அமைவிடம்:
திருவள்ளுவர் பிறந்த இடம சென்னை, மயிலாப்பூர். இங்கு 25 கிரவுண்டு பரப்பளவு கொண்ட திருவள்ளுவர் கோயில் அமைக்கப்பெற்றுள்ளது.
திருவள்ளுவர் கோயில்
குடியிருப்பு பகுதியின் நடுவே அமைந்திருப்பதால் இப்படி ஒரு கோவில் இங்கே இருக்கிறது என்பதே வெளியே பலருக்கு தெரியவில்லை.
தற்போதைய கோயில் 16-ம் நூற்றாண்டின் முற்பகுதியில் கட்டப்பட்டது. 1970-களில் விரிவாகப் புனரமைக்கப்பட்டது. இக்கோவிலை மயிலாப்பூர் ஸ்ரீ முண்டகக்கண்ணி அம்மன் கோயிலின் சார்புக் கோயிலாக இந்து சமய அறநிலையத் துறை பராமரிக்கிறது. 20-ம் நூற்றாண்டு தமிழக அரசால் புனரமைக்கப்பட்ட பிறகு, இக்கோயிலில் உள்ள கற்சிலைகளைத் தவிர பண்டைய கோவிலின் வேறெந்தத் தடயங்களும் காணக்கிடைக்காமல் போய்விட்டன. (1989-ம் ஆண்டு திருமயிலையின் திருக்கோயில்கள் - பில் எஸ். ராஜேந்திரன் நூல்)
சிலையமைப்பு
உடைந்த பகுதியை சேர்த்து பார்க்கும் பொழுது நீண்ட தாடி முறுக்கிய மீசையுடன் அமர்ந்த நிலையில் திருவள்ளுவர் காணப்படுகிறார். வலக்கை சின் முத்திரையுடன் அக்ஷமாலை (Aksha) ஏந்தியவாறு ஒரு பீடத்தின் மீது சிலை உள்ளது . இச்சிலை கிபி பதினான்கு அல்லது பதினைந்ததாம் நூற்றாண்டை சேர்ந்ததாக இருக்கலாம் என்று தொல் பொருள் ஆய்வு துறை இயக்குனர் இரா.நாகசாமி கருதுகிறார். (திருமயிலை திருத்தலம் இயக்கிய வரலாற்று பார்வை (Mylapore Through the Ages) டாக்டர் சு . ராஜசேகரன் - தமிழ் பேராசிரியர் நந்தனம் கலைக்கல்லூரி 1989).
வைட் எல்லிஸ்
ஆங்கிலேய அரசாட்சியில் சென்னை மாகாணத்தின் அரசு ஊழியராக இருந்த எல்லீசனார் என்றழைக்கப்படும் பிரான்சிஸ் வைட் எல்லிஸ் 19-ம் நூற்றாண்டின் முற்பகுதியில் ராயப்பேட்டையில் உள்ள பெரியபாளையத்தம்மன் கோவிலில் எழுப்பிய கல்வெட்டில் மயிலாப்பூர் வள்ளுவர் கோயிலைப் பற்றிக் குறிப்பிட்டுள்ளார்.
எட்வர்ட் எலியட்ஸ் சாலை டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலை என்று வழங்கப்படுகிறது. (திருமயிலை திருத்தலம் இயக்கிய வரலாற்று பார்வை (Mylapore Through the Ages) டாக்டர் சு . ராஜசேகரன் - தமிழ் பேராசிரியர் நந்தனம் கலைக்கல்லூரி 1989).
வெண்கல சிலைகள்
கோவிலில் உள்ள வெண்கல சிலைகள் 19-ம் நூற்றாண்டில் செய்யப்பட்டதாக அறியப்படுகிறது. தற்போது மாநில அரசின் இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் இருக்கும் இக்கோயில் அதற்கு முன் சிவஞான முதலியார் என்பவரின் ஆளுகைக்குள் இருந்து வந்தது.
பல்வேறு தெய்வ சன்னதிகள்
இக்கோயில் வளாகத்தில் விநாயகர், சுப்ரமணியர், சிவன், பார்வதி, திருவள்ளுவர், வாசுகி, துர்கை, நவகிரகங்கள் எனப் பல்வேறு தெய்வங்களுக்கான தனித்தனி சன்னதிகள் உள்ளன.
திருக்குறளில் கடவுள்கள்
திருவள்ளுவர் திருக்குறளில் குறிப்பிட்ட கடவுள்கள் குறித்து எந்த கருத்தும் கூறவில்லை.
கல்வெட்டுகள்
இக்கோயில் புகழ்பெற்ற முண்டகக் கண்ணியம்மன் கோயிலுக்கு அருகே அமைந்துள்ளது. மயிலாப்பூரில் திருவள்ளுவருக்கு 1935ல் கோவில் உருவானதாக அங்கிருக்கும் கல்வெட்டு சொல்கிறது.
27/04/1973ல் முதல்அமைச்சர் கருணாநிதி கோவில் திருப்பணியை தொடங்கி வைத்திருக்கிறார். நெடுஞ்செழியன், கண்ணப்பன் ஆகியோர் முன்னிலை வகிக்க குன்றக்குடி அடிகள் தலைமையில் திருப்பணி குழுவும் அமைக்கப்பட்டிருக்கிறது. அப்போதைய அறநிலையத் துறை அமைச்சர் மு. கண்ணப்பன், கல்வி அமைச்சர் நெடுஞ்செழியன் உள்ளிட்டோர் இவ்விழாவில் பங்கேற்றனர் என்பது கோவிலில் காணப்படும் கல்வெட்டு மூலம் தெரியவருகிறது.
முதல்அமைச்சர் கருணாநிதி துவக்கிய திருப்பணி என்பதால் ஆலயம் என்ற சொல்லை தவிர்த்து நினைவாலயம் என்று பொறித்திருக்கிறார்கள் கடந்த 23.01.2001-ல் திருவள்ளுவர் கோயிலுக்கு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டுள்ளது. இதில் அப்போதைய இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் திரு.தமிழ்க்குடிமகன் உள்ளிட்ட பலர் பங்கேற்றதாக கோயில் கல்வெட்டு குறிப்பிடுகிறது.
இந்து அறநிலையத் துறை
பரம்பரை பரம்பரையாக பல நூறாண்டுகளுக்கும் மேல் தனியாரிடம் இருந்தது இந்த கோவில். பல ஆண்டுகாலம் தினசரி பூஜைகள் நடைபெற்றுவந்துள்ளது. சுதந்திரத்துக்கு பிறகு தான் இந்து அறநிலையத் துறையின் கீழ் வந்தது.
கருத்துகள் இல்லை :
கருத்துரையிடுக