திங்கள், ஆகஸ்ட் 01, 2022

பெரியேரி புத்தர் - தலைவெட்டி முனியப்பன் கோவில்

சேலம் பெரியேரியில் இருப்பது புத்தர் சிலை தான்! தொல்லியல் துறை

அமைவிடம் 

தலைவெட்டி முனியப்பன் கோவில்,

சேலம் அரசு மருத்துவ மனைக்கு எதிர், கோட்டை சாலை

பெரியேரி கிராமம், சேலம் மாவட்டம், 


உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல்

சேலம் அரசு மருத்துவ மனைக்கு எதிரே புத்தர் சிலை இருந்தது. பழைய பதிவேடுகளிலும் அச்சிலை புத்தர் டிரஸ்டுக்குச் சொந்தமானது என்றே உள்ளது. இப்பொழுது அது தலை வெட்டி முனியப்பன் கோவிலாக மாற்றப்பட்டது. பழைய ஆவணங்கள் கிழிக்கப்பட்டு, திருத்தப்பட்டுள்ளன.  அங்குள்ள சிலைக்கு வழிபாடு நடத்தப்பட்டு வருகிறது. ஆனால், கோவிலில் உள்ளது புத்தர் சிலை என 2008ல் சர்ச்சை எழுந்தது.

இதனால் இந்திய புத்த சங்கத்தின் (Buddhist Society of India) சேலம் மாவட்ட அமைப்பாளர் திரு.பி.ரங்கநாதன் அவர்கள் அங்குள்ள, 26 சென்ட் நிலமும், புத்த சங்கத்துக்குச் சொந்தமானது. அந்த இடத்தை மீட்டு, புத்த சங்கத்திடம் மீண்டும் ஒப்படைக்கக்கோரி, அறநிலையத் துறைக்கும், முதல்வர் தனிப்பிரிவுக்கும் மனு அளித்தார். எந்த நடவடிக்கையும் இல்லை என்பதால் 2011ல் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

தொல்லியல் துறை அறிக்கை

இந்த மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், சம்பந்தப்பட்ட இடத்தில் இருப்பது தலைவெட்டி முனியப்பன் சிலையா அல்லது புத்தர் சிலையா என ஆய்வு செய்து ஆய்வு அறிக்கை அளிக்க வேண்டும் என்று தமிழக தொல்லியல் துறைக்கு உத்தரவிட்டது. 

தொல்லியல் துறை, ஹால்ஸ் சாலை, எழும்பூர், சென்னை 8.   

28/07/2021 10 மணியளவில் கூட்டு ஆய்வு குழு சிற்பத்தை ஆய்வு செய்தது. பூசாரி மற்றும் உதவியாளர் மூலம் சிலையின் மீது பூசப்பட்டிருந்த மஞ்சள், குங்குமம், சாம்பல் மற்றும் எண்ணெய் அகற்றி முழுமையாக சுத்தம் செய்யப்பட்டது. தொல்லியல் துறை அறிக்கை தாக்கல் செய்தது. அந்த சிற்பம் மகா லட்சணங்களை கொண்டுள்ள புத்தர் சிலை தான் என்று.
 
01. தலைவெட்டி முனியப்பன் கோவில் கட்டடம் நவீன தோற்றம் உடையது. இது சிமெண்ட், செங்கல் மற்றும் கான்கிரீட்டால் கட்டப்பட்டுள்ளது.         02. சிலை கடினமான கல்லாலானது. 
03. தாமரை பீடத்தில் அர்த்தபத்மாசனம் எனப்படும் அமர்ந்த நிலையில் சிலை உள்ளது.  
04. கைகள் தியான முத்ரா கொண்டு உள்ளன.
05. தலை சுருள் முடி போன்று இருந்தது. ஞான முடி இருந்தது உயரம் 7 CM
06. நீளமான காது,
07. நெற்றியில் வெள்ளை முடி அ திலகம் தெரியவில்லை.  
08. உடற்பகுதியில் இருந்து தலை துண்டிக்கப்பட்டது.
09. சிலை உயரம் 108 CM . 
10. சிலை எந்த கலை வேலையும் இல்லாமல் தட்டையாக இருந்தது 

 நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் உத்தரவு

பெரியேரியில் இருப்பது புத்தர் சிலை தான் என்பதை தொல்லியல் துறை தெளிவாகவும் திட்டவட்டமாகவும் தன் அறிக்கையில் குறிப்பிட்டு உள்ளது. எனவே

01. தலைவெட்டி முனியப்பன் சிலை என அறநிலையத் துறை கருத அனுமதிக்க முடியாது.

02. புத்தர் சிலை உள்ள இடத்தை தமிழக தொல்லியல் துறை தன் கட்டுப்பாட்டில் எடுக்க வேண்டும். அங்குள்ளது புத்தர் சிலை தான் என அறிவிப்பு பலகை வைக்க வேண்டும். அந்த இடத்தில் பொது மக்களை அனுமதிக்கலாம், ஆனால், புத்தர் சிலைக்கு பூஜை உள்ளிட்ட பிற சடங்குகள் செய்ய அனுமதிக்கப்படவில்லை என்பதை தொல்லியல் துறை உறுதி செய்ய வேண்டும். 

03. அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள நிலத்தை தமிழ்நாடு அகழாய்வுத்துறையிடம் ஒப்படைக்க வேண்டுமென உத்தரவிட்டுள்ளது.


தொல்லியல் துறை  இயக்குநர் அறிஞர் திரு Dr D தயாளன்

2017 ஆம்  ஆண்டு  வெளியிட்ட தம் நூலில் (Buddhist remains of south india Page 205) கீழ்க்கண்டவாறு குறிப்பிடுகிறார்.  

சிற்பம் முற்றிலும் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. தலை துண்டிக்கப்பட்டு, சில ஆண்டுகளுக்கு முன்பு மீண்டும் சரி செய்யப்பட்டது போல் தெரிகிறது. கால்கள் மற்றும் கைகளும் ஓரளவு உடைந்துள்ளன. சிலையின்  காலம் 10-11 நூற்றாண்டுகள். சிற்பம் அசல் இடத்தில் இருந்து அகற்றப்பட்டு நவீன கோவிலில் வைக்கப்பட்டுள்ளது.

பணியில் இருக்கும் தொல்லியல் துறை ஆய்வாளர் அவர்கள் சிலையின் மீது போர்த்தப்பட்ட ஆடையை நீக்கி படம் எடுக்க முடியவில்லை என்னும் பொழுது கோவில் நிர்வாகத்தினர் அதிராகம்  நன்கு தெளிவாகின்றது.


Court Case Order

கருத்துகள் இல்லை :

கருத்துரையிடுக