புதன், ஆகஸ்ட் 10, 2022

பொன்னேரி புத்தர்


அமைவிடம்:- 

குமரசிறுளப்பாக்கம் கிராமம், தேவதானம் ஊராட்சி 

மீஞ்சூர் ஊராட்சி ஒன்றியம், பொன்னேரி: 

திருவள்ளூர் மாவட்டம்


சிலையமைப்பு:-

கை சிந்தனை கை. கால் செம்பாதி தாமரை அமர்வு. ஞான முடி தீப்பிழம்பாக தலைமுடி சுருள் சுருளான முடிகள். இடப்புற தோள் மட்டும் சீவர ஆடையால் போர்த்தப்பட்டு இருக்கிறது சிலை உயரம் 2 அடி உயரம் இரு தோள்கள் வரை தோரணம்நூற்றாண்டு கி.பி 14 நூற்றாண்டு.மீஞ்சூர் அருகே உள்ள தேவதானம் ஊராட்சியில் குமரசிறுளப்பாக்கம் கிராமம் உள்ளது. இங்கு அரசு தொடக்கப்பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளி கட்டிடம் பழமையானதால் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கட்டிடம் அகற்றப்பட்டது. மீண்டும் அதே பகுதியில் புதிய பள்ளி கட்டிடம் கட்டுவதற்கான பூமி பூஜை நடந்தது. இந்த நிலையில் எந்திரம் உதவியுடன் பள்ளம் 08/08/22 தோண்டப்பட்டது. அப்போது மண்ணில் அந்த பள்ளத்தில் சுமார் இரண்டரை அடி புத்தர் சிலை  கண்டெடுக்கப்பட்டது. பொன்னேரி தாசில்தாரிடம் புத்தர் சிலை ஒப்படைக்கப்பட்டது.  கண்டெடுக்கப்பட்ட புத்தர் சிலை கி.பி.14-ஆம் நூற்றாண்டை சேர்ந்த மிக பழமையானது என தொல்லியல் துறையினர் தெரிவித்துள்ளனர்.

பள்ளி கட்டிடம் கட்ட பள்ளம் தோண்டியபோது புத்தர் சிலை கண்டெடுப்பு

பள்ளி கட்டிடம் கட்ட பள்ளம் தோன்றியபோது 2 அடி புத்தர் சிலை கண்டெடுப்பு

கருத்துகள் இல்லை :

கருத்துரையிடுக