செவ்வாய், செப்டம்பர் 23, 2025

மாலுமியர் பேட்டை - கடலூர் - புத்தர்

அமைவிடம்:

மாலுமியர் பேட்டை, கடலூர் துறைமுகம், கடலூர் மாவட்டம். இது கடலூர் நகராட்சியின் ஒரு பகுதியாகவும் உள்ளது. இந்தப் பகுதியில் நகராட்சி துவக்கப்பள்ளி ஒன்றும் உள்ளது மற்றும் காளியம்மன் கோயில் ஒன்றும் அமைந்துள்ளன. பழைய கடலூர் நகரம் (Cuddalore old town)க்கும் கடலூர் புதிய துறைமுகம் இரண்டுக்கும் இடையில் அமைந்துள்ளது.



சிலையமைப்பு

தலைப்பகுதி மட்டுமே கிடைத்துள்ளது. முடியலங்காரம்- நத்தையின் சுருள் போன்று அடர்ந்த சுருண்ட கேசங்கள் வலது பக்கம் திரும்பியுள்ளது. இந்த சுருள் மூன்று சுற்றுக்களை கொண்டது. ஞான முடி - பகவான் புத்தரின் ஞானத்தை குறிக்கும் சின்னம் ஞான முடி. அது அவரது தலையில் சற்று புடைப்பாக இருக்கும். இது இரு வகைகளை கொண்டது. 1 முடிபோன்று 2 தீபிழம்பு போன்று. இச்சிலையில் தீப்பிழம்பாக ஐந்து சுவாலை உடன் உள்ளது. 

புருவங்களின் மத்தியில் ஒரு வெள்ளை முடியுள்ளது. இது இரு வகைகளை கொண்டது.
1 திலகம்
2 வெள்ளைமுடி.
 
இச்சிலையில் வெள்ளை முடி நெற்றியின் மேலிருந்து கீழ் நோக்கி வந்து ஒரு வெள்ளை முடியுள்ளது. இச்சிலையில் வெள்ளை முடி மிகஅழகாக முடியமைக்கப்பட்டுள்ளது. வெள்ளை முடி தொன்மையான புத்தர் சிலைகளில் காணலாம். பெரும்பாலும் திலகம் வடிவத்துடன் நாம் பார்த்து இருப்போம். நீண்ட காது, கண்கள் சிதைந்துள்ளது. 12 ஆம் நூற்றாண்டு.  பிற்கால சோழர் சிலை.

நன்றி: அருள் முத்துக்குமரன் (சிதம்பரம்) - பாபாசாகிப் மற்றும் பௌத்த சிந்தனையாளர் 

மயிலாப்பூர் திருவள்ளுவர் கோயில்



அமைவிடம்:
திருவள்ளுவர் திருக்கோவில்,
முண்டகக்கண்ணியம்மன் கோவில் தெரு
(சமஸ்கிருத கல்லூரி அருகே)
திருமயிலை, சென்னை – 600004.


திருவள்ளுவர் பிறந்த இடம
திருவள்ளுவர் பிறந்த இடம சென்னை, மயிலாப்பூர். இங்கு 25 கிரவுண்டு பரப்பளவு கொண்ட திருவள்ளுவர் கோயில் அமைக்கப்பெற்றுள்ளது.

திருவள்ளுவர் கோயில்

குடியிருப்பு பகுதியின் நடுவே அமைந்திருப்பதால் இப்படி ஒரு கோவில் இங்கே இருக்கிறது என்பதே வெளியே பலருக்கு தெரியவில்லை.  

தற்போதைய கோயில் 16-ம் நூற்றாண்டின் முற்பகுதியில் கட்டப்பட்டது. 1970-களில் விரிவாகப் புனரமைக்கப்பட்டது. இக்கோவிலை மயிலாப்பூர் ஸ்ரீ முண்டகக்கண்ணி அம்மன் கோயிலின் சார்புக் கோயிலாக இந்து சமய அறநிலையத் துறை பராமரிக்கிறது. 20-ம் நூற்றாண்டு தமிழக அரசால் புனரமைக்கப்பட்ட பிறகு, இக்கோயிலில் உள்ள கற்சிலைகளைத் தவிர பண்டைய கோவிலின் வேறெந்தத் தடயங்களும் காணக்கிடைக்காமல் போய்விட்டன. (1989-ம் ஆண்டு திருமயிலையின் திருக்கோயில்கள் - பில் எஸ். ராஜேந்திரன்  நூல்)


சிலையமைப்பு 

1974 டிசம்பர் மாதம் திருவள்ளுவர் கோவிலை புதுப்பிக்கும் போது அடிக்கல் வைப்பதற்காக தோண்டும் போது பூமிக்கு கிழே நான்கு அடி ஆழத்தில் திருவள்ளுவர் கருங்கல் சிலை கிடைத்தது. 500 ஆண்டுகளுக்கு முந்தியதாக கருதப்படும் இச்சிலை தலை இடக்கை உடைந்து தனியாக இருந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டது


உடைந்த பகுதியை சேர்த்து பார்க்கும் பொழுது நீண்ட தாடி முறுக்கிய மீசையுடன் அமர்ந்த நிலையில் திருவள்ளுவர் காணப்படுகிறார். வலக்கை சின் முத்திரையுடன் அக்ஷமாலை (Aksha) ஏந்தியவாறு ஒரு பீடத்தின் மீது சிலை உள்ளது . இச்சிலை கிபி பதினான்கு அல்லது பதினைந்ததாம் நூற்றாண்டை சேர்ந்ததாக இருக்கலாம் என்று தொல் பொருள் ஆய்வு துறை இயக்குனர் இரா.நாகசாமி கருதுகிறார்.  (திருமயிலை திருத்தலம் இயக்கிய வரலாற்று பார்வை (Mylapore Through the Ages) டாக்டர் சு . ராஜசேகரன் - தமிழ் பேராசிரியர் நந்தனம் கலைக்கல்லூரி 1989). 

வைட் எல்லிஸ்

ஆங்கிலேய அரசாட்சியில் சென்னை மாகாணத்தின் அரசு ஊழியராக இருந்த எல்லீசனார் என்றழைக்கப்படும் பிரான்சிஸ் வைட் எல்லிஸ் 19-ம் நூற்றாண்டின் முற்பகுதியில் ராயப்பேட்டையில் உள்ள பெரியபாளையத்தம்மன் கோவிலில் எழுப்பிய கல்வெட்டில் மயிலாப்பூர் வள்ளுவர் கோயிலைப் பற்றிக் குறிப்பிட்டுள்ளார்.

எட்வர்ட்  எலியட்ஸ் சாலை டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலை என்று வழங்கப்படுகிறது.  (திருமயிலை திருத்தலம் இயக்கிய வரலாற்று பார்வை (Mylapore Through the Ages) டாக்டர் சு . ராஜசேகரன் - தமிழ் பேராசிரியர் நந்தனம் கலைக்கல்லூரி 1989). 

வெண்கல சிலைகள்

கோவிலில் உள்ள வெண்கல சிலைகள் 19-ம் நூற்றாண்டில் செய்யப்பட்டதாக அறியப்படுகிறது. தற்போது மாநில அரசின் இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் இருக்கும் இக்கோயில் அதற்கு முன் சிவஞான முதலியார் என்பவரின் ஆளுகைக்குள் இருந்து வந்தது.

 பல்வேறு தெய்வ சன்னதிகள்

இக்கோயில் வளாகத்தில் விநாயகர், சுப்ரமணியர், சிவன், பார்வதி, திருவள்ளுவர், வாசுகி, துர்கை, நவகிரகங்கள் எனப் பல்வேறு தெய்வங்களுக்கான தனித்தனி சன்னதிகள் உள்ளன.

 திருக்குறளில்  கடவுள்கள்

திருவள்ளுவர் திருக்குறளில் குறிப்பிட்ட கடவுள்கள் குறித்து எந்த கருத்தும் கூறவில்லை. 

கல்வெட்டுகள்

இக்கோயில் புகழ்பெற்ற முண்டகக் கண்ணியம்மன் கோயிலுக்கு அருகே அமைந்துள்ளது. மயிலாப்பூரில் திருவள்ளுவருக்கு 1935ல் கோவில் உருவானதாக அங்கிருக்கும் கல்வெட்டு சொல்கிறது.  

27/04/1973ல் முதல்அமைச்சர் கருணாநிதி கோவில் திருப்பணியை தொடங்கி வைத்திருக்கிறார். நெடுஞ்செழியன், கண்ணப்பன் ஆகியோர் முன்னிலை வகிக்க குன்றக்குடி அடிகள் தலைமையில் திருப்பணி குழுவும் அமைக்கப்பட்டிருக்கிறது. அப்போதைய அறநிலையத் துறை அமைச்சர் மு. கண்ணப்பன், கல்வி அமைச்சர் நெடுஞ்செழியன் உள்ளிட்டோர் இவ்விழாவில் பங்கேற்றனர் என்பது கோவிலில் காணப்படும் கல்வெட்டு மூலம் தெரியவருகிறது.

முதல்அமைச்சர் கருணாநிதி துவக்கிய திருப்பணி என்பதால் ஆலயம் என்ற சொல்லை தவிர்த்து நினைவாலயம் என்று பொறித்திருக்கிறார்கள் கடந்த 23.01.2001-ல் திருவள்ளுவர் கோயிலுக்கு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டுள்ளது. இதில் அப்போதைய இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் திரு.தமிழ்க்குடிமகன் உள்ளிட்ட பலர் பங்கேற்றதாக கோயில் கல்வெட்டு குறிப்பிடுகிறது. 

இந்து அறநிலையத் துறை

பரம்பரை பரம்பரையாக பல நூறாண்டுகளுக்கும் மேல் தனியாரிடம் இருந்தது இந்த கோவில். பல ஆண்டுகாலம் தினசரி பூஜைகள் நடைபெற்றுவந்துள்ளது. சுதந்திரத்துக்கு பிறகு தான் இந்து அறநிலையத் துறையின் கீழ் வந்தது.




வியாழன், செப்டம்பர் 18, 2025

கோனார்க் சூரிய கோயில் பௌத்த தளம்

 

அமைவிடம்:
கோனார்க் சூரிய கோயில், 
கோனார்க் ஊர்,
பூரி மாவட்டம்,
ஒடிசா மாநிலம் 752111

பௌத்த அடையாளங்கள்

01. கருப்பு பகோடா (Black Pagoda

1676 ஆம் ஆண்டிலேயே ஐரோப்பியர்களால் இந்தக் கோயில் கருப்பு பகோடா (Black Pagoda) என்று அழைக்கப்பட்டது.  கோனார்க் கோயில் கருப்பு பகோடா எனவும் பூரி ஜெகந்நாதர் கோயில் வெள்ளை பகோடா எனவும் அழைக்கப்பட்டது. தமிழ் நாட்டிலுள்ள மகாபலிபுரம் ஏழு பகோடாகள் (Seven Pagoda) என ஐரோப்பிய ஆய்வாளர்களால் அழைக்கப்பட்டது.

ஜேம்ஸ் பெர்குசன் வரைந்த கோனார்க் படம்

பகோடா என்பது புத்த கட்டிட கலையை குறிப்பிடுவது. இந்த ஸ்தூபி குவிமாட வடிவ நினைவுச்சின்னமாகும். பகோடாக்கள் என்பது புத்த ஸ்தூபியிலிருந்து உருவான அடுக்கு கோபுரத்தின் பாணியாகும். இந்த வகை கட்டிடங்கள் நேபாளம், சீனா, ஜப்பான், கொரியா, வியட்நாம், மியான்மர், இந்தியா, இலங்கை மற்றும் ஆசியாவின் பிற பகுதிகளில் அதிகம் காணப்படுகின்றன. மேலும் அவை இந்தியா உட்பட புத்த மதம் செழித்து வளரும் நாடுகளில் காணப்படுகின்றன. விபாசனா தியான மையம், புத்த நினைவுச்சின்னங்கள் பகோடாகள் என்று அழைக்கப்படுகிறது. 

02. தம்ம சக்கரங்கள்

01.இந்தக் கோயிலின் அடிப்பகுதியில் மொத்தம் 24 சக்கரங்கள் உள்ளன. 24 சக்கரங்களில் 6 சக்கரங்கள் பிரதான கோனார்க் கோயிலின் இருபுறமும், 2 சக்கரங்கள் கிழக்கு முன்பக்கத்தின் இருபுறமும் 4 சக்கரங்கள் முன்கூட்ட மண்டபம் முகசாலாவின் இருபுறமும் உள்ளன. 
 
02.கோனார்க் தம்மசக்கரம் "வாழ்க்கைச் சக்கரம்" வாழ்க்கைச் சுழற்சியைக் குறிக்கின்றன. சக்கரங்களின் விளிம்புகள் பல்வேறு பறவைகள் மற்றும் விலங்குகளின் சித்தரிப்புகளுடன், இலை வடிவமைப்புகளுடன் நுணுக்கமாக செதுக்கப்பட்டுள்ளன. 

03.சக்கரங்களின் ஆரங்களில் உள்ள பதக்கங்கள் பல்வேறு போஸ்களில் பெண்களின் உருவங்களைக் காட்டுகின்றன, பெரும்பாலும் காம உணர்ச்சியைத் தூண்டும் சிற்றின்ப சிற்ப இயல்புடையவை. ஒடிசாவில் முக்கியமாகப் பின்பற்றப்பட்ட தாந்த்ரீக வழிபாட்டு முறையுடன் அவர்களை இணைக்கிறது

 03மாயா தேவி கோயில் Maya Devi Temple

கோனார்க் கோயிலின் பின்புறத்தில் உள்ள ஒரு கோயில் மாயா தேவி கோயில். பகவான் புத்தரின் தாய் மகாமயா (அ) மாயா தேவி. இந்த கோயில் கோனார் விட பழமையானது. மாயாதேவி கோயில் 11ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டது மாயாதேவி கோயில் 1900 மற்றும் 1910 க்கு இடையில் அகழ்வாராய்ச்சி முயற்சிகள் மூலம் பார்வைக்கு வந்தது. இதற்கு முன்பு, அது மணல் மற்றும் குப்பைகளின் அடுக்குகளுக்கு அடியில் மறைந்திருந்து, கண்ணுக்குத் தெரியாமல் கிடந்தது.


மாயாதேவி கோயிலுக்கும் கோனார்க் சூரிய கோயிலுக்கும் இடையிலான ஒப்பீடு.

01. ஒடிசாவின் கோனார்க்கில் அமைந்துள்ள மாயாதேவி கோயில் மற்றும் கோனார்க் சூரிய கோயில் இரண்டும் ஒரே வளாகத்தில் அமைந்துள்ள வரலாற்று தளங்களாகும்.

02. மாயாதேவி கோயில் கலிங்க கட்டிடக்கலையின் சிறப்பிற்கு ஒரு துடிப்பான சான்றாக உள்ளது.

04. கோனகமான புத்தர் (Konakamana Budda) 

கோனார்க்கிற்கு அருகிலுள்ள சிற்றுர் குருமா. கோனார்க்கிலிருந்து 6 கி.மீ தொலைவில் குருமா சிற்றுர் அமைந்துள்ளது. குருமாவில் உள்ள இடத்தின் சோதனை அகழ்வாராய்ச்சி 1974-75 ஆம் ஆண்டில் மாநில தொல்பொருள் துறையால் நடத்தப்பட்டது. இது இப்பகுதியில் பௌத்த வரலாற்றுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. தொல்பொருள் தளத்தில் ஒரு கோனகமான புத்தர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. குருமா என்பது பௌத்த தளம்.

இங்கு கோனகமான புத்தர் குறுக்குக் கால்களுடன் அமர்ந்திருக்கிறார், வலதுகை பூமிஸ்பர்ச (நிலத்தை தொடும்) முத்திரை, இடது கை இடது முழங்காலுக்கு மேல் வைக்கப்பட்டுள்ளது. சிலையின் கழுத்தில் ஒரு அழகான அணிகலன் அலங்கரிக்கப்பட்டுள்ளது. இந்த சிலை இயற்கையிலேயே தனித்துவமான ஒரு அழகான கிரீடத்தை அணிந்துள்ளது. இவர் கௌதம புத்தரில்லை கோனகமான புத்தர். இருபத்தி மூன்றாவது புத்தர். 

அவலோகிதேஸ்வரர் சிலை தாமரை மலரில் அமர்ந்திருக்கிறது. பூவின் இதழ்கள் நன்றாக செதுக்கப்பட்டுள்ளன. தாமரை இருக்கை அல்லது பத்மாசனம் 10" உயரமுள்ள ஒரு கவசத்தின் மேல் உள்ளது. படத்தைக் கொண்ட கல் பலகையின் உயரம் 7' மற்றும் அதன் அகலம் 3' ஆகும்.

குருமாவுக்கு இரண்டு நூற்றாண்டுகளுக்குப் பிறகு கோனார்க் கட்டப்பட்டது என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும். கோனகமான புத்தர் = கோனார்க்

02. கோனார்க் கோயில் குப்பைகளின் குவியலாக இருந்தது

  • 16 ஆம் நூற்றாண்டில் கோனார்க்கோயில் சிதிலமடைந்தது. கோயிலின் பல சிற்பங்கள் கொள்ளையடிக்கப்பட்டன.
  • இந்த கோயிலின் அருண் ஸ்தம்பம் அல்லது பிரதான தூண் கி.பி 18 ஆம் ஆண்டில் மராட்டிய ஆட்சியாளர்களால் பூரி ஜெகந்நாதர் கோயிலுக்கு மாற்றப்பட்டது. 
  • கி.பி1837 ஆம் ஆண்டில், ஜேம்ஸ் பெர்குசன் கோயிலுக்குச் சென்று கோனார்க் கோயிலின் வரைபடத்தை உருவாக்கினார். ஜேம்ஸ் பெர்குசன் கோனார்க் கோயிலை பார்வையிட்டபோது, பிரதான கோயில் குப்பைகளின் குவியலாக இருந்தது, அதில் இருந்து எந்த முக்கிய தெய்வமும் மீட்கப்படவில்லை.  
  • 19 ஆம் நூற்றாண்டில், பிரிட்டிஷ் காலனித்துவ அரசாங்கம் கோயிலைப் பராமரிக்கும் பொறுப்பை ஏற்றுக்கொண்டது. சிற்பங்கள் மற்றும் சிற்பங்களைப் பாதுகாப்பதில் கவனம் செலுத்தின