திங்கள், ஆகஸ்ட் 31, 2015

பாபா சாகிப் ஏன் பௌத்தம் ஏற்றார்?

வழக்கறிஞர் .கௌதமன் உரை 16-10-2013

இடம் - அம்பேத்கரிஸ்ட் பேரவை - அசோக்நகர்சென்னை



01. நம்முடைய இந்திய சமுக அமைப்பு என்பது எவ்வாறு அமைந்து இருக்கிறது?

பாபாசாகிப் நாக்பூரில் விளக்கியதுஇந்திய சமுக அமைப்பை இந்த கைக்குள் (ஐந்து விரல்களுக்குள் படுக்கை அளவில்) அடக்கிவிடலாம். மேலே இருப்பவன் பிராமணன், அதற்க்கு அடுத்து கீழே இருப்பவன் சத்திரியன், அதற்க்கு அடுத்தடுத்து கீழே இருப்பவன் வைசியன், இவர்கள் எல்லோருக்கும் கீழே இருப்பவன் சூத்திரன். இந்த நான்கு வர்ணங்கள் சேர்ந்தது சதுர் வர்ணம் எனப்படும். இவர்களுக்கு சவர்ணர்கள் என்று பெயர். இந்த ஐந்தாவது வருணத்தில் இருப்பவர் தீண்டத்தகாதவர்கள், அவர்களுக்கு அவர்ணர்கள் என்று பெயர். இந்த அவர்ணர்களையும் சவர்ணர்களையும் சேர்த்து இந்து மதமாக இருக்கிறது. இந்த அமைப்பில் மேலே இருப்பவன் பிராமணன், கிழே இருப்பவன் தீண்டத்தகாதவன். இப்படி  படிநிலையில்  இருக்கின்ற சமுகம் ஒரு சமத்துவ சமூகமாக இருந்தால் தான் ஐந்து வர்ணமும் சமமாக முடியும். இதற்க்கு மேலே இருப்பவன் கிழே செல்லவேண்டும்,  கிழே இருப்பவன் மேலே செல்லவேண்டும். படுக்கை அளவிலேயே  இந்த ஐந்து வருணமும் சமமாக முடியும்.


02. நான் இந்துவல்ல, நாங்கள் இந்துக்கள் அல்ல என பாபாசாகிப் உறுதி செய்ததற்கான காரணம் என்ன? 

நான் இந்துவல்ல, நாங்கள் இந்துக்கள் அல்ல. எங்களை ஏன் இந்துக்களில் சேர்க்கிறீர் என பாபாசாகிப் கேட்கிறார். ஏன் என்றால் மேல் இருக்கிற நான்கு வருணத்திற்கு உட்பட்டவர்கள் அனுபவிக்கிற உரிமைகள் எல்லாம்  எல்லோருக்கும் பொதுவாக இருக்கவேண்டும். ஆனால் அவைகள் தீண்டத்தகாதவனுக்கு கிடையாது. அவன் ஊருக்கு ஒதுக்கு புறமாக இருக்கவேண்டும். தீண்டமை முத்திரை குத்தப்பட்டிருக்கிறது. கோவிலுக்கு போகமுடியாது, தெருவில் நடக்க முடியாது. எல்லாவற்றிலும் ஒதுக்கிவைத்து இருக்கிறான். 

03. தீட்டிர்க்கும் தீண்டாமைக்கும் உள்ள வேறுபாடுகள் என்னென்ன?

  1. தீட்டு தற்காலிகமானது, தீண்டாமை நிரந்தரமானது.
  2. தீட்டை போக்கிக்கொள்ளளாம், தீண்டாமையை போக்கிக்கொள்ள முடியாது.
  3. தீட்டு ஒரு குறிப்பிட்ட நபரை மட்டும் பாதிக்கும் ஆனால் தீண்டாமை கால காலமாக கால காலமாக  இன்றும் ஒரு சமுகத்தில் நீடித்து இருக்கிறது.

04. இயற்கையான மதம் (Natural Religion), வெளிப்படுத்தப்பட்ட மதம் (Reveled Religion) என்றால் என்ன?   
ஏன் தீண்டமை முத்திரை வந்தது? ஏன் இந்து மதம் சவர்ணர்களையும் அவர்ணர்களையும் உள்ளடக்கியுள்ளது? ஏன் சமத்துவம் இல்லாத மக்களாக வைத்து இருக்கிறது என நீண்டகாலமாக ஆய்வு செய்கிறார் பாபாசாகிப். அவ்வாறு ஆய்வு செய்யும் பொழுது அவர் என்ன நினைக்கிறார் என்றால் மதம் என்றால் எல்லோருக்கும் சமமாக இருக்கவேண்டும். உலகத்தில் இரண்டு விதமான மதங்கள் உள்ளது. ஒன்று இயற்கையான மதம் இன்னொன்று வெளிப்படுத்தப்பட்ட மதம்.
  1. வெளிப்படுத்தப்பட்ட மதம்
    1. இந்து மதம், கிறித்துவ மதம், இஸ்ஸாமிய மதம் இவைகள் எல்லாம் வெளிப்படுத்தப்பட்ட மதங்கள்.
    2. வெளிப்படுத்தப்பட்ட மதம் என்பது கடவுளால் வெளிபடுத்தப்பட்டது. இம்மதங்களுக்கு அடிப்படையாக கடவுள் உண்டு. பகவத் கீதை கிருஷ்ணனால் அருளப்பட்டது. பைபிள் அது கடவுளால் அருளப்பட்டது. திருக்குரான்  முகமது சல்லல்லாஹுவசல்லாம் அருளப்பட்டது.
    3. கடவுளால் அருளப்பட்ட இந்த நூல்களில் இந்த காலத்திற்கு ஏற்ப விஞ்ஞான முன்னேற்றத்திற்கு   ஏற்ப மாற்றிக்கொள்ளலாம் என்றால் அது முடியாது. முதலில் பூமியை படைத்து பின்னர் சூரியனை படைத்தான் என்று சொல்லப்படுகிறது. சூரியனில் இருந்து தான் பூமி வந்தது என்ற அறிவியல் முறைப்படி மாற்ற முடியுமா என்றால் முடியாது. வெளிப்படுத்தப்பட்ட மதம் அறிவியலுக்கு முரணாக இருந்தாலும் நாம் அதனை ஏற்றகவேண்டும். 
    4. கடவுளோடும் ஆன்மாவோடும் தொடர்புடையது, சடங்குகளோடும்  சம்பிரதாயங்களோடும் தொடர்புடையது, இறந்தபிறகு  சொல்லப்படுகின்ற வாழ்க்கையை ஏற்கிறது,
  2. இயற்கையான மதம்
    1. இயற்கையான மதம் என்பது மனிதனால் உருவாக்கப்பட்டது.
    2. இயற்கையான மதம் என்பது சூழ்நிலைக்கு தகுந்தமாதிரி   இடத்திற்கு ஏற்றார் மாதிரி அறிவியலுக்கு பொருந்துகின்ற மாதிரி இயற்கையான மதம் தன்னை தகமைத்துக்கொள்கிறது.
    3. காரண காரியங்களை அடிப்படையாக கொண்டது.
    4. பௌத்தம் இயற்க்கையான மதம்  

05. நாத்திகன் என்பவன் யார்?

இந்திய சமுகம் என்பது வர்ணங்களால் அமைக்கப்பட்ட சுழல் இருக்கிறது. இந்த வர்ணங்களுக்கு அடிப்படை இந்து மதம். இந்து மதத்திற்கு அடிப்படை வேதங்கள். இந்த வேதங்கள் எப்பொழுதும் புனிதமானது. வேதங்களில் தவறுகள் இருந்தாலும் நாம் அப்படியே ஏற்றாக வேண்டும். முதலில் வேதங்களில் தவறு இருக்கிறது என்றே சொல்லமுடியாது. கடவுளை மறுப்பவன் நாத்திகன் இல்லை, வேதத்தை நிந்திப்பவனே நாத்திகன்.

06. இன்று வரை சாதிகளை நிலைத்திருக்க செய்திருப்பது எது?
இதற்கு நான்கு விசயங்கள் இருக்கிறது. அவற்றில் இரண்டு முதன்மையானது. ஒன்று சட்ட கட்டளை (Legal Order) மற்றொன்று மதக்கட்டளை (Religious Order). இவ்விரு கட்டளைகளும் இணைந்து இன்று வரை சாதிகளை நிலைத்திருக்க செய்துயிருக்கிறது. 

07.பாபாசாகிப் எங்கேயாவது தாழ்த்தப்பட்டவர்களை எல்லோரும் ஒன்றிணைந்து சாதிகளை ஒழியுங்கள் என்று சொல்லியிருக்கிறார?

100 பேரில் 20 பேர் மட்டும் இருக்கிற தாழ்த்தப்பட்டவர்கள் இந்த 80 பேருடைய சாதிகளை ஒழித்துக்கட்ட முடியுமா?. அது முடியாது. இந்த 80 பேரை கொண்ட தீண்டதக்கவர்கள் தான் தீண்டாமையின்  தீமையை புரிந்துக்கொண்டு சாதியை ஒழிக்க முன்வர  வேண்டுமே தவிர இந்த 20 பேர் கொண்ட தாழ்த்தப்பட்டவர்கள் இல்லை. அது தாழ்த்தப்பட்டவர்களின் இலக்கும் இல்லை என சொல்லியிருக்கிறார். (ஜாத் பட் தோடக் மண்டல் உரை) 

தீண்டாமைக்கு அடிப்படை சாதி. சாதிக்கு அடிப்படை இந்து மதம். இந்து மதத்திக்கு அடிப்படை வேதங்கள். எனவே தீண்டாமையை ஒழிக்க சாதியை ஒழிக்கவேண்டும். சாதியை ஒழிக்க இந்துமதத்தை ஒழிக்கவேண்டும். இந்து மதத்தை ஒழிக்க வேதங்களை ஒழிக்க வேண்டும். இதனை 20 பேர் உள்ள மக்களால் முடியுமா? 

08. வரலாற்றில் யாரொருவர் இந்த சாதிக்கு எதிராக, வருணத்திற்கு எதிராக குரல் கொடுத்து இருக்கிறார்?
வரலாற்றை பார்க்கும்பொழுது யாரொருவர் இந்த சாதிக்கு எதிராக, வருணத்திற்கு எதிராக குரல் கொடுத்து இருக்கிறார் என்று பார்க்கும்பொழுது பாபாசாகிப்புக்கு பகவன் புத்தர் மட்டுமே தெரிகிறார். கௌதம புத்தர் முதலில் செய்தது என்னவென்றால் ஆச்சாரம், தெய்விகதன்மை, வேதமாவது புனிதமாவது தூக்கி எறி என்றுசொன்னார். பகவன் புத்தர் தொடக்கத்திலிருந்து இறுதிவரை வேத எதிர்ப்பில் உறுதியாய் இருந்தார்.

09. பாபா சாகிப் ஏன் பௌத்தம் ஏற்றார்?
பௌத்தம் அறிவியலுக்கு உட்பட்ட மதம், மூட நம்பிக்கை இல்லாத மதம், சமத்துவத்தை போதிக்கின்ற மதம், இதனால் பாபா சாகிப் பௌத்தத்தை ஏற்றுக்கொண்டார்பௌத்தம் கடவுளோடும் ஆன்மாவோடும்  தொடர்பின்றி  இருக்கிறது, இறந்த பிறகு சொல்லப்படுகின்ற வாழ்க்கையை பௌத்தம் ஏற்கவில்லை, சடங்குகளோடும் சம்பிரதாயங்களோடும் தொடர்பின்றி இருக்கிறது. 
இந்து மதத்தில் உள்ள வேதம் சொல்கிறது தீண்டத்தகாதவன் நெய்யிட்டு உண்ணக்கூடாது, தெருவில் நடக்கக்கூடாது, குதிரையில் செல்லக்கூடாது, காலைக்கடன் முடிக்கச் செல்லும் பொழுது செம்பு பாத்திரத்தில் தண்ணீர் எடுத்து செல்லக்கூடாது. வீட்டைக்கட்டினால் வீட்டை எரிப்பது. இப்படிப்பட்ட மதத்திலிருந்து நாம் வெளியேற வேண்டும் என்றார். யாரொருவர் தன்னை இந்து என்று சொல்கிறானோ அவன் தன் வாயாலே தாம் தீண்டப்படாதவன் என ஒத்துக்கொள்கிறான்.


10. பௌத்தத்தின் மையக்கருத்து என்ன?
இந்த பூமியில்  வாழும் மனிதர் ஒவ்வொருவருக்குள்ளும் எப்படி வாழவேண்டும் என்பது தான். எது சரியான கண்ணோட்டம்? எது தவறான கண்ணோட்டம் என்று கண்டறியவேண்டும். அதற்குரிய வழிமுறைகள் என்ன? இதைப்பற்றி  சொல்வது தான் பௌத்தம். அப்படி என்றால் அதற்க்கு என்ன வழி? எப்படி வாழ வேண்டும்? அதற்கு மூன்று விஷயங்கள் உள்ளது.
01. பஞ்சசீலம்
02. அட்டாங்க மார்க்கம்
03. பர்மிதாஸ் (Parmitas) 

கருத்துகள் இல்லை :

கருத்துரையிடுக