திங்கள், ஜூன் 06, 2011

புத்தரின் தத்துவம்



அவனிதனை ஆட்டுவிக்கும் ஆசைதனை

அடியோடு ஒழிக்க ஞானி புத்தர்

துவளாத சீடர்களுள் ஒருவரான

துணிவுமிகு ஆனந்தர் என்பார் இந்தப்

புவியெங்கும் அறவழியைப் பரப்பிவந்தார்

புத்தபிரான் கொள்கைதனை அகத்திலேற்ற!

தூயசீடர் ஒருசிற்றூர்க் கேகுங்காலைத்

தாகமாக இருந்ததனால் துவண்டு போனார்!

ஏழைப்பெண் ஒருத்தியாகக் கிணற்றி லாங்கே

ஏக்கமுடன் இறைத்துக் கொண்ட்டிருந்தாள் நீரை

தாழைபோல் செங்கரத்தை மருங்கே நீட்டித்

தாகம் தீர்! தண்ணீரே ஊற்று மென்றார்

வாழ்க்கையிலே அடிபட்ட அந்த மாதோ

வாய்திறந்து உரைக்கலானாள் உண்மைதன்னை

தாழ்குலத்தில் பிறந்தவர்யாம் ஐயா எங்கள்

தண்ணீரை அருந்துவீரோ என்றாள் தையல்

சாதிஏதும் கேட்டவில்லை இங்கே உன்றன்

சாத்திரமும் நானறியேன் தாழ்வு இல்லை!

போதி வேந்தன் குணசாந்தன் எந்தம் ஆசான்

போதித்த போதனையைக் கூறுகின்றேன்

நீதி நெறி தவறாத இந்த மண்ணில்

நிச்சயமாய் இழிகுலத்தார் எவருமிலர்

ஓதியது அறியுமுன்னே ஒன்று சொல்வேன்

உலகத்தில் ஒருகுலம்தான் உணர்கவேன்றார்
 புரட்சி கவி பாரதிதாசன்

கருத்துகள் இல்லை :

கருத்துரையிடுக