கேஸபுத்த நகரத்தில் வசித்து வந்த காலாம என்னும் மக்கள் பல ஆன்மிக ஆசிரியர்களின் பிரகடனத்தால் மிகவும் குழம்பிப் போய் இருந்தார்கள். அப்பொழுது காலாமர்களுக்கு புத்தர் அளித்த போதனை தான் காலாம சூத்திரம் என்று அழைக்கப்படுகிறது. குருட்டு நம்பிக்கைக்கும் பக்திக்கும் இடம் இல்லாமல் உலக வரலாற்றில் முழு சிந்தனை சுதந்திரத்தை அளித்தார்.
புத்தரின் காலாம சுத்தரத்தை பெரியாரும் தம்முடைய ஒவ்வொரு பகுத்தறிவு பிரச்சாரத்தின் போதும் பயன்படுத்தி உள்ளார். காலாம சூத்திரத்தை புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் தம்முடைய குயிலில் உரைத்து.
நம்பாதே! ஒத்துக்கொள்ளாதே!
புத்தர் சொன்னவை!
பழைய நூல்கள் இப்படிப் பகர்ந்தன
என்பதால் எதையும் நம்பிவி டாதே
உண்மை என்றுநீ ஒப்பி டாதே
பெருநா ளாகப் பின்பற்றப் படுவது
வழக்க மாக இருந்து வருவதே
என்பதால் எதையும்நீ நம்பிவி டாதே
உண்மை என்றுநீ ஒப்பி டாதே
பெரும்பான் மையினர் பின்பற்று கின்றனர்
இருப்பவர் பலரும் ஏற்றுக் கொண்டனர்
என்பதால் எதையும்நீ நம்பிவி டாதே
பின்பற் றுவதால் நன்மை யில்லை
ஆண்டில் முதிர்ந்தவர் அழகியர் கற்றவர்
இனிய பேச்சாளர் என்பதற் காக
எதையும் நம்பிடேல் எதையும் ஒப்பேல்
ஒருவர் சொன்னதை உடன்ஆ ராய்ந்துபார்
அதனை அறிவினாற் சீர்தூக் கிட்டார்
அறிவினால் உணர்வினால் ஆய்க சரிஎனில்
அதனால் உனக்கும் அனைவ ருக்கும்
நன்மை உண்டெனில் நம்ப வேண்டும்
அதையே அயராது பின்பற்றி ஒழுகு
இவ்வுண் மைகளை ஏற்றுநீ நடந்தால்
மூடப் பழக்க ஒழுக்கம் ஒழியும்
சமையப் பொய்கள் அறிவினாற் சாகும்
இவையே புத்தர் பெருமான்
உவந்து மாணவர்க்கு உரைத்தவை என்பவே!
குயில் -15-11-1960
கருத்துகள் இல்லை :
கருத்துரையிடுக