாநிலத்தில் (UP) அயோத்தியில் உள்ள இராம ஜென்ம பூமி தான் இராமன் பிறந்த இடம் என்பது இந்துக்களின் நம்பிக்கை. இராமன் என்பவன் புராணத்தில் வருபவன் வரலாற்றில் இல்லை. முகலாயப் பேரரசர் பாபர் ஆட்சியின் போது அவரது படைதலைவர் மீர் கான் இராம ஜென்ம பூமியில் இருந்த இராமர் கோயிலை இடித்து அதன் மீது பாபர் மசூதி கட்டினார் என்பது இந்துக்களின் குற்றச்சாட்டாகும்.

பாபர் மசூதியை இடிப்பு
6 டிசம்பர் 1992 (பாபா சாகிப் நினைவு தினம்) அன்று VHP மற்றும் BJP 1,50,000 பேரை உள்ளடக்கி ஒரு பேரணியை ஏற்பாடு செய்து வன்முறையாக மாற்றி பாபர் மசூதியை இடித்தது. இது மதவெறி காரணமாக வேண்டுமென்று நிகழ்த்தப்பட்ட வன்முறை. பாபர் மசூதி இடிக்கப்படும் முன் வரை மிக முக்கியமான மசூதியாக இருந்தது. 
 
பத்து ஆண்டுகள் கழித்து 2003-ஆம் ஆண்டில் ராம ஜென்ம பூமி பாபர் மசூதி இடிப்பு வழக்கில், (Allahabad High Court) அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் லக்னோ அமர்வின் பரிந்துரையின் படி இந்தியத் தொல்லியல் ஆய்வகம் அயோத்தில் உள்ள பாபர் மசூதி வளாகத்தில் அகழாய்வுகள் மேற்கொண்டது. 

அயோத்தியில் அகழாய்வுகள்:
அயோத்தியில் மொத்தம் நான்கு முறை அகழாய்வுகள் நடைபெற்றுள்ளது. லக்னோ நீதிமன்றத்தின் படி ஐந்தாவது அகழாய்வு நடைபெற்றுது. 
  • முதல் அகழ்வாய்வு 1862-63
  • இரண்டாவது அகழ்வாய்வு 1889-91
  • மூன்றாவது அகழ்வாய்வு 1969-70
  • நான்காவது அகழ்வாய்வு 1975-76
  • ஐந்தாவது அகழ்வாய்வு 2003
முதல் அகழ்வாய்வு 1862-63 அலெக்சாண்டர் கன்னிங்காம்
இந்தியத் தொல்லியல் ஆய்வகத்தை நிறுவிய அலெக்சாண்டர் கன்னிங்காம் 1862-63ஆம் ஆண்டுகளில் அயோத்தியில் முதல் அகழ்வாய்வு ஆய்வு செய்தார்.
  • அயோத்தி நகரம் குறித்து பழம்பெரும் நூல்களைக் கொண்டு ஆய்வு செய்தார். அயோத்தியில் 1000 ஆண்டுகள் பழமையான கட்டிடங்கள் காணப்படவில்லை என்றார். அயோத்தி நகரத்தை தொன்ம நூல்களில் சாகேதம் என்று குறிப்பிட்டுள்ளனர். கௌதம புத்தர் தான் அயோத்தி நகரத்தில் 6 மாதங்கள் கழித்ததாகக் கூறுகிறார். விசாகா, சாகேதா மற்றும் அயோத்தி நகரங்கள் ஒன்றே என்றும் அவர் முடிவு செய்தார்
இரண்டாவது அகழ்வாய்வு 1889-91 அலோயிஸ் அன்டன் ஃபூரர்
ஜெர்மனிய இந்தியவியல் அறிஞர் அலோயிஸ் அன்டன் ஃபூரர் (Alois Anton Führer) அகழாய்வு 1889-91ஆம் ஆண்டுகளில் மேற்கொண்டார்.

அயோத்தி நகரத்தின் தெற்குப் பகுதியில் மணி பர்பத் (Mani Parbat), குபேர் பர்பத் (Kuber Parbat) மற்றும் சுக்ரிவ் பர்பத் (Sugriv Parbat) ஆகிய மூன்று பண்டைய குன்றுப் பகுதிகள் கண்டுபிடித்தனர். தில்லி சுல்தான்கள், முகலாயர்கள் காலத்தில் அயோத்தியில் இருந்த இந்து, சமண, பௌத்த கட்டிட அமைப்புகளை தகர்த்தனர். அயோத்தியில் தற்போது உள்ள இந்து, சமண கட்டிட அமைப்புகள் 1781-ஆம் ஆண்டுக்கு பிந்தையவைகளே.  
 
பாபர் ஆட்சியின் போது அவரது படைத்தலைவர் மீர் கான் என்பவர், அயோத்தியில் உள்ள ராம ஜென்மபூமி கோயில் நிலத்தில் 1523-ஆம் ஆண்டில் பாபர் மசூதி நிறுவினார். அதற்கு ஆதரவாக இடிக்கப்பட்ட இராம ஜென்மபூமி கோயிலின் கருங்கல் தூண்கள் பாபர் மசூதி கொண்டிருந்தது. அவுரங்கசீப் ஆட்சிக் காலத்தில் அயோத்தியின் சொர்க்க துவாரம் மற்றும் திரேதா கே தாக்கூர் பகுதியில் உள்ள கோயில்களை இடித்து புதிய மசூதிகளை கட்டினார்.
 
மூன்றாவது அகழ்வாய்வு 1969-70
1969-70 ஆம் ஆண்டுகளில் பனாரஸ் இந்துப் பல்கழகத்தின் பேராரசிரியர் அவத் கிஷோர் நரேன் அயோத்தியில் அகழாய்வுப் பணிகள் மேற்கொண்டனர். அகழாய்வின் முடிவில் கி.மு 17-ஆம் நூற்றாண்டிற்கு முன்னர் நிறுவப்பட்ட அயோத்தி நகரத்தில், பௌத்த பிக்குகள் வாழ்ந்ததாக கூறுகிறார்

.
நான்காவது அகழ்வாய்வு 1975-76 பிரஜ் பாசி லால்
இந்தியத் தொல்லியல் ஆய்வகத்தின் தொல்லியல் அறிஞர் பிரஜ் பாசி லால் தலைமையிலான குழுவினர் அகழாய்வுப் பணிகள் 1975-76 ஆம் ஆண்டுகளில் மேற்கொண்டனர்.

இராம ஜென்மபூமி எனக்கருதப்பட்ட பாபர் மசூதி வளாகம், சிரிங்கிபேர புரம், நந்தி கிராமம், பரத்துவாஜர் ஆசிரமம், சித்திர கூடம் போன்ற 14 இராமாயண நிகழிடங்களில் அகழாய்வுப் பணிகள் மேற்கொண்டனர். நான்காவது அகழ்வாய்வு அறிக்கை வெளியிடப்படவில்லை. அயோத்தியின் அகழாய்வின் போது சமணத் துறவியின் சுடுமண் சிற்பம். கண்டுபிடித்தார்.

வெறிச்செயலுக்கு காரணமாக இருந்தது பி.பா.லால் எழுதிய நூல்கள்.

01.இந்தியத் தொல்லியல் துறையிலிருந்து பணி ஓய்வு பெற்ற தொல்லியல் ஆய்வாளர் பி.பா.லால், 1990-இல் ராஷ்டிரிய சுயம்சேவாக் சங்கம் இதழில், பாபர் மசூதியின் கீழ் ஒரு பத்தியில் தான் ஒரு இந்துக் கோவிலின் எச்சங்களைக் கண்டுபிடித்ததாக எழுதினார்.

02.பி.பா.லால் 2008-ஆம் ஆண்டில் எழுதிய நூலில் இராமர், அவரது வரலாறு, ராம ஜென்மபூமி கோயில் மற்றும் இராமாயணம், தொல்லியல் மற்றும் பிற அறிவியல் சான்றுகள் குறித்து எழுதினார்.
பாபர் மசூதியின் தூண்களுடன் இணைக்கப்பட்ட பன்னிரண்டு கல் தூண்கள் இருந்தன. அவைகள் வழக்கமான இந்து சமய தெய்வங்களின் உருவங்கள் மற்றும் வார்ப்புருக்கள் கொண்டிருந்தன எனக்குறிப்பிட்டார். இந்தத் தூண்கள் பாபர் மசூதியின் ஒருங்கிணைந்த பகுதி அல்ல என்றும், ஆனால் அதற்கு வேறானவை என்பது சுயமாகத் தெரிகிறது என்றார்.

ஐந்தாவது (இறுதி) அகழ்வாய்வு 2003

2003ஆம் ஆண்டில் ஐந்தாவது அகழ்வாய்வு அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் உத்தரவின் படி இந்தியத் தொல்லியல் ஆய்வகம் இறுதி அகழ்வாய்வு மேற்கொண்டது. இந்த அகழாய்வில் தொல்லியல் ஆய்வாளர்கள், 29 இசுலாமியர்கள் உள்ளிட்ட 131 நபர்கள் கலந்து கொண்டனர். அகழாய்வில் கண்டெடுக்கப்பட்ட தொல்பொருட்கள் குறித்த 574 பக்க அறிக்கை அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.
ரேடார் ஆய்வுகள் சனவரி 2003-இல் இடிக்கப்பட்ட பாபர் மசூதியின் வளாகத்தின் தரையடியில் உள்ளதை கண்டுபிடிக்கும் ரேடார் கருவியைக் கொண்டு பரிசோதனை செய்தனர். இடிக்கப்பட்ட பாபர் மசூதியின் கீழ் 0.5 முதல் 5.5 மீட்டர் ஆழத்தில் கட்டிட அமைப்புகளான தூண்கள், அடித்தள சுவர்கள், தரையமைப்பு போன்ற பழங்கால மற்றும் சமகால கட்டமைப்புகளுடன் தொடர்பு உடையவைகள் கண்டுபிடிக்கப்பட்டது.  
 
இந்தியத் தொல்லியல் துறை 22 மே முதல் 6 சூன் 2003 முடிய அகழாய்வு செய்த போது கண்டுபிடித்த தொல்லியல் எச்சங்கள் குறித்த அறிக்கையில் பட்டியலிடப்பட்டுள்ள கட்டமைப்புகளில் கிழக்கு-மேற்கு திசை மற்றும் வடக்கு-தெற்கு திசைகளில் பல செங்கல் சுவர்கள், உடைந்த சிற்பங்கள் 'அலங்கரிக்கப்பட்ட வண்ணத் தரைத் தளம்', பல 'தூண் தளங்கள்' மற்றும் '1.64 மீட்டர் உயரத்தில் அலங்கரிக்கப்பட்ட உடைந்த கருங்கல் தூண்கள் ஆகியவை அடங்கும். தூண்களின் நான்கு மூலைகளிலும் அரபு மொழியில் குரான் வசனங்கள் செதுக்கப்பட்டிருந்தது.

ஐந்தாவது அகழாய்வு நடைபெறுவதற்கு முன் பீம் படை ரிட் மனு ஒன்றை தாக்கல் செய்தது, வினீத் குமார் மௌரியா ஒரு மனு தாக்கல் செய்தார். ஐந்தாவது அகழாய்வு முடிந்த பிறகு கர்நாடக புத்த சங்கம் (KBS) குடியரசுத் தலைவருக்கு ஒரு கடிதம் அனுப்பியது.

பீம் படை ரிட் மனு தாக்கல் (நவம்பர் 2018)

01. (Bhim Army) பீம் படை தலைவர் சந்திரசேகர் ஆசாத், பண்டைய காலங்களில், அயோத்தி புத்த மதத்தின் மையமாக இருந்தது, அது சாகேத் என்று அழைக்கப்பட்டது. அயோத்தியை சாகேத் என்று மறுபெயரிட வேண்டும் என்று  உச்ச நீதிமன்றத்தில் ஒரு ரிட் மனு தாக்கல் செய்தார்.

02.சந்திரசேகர் ஆசாத் பீம் ஆர்மி, பவுத் தம்ம சேனா மற்றும் தொடர்புடைய குழுக்கள் அகழ்வாராய்ச்சியின் போது கண்டுபிடிக்கப்பட்ட எச்சங்கள் புத்த கலாச்சாரத்தைச் சேர்ந்தவை எனவே அந்த இடத்தில் ஒரு புத்த விகாரை கட்ட வேண்டும் என்று கோரினர்.

03.அகழ்வாராய்ச்சியில் உச்ச நீதிமன்றமும் யுனெஸ்கோவும் தலையிட வேண்டும் என்று கோரின.
 
வினீத் குமார் மௌரியா மனு (டிசம்பர் 2018)
இதுவரை, அயோத்தியில் சர்ச்சைக்குரிய நிலத்திற்கு இரண்டு உரிமைகோரல்கள் இருந்தன. ஒருவர் அங்கு ஒரு கோயில் கட்ட வேண்டும் என்றும், மற்றவர் ஒரு மசூதி கட்டப்பட வேண்டும் என்றும் கூறுகிறார். மூன்றாவது உரிமைகோரல் அயோத்தியில் உள்ள பவாரி மசூதிக்கு அருகிலுள்ள உள்ளூர்வாசியான வினீத் குமார் மௌரியா அயோத்தியில் உள்ள ராமர் கோவிலை புத்த விஹாராக அறிவிக்கக் கோரிய மனுவை தாக்கல் செய்தார். அவர் அந்த இடத்தில் ஒரு புத்தர் நினைவுச்சின்னம் கட்டப்பட வேண்டும் என்றும் விரும்புகிறார். உச்ச நீதிமன்றம் இந்த மனுவை ஏற்றுக்கொண்டுள்ளது, மேலும் ஜனவரி 3, 2019 முதல் அயோத்தி வழக்கை நீதிமன்றம் எடுத்துக்கொள்ளும்போது அது பரிசீலிக்கப்படும் என்றது. 
 
01. உறுதியான அறிவியல் சான்றாக வினீத், கடந்த 160 ஆண்டுகளில் 4 அகழ்வாராய்ச்சிகளில் கிடைத்த பொருள் ஆதாரங்களின் உரை, புகைப்படங்கள், ஓவியங்கள் போன்றவற்றைக் கொண்ட ASI (இந்திய தொல்பொருள் ஆய்வு மையம்) அறிக்கையின் 600 பக்கங்களை SC-யிடம் சமர்ப்பித்துள்ளார்.   
 
02.சாகேத்தில் (அயோத்தி) இந்து மதத்திற்கான எந்த ஆதாரமும் கிடைக்கவில்லை.

03. முகலாய மன்னர் பாபர் உஸ்பெகிஸ்தானில் கி.பி 1483 இல் பிறப்பதற்கு வெறும் 300 ஆண்டுகளுக்கு முன்பு, நாளந்தா பல்கலைக்கழகம் எரிக்கப்பட்டு, அழிக்கப்பட்டு மண்ணில் புதைக்கப்பட்ட அதே ஆண்டில், பவாரி மசூதி கி.பி 1193 இல் கட்டப்பட்டது.  
 
04.பௌத்தர்களின் கலைப்பொருட்கள் அந்த இடத்திலிருந்து மீட்கப்பட்டது, பண்டைய நினைவுச்சின்னங்கள் மற்றும் தொல்பொருள் தளங்கள் மற்றும் எச்சங்கள் அந்த நிலத்தை தேசிய முக்கியத்துவம் வாய்ந்த தொல்பொருள் தளமாக அறிவிக்க வேண்டும் என்று வாதிட்டார்.  
 
05.2010 ஆம் ஆண்டில், புத்த எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக உயர் நீதிமன்றத்தில் துறை ஒப்புக்கொண்டது, ஆனால் அது அமைதியையும் அமைதியையும் சீர்குலைக்கும் என்ற சாக்கில் இது பகிரங்கப்படுத்தப்படவில்லை.

இந்திய தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் மற்றும் நீதிபதி பி.எஸ். நரசிம்ஹா ஆகியோர் அடங்கிய அமர்வு, அயோத்தி விவகாரம் நீண்ட காலத்திற்கு முன்பே கையாளப்பட்டு வருவதாகவும், மௌரியா மனுவை வாபஸ் பெற வேண்டும் என்றும், இல்லையெனில் பெஞ்ச் அதை தள்ளுபடி செய்ய வேண்டியிருக்கும் என்றும் கூறியது. வேறு வழியில்லாமல், மௌர்யா பின்னர் மனுவை வாபஸ் பெற்றார்.
 
கர்நாடக புத்த சங்கம் (KBS) குடியரசுத் தலைவருக்கு ஒரு கடிதம் (ஜூன் 2020)
அயோத்தி ராமர் கோயில் விவகாரத்தில் நவம்பர் 9, 2019 அன்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பை வழங்கியது. ராமர் கோயில் கட்டுவதற்கு ஆதரவாக ஐந்து நீதிபதிகள் கொண்ட அமர்வு ஒருமனதாக தீர்ப்பளித்தது. அதே நேரத்தில் மசூதிக்கு தனி 5 ஏக்கர் நிலம் ஒதுக்க உத்தரவிட்டது. 
 
அதன் பிறகு HR மகேஷ் தலைமையிலான (The Karnataka Buddhist Society (KBS)) கர்நாடக புத்த சங்கம், அயோத்தியில் உள்ள ராமர் மந்திர் தளத்தை புத்த தொல்பொருள் தளமாக அறிவிக்க வேண்டும் என்று  கோரியது. இந்தப் பிரச்சினை தொடர்பாக கர்நாடக ஆளுநர் மூலம் இந்தியக் குடியரசுத் தலைவருக்கு KBS ஒரு கடிதம் அனுப்பியது.

01.ஐந்தாம் நூற்றாண்டின் முற்பகுதியில் சீனப் பயணி ஃபா-ஹியன் (Fa-Hien) இந்தியாவுக்கு வருகை தந்து அயோத்தியில் நூற்றுக்கணக்கான புத்த மடங்கள் இருந்ததை ஆவணப்படுத்தியதாக சுட்டிக்காட்டியது.

02.ஏழாம் நூற்றாண்டில் இந்தப் பகுதிக்குச் சென்ற மற்றொரு சீனப் பயணியான ஹியூன் சுவாங் (Hiuen Tsang) இந்தப் பகுதியில் ஆயிரம் புத்த மடாலயங்கள் இருந்ததை ஆவணப்படுத்தியதாக சுட்டிக்காட்டியது. 
 
03.1862–63ஆம் ஆண்டு அலெக்சாண்டர் கன்னிங்ஹாம் மேற்கொண்ட கணக்கெடுப்பையும், அந்தப் பகுதியை ஒரு பௌத்த தளமாக அடையாளம் கண்டதாகவும் சுட்டிக்காட்டியது.

04.தம்ம சக்கரங்கள் மற்றும் ஸ்தூபிகள் உள்ளிட்ட பௌத்த சிற்பங்கள் மற்றும் கலைப்பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டதை மேற்கோள் காட்டி. கோயில் கட்டுமானத்தை நிறுத்த வேண்டும் 
என்று கோரினர்.
 
05. யுனெஸ்கோ அல்லது இந்திய தொல்பொருள் ஆய்வு மையம் (ASI) அந்த இடத்தை ஆராய்ந்து கண்டுபிடிப்புகளை பகிரங்கப்படுத்த வேண்டும் என்றும் அவர்கள் கோரினர்.
 
-தொடரும்-