செவ்வாய், செப்டம்பர் 24, 2019

காஞ்சிவரம் தொன்மையான பௌத்த தளம் XXIII வைகுண்ட பெருமாள் கோவில்

அமைவிடம்
வைகுண்ட பெருமாள் கோவில் தெரு, பெரிய காஞ்சிவரம், காஞ்சீவரம்  631502. காஞ்சீவரம் பேருந்து நிலையம் அருகில் வைகுண்டப் பெருமாள் அமைந்துள்ளது.

பகவன் புத்தரை அவதாரமாக தவறாக கருதப்பட்டதால் மாமல்லபுரத்தில் உள்ள கல்வெட்டிலும், காஞ்சீபுரம் வைகுண்ட பெருமாள் கோவிலிலும் திருமாலை புத்தராக வடிக்கப்பட்டுள்ளது.

தொல்லியல் துறை இயக்குனர் அறிஞர் திரு Dr.D.தயாளன் 
பல்லவர் கல்வெட்டு மாமல்லபுரத்தில் உள்ள ஆதிவராக குகையில் விஷ்ணுவின் பத்து அவதாரங்களை குறிப்பிடும் போது புத்தரை குறிப்பிட்டுள்ளது (K.R.Srinivasan 1964, P173)
நந்திவர்மன் II பல்லவ மல்லாவின்  காலத்தில் (731-796 ) வைகுண்ட பெருமாள் கோவிலின் சுவரில் புத்தர் விஷ்ணு அவதாரம் போன்று நின்ற நிலையில் செதுக்கப்பட்டுள்ளது. (Digital documentation of Buddhist sites in Tamilnadu)
ஜப்பான் ஆய்வாளர் டி . ஜிக்சின்  காம்பே  (Dr. T. Jixin Kambe)
போதி தர்மா டோஜோ பௌண்டேசன் இயக்குனர் (Bodhidharma Dojo Foundation -Founder Director) டி. ஜிக்சின்  காம்பே ஆசிய வரலாறு குறித்து பல்வேறு ஆய்வுகள் செய்துள்ளார். அவர் டிசம்பர் மதம் 2018ல் காஞ்சிவரம் வருகை புரிந்து வைகுண்ட பெருமாள் கோவிலுக்கு சென்று, இங்கு யுவாங் சுவாங் என்று குறிப்பிடுபவரை போதி தருமர் என்று குறிப்பிடுகிறார். சீனாவில் உள்ள தியான் டாங் விகாரில் உள்ள போதி தர்மாவின் ஓவியத்தையும் காஞ்சி வைகுண்ட பெருமாள் கோவிலில் உள்ள சிற்பத்தையும் ஆய்வு நோக்கில் ஒப்பிட்டு இந்த கருத்திற்கு வந்துள்ளார்  

போதிதர்மத்துடன் தொடர்புடைய காஞ்சிபுரத்தின் இரண்டு நேரடி சான்றுகள் உள்ளன என்றுரைக்கிறார்.
01. போதிதர்மா தனது இறுதி பயணத்தில் ஷாலின் விகாரை விட்டு வெளியேறிய போது, ஷாலினில் இரண்டு நூல்களை விட்டுவிட்டு சென்றார். அவை மூடப்பட்ட இரும்பு பெட்டியில் வைக்கப்பட்டன. கடினமான முயற்சிகளுக்குப் பிறகு, ஒரு பிக்கு அதைத் திறந்த பொழுது சமஸ்கிருதத்தில் எழுதப்பட்ட இரண்டு நூல்களைக் கண்டார். அவற்றில் ஒன்று “தசை மாற்றம் / தரமான தசைநார் “Change muscle/tendon classic மற்றோன்று மூளையை கழுவும் சுத்தா Wash-brain sutra
02. ஒரே கல்லில் செதுக்கப்பட்ட 5 வேறு வேறு காட்சிகள் உள்ள புடைப்பு சிற்பம் கண்டு வியந்தார். அதில் நான்கு காட்சிகள் போதி தர்மாவின் அரசு குடும்ப வாழ்வை விளக்கும் காட்சிகள். 
02.01.  இடது புறமாக உள்ள சிற்பத்தில் கி.பி 436-460 ஆம் ஆண்டுகளில் அரசாட்சி செய்த பல்லவ மன்னரான இரண்டாம் சிம்மவர்மன் உள்ளார். அவர் புத்தரின் போதனைகளில் ஈடுபாடு கொண்டு அதன் வழி நடப்பவர். 
02.02 நடுப்பகுதியின் மேல் பாகத்தில் உள்ள சிற்பத்தில் யானைகள், குதிரைகள், போர் வீரர்கள் இடம் பெற்றுள்ள காட்சியள்ளது. 
02.03. வலது மேல் புறத்தில் போதி தர்மாவின் இரண்டு சகோதரர்கள் இடம் பெற்றுள்ளனர். 
02.04. வலது பக்கம் கீழ் புறத்தில், அரசவையில் நடனமாடும் பெண்களின் காட்சி சித்தரிக்கப்பட்டுள்ளது. 
02.05. கீழ் நடுப்பகுதியில் 5வது உருவமாக கி பி 440 முதல் 536 வரை வாழ்ந்த போதி தர்மாவின் கட்சி நின்ற நிலையில் இடம் பெற்றுள்ளது.    
 

அவரின் விளக்கத்தில் சில சந்தேகம் எழுந்தது. என்னுடைய சந்தேகத்தை போக்க போதி தர்மா டோஜோ பௌண்டேசனிடம் விளக்கம் கேட்டு இருக்கிறேன். 

01. போதி தருமரின் சகோதரர்கள் இருவர் அமர்ந்திருக்கும் சிற்பத்தில் மேலும் ஒரு உருவம் காணப்படுகிறது. அவ்வுருவம் தலைப்பகுதியை மட்டும் கொண்டுள்ளது. அவர் யாராக இருக்கக்கூடும்?

02. நடனமாடும் பெண்கள். என்று குறிப்பிடுவது ஏற்புடையதாக இல்லை. காரணம் அங்கிருப்பவர்கள் அனைவரும் ஆண்கள்.

03. மேலும் போதி தருமர்க்கு முன் அரசரை வணங்கி நிற்பவரை பற்றி ஏதும் குறிப்பிடவில்லை.

போதிதர்மரை பற்றிய குறிப்புக்கள் எல்லாம் சீனா மற்றும் ஜப்பான் நாட்டில் இருந்தே எடுக்கப்பட்டது. சீனா போதி தர்மர்க்கு மட்டுமல்ல போதிதர்மரை காண வந்த அவரது சகோதரருக்கும் சீனா மொழில் பெயர் அளித்தது. தாமோ என்று போதிதர்மருக்கும் தாச்சி தாமோ என்று அவரது அண்ணனுக்கும் பெயரிட்டது.


Sculpture of Bodhidharma at Kanchi Temple
Dr.Kambe

கருத்துகள் இல்லை :

கருத்துரையிடுக