வெள்ளி, ஆகஸ்ட் 16, 2019

காஞ்சிவரம் தொன்மையான பௌத்த தளம் XXII வராதராசா பெருமாள் கோவில்


அமைவிடம்
வராதராசா பெருமாள் கோவில், நேதாஜி நகர், காஞ்சிவரம் வட்டம், காஞ்சிவரம் மாவட்டம் 631501

காஞ்சி வராதராசா பெருமாள் கோவில் 108 வைணவ கோவில்களில் முதன்மையான மூன்றாவது கோவில் என்ற பெயர் கொண்டுள்ளது. வைணவ அறிஞர்களை இங்கு ஆழ்வார் என்று அழைக்கப்படுகின்றனர். இந்த கோவில் சுமார் 360 கல்வெட்டுகளைக் கொண்டுள்ளது. 1000 கல் மண்டபத்தை கொண்டது. ஆனால் 1000 கல் மண்டபத்துடன் இக்கோவில் தற்பொழுது இல்லை.

A.சிவன் கோவிலை அழித்து வரதராஜ பெருமாள் கட்டப்பட்டது
01. பம்மல் சம்பந்தம் 
காஞ்சிவரத்தில் உள்ள வரதராஜ பெருமாள் கோவில் என்பது மாற்றப்பட்ட சிவா ஆலயம் என்று சிவாலய சிற்பங்கள் நூல் பக்கம் 36ல் குறிப்பிடுகிறார்.
01. கிழக்கு கோபுரம்
சிவாலயங்கள் எல்லாம் கிழக்கு நோக்கி இருக்கும். இது சிற்ப சாஸ்திரத்திற்கும் சைவ ஆகமங்களிலும் குறித்த முறையாகும். அப்படி வேறு எத்திசையிலாவது நோக்கிருந்தால் அதற்க்கு ஏதாவது அவசியமான காரணம் இருக்கவேண்டும் (பக்கம் 15). 
பழைய ஆலயம் கிழக்கு நோக்கி இருந்தது. பெரிய கோபுரம் சைவ முறைப்படி கிழக்கில் தான் இருந்தது. தென் கிழக்கு மூலையில் தான் மடப்பள்ளி இருந்தது. வராதராஜா பெருமாள் பார்க்கபோவது என்றால் மேற்க்கு பக்கம் நுழைந்து கிழக்கில் இருக்கும் படிகளின் மீது எறி மறுபடியும் திரும்பி போகவேண்டும். 
தற்கால வரதராஜ பெருமாள் கோவில் விழாக்கள் எல்லாம் மேற்கில் இருக்கும் சிறிய கோபுர வழியாகத்தான் நடந்து வருகிறது. சிவா ஆலயங்களில் சுவாமிகளின் (கர்ப்பகிரகம்) கருவறை முதலிலும் அம்மன் இடம் பிறகும் இருப்பதும் வழக்கம். தற்காலம் மேற்கு கோபுர வழியாக நுழைந்தால் அம்மன் இடம் முந்தியிருக்கிறது. 
02. புண்ணிய கோடி விமானம்.
இங்குள்ள கல்வெட்டுகளில் இவ்வூரின் பெயர் அத்தியூர் என்றே இருக்கிறது. அத்தியுரில் இருந்த சிவா ஆலயத்திற்கு புண்ணிய கோடிஸ்வரர் கோவில் என்ற பெயர் இருந்தது. தற்பொழுது உள்ள வராதராஜாருடைய விமானத்திற்கு புண்ணிய கோடி விமானம் என்று பெயர்.
03. ஆழ்வார்கள் பாடல்கள்
காஞ்சிவரத்தில் உள்ள பல கோவில்களுக்கு பாடல்கள் (பாசுரங்கள்) உள்ளது ஆனால் பழைய வைணவ ஆழ்வார்கள் வரதராஜரைப்பற்றி பதிகங்கள் பாடியதாக இல்லை. 

04. சிவா ஆலயத்தை பெருமாள் ஆலயமாக மாற்றப்பட்டது
குண்டு கோபாலராயர் என்பவரால் சிவா ஆலயத்தை விஸ்ணு ஆலயமாக மாற்றப்பட்டது. (சிவா ஆலயங்கள் இந்தியாவிலும் அதற்க்கு அப்பாலும் தொகுதி II பக்கம் 14 )  

ஆங்கிலேயர் ஒருவர் (District Gazetteer என்னும் புத்தகத்தில்) ஆதியில் சிவா ஆலயத்தை வைணவ ஆலயமாக மாற்றப்பட்டது என உறுதியாக குறியிருக்கிறார். 
மறைந்த பண்டித நடேச சாஸ்திரிகளும் சிவா ஆலயத்தை வைணவ ஆலயமாக மாற்றப்பட்டது என்ற கருத்தை கொண்டுள்ளார் என்றும் மேலும் பல ஆதரங்கள் இருக்கிறது அவற்றை இங்கு கூற இடமில்லை என்று முடிக்கிறார் பம்மல் சம்பந்தம். 
05. மலைமீது இருப்பவர் வரதராஜர்.
வரதராஜ பெருமாள் மலைமீது இருப்பதாக கருதுவது மரபு ஆனால் இங்கு (காஞ்சியில்) மலையே கிடையாது. முந்திய சிவா ஆலயத்தை நான்கு புறமும் மூடிவிட்டு வரதராஜ பெருமாள் கட்டப்பட்டு இருப்பது உறுதி
வரதராஜப் பெருமாள் / தேவராஜப் பெருமாள்
தற்போது கருவறையில் தரிசிப்பது வரதராஜப் பெருமாள் என்று சொல்லப்பட்டாலும், உண்மையில் அவர் பழைய சீவரம் (லட்சுமி நரசிம்மசுவாமி கோயில்) பகுதியிலிருந்து கொண்டுவரப்பட்ட தேவராஜப் பெருமாள் தான். புதிய வரதராஜ பெருமாள் சிலை பழைய சீவரம் 20 கி மீ தொலைவில் உள்ள இடத்திலிருந்து கொண்டுவரப்பட்டது. பழயசீவரம் கிராமம், வாலாஜாபாத் வட்டத்தில் இருக்கிறது.

வரதரின் சிலைக்கு பழைய சீவரத்தில் தான் கல் எடுக்கப்பட்டது. இந்த நினைவை போற்றும் வண்ணம் பொங்கலுக்கு மறுநாள் பழைய சீவரத்திற்கு காஞ்சி வரதராஜ பெருமாள் கொண்டுவரப்படுகிறது. முதல் நாள் இரவு 10 மணிக்கு புறப்பட்டு காலை 8 மணிக்கு பழயசீவரத்தில் காட்சியளிப்பார். பிறகு மீண்டும் இரவு 10 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை  வரதராஜப் பெருமாள் கோவிலில் காட்சியளிப்பார். 

பழைய சீவரம் பல்லவர் காலம் தொட்டு பழைமை மிக்க ஊராக திகழ்ந்துள்ளது. காஞ்சியை அடுத்த பல ஊர்களில் அக்காலத்தில் சீவரத்தார் ஆகிய பௌத்தர்கள் வாழ்ந்திருந்தனர். அவர்கள் சிறக்க வாழ்ந்த ஊர்கள் சில சீவரம் எனவும் பழைய சீவரம் எனவும் வழங்கப் பெற்றன. பின்வந்த சைவர்கள் தம் ஊராக்கி, சீவரத்தைச் சிவபுரமாக்கினார்.

எனினும் பின்வந்த முகமதிய (இஸ்லாமியர்) மன்னன் சீவரத்தை தன் மனைவியின் பெயரால் வாலாஜாபாத் என வழங்கினன். ஆனால் அவ்வூரைச்சுற்றியுள்ள மக்கள் இன்றும் அதைச் சீவரம் என்றே அழைத்து வருகின்றனர். பெருங்குடி, சென்னை அருகில் அருள்மிகு விநாயகர் கோவில் அருகிலும் சீவரம் என்ற ஊர் அமைந்துள்ளது. சீவரம் என்பது பௌத்த துறவிகள் (பிக்கு மற்றும் பிக்குணி) அணியும் ஆடை.

வராதராஜா பெருமாள் அத்தி வரதரானார். 
அத்தி வரதர் அத்தி மரத்தால் செய்யப்பட்ட பெருமாள். திருக்குளத்தில் 40 ஆண்டுகள் இருக்கிறார். பின்னர் குளத்து நீரை முழுவதும் வெளியேற்றி அத்திவரதரின் சிலையை வெளியெடுத்து, கோயிலில் வைத்து 48 நாட்கள் மக்கள் தரிசிப்பர். படுத்த நிலையிலும் நின்ற  நிலையிலும் வைத்திருக்கப்படும்.

இந்த ஆண்டு ஜூலை 1 ஆம் நாள் திங்கள் கிழமை முதல் ஜூலை 31 ஆம் நாள் புதன்கிழமை வரை படுத்த நிலையிலும் ஆகத்து மாதம் 1ஆம் நாள் வெள்ளிக்கிழமை முதல் ஆகத்து மாதம் 17 ஆம் நாள் சனிக்கிழமை வரை நின்ற நிலையிலும் 48 நாட்கள் வழிபடப்படும். அத்திவரதரை தம் வாழ்நாளில் தரிசிப்பது மிகப் பெரும் பேறு என்பதால், லட்சக்கணக்கான மக்கள் கூட்டம் தற்போதும் வந்து கொண்டிருக்கிறது. இதற்கு முன் 1939 மற்றும் 1979-ம் ஆண்டுகளில் அத்தி வரதர் வெளியெடுத்து வழிபடப்பட்டது.

கி பி 1688 முதல் கி.பி 1710 வரை 22 ஆண்டுகள் வரதராஜர் காஞ்சியிலிருந்து வெளியேறி திருச்சியில் உடையார் பாளையத்தின் அருகில் உள்ள காட்டில்  பாதுகாப்புடன் இருந்தார். 1688ஆம் ஆண்டே முகலாயர் படையெடுப்பு வரக்கூடும் என்று உணர்ந்து இவ்வாறு செய்யப்பட்டது. 

ஆனால் அப்பகுதியை ஆண்ட அரசன் சிலையை மீண்டும் காஞ்சியில் நிறுவ அனுமதிக்கவில்லை. ஆத்தான் ஐயர் என்பவர் லாலா தோடர்மால் உதவி வேண்டினார். லாலா தோடர்மால் படை எடுத்து சென்று வென்று பெருமாள் சிலையை காஞ்சிக்கு கொண்டுவந்தார். இந்த செய்தி தயார் சன்னதி அருகில் உள்ள நீண்ட கல்வெட்டில் உள்ளது. 8.2.6 அருள்மிகு வரதராஜர் காஞ்சியிலிருந்து வெளியேற நேர்ந்த நிகழ்ச்சி என்ற  தலைப்பை  கல்வெட்டு அறியப்படும் செய்திகள்  இணைப்பை பார்க்கவும். ஆற்காடு நவாபின் படையில் முக்கியப் பொறுப்பில் இருந்த இஸ்லாமியரான ராஜா தோடர்மால் குடும்பத்துக்கு காஞ்சி வரதராஜப் பெருமாள் கோயிலில் மட்டுமல்லாமல் திருமலை திருப்பதியிலும் சிற்பங்கள் உண்டு.

1781ஆம் ஆண்டு ஜூலை 30 அன்று முதல் முறையாக அனந்தசரஸ் குளத்திலிருந்து வெளியே எடுக்கப்பட்டு ஒரு மண்டலம் கோயிலில் வாசம் செய்த பின் மீண்டும் குளத்துக்குள் இறக்கப்பட்டிருக்கிறார். அதற்கு முன் அத்தி மரத்தால் செய்யப்பட்ட வரதர் வெளியே தோன்றியதாகவோ, 40 ஆண்டுக்கொரு முறை தோன்றி சேவை சாதித்ததாகவோ ஆழ்வார்கள் பாசுரங்களிலோ, கல்வெட்டுகளிலோ குறிப்புகள் இல்லை. 


ராபர்ட் கிளைவ் (Robert Clive) 
ராபர்ட் கிளைவ் மற்றும் அவரது இராணுவம் நவம்பர் 1751 சென்னையிலிருந்து காஞ்சிவரம் வரை அணிவகுத்து, காஞ்சிவரத்தில் வரதராஜ பெருமாள் கோயிலின் வெளிப்புற வளாகத்தில் தங்கினார். அப்பொழுது ராபர்ட் கிளைவுக்கு அதிக காய்ச்சலை உருவாக்கியது. ராபர்ட் கிளைவுக்கிருந்த தமிழ் மொழி பெயர்ப்பாளர் அக்கோவில் அர்ச்சகரை ராபர்ட் கிளைவுக்கு பூஜை செய்ய வேண்டினார். அர்ச்சகர் துளசி தீர்த்தம் கொடுத்து அவருக்காக பூஜை செய்தார்.   

அடுத்த நாள் காலை ராபர்ட் கிளைவ் நோயின்றி இருந்ததை உணர்ந்தார். அதிசயமான ராபர்ட் கிளைவ் அர்ச்சகர் வரதராஜா ஆற்காட்டில் வெற்றி அளித்தால் அவர் கோயிலுக்கு கணிசமான பரிசை வழங்குவதாகவும் வேண்டினார். ஆற்காடு முற்றுகை ராபர்ட் கிளைவ் முழு வெற்றியை அளித்தது. ராபர்ட் கிளைவின் கைகளில் கருவூலம் விழுந்தது, கிழக்கு இந்திய கம்பெனி கர்நாடக மாகாணங்களின் முடிசூடா மன்னனார். 

வெற்றி பெற்ற கிளைவ் ஆற்காடு கோட்டையில் கருவூலத்தில் கண்டெடுக்கப்பட்ட மிகப்பெரிய ஆபரணத்தை இறைவனிடம் வழங்கினார். மாக்கரே காந்தி (MAKARA KANDI) எனும் பெரிய நகை இன்று பிரசாதமாக இறைவன் வரதராஜனை அலங்கரிக்கிறது.


வெளிநாட்டினர்/  பிற மதத்தினர் அனுமதியில்லை
வெளிநாட்டினர் மற்றும் பிற மதத்தினரும் கோவிலில் நுழைய அனுமதிப்பதில்லை. அவர்கள் தொல்லியல் துறை அறிஞர்களாக இருந்தாலும் அனுமதியில்லை. 
சமஸ்கிருதம் / தமிழ்ப் பாடல்
இன்றும் சமஸ்கிருத பாடல்களைப் பாடுவதா? அல்லது தமிழ்ப் பாடல்களைப் பாடுவதா? என்பது தொடர்பாக வடகலை மற்றும் தென்கலை பிரிவினரிடையே மோதல் நிகழ்ந்துகொண்டுள்ளது. 
வடகலை மற்றும் தென்கலை 
மணவாள மாமுனிகள் சன்னதியில் பிராமணர் அல்லாதோருக்கு அனுமதி மறுப்பு. தங்களை கோவிலுக்குள் அனுமதித்து நாலாயிர திவ்ய ப்ரபந்தம் பாட அனுமதிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பையும் அவர்கள் காண்பித்தும் இறுதிவரை யாரையும் கோவிலுக்குள் அனுமதிக்கவில்லை. நீதிமன்ற தீர்ப்பை அவர்கள் மதிக்கவில்லை.
படுகொலை
கா‌ஞ்‌சிபுர‌ம் வரதராஜ பெருமா‌ள் கோ‌யி‌ல் மேலாள‌ர் ச‌ங்கரராம‌ன் இக்கோவில் வளாகத்திலேயே கூலிப்படையினரால் படுகொலை செய்யப்பட்டார். இந்த அசுத்தத்தை நீக்க வழியில்லை வெளிநாட்டினர் மற்றும் பிற மதத்தினருக்கும் அனுமதியில்லை ஏற்புடையதாகயில்லை.    

பகவன் புத்தர் கோவில்
சின்ன காஞ்சிபுரத்தில் உள்ள மிகப்பெரிய கோவில் இது. இக்கோவில் புத்தர் கோவில் என்று அறிஞர்கள் கூறுகின்றனர். இங்கு பௌத்த பல்கலைக்கழகம் இருந்தது என்று கூறுகின்றார்.
கடம்பி மீனாட்சி வரதராஜ பெருமாள் கோவிலில் பல புத்தர் சிலைகளை புதைத்து பெரிய சுவர் கட்டப்பட்டுள்ளது.
தல விருட்சம் என்பது அரசமரம் (போதி மரம்) புத்தருக்கு வரதர் என்ற சிறப்பு பெயர் உள்ளது. புத்தர் அரசர் என்பதால் வரதராசர் என்று அழைக்கப்பட்டிருக்கலாம். போதி மரத்திற்கு பல பெயர்கள் உள்ளது. (சித்தார்த்தர்) அரசன் அமர்ந்த மரம் என்பதால் தமிழகத்தில் அரசமரம்  என்று அழைக்கப்படுகிறது. காஞ்சி வராதராசா பெருமாள் கோவில் தல விருட்சம் என்பது அரசமரம். அரசமரம் பௌத்த அடையாளம்.   
மேலும் விரிவாக படிக்க

1 கருத்து :

  1. பல்வேறு அறிஞர்களின் தொகுப்பு நல்ல தகவல்கள். சிரம் எடுத்து தொகுத்துத் தந்த தங்களுக்கு நன்றி - பாராட்டுக்கள். நீடூழி வாழ்க

    பதிலளிநீக்கு