அமைவிடம்:
மாலுமியர் பேட்டை, கடலூர் துறைமுகம், கடலூர் மாவட்டம். இது கடலூர் நகராட்சியின் ஒரு பகுதியாகவும் உள்ளது. இந்தப் பகுதியில் நகராட்சி துவக்கப்பள்ளி ஒன்றும் உள்ளது மற்றும் காளியம்மன் கோயில் ஒன்றும் அமைந்துள்ளன. பழைய கடலூர் நகரம் (Cuddalore old town)க்கும் கடலூர் புதிய துறைமுகம் இரண்டுக்கும் இடையில் அமைந்துள்ளது.
சிலையமைப்பு
தலைப்பகுதி மட்டுமே கிடைத்துள்ளது. முடியலங்காரம்- நத்தையின் சுருள் போன்று அடர்ந்த சுருண்ட கேசங்கள் வலது பக்கம் திரும்பியுள்ளது. இந்த சுருள் மூன்று சுற்றுக்களை கொண்டது. ஞான முடி - பகவான் புத்தரின் ஞானத்தை குறிக்கும் சின்னம் ஞான முடி. அது அவரது தலையில் சற்று புடைப்பாக இருக்கும். இது இரு வகைகளை கொண்டது. 1 முடிபோன்று 2 தீபிழம்பு போன்று. இச்சிலையில் தீப்பிழம்பாக ஐந்து சுவாலை உடன் உள்ளது.
புருவங்களின் மத்தியில் ஒரு வெள்ளை முடியுள்ளது. இது இரு வகைகளை கொண்டது.
1 திலகம்
2 வெள்ளைமுடி.
இச்சிலையில் வெள்ளை முடி நெற்றியின் மேலிருந்து கீழ் நோக்கி வந்து ஒரு வெள்ளை முடியுள்ளது. இச்சிலையில் வெள்ளை முடி மிகஅழகாக முடியமைக்கப்பட்டுள்ளது. வெள்ளை முடி தொன்மையான புத்தர் சிலைகளில் காணலாம். பெரும்பாலும் திலகம் வடிவத்துடன் நாம் பார்த்து இருப்போம். நீண்ட காது, கண்கள் சிதைந்துள்ளது. 12 ஆம் நூற்றாண்டு. பிற்கால சோழர் சிலை.
நன்றி: அருள் முத்துக்குமரன் (சிதம்பரம்) - பாபாசாகிப் மற்றும் பௌத்த சிந்தனையாளர்
கருத்துகள் இல்லை :
கருத்துரையிடுக