அமைவிடம் : மைத்ரேய புத்த விகார் (Maitreya Buddha Viharam)
ZP உயர்நிலைப் பள்ளிக்கு எதிரில்,
வுந்திரஜாவரம் கிராமம், தனுக்கு அருகில்,
மேற்கு கோதாவரி மாவட்டம், ஆந்திரப்பிரதேசம் 534216
பகவன் புத்தர் தமது முதல் தம்ம பிரசங்கத்தை வழங்கிய தம்மசக்கப்பாவத்ன நாளன்று மைத்ரேய புத்த விகார் திறப்பு விழா 29 ஜூலை 2026 புதன் கிழமை காலை துவங்கப்பட்டது. புத்த கயாவில் உள்ள உலகப்புகழ் பெற்ற மகாபோதி மகா விகாரையின் கட்டிடக்கலை மாதிரியால் ஈர்க்கப்பட்டு மைத்ரேய புத்த விகார் கட்டப்பட்டுள்ளது.
பந்தே அனாலயோ
வணக்கத்திற்குரிய பிக்கு அனாலயோ அவர்களின் முயற்சியால் ஏப்ரல் 14 2022 (பாபா சாகிப் பிறந்த நாள்) அன்று மைத்ரே புத்த விகார் கட்டுமானம் பந்தே அனாலயோ அவர்களால் ஆரம்பிக்கப்பட்டது. மைத்ரேய புத்த விகாரை கட்டி முடித்து அதன் திறப்பு விழா 29/07/2026க்கு அழைத்திருந்தார். அவரின் அழைப்பை ஏற்று அபி (ABI) அறக்கட்டளை, மங்கள புத்த விகார் மற்றும் தென்னிந்திய பௌத்த விகாரிலிருந்து இருந்து 11 பேர் சென்று மகிழ்ந்தோம்.
பௌத்த தம்மபித்தமு (Buddha Dhammapitamu) என்ற இடத்தில் காலை தங்கியிருந்து, காலை 8 மணிக்கு விகார் சென்றோம். இங்கு தெலுங்கு மொழில் பல பௌத்த நூல்களை கண்டோம். பௌத்த தம்மபித்தமு முகப்பில் ஒரு புத்தர் சிலையுள்ளது, முதல் அறையில் இருந்த வெள்ளை நிற புத்தர் சிலையை அங்கிருந்து எடுத்து மைத்ரேய புத்த விகார் முகப்பில் வைக்கப்பட்டுள்ளது. இந்த அறையில் நீல நிற கோட் அணித்து பாபாசாகிப் சிலையுள்ளது.
"என் சமூகத் தத்துவத்தை நேர்மறையாகச் சொல்வதானால், அது மூன்று சொற்களில் அடங்கியுள்ளது: சுதந்திரம், சமத்துவம் மற்றும் சகோதரத்துவம். ஆனால், நான் இந்தத் தத்துவத்தை பிரெஞ்சுப் புரட்சியிலிருந்து கடன் வாங்கினேன் என்று யாரும் கூற வேண்டாம். நான் அவ்வாறு செய்யவில்லை. என் தத்துவம் அரசியல் அறிவியலில் அல்ல; மதத்தில் வேரூன்றியுள்ளது. அதை நான் என் குருவான புத்தரின் போதனைகளிலிருந்து பெற்றேன்."
"நீங்கள் அனைவரும் புத்த மதத்தைத் தழுவாத வரை, இந்த நாட்டில் உண்மையான மனித மரியாதையையும் மனித அந்தஸ்தையும் பெற முடியாது." — டாக்டர் பி.ஆர். அம்பேத்கர்
காலை உணவு, தண்ணீர், தேநீர் அளிக்கப்பட்டது. இந்த பணிகளை செய்ய பெண்கள் பலர் இருந்து கவனித்துக்கொண்டனர். இவர்கள் பெரும்பாலும் ஒரே நிற புடவையணித்து பணிசெய்தனர். உணவு மிக அருமையாக இருந்தது.வரலாற்று நாயகர் பேரரசர் அசோகர் (The Great Indian Emperor), இந்திய தேச தந்தை பாபா சாகிப், ஆனா பானா, விபாசனா ஆகிய பௌத்த தியானத்தை மீண்டும் இந்தியாவிற்கு கொண்டுவந்த S.N.கோயங்கா ஆகியோரின் உருவங்கள் பதித்த போஸ்டர்ஸ் பல இருந்தது .இதில் கலந்துகொண்ட கலாச்சாரம் மற்றும் சுற்றுலாத்துறை இணை அமைச்சர் கண்டூல துர்கேஷ் கிருஷ்ணா-கோதாவரி பகுதியில் ஒரு விரிவான பௌத்த சுற்றுலாச் சுற்றுப்பாதையை உருவாக்க வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்தினார்.
ககன் மாலிக் ஒரு புகழ்பெற்ற இந்திய நடிகர்/செயல்பாட்டாளர் மற்றும் பௌத்த ஆர்வலர் ஆவார். இவர் இலங்கை சிங்களத் திரைப்படமான 'ஸ்ரீ சித்தார்த்த கௌதம' திரைப்படத்தில் புத்தர் பாத்திரத்தில் நடித்ததற்காக உலக பௌத்த திரைப்பட விழாவில் சிறந்த நடிகருக்கான விருதை வென்றார். 'ராமாயணம்' தொடரில் ராமர் வேடத்தில் நடித்ததற்காகவும் மிகவும் அறியப்படுகிறார்.
தென்னிந்திய புத்த விஹார் பெரம்பூர், சென்னை 125 ஆண்டு விழா (19/12/2021) மறைந்த பாபா சாகிப் மற்றும் பௌத்தர் அண்ணன் ஆர்ம்ஸ்ட்ராங் அவர்கள் மிக சிறப்பாக நடத்தினார். அந்த விழாவிற்க்கு சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டார் ககன் மாலிக். 
மைத்ரேய புத்த விகார்
ஆறு ஏக்கர் நிலத்தில் அமைந்துள்ளது மைத்ரேய புத்த விகார். இது உயரமான பகுதி, இரவில் ரெயில் மூலம் வரும் பொழுது, இந்த விகாரையை காணமுடிந்தது. வெள்ளை நிறத்தில் விகார் அமைந்துள்ளது. விகார் முழுவதும் தேசிய சின்னம் நான்கு சிங்கம், நம் தேசிய கொடியில் அமைந்துள்ள தம்ம சக்கரம் விகார் முழுவதும் மிக அருமையாக அமைக்கப்பட்டுள்ளது. விகரின் உள் புத்த கயா புத்தரை போன்று புத்தர் அமைக்கப்பட்டுள்ளது. போதிமன்றத்திற்கென்று தனியாக ஒரு இடம் அமைத்து வணங்கப்படுகிறது. பிக்கு, பிக்குணிகள் தங்க ஒரு இடம் கட்டப்பட்டுள்ளது. விகரின் வெளிய பெரிய புத்தர் சிலை ஒன்றும் உள்ளது.













கருத்துகள் இல்லை :
கருத்துரையிடுக