6 டிசம்பர் 1956
01 . அறிவர் அண்ணல் அம்பேத்கரின் 53வது மகாபரிநிர்வாணம். பௌத்தர்களின் தீர்க்கதரிசி இந்த நாளில் அதாவது 06 -12 - 1956 . அவருடைய இல்லத்தில் இயற்க்கை எய்தினார். (26 வது அலிபூர் சாலை, புது தில்லி)
02 . 05 -12 - 1956 அன்றிரவு அறிவர் அண்ணல் அம்பேத்கர் "புத்தரும் அவர் தம்மமும்" என்ற நூலுக்கு முன்னுரையை எழுதினார். இந்நூலை முடித்தப்பிறகு அந்நூலின் மீது கையை வைத்துக்கொண்டு உறக்கத்தில் தானாக விழுந்தார்.
03 . தற்கால உலகத்திற்கு ஈடுகொடுக்கவும் பெளத்தத்தை நவீனமாக்கவும் பௌத்தர்களின் நூலான இந்நூலை 1951 ல் எழுத ஆரம்பித்தார்.
04 . 06 - டிசம்பர் வியாழக்கிழமை காலை 6 மணிக்கு அறிவர் அண்ணல் அம்பேத்கரின் வேலையாள் தேநீர் கொடுக்க வரும் போது அசைவற்றும் முச்சற்றும் பூரண அமைதியல் அறிவர் அண்ணல் அம்பேத்கர் உறங்குவதை பார்த்தார். மனநிலை பாதிக்கப்பட்டவராக திரும்ப ஓடி துயரத்தை உறவினர்களுக்கும் அங்கு வந்திருந்தவர்களுக்கும் தெரிவித்தார்.
05 . பெருந்தலைவரின் துயர மரணத்தை கேட்டு ஒவ்வொருவரும் அதிர்ந்தனர். இச்செய்தி காட்டுத் தீ போன்று நாடு முழுவதும் பரவியது. மக்கள் அத்துயர நிகழ்ச்சியை காண்பதற்கும் இதயப்பூர்வமான மரியாதை செலுத்தவும் 26 , அலிபூர் சாலை, புது தில்லி நோக்கி ஓடினர்.
06 . உடனே இராசசபை லோக் சபை இரு அவைகளும் பெருந்தலைவருக்கு மரியாதை செலுத்த ஒத்திவைதது. இந்த மரணச் செய்தியை அனைத்திந்திய வானொலி மூலம் ஒளிபரப்பியது. அப்போது அறிவர் அண்ணல் அம்பேத்கர் இராசசபையில் பாராளுமன்ற உறுப்பினராக இருந்தார்.
07 . 04 டிசம்பரில் அறிவர் அண்ணல் அம்பேத்கர் இராச சபைக்கு வந்திருந்ததால் மக்கள் முதலில் நம்பவில்லை.
இறுதி ஊர்வலம்
01 . அவருடைய உடல் புது தில்லி விமான நிலையத்திற்கு 06 -டிசம்பர் இரவு 8 மணிக்கு கொண்டு செல்லப்பட்டது.
02 . விமானம் இரவு 12 மணிக்கு பூறப்பட்டு இரவு 2 மணிக்கு பம்பாய் விமான நிலையத்தில் தரை இறங்கியது. இதற்கிடையில் சுமார் 20,000 மக்கள் கடுங்குளிரில் காத்துக்கொண்டிருந்தனர்.
03 . 07 டிசம்பர் அதிகாலை அறிவர் அண்ணல் அம்பேத்கர் உடல் அவருடைய இல்லத்தை அடைந்தது. பிக்குகள் ஏற்க்கனவே அங்கு வந்திருந்தனர்.
04 . இறுதி சடங்கிற்காக நண்பகல் 2 மணிக்கு இல்லத்திலிருந்து புறப்பட்டது (இராஜகிரகம் - தாதர் - பம்பாய்). எண்ணிலடங்காத ஆண்களும் பெண்களும் சாலையின் இருமருங்கிலும் நின்றுகொண்டு மலர்களையும் பூமாலையையும் அவரின் உடல் மீது தூவினர்.
05 . மரண துயிலிடத்தில் V.K கெய்க்வார்டு கூறினார்
இந்த மாதம் 15 ம் நாள் அறிவர் அண்ணல் அம்பேத்கர் தம்ம தீட்சையை பெருந்திரளான மக்களுக்கு கொடுக்கப்போவதாக இருந்தார். நீங்கள் அவருடைய விருப்பத்தை நீறைவேற்றுவீர்களா? இதைக் கேட்டதும் 5,00,000 மக்கள் புத்த, தம்ம சங்கத்திடம் சரணடைந்தனார்.
06 . இந்த வழியில் அவரது இறுதி சடங்கு உயரிய பிக்குகள் கண்ணிருடன் செய்யப்பட்டது.
முழுநிகழ்ச்சியும் மிகுந்த அமைதியுடன் நடந்தெரியது.
நன்றி : சக்தி சாதனா மிச்சியன் (தேஹ்ரடுன்
![14. Koni Nahi Bhimasarkha (Mahaparinirvan Din) [Bhimgeet]](https://i4.ytimg.com/vi/6lpEcoHR2Ts/hq2.jpg)
கருத்துகள் இல்லை :
கருத்துரையிடுக