திங்கள், ஜூன் 06, 2011

புத்தவேட்டில் புத்த ஜெயந்தி

17-மே-2011 அன்று புத்தவேட்டில் புத்த ஜெயந்தி கொண்டாடப்பட்டது. 

இடம் : போரூரில் இருந்து கொன்றத்தூர் செல்லும் வழியில்  உள்ள  கோவூரை அடுத்த மூன்றாம் கட்டளை

பிக்கு - போதி பாலா - மதுரை
பிக்கு - சுமேதா - புதுவை
பிக்கு - வாசகா - புத்தவேடு ( திரிபுரவில் இருந்து வந்தவர்)

கொண்டாட்டத்தின் சாரம் :

01. கடவுள் அவதாரம், கடவுளின் தூதுவர் என்று தம்மை அறிமுகப்படுத்தியர்களின் மத்தியில் தம்மை இயல்பான மனிதர் என்று அறிமுகப்படுத்திகொண்டு முழு சிந்தனை சுதந்திரத்தை அளித்தவர் பகவன் புத்தர்.

02. பல பெயர்களுடைய நதிகள் கடலில் சேர்ந்து சங்கமித்தபின் அந்நதிகளின் நீரை அடையாளப்படுத்த முடியாது. அவை சங்கமித்த கடலின் பெயரால் தான் அழைக்கப்படும். அதைப்போன்று தம்மை பௌத்தத்தில் இணைத்துக்கொள்வதால் அவர்கள் பௌத்தர்கள் என்றே அழைக்கப்படுவார்கள்.

03. சென்னை பல்கலைக்கழகம் இந்த கல்வியாண்டில் பௌத்த பயிலுதலுக்கான சான்றிதழ் படிப்பை அறிமுபப்படுத்தியுள்ளது. ஆர்வளர்கள் காலதாமதமின்றி உடன் விண்ணப்பிக்க வேண்டும். ஏழை எளியவர் இப்படிப்பை பயில விருப்பமிருந்து பயிலதற்கான வசதி வாய்ப்புகள் இல்லாமல் இருந்தால் அவர்களுக்கு உதவ பலர் இங்கு இருக்கின்றனர். அவர்களுக்கு உதவித்தொகை அளிக்கப்படும். 

04. அறிஞர் அண்ணல் அம்பேத்கரின் பௌத்தத்திற்கான பங்களிப்பை நினைவு கூறப்பட்டது.

05. ஒவ்வொரு பௌர்ணமி தினத்தன்றும் மொட்டை அடிக்கப்படும். உடன் வரும் அனைவருக்கும் அன்று நண்பகல் உணவு அளிக்கப்படும் (கட்டணம் ஏதுமின்றி)

06. பொதிகை தொலைக்காட்சியிலிருந்து காணொளி மற்றும் புகைப்பட கலைஞர்கள் இருவர் வந்திருந்தனர், அன்றிரவு 8.30 மணி செய்தியில் புத்த ஜெயந்தி நிகழ்ச்சியும் ஒளிபரப்பட்டது.கருத்துகள் இல்லை :

கருத்துரையிடுக