செவ்வாய், அக்டோபர் 14, 2025

மகாத்மா காந்தி Vs பாபாசாகிப் டாக்டர் அம்பேத்கர் -I

01.விடுதலைப் போராட்டம்

  • மோகன்தாஸ் கரம்சந்த் காந்தியின் விடுதலைப் போராட்டம் என்பது வெறும் நிலப்பரப்பு நோக்கியது. அவரின் போராட்டம் பிரிட்டிஷ்காரர்களுக்கு எதிரானது. காந்தியுடன் பல தலைவர்களும் தொழிலதிபர்களும் இருந்தனர். 
  • பாபாசாகிப் அம்பேத்கர் அவர்களின் விடுதலைப் போராட்டம் சமூக அதிகாரம், அரசியல் அதிகாரம், மற்றும் பொருளாதார அதிகாரம் நோக்கியது. அவரின் போராட்டம் இந்து பழக்கவழக்கங்களுக்கு எதிரானவை.  பாபாசாகிப் கிட்டத்தட்ட தனிமையில் போராடினார், ஆதரவின்றி இருந்தார். 
  • SC/ST இன மக்கள் இந்தியர்கள் இல்லையா? அவர்கள் உயர் சாதி சுரண்டலில் இருந்து விடுபடுவது அவசியமில்லையா, உண்மையில் அது அவசியம். ஆனால் மோகன்தாஸ் கரம்சந்த் அதை அவ்வளவு முக்கியமாகக் கருதவில்லை. விடுதலை பெற்றும் இன்றும் தீண்டாமை தொடர்கிறது. வேங்கைவயல் போல் தவறு செய்தவர்களை காப்பாற்றுகிறது அரசு. 
  • காந்தி அவர்கள் இதுவரை பிரிட்டிஷ்காரரை எதிர்த்து 21 முறை உண்ணாவிரதம் இருந்துருக்கிறார். சொந்த நாட்டிலே ஆடு மாடு பன்றி கூட தாகத்திற்கு ஒரு குளத்திலோ குட்டையிலோ இறங்கி நீரை பருகுகிறது.ஆனால் சொந்த நாட்டிலே மனிதர்கள் இறங்கி நீர் குடித்தால் தீண்டத்தகாவர் நீர் பருகியதால் குளம் குட்டை நீர் நிலைகள் தீட்டாகிவிட்டதென  கூறும். தீண்டாமையை எதிர்த்து ஒரு முறையாவது உண்ணாவிரதம் இருந்து இருக்கிறாரா என்றால் இல்லை. அப்படி இருந்திருந்தால் அவரை நான் மகாத்மா என்று அழைத்து இருப்பேன். அதனால் தான் நான் Mr.காந்தி என்று அழைக்கிறேன் என்று பதிலுரைத்தார் பாபாசாகிப் ஒரு பத்திரிகை நண்பருக்கு 
  • சுதந்திரம் பெற்று 75 ஆண்டுகள் கடந்தும் தீண்டாமை ஒழிக்கப்படவில்லை  

02. சமூக விடுதலை

  • மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி இந்தியாவின் விடுதலை என்கிற நோக்கை விடவும் ஒடுக்கப்பட்ட மக்களின் சமூக விடுதலையை எதிர்ப்பதில் முதன்மையாக இருந்தார். 
  • பாபாசாகிப் சம உரிமைகளை, சமூக உரிமைகளை மீட்டெடுக்க அதிகமாகப் போராடினார். ஆண்களுக்கும் பெண்களுக்கும் சம உரிமைகள் மற்றும் வாய்ப்புகளை உருவாக்கினார். பாபாசாகிப்  அவர்கள் தேசத்திற்காகப் பாடுபடும் போது தம் 5 குழந்தைகள் மற்றும் மனைவியை இழந்தார்.

03. மதம்

  • மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி ஒரு தீவிர இந்துவாதி.  வர்ணக் கோட்பாட்டை ஆதரித்தவர். சாதி வேறுபாட்டை ஏற்றுக்கொண்டவர். பகவத் கீதாவை தன் தாய் என்றார்.  பகவத் கீதா என்ற நூலை குஜராத்தில் மொழி பெயர்த்தார். 
  • பாபாசாகிப் இந்து மதத்தை முற்றிலுமாக நிராகரித்தார் .பௌத்தத்தை மனமுவந்து தழுவினார். புத்தரும் அவர் தம்மமும் என்ற நூல் அவரின் இறுதி நூல். இந்நூலுக்கு முன்னுரை எழுதிய பின் அந்த புத்தகத்தை தங்கியே இயற்க்கை எய்தினார்.  

04. சாதி ஒழிப்பு

  • மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி ஒரு பக்தியுள்ள இந்துவாக இருந்தார், இதன் காரணமாக அவர் சாதி அமைப்பு மற்றும் வர்ணாஸ்ரம தர்மத்தை ஒழிப்பதை ஆதரிக்கவில்லை. ஆனால் தீண்டாமையை ஒழிக்க விரும்பினார். 
  • தீண்டாமைக்கு சாதியே மூல காரணமாக இருப்பதாக அம்பேத்கர் கருதினார். சாதி என்பது இந்து வேதங்களின் அதிகாரத்தில் ஆழமான வேர்களைக் கொண்டுள்ளது. அவை சாதிப் படிநிலையை நியாயப்படுத்தி நிலைநிறுத்தின என்றும் அவர் வாதிட்டார். அவரைப் பொறுத்தவரை, இந்த வேதங்களின் அதிகாரத்தை நிராகரிப்பதன் மூலம் மட்டுமே சாதி அமைப்பையும், அதன் விளைவாக தீண்டாமையையும் அகற்ற முடியும்.

05. பர்தோலித் திட்டம்

  • மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி காங்கிரசுத் தலைமை தன் கட்சியினருக்கு அறிவுறுத்திய செயல்திட்டங்களில் ஒன்று தீண்டாமை ஒழிப்புக்கான பர்தோலித் திட்டம் ஆகும். மற்ற அனைத்துச் செயல்திட்டங்களையும் தாமே முனைந்து நிறைவேற்றிக் கொண்டிருக்கும் போது காங்கிரசாரால் தீண்டப்படாதோருக்கு இந்த ஒற்றைத் திட்டத்தைச் செயல்படுத்த மனமில்லாது போயிற்று. அதுவும் இப்பொறுப்பு இந்து மகா சபையிடம் ஒப்படைக்கப்பட்டது தான் பெரிய வேடிக்கை. 
  • எனவே தான் பாபாசாகிப் பர்தோலித் திட்டத்தை நண்டுக்கு நரியைக் காவல் வைப்பது போன்று என்றுரைத்தார்  

06.தனி வாக்காளர் தொகுதி

தனி வாக்காளர் தொகுதி இது இரட்டை வாக்குரிமை கொண்ட தேர்தல் முறையாகும்.
01. பட்டியல் சாதியினர் (SCs) ஒரு SC வேட்பாளருக்கு வாக்களிக்கவும்
02. பொது வாக்காளர் தொகுதியில் SCs வாக்களிக்கவும்
  • மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி தனி வாக்காளர் தொகுதியை எதிர்த்தார். ஏனெனில் அது சமூகத்தைப் பிரிப்பதன் மூலம் அது இந்து மதத்தை அழிக்கும், சாதி இந்துத் தலைமை அனுபவித்த அதிகாரத்தைக் குறைக்கும் என்று காந்தி உணர்ந்தார். 
  • பாபாசாகிப் SC/ST சாதியினருக்கு அதிகாரம் அளிக்க தனித் தொகுதிகளை பரிந்துரைத்து,  தனி வாக்காளர் தொகுதியை பெற்றார் 

07. கடவுளின் குழந்தைகள் 

  • மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி SC/ST இனமக்களை ஹரிஜன்கள் (கடவுளின் குழந்தைகள்) என்று பெயரிட்டார்.  
  • பாபாசாகிப் பிற சாதியினர் (FC/BC etc) சாத்தான்களின் குழந்தையா என்று வினவினார். 

தாழ்த்தப்பட்ட மக்களின் இழிநிலைக்கு இந்து மதம் தான் காரணம் என்று இந்து மதத்தை, வேதத்தை அம்பலப்படுத்தி, தாழ்த்தப்பட்ட மக்கள் இந்து மதத்தை விட்டு வெளியேற வேண்டும என்று அம்பேத்கர் எழுதிய கட்டுரைக்கு மறுப்பு தெரிவித்து காந்தி தனது அரிஜன் என்ற பத்திரிகையில் இந்து மதத்தில் யாரோ சிலர் செய்த தவறுக்காக இந்து மதத்தையே குறை சொல்வது தவறு. இந்து மதததிற்குள் இருந்துகொண்ட அதை திருத்தம செய்யவேண்டும் என்று அம்பேத்கருக்கு மறுப்பு எழுதுகிறார்.

இந்திய அரசு ஹரிஜன் என்ற வார்த்தையை அதன் இழிவான அர்த்தங்கள் காரணமாக அனைத்து அதிகாரப்பூர்வ தகவல் தொடர்புகளிலும் பயன்படுத்துவதை மீண்டும் மீண்டும் தடை செய்துள்ளது. 

08. கல்வியறிவு

  • மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி 1888 ஆம் ஆண்டு, சட்டம் படிக்க லண்டனுக்குச் சென்று ஒரு வழக்கறிஞரானார். 
  • பாபாசாகிப் பல்வேறு துறைகளில் ஏராளமான பட்டங்களைப் பெற்றார். அவற்றில் பம்பாய் பல்கலைக்கழகத்தில் இளங்கலை மற்றும் முதுகலை பட்டங்களும், கொலம்பியா பல்கலைக்கழகத்தில் முதுகலை மற்றும் முனைவர் பட்டங்களும், லண்டன் பொருளாதாரப் பள்ளியில் முதுகலை மற்றும் முதுகலை பட்டங்களும், லண்டனில் உள்ள கிரேஸ் இன்னில்சட்டத்தரணி பட்டமும் அடங்கும், மேலும் பல பல்கலைக்கழகங்களில் இருந்து கௌரவ முனைவர் பட்டங்களும் (LLD மற்றும் D.Litt.) பெற்றுள்ளார். "32 பட்டங்கள்" என்ற கூற்று, உலகெங்கிலும் உள்ள நிறுவனங்களிலிருந்து பெறப்பட்ட மற்றும் கௌரவப் பட்டங்களின் தொகுப்பைக் குறிக்கிறது, இது அவரது விதிவிலக்கான கல்வி சாதனைகளை எடுத்துக்காட்டுகிறது.   
Bachelor of Arts (BA): Bombay University (now University of Mumbai)
Master of Arts (MA): Columbia University, New York.
Doctor of Philosophy (PhD): Columbia University, New York.
Doctor of Science (DSc): London School of Economics and Political Science.
Barrister-at-Law: Gray's Inn, London.
Doctor of Laws (LL.D.): Columbia University. 
Doctor of Literature (D.Litt.): Osmania University (honorary)(honorary)
பொருளாதாரத்தில் முதல் முனைவர் பட்டம் (Phd) பெற்ற இந்தியர் பாபா சாகிப் தான். 

09. எழுதிய நூல்கள்

மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி எழுதிய நூல்கள் 
  1. The Story of My Experiments with Truth: (his autobiography) - எனது சத்திய பரிசோதனைகளின் கதை: (அவரது சுயசரிதை) 
  2. Hind Swaraj or Indian Home Rule: (1909) - ஹிந்த் ஸ்வராஜ் அல்லது இந்திய ஹோம் ரூல்: (1909) 
  3. Satyagraha in South Africa - தென்னாப்பிரிக்காவில் சத்தியாக்கிரகம் 
  4. The Constructive Programme - ஆக்கபூர்வமான திட்டம் 
  5. Village Swaraj - கிராம சுயராஜ்யம் 
  6. Key to Health - ஆரோக்கியத்திற்கான திறவுகோல் 
  7. From Yeravda Mandir, ashram observances - யெரவ்தா மந்திரிலிருந்து, ஆசிரம அனுசரிப்புகள் 
  8. Unto This Last: (an adaptation of John Ruskin's work) - இது வரை: (ஜான் ரஸ்கினின் படைப்பின் தழுவல்) 
  9. The India of My Dreams - என் கனவுகளின் இந்தியா 
  10. Truth is God - உண்மையே கடவுள். 
  11. All Men Are Brothers - எல்லா ஆண்களும் சகோதரர்கள் 
  12. Discourses on the Gita - கீதை பற்றிய சொற்பொழிவுகள் 
  13. Mahatma Gandhi on Non-Violence - அகிம்சை குறித்து மகாத்மா காந்தி

டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கரின் எழுத்துகள் மற்றும் உரைகள் (BAWS) ஆங்கிலத்தில், தமிழில் மற்ற பிற மொழிகளில் மஹாராஷ்டிர அரசு வெளியிட்டுள்ளது.
    1. டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கரின் எழுத்துகள் மற்றும் உரைகள் தொகுதி 1 - 13.
    2.  டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கரின் எழுத்துகள் மற்றும் உரைகள் தொகுதி 14 பகுதி 1 பகுதி 2 
    3. டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கரின் எழுத்துகள் மற்றும் உரைகள் தொகுதி 15 - 16 
    4. டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கரின் எழுத்துகள் மற்றும் உரைகள் தொகுதி 17 பகுதி 1 பகுதி 2 பகுதி 3
இதிலிருந்து டாக்டர் அம்பேத்கர் எழுதிய சில பிரபலமான புத்தகங்களின் பட்டியல் கொடுக்கப்பட்டுள்ளது

1. இந்தியாவில் சாதிகள்: அவற்றின் வழிமுறை, தோற்றம் மற்றும் வளர்ச்சி - 1916 
2. ரூபாயின் பிரச்சனை: அதன் தோற்றம் மற்றும் அதன் தீர்வு - 1923
3. சாதி ஒழிப்பு - 1936
4. சுதந்திரத்திற்கு எதிரான கூட்டமைப்பு - 1939
5. பாகிஸ்தான் பற்றிய சிந்தனைகள் - 1940
6. ரானடே, காந்தி மற்றும் ஜின்னா - 1943
7. திரு. காந்தி மற்றும் தீண்டத்தகாதவர்களின் விடுதலை - 1943
8.காங்கிரசும் காந்தியும் தீண்டத்தகாதவர்களுக்கு என்ன செய்தார்கள் - 1945
9. பாகிஸ்தான் அல்லது இந்தியப் பிரிவினை - 1945
10. மாநிலமும் சிறுபான்மையினரும் - 1947
11. சூத்திரர்கள் யார் - 1948
12. மகாராஷ்டிரா மொழியியல் மாகாணமாக - 1948
13. தீண்டத்தகாதவர்கள் - 1948
14. புத்தர் அல்லது கார்ல் மார்க்ஸ் - 1956
15. புத்தரும் அவரது தர்மமும் - 1957
16. இந்து மதத்தில் புதிர்கள் - 2008
17. மனுவும் சூத்திரர்களும்

10. இதழ்கள்
  • மோகன்தாஸ் கரம்சந்த் பல பத்திரிகைகளை வெளியிட்டார்.  01. யங் இந்தியா 02. அகிம்சை 03. இந்திய சுதந்திரம் 04. இந்தியன் ஒப்பீனியன் தென்னாப்பிரிக்காவில் 05. ஹரிஜன்
  • பாபாசாகிப் பல பத்திரிகைகளை வெளியிட்டார். 01. (மூக்நாயக்) ஊமைவாதிகளின் தலைவர் (1920) - மராத்தி - இருவார  இதழ். 02. (பஹிஷ்க்ருத் பாரத்) இந்தியா ஒதுக்கி வைக்கப்பட்டது (1927)  - மராத்தி 03. ஜனதா (1930) வாரப் பத்திரிகை 04. (பிரபுத்த பாரத்) விழித்தெழுந்த இந்தியா (1956).

11. கற்றறிந்த மொழிகள்

  • மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி தனது தாய்மொழியான குஜராத்தியை அறிந்திருந்தார், ஆங்கிலம், பிரஞ்சு, லத்தீன், சமஸ்கிருதம் மற்றும் தமிழ் உள்ளிட்ட பல மொழிகளையும் அறிந்திருந்தார். அவர் இந்துஸ்தானி மொழியைப் பற்றிய ஒரு செயல்பாட்டு அறிவைப் பெற்றார். 
  • பாபாசாகிப் டாக்டர் அம்பேத்கருக்கு இந்தி, பாலி, சமஸ்கிருதம், ஆங்கிலம், பிரெஞ்சு, ஜெர்மன், மராத்தி, பாரசீகம் மற்றும் குஜராத்தி போன்ற 9 மொழிகள் அறிந்திருந்தார். 
12. ஆடை 
  • மோகன்தாஸ் கரம்சந்த் எளிமையான ஆடை அணிந்திருப்பார்.  அவர் 9 வயதில் கூட ஒரு சூட் அணிய பணம் வைத்திருந்தார். ஆடையின்றி ஆசிரமத்தில் இருப்பார்,  நிர்வாணமாக தூங்குவார். 
  • பாபாசாகிப் அறிவால் உயர்ந்து அதனால் இப்படிக் கம்பீரமாக உடை அணிந்து நிற்கிறார். பாபாசாகிப் கடின உழைப்புக்குப் பிறகு அந்த சூட்டை சம்பாதித்தார். அம்பேத்கர் எப்போதும் ஆடை அணிந்தவராகவும், பூட்ஸ் அணிந்தவராகவும், நேர்த்தியான உடை மற்றும் டை அணிந்தவராகவும் இருந்தார்.

13. தந்தையின் மரணம் 

  • மோகன்தாஸ் கரம்சந்த் காந்தியின் தந்தை மிகவும் உடல்நிலை சரியில்லாமல் இருந்தார். அவர் அவருக்கு மசாஜ் செய்து கொண்டிருந்தார். பின்னர் அவர் தனது அறைக்குச் சென்றார். அங்கு அவர் தனது மனைவியுடன் உடலுறவு வைத்துக்கொண்டார். இந்த நேரத்தில், அவரது தந்தை இறந்துவிட்டார். அந்த நேரத்தில் அவரால் அவருடன் இருக்க முடியவில்லை. நீண்ட நேரம் கழிப்பதே வந்தார். காந்தி இதை தனது சுயசரிதையில் எழுதினார்.
  • பீம்ராவ் 1912 இல் இளங்கலைத் தேர்வில் தேர்ச்சி பெற்ற பிறகு, ஜனவரி 1913 இல் பரோடா மாநிலப் படைகளில் லெப்டினன்ட்டாக பரோடா மாநிலப் பணியில் சேர்ந்தார். பாபாசாகிப்புக்கு தனது தந்தை பம்பாயில் கடுமையாக உடல்நிலை சரியில்லாமல் இருப்பதாகத் தெரிவிக்கும் தந்தி வந்தது. தனது தந்தையின் உடல்நிலையைக் கவனிக்க உடனடியாக பரோடாவை விட்டு வெளியேறினார். பாபாஷேப் அம்பேத்கரின் தந்தை, சுபேதார் மேஜர் ராம்ஜி மலோஜி சக்பால்  இறுக பற்றி அனைத்து அன்று இறந்தார்.
14. மனைவின் மரணம்
  • மோகன்தாஸ் கரம்சந்த் காந்தியின் மனைவி நிமோனியாவால் பாதிக்கப்பட்டபோது, ​​பிரிட்டிஷ் மருத்துவர்கள் மோகன்தாஸ் கரம்சந்த் காந்தியிடம் பென்சிலின் ஊசி மூலம் குணமடையும் என்று கூறினர். இருப்பினும் காந்தி அவரது உடலில் பிற நாட்டு மருந்து செலுத்த மறுத்துவிட்டார். அதனால் அவர் மனைவி இறந்தார். விரைவில் காந்திக்கு மலேரியா ஏற்பட்டது மருத்துவர்கள் குயினின் மூலம் தனது உயிரைக் காப்பாற்றிக்கொண்டார். அப்பொழுது பிற நாட்டு மருந்தை எடுத்துக்கொண்டார்.
  • நீண்டகால உடல்நலக் குறைவால் அவதிப்பட்டு மே 27, 1935 அன்று ராமாய் இறந்தார். அம்பேத்கருக்கு, குறிப்பாக அவரது உயர்கல்வி மற்றும் பல ஆண்டு போராட்டத்தின் போது, ​​தொடர்ந்து ஆதரவளித்தார். அவரது மரணம் அம்பேத்கரை ஆழமாகப் பாதித்தது
    • ஒவ்வொரு வெற்றிகரமான ஆணுக்கும் பின்னால் ஒரு பெண் இருக்கிறாள் என்ற பிரபலமான கூற்று. அவரது மனைவி கணிசமான கஷ்டங்களைச் சுமந்தனர். அவர்கள் கடினமான வாழ்க்கையை வாழ்ந்தனர், குடும்பத்திற்கான முழுப் பொறுப்பையும் ஏற்றுக்கொண்டனர். இதனால் பாபா சாஹேப் SC/ST மக்களை மேம்படுத்துவதற்கான உன்னத நோக்கத்திற்காக தன்னை முழுமையாக அர்ப்பணிக்க முடிந்தது. டாக்டர் அம்பேத்கர் ரமாபாயை அன்புடன் "ராமு" என்று அழைத்தார், அதே நேரத்தில் அவர் அவரை "சாகேப்" என்று அழைத்தார். அன்புடன் நினைவுகூரப்படும் அன்னை ரமா, இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்கியவருக்கு அசைக்க முடியாத ஆதரவில் அமைதியாக நின்றார்.
15. சிறை
  • மோகன்தாஸ் கரம்சந்த் தென்னாப்பிரிக்காவிலும் இந்தியாவிலும் பல முறை சிறையில் அடைக்கப்பட்டார். 1908 முதல் 1944 வரை அவர் மொத்தம் 2,338 நாட்கள் சிறையில் கழித்ததாக மதிப்பிடப்பட்டுள்ளது. தென்னாப்பிரிக்கா (1908-1914), இந்தியா (1915-1944). மோகன்தாஸ் கரம்சந்த் ஒரு பழமைவாதி.
  • பாபாசாகிப் ஒருபோதும் சிறைக்குச் சென்றதில்லை. பிரிட்டிஷ் அரசாங்கத்துடன் நேரடி மோதலை விட கல்வி,   சட்ட உரிமை மற்றும் சமூக சீர்திருத்தத்தில் கவனம் செலுத்தினார். வன்முறை போராட்டங்கள் பதிலாக அரசியல் கட்டமைப்பிற்குள் பணியாற்றினார். பாபாசாகிப் தனது சட்ட அறிவை பயன்படுத்தினார். பாபாசாகிப் புரட்சிகரமானவர், பகுத்தறிவாளர், பெண்ணியவாதி, சாதி சீர்திருத்தவாதி, பொருளாதார அறிஞர், சட்ட மேதை.  பாபாசாகிப் காலாராம் கோயில் நுழைவாயிலில், அங்கு நிலவும் சூழ்நிலையைக் காண நீதிபதியும் இருந்தார்.

புதன், அக்டோபர் 01, 2025

நெற்குன்றம் புத்தர்


அமைவிடம்:
ஸ்ரீ ஆத்ம லிங்கேஸ்வரர் சிவன் கோவில்,
தயாசதன் சாலை, செந்தமிழ் நகர்
நெற்குன்றம், கோயம்பேடு, 
மதுரவாயல் வட்டம்
திருவள்ளுவர் மாவட்டம்

இந்த கோயில் கோயம்பேடு மெட்ரோ நிலையத்திலிருந்து 900 மீட்டர் தொலைவில் உள்ளது. கோயிலின் கருவறையின் பக்கச் சுவரில் நிறுவப்பட்டுள்ளது.



சிலையமைப்பு:  
ஞான முடி (உஷ்ணீஷா) தலையின் மேல் சிறிதாக உள்ளது. அரை தோரணம், அசோக கொடிகளும் மேலே உள்ளது, இடது தோளில் சீவர ஆடை மங்கலாகத் தெரிகிறது. .நெற்றி திலகம் உள்ளது. நீண்ட காது, தியான முத்திரை, அரை தாமரை அமர்வு, பீடத்தின் அடிவாரத்தில் ஒரு தர்ம சக்கரமும் மங்கலாகத் தெரியுகிறது. 

காணாமல் போன புத்தர் சிலை

கரோண காலத்தில் பதிவிட்டு இருந்தார் ஐயா வேலுதரன். சிலை பாதுகாப்பாக இல்லை. பார்க்க விரும்புபவர் உடனடியா பார்க்கவ வேண்டி பதிவிட்டு இருந்தார். மிக காலா தாமதமாக நேற்று தான் அவர் வலைப்பதில் நெற்குன்றம் புத்தரை கண்டேன். இன்று மலை (01/10/2025) சென்று அந்த கோவில் (ஜீவா சமாதி) பார்த்து புத்தர் சிலை இல்லாதது கண்டு வருந்தினேன். அங்கு பணியாற்றிய நபரை விசாரித்தேன். புத்தர் சிலை எடுத்து செல்லப்பட்டது யார் எங்கே என்றெல்லாம் தெரியாது என்றுரைத்தார் .     

 நன்றி: வேலுதாரன் - வலைப்பதிவு

செவ்வாய், செப்டம்பர் 23, 2025

மாலுமியர் பேட்டை - கடலூர் - புத்தர்

அமைவிடம்:

மாலுமியர் பேட்டை, கடலூர் துறைமுகம், கடலூர் மாவட்டம். இது கடலூர் நகராட்சியின் ஒரு பகுதியாகவும் உள்ளது. இந்தப் பகுதியில் நகராட்சி துவக்கப்பள்ளி ஒன்றும் உள்ளது மற்றும் காளியம்மன் கோயில் ஒன்றும் அமைந்துள்ளன. பழைய கடலூர் நகரம் (Cuddalore old town)க்கும் கடலூர் புதிய துறைமுகம் இரண்டுக்கும் இடையில் அமைந்துள்ளது.



சிலையமைப்பு

தலைப்பகுதி மட்டுமே கிடைத்துள்ளது. முடியலங்காரம்- நத்தையின் சுருள் போன்று அடர்ந்த சுருண்ட கேசங்கள் வலது பக்கம் திரும்பியுள்ளது. இந்த சுருள் மூன்று சுற்றுக்களை கொண்டது. ஞான முடி - பகவான் புத்தரின் ஞானத்தை குறிக்கும் சின்னம் ஞான முடி. அது அவரது தலையில் சற்று புடைப்பாக இருக்கும். இது இரு வகைகளை கொண்டது. 1 முடிபோன்று 2 தீபிழம்பு போன்று. இச்சிலையில் தீப்பிழம்பாக ஐந்து சுவாலை உடன் உள்ளது. 

புருவங்களின் மத்தியில் ஒரு வெள்ளை முடியுள்ளது. இது இரு வகைகளை கொண்டது.
1 திலகம்
2 வெள்ளைமுடி.
 
இச்சிலையில் வெள்ளை முடி நெற்றியின் மேலிருந்து கீழ் நோக்கி வந்து ஒரு வெள்ளை முடியுள்ளது. இச்சிலையில் வெள்ளை முடி மிகஅழகாக முடியமைக்கப்பட்டுள்ளது. வெள்ளை முடி தொன்மையான புத்தர் சிலைகளில் காணலாம். பெரும்பாலும் திலகம் வடிவத்துடன் நாம் பார்த்து இருப்போம். நீண்ட காது, கண்கள் சிதைந்துள்ளது. 12 ஆம் நூற்றாண்டு.  பிற்கால சோழர் சிலை.

நன்றி: அருள் முத்துக்குமரன் (சிதம்பரம்) - பாபாசாகிப் மற்றும் பௌத்த சிந்தனையாளர் 

மயிலாப்பூர் திருவள்ளுவர் கோயில்



அமைவிடம்:
திருவள்ளுவர் திருக்கோவில்,
முண்டகக்கண்ணியம்மன் கோவில் தெரு
(சமஸ்கிருத கல்லூரி அருகே)
திருமயிலை, சென்னை – 600004.


திருவள்ளுவர் பிறந்த இடம
திருவள்ளுவர் பிறந்த இடம சென்னை, மயிலாப்பூர். இங்கு 25 கிரவுண்டு பரப்பளவு கொண்ட திருவள்ளுவர் கோயில் அமைக்கப்பெற்றுள்ளது.

திருவள்ளுவர் கோயில்

குடியிருப்பு பகுதியின் நடுவே அமைந்திருப்பதால் இப்படி ஒரு கோவில் இங்கே இருக்கிறது என்பதே வெளியே பலருக்கு தெரியவில்லை.  

தற்போதைய கோயில் 16-ம் நூற்றாண்டின் முற்பகுதியில் கட்டப்பட்டது. 1970-களில் விரிவாகப் புனரமைக்கப்பட்டது. இக்கோவிலை மயிலாப்பூர் ஸ்ரீ முண்டகக்கண்ணி அம்மன் கோயிலின் சார்புக் கோயிலாக இந்து சமய அறநிலையத் துறை பராமரிக்கிறது. 20-ம் நூற்றாண்டு தமிழக அரசால் புனரமைக்கப்பட்ட பிறகு, இக்கோயிலில் உள்ள கற்சிலைகளைத் தவிர பண்டைய கோவிலின் வேறெந்தத் தடயங்களும் காணக்கிடைக்காமல் போய்விட்டன. (1989-ம் ஆண்டு திருமயிலையின் திருக்கோயில்கள் - பில் எஸ். ராஜேந்திரன்  நூல்)


சிலையமைப்பு 

1974 டிசம்பர் மாதம் திருவள்ளுவர் கோவிலை புதுப்பிக்கும் போது அடிக்கல் வைப்பதற்காக தோண்டும் போது பூமிக்கு கிழே நான்கு அடி ஆழத்தில் திருவள்ளுவர் கருங்கல் சிலை கிடைத்தது. 500 ஆண்டுகளுக்கு முந்தியதாக கருதப்படும் இச்சிலை தலை இடக்கை உடைந்து தனியாக இருந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டது


உடைந்த பகுதியை சேர்த்து பார்க்கும் பொழுது நீண்ட தாடி முறுக்கிய மீசையுடன் அமர்ந்த நிலையில் திருவள்ளுவர் காணப்படுகிறார். வலக்கை சின் முத்திரையுடன் அக்ஷமாலை (Aksha) ஏந்தியவாறு ஒரு பீடத்தின் மீது சிலை உள்ளது . இச்சிலை கிபி பதினான்கு அல்லது பதினைந்ததாம் நூற்றாண்டை சேர்ந்ததாக இருக்கலாம் என்று தொல் பொருள் ஆய்வு துறை இயக்குனர் இரா.நாகசாமி கருதுகிறார்.  (திருமயிலை திருத்தலம் இயக்கிய வரலாற்று பார்வை (Mylapore Through the Ages) டாக்டர் சு . ராஜசேகரன் - தமிழ் பேராசிரியர் நந்தனம் கலைக்கல்லூரி 1989). 

வைட் எல்லிஸ்

ஆங்கிலேய அரசாட்சியில் சென்னை மாகாணத்தின் அரசு ஊழியராக இருந்த எல்லீசனார் என்றழைக்கப்படும் பிரான்சிஸ் வைட் எல்லிஸ் 19-ம் நூற்றாண்டின் முற்பகுதியில் ராயப்பேட்டையில் உள்ள பெரியபாளையத்தம்மன் கோவிலில் எழுப்பிய கல்வெட்டில் மயிலாப்பூர் வள்ளுவர் கோயிலைப் பற்றிக் குறிப்பிட்டுள்ளார்.

எட்வர்ட்  எலியட்ஸ் சாலை டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலை என்று வழங்கப்படுகிறது.  (திருமயிலை திருத்தலம் இயக்கிய வரலாற்று பார்வை (Mylapore Through the Ages) டாக்டர் சு . ராஜசேகரன் - தமிழ் பேராசிரியர் நந்தனம் கலைக்கல்லூரி 1989). 

வெண்கல சிலைகள்

கோவிலில் உள்ள வெண்கல சிலைகள் 19-ம் நூற்றாண்டில் செய்யப்பட்டதாக அறியப்படுகிறது. தற்போது மாநில அரசின் இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் இருக்கும் இக்கோயில் அதற்கு முன் சிவஞான முதலியார் என்பவரின் ஆளுகைக்குள் இருந்து வந்தது.

 பல்வேறு தெய்வ சன்னதிகள்

இக்கோயில் வளாகத்தில் விநாயகர், சுப்ரமணியர், சிவன், பார்வதி, திருவள்ளுவர், வாசுகி, துர்கை, நவகிரகங்கள் எனப் பல்வேறு தெய்வங்களுக்கான தனித்தனி சன்னதிகள் உள்ளன.

 திருக்குறளில்  கடவுள்கள்

திருவள்ளுவர் திருக்குறளில் குறிப்பிட்ட கடவுள்கள் குறித்து எந்த கருத்தும் கூறவில்லை. 

கல்வெட்டுகள்

இக்கோயில் புகழ்பெற்ற முண்டகக் கண்ணியம்மன் கோயிலுக்கு அருகே அமைந்துள்ளது. மயிலாப்பூரில் திருவள்ளுவருக்கு 1935ல் கோவில் உருவானதாக அங்கிருக்கும் கல்வெட்டு சொல்கிறது.  

27/04/1973ல் முதல்அமைச்சர் கருணாநிதி கோவில் திருப்பணியை தொடங்கி வைத்திருக்கிறார். நெடுஞ்செழியன், கண்ணப்பன் ஆகியோர் முன்னிலை வகிக்க குன்றக்குடி அடிகள் தலைமையில் திருப்பணி குழுவும் அமைக்கப்பட்டிருக்கிறது. அப்போதைய அறநிலையத் துறை அமைச்சர் மு. கண்ணப்பன், கல்வி அமைச்சர் நெடுஞ்செழியன் உள்ளிட்டோர் இவ்விழாவில் பங்கேற்றனர் என்பது கோவிலில் காணப்படும் கல்வெட்டு மூலம் தெரியவருகிறது.

முதல்அமைச்சர் கருணாநிதி துவக்கிய திருப்பணி என்பதால் ஆலயம் என்ற சொல்லை தவிர்த்து நினைவாலயம் என்று பொறித்திருக்கிறார்கள் கடந்த 23.01.2001-ல் திருவள்ளுவர் கோயிலுக்கு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டுள்ளது. இதில் அப்போதைய இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் திரு.தமிழ்க்குடிமகன் உள்ளிட்ட பலர் பங்கேற்றதாக கோயில் கல்வெட்டு குறிப்பிடுகிறது. 

இந்து அறநிலையத் துறை

பரம்பரை பரம்பரையாக பல நூறாண்டுகளுக்கும் மேல் தனியாரிடம் இருந்தது இந்த கோவில். பல ஆண்டுகாலம் தினசரி பூஜைகள் நடைபெற்றுவந்துள்ளது. சுதந்திரத்துக்கு பிறகு தான் இந்து அறநிலையத் துறையின் கீழ் வந்தது.




வியாழன், செப்டம்பர் 18, 2025

கோனார்க் சூரிய கோயில் பௌத்த தளம்

 

அமைவிடம்:
கோனார்க் சூரிய கோயில், 
கோனார்க் ஊர்,
பூரி மாவட்டம்,
ஒடிசா மாநிலம் 752111

பௌத்த அடையாளங்கள்

01. கருப்பு பகோடா (Black Pagoda

1676 ஆம் ஆண்டிலேயே ஐரோப்பியர்களால் இந்தக் கோயில் கருப்பு பகோடா (Black Pagoda) என்று அழைக்கப்பட்டது.  கோனார்க் கோயில் கருப்பு பகோடா எனவும் பூரி ஜெகந்நாதர் கோயில் வெள்ளை பகோடா எனவும் அழைக்கப்பட்டது. தமிழ் நாட்டிலுள்ள மகாபலிபுரம் ஏழு பகோடாகள் (Seven Pagoda) என ஐரோப்பிய ஆய்வாளர்களால் அழைக்கப்பட்டது.

ஜேம்ஸ் பெர்குசன் வரைந்த கோனார்க் படம்

பகோடா என்பது புத்த கட்டிட கலையை குறிப்பிடுவது. இந்த ஸ்தூபி குவிமாட வடிவ நினைவுச்சின்னமாகும். பகோடாக்கள் என்பது புத்த ஸ்தூபியிலிருந்து உருவான அடுக்கு கோபுரத்தின் பாணியாகும். இந்த வகை கட்டிடங்கள் நேபாளம், சீனா, ஜப்பான், கொரியா, வியட்நாம், மியான்மர், இந்தியா, இலங்கை மற்றும் ஆசியாவின் பிற பகுதிகளில் அதிகம் காணப்படுகின்றன. மேலும் அவை இந்தியா உட்பட புத்த மதம் செழித்து வளரும் நாடுகளில் காணப்படுகின்றன. விபாசனா தியான மையம், புத்த நினைவுச்சின்னங்கள் பகோடாகள் என்று அழைக்கப்படுகிறது. 

02. தம்ம சக்கரங்கள்

01.இந்தக் கோயிலின் அடிப்பகுதியில் மொத்தம் 24 சக்கரங்கள் உள்ளன. 24 சக்கரங்களில் 6 சக்கரங்கள் பிரதான கோனார்க் கோயிலின் இருபுறமும், 2 சக்கரங்கள் கிழக்கு முன்பக்கத்தின் இருபுறமும் 4 சக்கரங்கள் முன்கூட்ட மண்டபம் முகசாலாவின் இருபுறமும் உள்ளன. 
 
02.கோனார்க் தம்மசக்கரம் "வாழ்க்கைச் சக்கரம்" வாழ்க்கைச் சுழற்சியைக் குறிக்கின்றன. சக்கரங்களின் விளிம்புகள் பல்வேறு பறவைகள் மற்றும் விலங்குகளின் சித்தரிப்புகளுடன், இலை வடிவமைப்புகளுடன் நுணுக்கமாக செதுக்கப்பட்டுள்ளன. 

03.சக்கரங்களின் ஆரங்களில் உள்ள பதக்கங்கள் பல்வேறு போஸ்களில் பெண்களின் உருவங்களைக் காட்டுகின்றன, பெரும்பாலும் காம உணர்ச்சியைத் தூண்டும் சிற்றின்ப சிற்ப இயல்புடையவை. ஒடிசாவில் முக்கியமாகப் பின்பற்றப்பட்ட தாந்த்ரீக வழிபாட்டு முறையுடன் அவர்களை இணைக்கிறது

 03மாயா தேவி கோயில் Maya Devi Temple

கோனார்க் கோயிலின் பின்புறத்தில் உள்ள ஒரு கோயில் மாயா தேவி கோயில். பகவான் புத்தரின் தாய் மகாமயா (அ) மாயா தேவி. இந்த கோயில் கோனார் விட பழமையானது. மாயாதேவி கோயில் 11ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டது மாயாதேவி கோயில் 1900 மற்றும் 1910 க்கு இடையில் அகழ்வாராய்ச்சி முயற்சிகள் மூலம் பார்வைக்கு வந்தது. இதற்கு முன்பு, அது மணல் மற்றும் குப்பைகளின் அடுக்குகளுக்கு அடியில் மறைந்திருந்து, கண்ணுக்குத் தெரியாமல் கிடந்தது.


மாயாதேவி கோயிலுக்கும் கோனார்க் சூரிய கோயிலுக்கும் இடையிலான ஒப்பீடு.

01. ஒடிசாவின் கோனார்க்கில் அமைந்துள்ள மாயாதேவி கோயில் மற்றும் கோனார்க் சூரிய கோயில் இரண்டும் ஒரே வளாகத்தில் அமைந்துள்ள வரலாற்று தளங்களாகும்.

02. மாயாதேவி கோயில் கலிங்க கட்டிடக்கலையின் சிறப்பிற்கு ஒரு துடிப்பான சான்றாக உள்ளது.

04. கோனகமான புத்தர் (Konakamana Budda) 

கோனார்க்கிற்கு அருகிலுள்ள சிற்றுர் குருமா. கோனார்க்கிலிருந்து 6 கி.மீ தொலைவில் குருமா சிற்றுர் அமைந்துள்ளது. குருமாவில் உள்ள இடத்தின் சோதனை அகழ்வாராய்ச்சி 1974-75 ஆம் ஆண்டில் மாநில தொல்பொருள் துறையால் நடத்தப்பட்டது. இது இப்பகுதியில் பௌத்த வரலாற்றுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. தொல்பொருள் தளத்தில் ஒரு கோனகமான புத்தர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. குருமா என்பது பௌத்த தளம்.

இங்கு கோனகமான புத்தர் குறுக்குக் கால்களுடன் அமர்ந்திருக்கிறார், வலதுகை பூமிஸ்பர்ச (நிலத்தை தொடும்) முத்திரை, இடது கை இடது முழங்காலுக்கு மேல் வைக்கப்பட்டுள்ளது. சிலையின் கழுத்தில் ஒரு அழகான அணிகலன் அலங்கரிக்கப்பட்டுள்ளது. இந்த சிலை இயற்கையிலேயே தனித்துவமான ஒரு அழகான கிரீடத்தை அணிந்துள்ளது. இவர் கௌதம புத்தரில்லை கோனகமான புத்தர். இருபத்தி மூன்றாவது புத்தர். 

அவலோகிதேஸ்வரர் சிலை தாமரை மலரில் அமர்ந்திருக்கிறது. பூவின் இதழ்கள் நன்றாக செதுக்கப்பட்டுள்ளன. தாமரை இருக்கை அல்லது பத்மாசனம் 10" உயரமுள்ள ஒரு கவசத்தின் மேல் உள்ளது. படத்தைக் கொண்ட கல் பலகையின் உயரம் 7' மற்றும் அதன் அகலம் 3' ஆகும்.

குருமாவுக்கு இரண்டு நூற்றாண்டுகளுக்குப் பிறகு கோனார்க் கட்டப்பட்டது என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும். கோனகமான புத்தர் = கோனார்க்

02. கோனார்க் கோயில் குப்பைகளின் குவியலாக இருந்தது

  • 16 ஆம் நூற்றாண்டில் கோனார்க்கோயில் சிதிலமடைந்தது. கோயிலின் பல சிற்பங்கள் கொள்ளையடிக்கப்பட்டன.
  • இந்த கோயிலின் அருண் ஸ்தம்பம் அல்லது பிரதான தூண் கி.பி 18 ஆம் ஆண்டில் மராட்டிய ஆட்சியாளர்களால் பூரி ஜெகந்நாதர் கோயிலுக்கு மாற்றப்பட்டது. 
  • கி.பி1837 ஆம் ஆண்டில், ஜேம்ஸ் பெர்குசன் கோயிலுக்குச் சென்று கோனார்க் கோயிலின் வரைபடத்தை உருவாக்கினார். ஜேம்ஸ் பெர்குசன் கோனார்க் கோயிலை பார்வையிட்டபோது, பிரதான கோயில் குப்பைகளின் குவியலாக இருந்தது, அதில் இருந்து எந்த முக்கிய தெய்வமும் மீட்கப்படவில்லை.  
  • 19 ஆம் நூற்றாண்டில், பிரிட்டிஷ் காலனித்துவ அரசாங்கம் கோயிலைப் பராமரிக்கும் பொறுப்பை ஏற்றுக்கொண்டது. சிற்பங்கள் மற்றும் சிற்பங்களைப் பாதுகாப்பதில் கவனம் செலுத்தின

புதன், ஆகஸ்ட் 06, 2025

திருவள்ளுவரின் திருவுருவம் II



1) 1904 - கோ. வடிவேலு செட்டியார்

01. 1904ல் (Hindu Theological Higher Secondary School) இந்து இறையியல் மேல்நிலைப் பள்ளியில் தமிழ்ப் பண்டிதராக இருந்த கோ. வடிவேலு செட்டியார் என்பவர், ‘திருக்குறள் மூலமும் பரிமேலழகருரையும்’ என்ற நூலை வெளியிட்டார்.

02. இரு பாகங்களாக வெளியான இந்தப் புத்தகத்தில் திருவள்ளுவரின் படம் ‘திருவள்ளுவநாயனார்’ என அச்சிடப்பட்டிருந்தது. அதில் ஜடா முடியுடனும் தாடி மீசையுடனும் மார்புக்குக் குறுக்காக யோகப் பட்டை எனப்படும் துண்டை அணிந்தபடியும் திருவள்ளுவர் காட்சியளித்தார். ஒரு கையில் சின் முத்திரையுடன் ஜெப மாலையும் மற்றொரு கையில் ஒரு ஓலைச் சுவடியும் இருந்தது. நெற்றியில் பட்டையும் நடுவில் குங்குமமும் இருந்தது.

03.ஏன் இப்படி ஜடா முடியுடன் கூடிய உருவம் கொடுக்கப்பட்டது என்பதற்கு ஒரு விளக்கமும் இந்த நூலில் இருக்கிறது. ‘நாயனார் சொரூபஸ்துதி’ என்ற பாடலை அடிப்படையாக வைத்தே இந்த உருவம் திருவள்ளுவருக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது.

04. கோ. வடிவேலு செட்டியார் வெளியிட்ட நூலில் இருந்த திருவள்ளுவரின் உருவப்படம். இதற்குப் பிறகு இந்த நூலின் ஆங்கிலப் பதிப்பு வெளியானபோது, அதிலும் ஒரு திருவள்ளுவர் படம் கோட்டுச் சித்திரமாக இடம்பெற்றிருந்தது. அதில் திருவள்ளுவர் ஒரு சைவ சமய அடியாரைப் போல காட்சியளிக்கிறார்.

02. சம்பந்தன்

கரங்களிலும் நெற்றியிலும் விபூதிப் பட்டையுடன் காட்சியளிக்கும் திருவள்ளுவர், ஒரு மரத்தடியில் அமர்ந்திருப்பதைப் போலவும் அவரை இரு அடியார்கள் தொழுவதும்போலவும் அந்தப் படம்  சம்பந்தன் என்பவர் வரைந்திருந்தார். இதற்குப் பிறகு சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம் வெளியிட்ட நூல்களில் திருவள்ளுவர் படங்கள் ஏறக்குறைய இதே தோற்றத்தில் இடம்பெற்றிருந்தன. 



2) 1950 - பாலு – சீனு

01. 1950களில் பாலு – சீனு என்ற சகோதரர்கள் கலை என்ற இதழை நடத்தினார்கள். அந்த இதழில் ஒரு திருவள்ளுவர் படம் இடம்பெற்றிருந்தது. அந்தப் படத்தில் திருவள்ளுவர் எந்த மதச் சின்னமும் இன்றி இருந்தார். 
 
02. வள்ளுவருக்கு இப்போதிருக்கும் சித்திரம் பதினெட்டாம் நூற்றாண்டின் இறுதியில் வரையப்பட்டது. திருக்குறள் தீபாலங்காரம்- ஜமீன்தாரிணி உரை என்னும் நூலில் இந்தப்படம் இருந்தது.  
 
 
உலகப்பொதுமறை தந்த வள்ளுவருக்கு ஓர் உருவம் கொடுக்க வேண்டும் என்பது புரட்சிக்கவிஞர் பாரதிதாசன், அறிஞர் அண்ணா உள்ளிட்ட பலரது விருப்பம். அந்த விருப்பத்தைப் பூர்த்தி செய்யும் பொறுப்பை அப்போதைய முதலமைச்சர் காமராஜர் ஏற்றுக்கொண்டார். அவருடைய உத்தரவின்படி ஓவியர் வேணுகோபால் சர்மா வரைந்த திருவள்ளுவர் ஓவியம் அதிகாரபூர்வ வள்ளுவர் ஓவியமாக 1959 ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்டது.


3) வேணுகோபால் சர்மா 1959
01. திருவள்ளுவர் என்றதுமே நீண்ட தாடி, கையில் எழுதுகோல், தீர்க்கமான பார்வையுடன் மரப்பலகையில் அமர்ந்திருக்கும் ஓர் உருவம் கம்பீரமாக நம் மனக்கண்ணில் தோன்றும். உருவமற்று இருந்த வள்ளுவனுக்கு முதன்முதலில் ஓவியம் மூலம் உயிர்கொடுத்தவர் ஓவியர் கே.ஆர்.வேணுகோபால் சர்மா
 
02.தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, கலைஞர் கருணாநிதி, எம்.ஜி.ஆர், கக்கன், தோழர் ஜீவா, நாவலர் நெடுஞ்செழியன், கிருபானந்த வாரியார், கவிமணி தேசிய விநாயகம் பிள்ளை, மு.வரதராசனார், கவியரசர் கண்ணதாசன், எஸ்.எஸ்.வாசன் எனப் பல்வேறு அறிஞர்கள் இந்த வள்ளுவர் படத்தைப் பார்த்து அங்கீகரித்திருக்கிறார்கள். 

 

 
03. அதன்பின், அந்த ஓவியம் 1964-ம் ஆண்டு பக்தவத்சலம் முதல்வராக இருந்தபோது, அன்றைய துணை ஜனாதிபதியாக இருந்த ஜாகீர் உசேனால் சென்னை சட்டசபையில் திறக்கப்பட்டது. இந்த ஓவியம்தான் தமிழக அரசால் அங்கீகரிக்கப்பட்டு நாட்டுடைமையாக்கப்பட்டது. இந்தப் படத்தை மத்திய அரசு அஞ்சல் தலையாகவும் வெளியிட்டது. 
 
04. வேணுகோபால் சர்மா, கிட்டத்தட்ட 40 ஆண்டுகளாகப் பல நூறு முறை முயன்று வள்ளுவருக்கு உருவம் கொடுத்தார். அப்படம் உருப்பெற்றதற்கான காரணங்களையும் நுட்பமாக எழுதி வைத்தார். சென்னைப் பல்கலைகழகம், அதை 2012-ம் ஆண்டு நூலாகப் பதிப்பித்து விழாவெடுத்து வெளியிட்டிருக்கிறது. 
 
திருவள்ளுவரின் உருவத்துக்கான அடிப்படை விஷயங்களை அவர் திருக்குறளின் தரவுகளிலிருந்துதான் எடுத்திருக்கிறார் என்பதும் அந்நூலில் தெளிவாகக் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

01. திருமுடி
திருவள்ளுவருக்குத் திருமுடி எவ்வாறு அமைந்திருக்கக்கூடும் சிறிதே முன் வழித்துப் பின்வளர்த்த பெருங்குடுமியா? நாகரிக ஒப்பனையுடன் வெட்டப்பட்ட சிகையா? இவையனைத்தும் தனித்தனிக் குழுவாரின் அடையாளமாக ஆகிவிட்டமையின், திருவள்ளுரின் கருத்துக்குப் பொருந்துவன ஆகாவாதலின், திருவள்ளுவருக்குத் திருமுடியும் நீவப்படாத தாடியும் இருத்தல் நன்று என்று கருதப்பட்டது. 

02.நெற்றி
ஓவிய இலக்கண முறைப்படி உயர்ந்த மதி படைத்தோருக்கு நெற்றி பரந்தும் உயர்ந்தும் இருக்க வேண்டுமென்பதோடு, அவர்கள் நாசியின் நீளத்திற்கொப்பாகவோ அல்லது சற்று அதிகமாகவோ அது இருத்தல் வேண்டுமென்பதால், அதற்கொப்ப திருவள்ளுவரின் நெற்றி அமைக்கப்பட்டது.
 
03. நாசி
நாசி, ஓணான் முதுகில் எவ்வளவு நுண்ணிய வளைவு தென்படுகிறதோ அவ்வளவு வளைந்திருக்க வேண்டுமென்பதோடு, நாசியின் நுனி மழுங்கியிராமல், அதன் பருமனுக்கேற்ற கூர்மையுடனிருந்தால் புத்திக் கூர்மையும், உண்மையை உய்த்துணரும் ஆற்றலும் உண்டு என்பதோடு, நாசித் துவாரத்தின் இரு பக்கத்து மேல் மூடிகளும் சற்று மேல் நோக்கி அகன்றிருக்க வேண்டும்.
 
04. உதடுகள்
வாய் அகன்றிருக்கக் கூடாது; குறுகியும் இருக்கக் கூடாது; மெல்லியதாய் இருத்தலும் கூடாது. அப்படி இருந்தால் வாய்மைத்திறன் வாய்க்காது. ஆகையால், தமக்கென்று ஏற்படுத்திக்கொண்ட பெரும் பணியை நிறைவேற்றுவதற்கான உறுதியைத் தெளிவாகக் காட்டுமாறு திருவள்ளுவரின் உதடுகள் அமைக்கப்பட்டன.

05.கண்கள்
உலகின் மீதுள்ள பெருங்கருணையால் தான் திருவள்ளுவர் திருக்குறள் இயற்றித் தந்தார் என்று கருதப்பட்டதால் ஆழ்ந்த சிந்தனை, கருணை, ஒளி, பொதுநோக்கு இவை நிரம்பிய கண்கள் படைக்கப்பட்டன.
 
06.வலது புருவம்
சிந்தனையிலுள்ளபோது திருவள்ளுவரின் வலது புருவம் சற்றே உயர்ந்து, உள்ளம் செயல்பட்டுக் கொண்டிருப்பதைக் குறிக்கிறது.
 
07.காதுகள்
அவரது நீண்டகன்ற காதுகள் பல ஆண்டுகாலமாக அவர் பெற்ற கல்வியினாலும் உலகியல் பயிற்சியினாலும் அவர் எய்திய அறிவுத் திறனையும், தேர்ந்த செவிச் செல்வத்தையும் காட்டுவனவாக உள்ளன.
 
08.ரோம வரிசைகள்
மார்பிலும், முன்கையிலும் அமைந்துள்ள ரோம வரிசைகள், தாம் ஏற்ற பணியை நிறைவேற்றிக்கொள்ளும் ஆண்மையைக் குறிப்பன. 
 
09.வெண்ணிற ஆடை
தூய்மை நிறைந்த உள்ளம், தூய்மை நிறைந்த நோக்கு, தூய்மை நிறைந்த வாக்கு, தூய்மை பெற்ற உடல், தூய்மையான குறிக்கோள். இவையிருப்பதால், திருவள்ளுவர் தூய்மையான வெண்ணிற ஆடை புனைந்திருத்தல் நன்று என்று கருதப்பட்டது.
 
10. வலக்கையில் எழுத்தாணி
வலக்கையில் எழுத்தாணியைப் பிடித்துள்ள அழுத்தம், மனித குலத்தின் உயர்வுக்காகத் தன் அறிவாற்றலால் தளராது உழைத்துத் தம் குறிக்கோளை நிறைவேற்றிக் கொள்ளும் ஊக்கத்தையும் நெஞ்சுறுதியையும் காட்டுவதாகும்.  
 
11.இடது கை ஓலையைத் தாங்கி நிற்பதாக
கலை நலம் நிரம்பப் பெற்று காண்போரின் அழகுணர்ச்சிக்கு விருந்தாகப் பொலியும் இடது கை, உலகப் பொதுப் பணியை ஈடேற்றி வைக்கும் பொறுப்புடன் ஓலையைத் தாங்கி நிற்பதாக அமைக்கப்பட்டது. 
 
12.வலதுகால் பெருவிரல்
வலதுகால் பெருவிரல் மட்டும் சற்று முன் வளைந்திருப்பது ஏனெனில், கால் பெருவிரல் அற்ப ஆசைகளைக் குறிப்பது. அந்த ஆசை வெளியில் தூக்கி எறியப்பட்டு விட்டது என்பதை வற்புறுத்த என்றால் நிராசையோடு உலகத்தினிடம் பயனேதும் கருதாது பணி செய்து கிடப்பதே தன் கடனென்று நினைத்தார் என்க. அல்லாமலும், எல்லோருக்குமே சிந்தனை தீவிரமாக இருக்கும் பொழுது கால் பெருவிரல் அடுத்த விரலுடன் நெண்டிக்கொண்டேயிருக்கும். 
 
13.சில சுவடிகளின் சில பகுதிகள் மட்டுமே தெரிவாக வரையப்பட்டுள்ளன
சிந்தனை சீர்பெற முடிந்ததும் ஒரு நிலையில் நின்று விடும். ஆகையால், அதற்கும் ஒப்ப அமைக்கப்பட்டது. ஏற்கனவே எழுதப்பட்ட திருக்குறளின் பல அதிகாரங்கள் அவருக்கு வலப்புறம் குவிக்கப்பட்டிருக்கின்றன. அவற்றைத் தொடர்ந்து, அப்பாலும் பல அதிகாரங்கள் குவிந்திருக்கின்றன என்று ஊகித்துக் கொள்ளும் பொருட்டு, சில சுவடிகளின் சில பகுதிகள் மட்டுமே தெரிவாக வரையப்பட்டுள்ளன.  
 
14.ஓலையில் ஒன்றும் எழுதாமல் விடப்பட்டது
கையில் பிடித்துள்ள ஓலையில் ஒன்றும் எழுதாததற்குக் காரணம் தமிழில் இலக்கிய வரம்பிற்குட்பட்டு நயம்பெற மிகச் சுருக்கமாக எப்படி எழுத வேண்டுமென்ற சிந்தனை திருவள்ளுவருக்கு இருந்திருக்க முடியாது. அப்படி சிந்தித்திருந்தால் திருக்குறளில் அவ்வளவு நீரோட்டமும், தெளிவும் இருக்க முடியாது. ஆகவே குறள்களை எழுத அவர் தம் விரல்களுக்கே தெரியும். ஓலையில் எழுத்தாணியை ஊன்றி விட்டால், குறள் முடிந்துதான் எழுத்தாணி இடம் விட்டுப் பெயறும். இந்நிலையில் மக்களுக்கு அடுத்து சொல்லப்பட வேண்டியது யாது என்னும் சிந்தனையிலிருக்கும் நிலையாக உருவகம் செய்து, கண்களை சிந்தனையில் ஆழ்ந்திருக்கச் செய்திருப்பதால், இந்த ஓலையில் ஒன்றும் எழுதாமல் விடப்பட்டது. 

15.அறிவுச்சுடர்
திருவள்ளுவர் தமக்கென வாழாதவர் என ஊகிக்கப்பட்டதால், அவர் ஆசையற்று இருந்திருக்க முடியும். ஆசையற்ற இடத்தில் துக்கம் இருக்க முடியாது. அவர் தூய கருத்துலகில், சிந்தனை வானில் வாழ்ந்தவராதலால், அவரது சூழ்நிலையும் தூய்மை என்பதைக் குறிக்கவே பின்புறம் - இருபக்கங்கள் - இவற்றில் மரம், செடி, கொடிகளோடு - வீடு வாசலோ எவற்றையும் அமைக்காமல், அவரது உருவத்திலிருந்து வெளிப்பட்டுப் பரவி நிற்கும் அறிவுச்சுடர் ஒன்று மட்டுமே இடம் பெறலாயிற்று.  
 
16.ஒளிவட்டம்
அநேகமாக மனித சக்திக்கு அப்பாற்பட்ட சக்தி உள்ளவர்களுக்கு சிரத்தைச் சுற்றிலும் ஒளிவட்டம் ஒன்று சித்திரத்தில் அமைப்பது மரபாக இருந்து வருகிறது. ஏனெனில் அவர்களிடத்தில் பேரறிவின் ஒளி வீசுகிறது என்பதைக் காண்பிக்க. ஆனால், திருவள்ளுவருக்கு அந்த ஒளியை வட்டமாக அமைக்காமல் தலையைச் சுற்றிலும் தூய நிறம் ஆரம்பித்து, அது எங்கு போய் முடிகிறது என்பதைக் காட்டாமல், சுற்றிம் உள்ள மங்கலான இடங்களில் சென்று பாய்ந்து முடிவு தெரியாமல் விடப்பட்டிருப்பதற்குக் காரணம், வள்ளுவரின் ஒளி மற்றையோர் போல வட்டமாகத் தனக்கு மட்டும் நின்று விடாமல் வெளி உலகிற்கு ஊடுருவிப் பாய்கிறதைக் காட்டுகிறது.  
 
17.மண் தரையில் மரப் பலகையின் மீது வள்ளுவர் அமர்ந்திருத்தல்
மண் தரையில் மரப் பலகையின் மீது வள்ளுவர் அமர்ந்திருத்தல் ஏனெனில், எதையும் உயராது இழுக்கும் பூமியின் ஆற்றலும் அவரது சிந்தனை உயர்வதைத் தடுப்பதற்கில்லை. அத்துடன் உலகத்தோடு ஒட்ட ஒழுகியும், உலகியலுக்குத் தாம் அடிமையாகாமல் தனித்து நின்று தனிப்பெரும் அறநெறியை வகுத்துத் தந்த தனிப்பெருந்தகையான அவர்தம் தூய்மையுற்ற உணர்வு செயல், ஆடை முதலியனவற்றை எந்த வகையிலும் அழுக்கு தீண்ட இடந்தருவது இழுக்காகுமெனக் கருதியதாகும்.

அரசு அங்கீகாரம் செய்த திருவள்ளுவரின் திருவுருவத்தில் விபூதி, சந்தனப் பொட்டு, பூணூல், கையில் சின் முத்திரை, உருத்திராட்ச மாலை போன்ற அடையாளங்கள் ஏதுமில்லை. திருவள்ளுவர் மேல் ஆடை அணிந்து திருவுருவம் உருவாக்கப்பட்டது. வேணுகோபால் சர்மா வரைந்த இந்த திருவள்ளுவர் படம் தமிழக அரசால் அங்கீகரிக்கப்பட்டது. இந்த படத்தினைத் தான் அரசு அலுவலகங்களிலும், பள்ளிக் கூடங்களிலும் மற்றும் அரசு உதவி பெறும் நிறுவனங்களிலும் வைக்க வேண்டும் என்று அரசு ஆணை பிறப்பிக்கப்பட்டது. 

புதன், மார்ச் 26, 2025

பூரி ஜகன்னாதர் கோவில் பௌத்த விகார்


அமைவிடம் : 

பூரி ஜகன்னாதர் கோவில், பூரி கடற்கரை நகரம்,

பூரி மாவட்டம், ஒடிசா மாநிலம் 752001

 


ஜெகநாதர் என்பதன் பொருள் உலகநாதர். உலகநாதர் என்பது புத்தரின் பெயர். தேர் ஊர்வலம்/ திருவிழா என்பது பௌத்த பண்பாடு. பூரியில் ஊரே சேர்ந்து தேர் இழுக்கும். வைதிகம் சாதிகளை வைத்து கட்டப்பட்ட மதம், சகிப்பு தன்மையற்ற மதம் எப்படி அனைவரையும் ஒன்றிணைத்து தேர் இழுக்கும். வைதிக கோவில் சிலைகள் கணவன் மனைவியுடன் இருக்கும். ஆனால் பூரியில் அண்ணன் தங்கையுடன். நாம் காணும் பூரி ஜெகநாதர் கோவில் 12 நூற்றாண்டில் மறுசீரமைப்பு செய்பட்ட கோவில்.    

பண்டைய காலத்தில் பூரி என்ற இடம் தந்தபுரா என்று அழைக்கப்பட்டது. அதாவது புத்தரின் புனித பல் பாதுகாக்கப்பட்ட நகரம். ஜெகநாதரின் நாவி கமலத்தில் (தாமரை - தொப்புள் ) வைக்கப்பட்டுள்ள பிரம்ம புத்தரின் பல் தவிர வேறில்லை. எட்டாம் நூற்றைன்டில் பூரி தாந்திரிக வழிபாட்டியின் இடமாகவும், ஜெகநாதர் தாந்திரிக கடவுளாகவும் கருதப்பட்டது. வஜ்ராயன பௌத்தத்தில் வெள்ளை நிற பாலபத்ரர், கருப்பு நிற ஜெகநாதர், மஞ்சள் நிற சுபத்ரா கடவுளாகவும் கருதப்பட்டது. 

கருவரையில் பல மரத்தால் ஆனா சிலைகள் உள்ளது. மூலவர் சிலை முழுமையடையாமல் வைத்து இருக்கின்றனர். மூலவர் சிலை 12 ஆண்டுக்கு ஒருமுறை மறுஉருவாக்கம் செய்யப்படுகிறது.

பூரி ஜகன்னாதர் கோவில் பௌத்த விகார்

01. அறிஞர்கள் பார்வையில் பூரி ஜகன்னாதர் கோவில் : ஜெகந்நாதரின் பௌத்த வம்சாவளியை முதலில் இந்தியத் தொல்லியல் ஆய்வுகளின் தந்தை ஜெனரல் ஏ. கன்னிங்ஹாம் முன்வைத்தார். பின்னர் டபிள்யூ.டபிள்யூ. ஹண்டர் Sir William Wilson Hunter - Author of the Imperial Gazetteer of India), டபிள்யூ.ஜே. வில்கின்ஸ் W.J. Wilkins (19 th.Century Hindu mythologist), ஆர்.எல். மித்ரா , எச்.கே. மஹாதாப், எம். மான்சிங் , என்.கே. சாஹு போன்ற பல அறிஞர்கள் அவரைப் பின்பற்றினர்.

இலக்கிய மற்றும் தொல்பொருள் ஆதாரங்களின் அடிப்படையில், ஜகன்னாதர் வழிபாட்டு முறைக்கும் பௌத்த மதத்திற்கும் உள்ள ஒற்றுமையைக் காட்ட அறிஞர்கள் முயற்சி செய்துள்ளனர் . பகவன் ஜகன்னாதரின் பௌத்த தோற்றத்தை நியாயப்படுத்த அவர்கள் பின்வரும் வாதங்களை முன்வைத்துள்ளனர் . 

01.ஜகன்னாதரின் பெயர் பௌத்த வம்சாவளியைச் சேர்ந்தது: புத்த மத இலக்கியங்களில், பகவன் புத்தர் "நாத", "ஜகன்னாத", "லோகநாத", ஜீனா, புவனேஸ்வரா போன்ற பெயர்களால் அழைக்கப்படுகிறார். இவை திபெத்திய மூலங்களிலிருந்து அறியப்படுகின்றன. எனவே ஜகன்னாதரின் பெயர் பௌத்த வம்சாவளியைச் சேர்ந்தது. 

02. ஜகன்னாதர் கோவிலில் சாதி வேறுபாடுகள் இல்லை: சாதி வேறுபாடுகளை முதலில் நிராகரித்தது பௌத்தம் தான். அதேபோல் ஜகன்னாதர் கோவிலில் மகாபிரசாதம் எடுக்கும் போது சாதி வேறுபாடு இல்லை. இது புத்த மரபிலிருந்து வந்தது. 

03.மும்மூர்த்திகளின் பரிணாமம் திரி ரத்ன கோட்பாடு: ஜகந்நாதர், பாலபத்ரர் மற்றும் சுபத்ரா ஆகிய மும்மூர்த்திகளின் பரிணாமம், புத்தர், தம்மா மற்றும் சங்க ஆகிய பௌத்த தத்துவத்தின் திரி ரத்ன கோட்பாட்டிலிருந்து பெறப்பட்டதாக பௌத்த அறிஞர்கள் கூறுகின்றனர் . 

04.ஜெகநாதரின் தேர் திருவிழா: வரலாற்றாசிரியர்களால் நடத்தப்படும் மகாயான பௌத்த காலத்தின் (கோட்டானில் தோன்றிய பௌத்த தேர் திருவிழாவின் கொண்டாட்டம்) புத்த தத்துவத்தால் பெரும்பாலும் பாதிக்கப்பட்டிருக்கலாம். பௌத்தர்கள் மட்டுமல்ல, ஜைனர்களும் கூட தேர் திருவிழா தங்கள் வழிபாட்டு முறைகளை கண்டிப்பாக கடைப்பிடிப்பதைக் குறிக்கிறது என்று கூறுகின்றனர்.

05.பழைய பாலி இலக்கிய குறிப்பு: பழைய பாலி இலக்கியம் ஜகன்னாதரைப் பற்றிக் குறிப்பிடுகிறது. இந்திரபூதி தனது 'ஞான சித்தி'யில் புத்தரை ஜகந்நாதர் என்று குறிப்பிட்டுள்ளார்.  

06.முழுமையற்ற உருவம்:  போதகாயாவில் உள்ள புத்தரின் முழுமையற்ற உருவத்தைச் சுற்றி ஒரு புராணக்கதை உள்ளது, இது ஜகன்னாதரின் முழுமையற்ற உருவத்துடன் ஒற்றுமையைக் கொண்டுள்ளது. 

07.எல்லோரா புத்தர்: எல்லோராவில் உள்ள புத்தரின் சிலை ஜகன்னாதர் என்று அழைக்கப்படுகிறது. இது ஜகன்னாதரும் புத்தரும் ஒரே மாதிரியானவர்கள் என்பதை நிரூபிக்கிறது. 

02.கலிங்கம்: ஒரிசாவில் சமண மதம் மிகவும் பிரபலமாக இருந்தது. கரவேலாவின் ஹதிகும்பா கல்வெட்டு கலிங்கத்தில் ஆதிஜினா வழிபாட்டை எடுத்துக்காட்டுகிறது. எனவே பூரி சமண சமயம் சார்ந்தது என்றுரைக்கின்றனர். கலிங்கா போருக்கு பிறகு ஒடிசாவில் பௌத்தம் ஒரு முக்கிய மதமாக இருந்தது. கலிங்கா பௌத்தத்துடன் நெருக்கிய தொடர்புடையது.
 
03.சுவாமி விவேகானந்தர்: ஜகன்னாதர் கோயில் ஒரு பழைய புத்த கோயில். இதையும் மற்றவற்றையும் நாங்கள் கையகப்படுத்தி மீண்டும் இந்துமயமாக்கினோம். இதுபோன்ற பல விஷயங்களை நாம் இன்னும் செய்ய வேண்டியிருக்கும்.
 
The temple of Jaganath is an old Buddhistic temple. We took this and others over and re-Hinduised them. We shall have to do many things like that yet. " (Swami Vivekananda, ‘The Sages of India’ in The Complete Works of Swami Vivekananda, Vol. 3, Advaita Ashram, Calcutta, p. 264.)
 
04.சர். அலெக்சாண்டர் கன்னிங்காம்: ஜகன்னாதரின் தொப்புளில் வைக்கப்பட்டுள்ள பிரம்மா, குஷி நகரத்தில் இருந்து கலிங்கத்திற்கு கொண்டுவரப்பட்ட பௌத்த பல்லக்குகளைத்தவிர வேறுஒன்றுமில்லை என்றுரைக்கிறார் இந்தியத் தொல்லியல் ஆய்வுகளின் தந்தை கன்னிங்காம். 
 
தொல்பொருள் ஆய்வாளர் அலெக்சாண்டர் கன்னிங்ஹாம் தனது பில்சா டோப்ஸ் (Bhilsa Topes) என்ற படைப்பில், மறைந்திருக்கும் பொருள் உண்மையில் புத்தரின் பல்லாக இருந்தால், ஜகன்னாதர் ஒரு பிராமண (இந்து) கடவுளாக இருக்க முடியாது, ஏனெனில் உடல் உறுப்புகளை வணங்குவது இந்து மதத்தில் அனுமதிக்கப்படவில்லை என்று வாதிட்டார். இந்த நடைமுறை மிகவும் பௌத்தமானது என்பதால், ஜகன்னாதர் ஒரு பௌத்த கடவுளாக இருந்திருக்க வேண்டும் என்று அவர் வாதிட்டார்.
 
In his work Bhilsa Topes, archaeologist Alexander Cunningham argued that if the hidden substance is indeed a tooth of the Buddha,  Jagannath cannot be a Brahmanical (Hindu) God, because worship of  body parts is not allowed in Hinduism. He argued that since the practice is eminently Buddhist, Jagannath must have been a Buddhist deity. 

புதன், மார்ச் 19, 2025

புத்த கயாவில் உள்ள மகாபோதி விகாரை மீட்போம்

 


புத்த கயாவில் உள்ள மகாபோதி விகார் 

போதிசத்துவரான சித்தார்த்த கௌதமர் புத்தரான இடம், ஞானம் பெற்ற இடம் புத்த கயாவில் உள்ள மகாபோதி விகார். ஒரு மதத்தின் மிகவும் தூய்மையான இடம் (புத்த கயாவில் உள்ள மகாபோதி விகார்) மற்றொரு மதத்தைச் சேர்ந்தவர்களால் (பார்பனர்களால் இந்து மதத்தால்) கட்டுப்படுத்தப்படுகிறது.  

இந்தியாவில் புத்த மதத்தை அழித்தது பிராமணியம். பத்து அவதாரங்களில் விஷ்ணுவின் ஒன்பதாவது அவதாரம் புத்தர் என்ற சித்தரிப்பை எந்த பிக்குவும், பிக்குணியும், போதிசத்துவரும், அரகந்தரும், எந்த பௌத்த சங்கமும் ஏற்கவில்லை. எந்த பௌத்தரும் ஏற்காத இந்த சித்தரிப்பு மகாபோதி விகாரை கட்டுப்படுத்த பயன்படுத்தப்படுகிறது. 

ஐந்து புத்தர் சிலைகளை ஐந்து பாண்டவர்கள் என்றும், புத்தரின் தாயார் மகாமாயாவின் சின்னம் திரௌபதியாக மாற்றப்பட்டதாகவும் பிக்குகள் வேதனைப்படுகின்றனர். நாங்கள் பௌத்தர்கள், எங்களுக்கும் இந்து மதத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பது தான் பிக்குகளின் வாதம்.

புத்த கயா விகாரின் பிரச்சினை என்ன?

1949 ஆம் ஆண்டு புத்தகயா கோயில் சட்டம் தான் மிகப்பெரிய பிரச்சனை. சட்டத்தின்படி, மகாபோதி விகாரின் நிர்வாகம் பௌத்த சமூகத்தின் கட்டுப்பாட்டில் இல்லை. 

01. 1949 ஆம் ஆண்டு புத்தகயா கோயில் சட்டம் ஒன்பது உறுப்பினர்களைக் கொண்ட புத்தகயா கோயில் மேலாண்மைக் குழுவை (Bodhgaya Temple Management Committee (BTMC)) நிறுவியது. 

02. சட்டத்தின்படி, ஒரு இந்து மட்டுமே நிர்வாகக் குழுவிற்குத் தலைமை தாங்க முடியும். மாவட்ட நீதிபதி இந்து அல்லாதவராக இருந்தால், மாநில அரசு ஒரு இந்துவை குழுவின் தலைவராக நியமிக்க வேண்டும் என்றும் சட்டம் குறிப்பிடுகிறது. இந்தக் குழுவில் மூன்று வருட காலத்திற்கு நான்கு பௌத்தர்களும் நான்கு இந்துக்களும் இருக்க வேண்டும், 

03.இந்த சமமற்ற பிரதிநிதித்துவம், பௌத்தர்களுக்கு விகாரை நிர்வகிக்கும் உரிமையை மறுக்கிறது.

பௌத்தர்கள் கோரிக்கைகள் என்ன?
01. இந்த சமமற்ற பிரதிநிதித்துவம் புத்த சமூகத்தின் தூய்மை தளத்தின் மீதான உரிமையை மறுக்கிறது. எனவே விகாரின் முழுமையான நிர்வாகக் கட்டுப்பாட்டைக் கோரி, பிக்குகள், தலைவர்கள் மற்றும் ஆதரவாளர்கள் குழு காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 

02. பௌத்த மத விவகாரங்களில் அரசு தலையிடுதல் கூடாது. 

03. 1949 ஆம் ஆண்டு புத்தகயா கோயில் சட்டத்தை ரத்து செய்ய வேண்டும். புத்தகயா கோயில் சட்டம் அரசியலமைப்பிற்கு விரோதமானது. மற்றும் சர்வதேச கலாச்சார சட்டங்களுக்கு எதிரானது.

04. மகாபோதி மகா விகார சைத்ய அறக்கட்டளை (Mahabodhi Mahavihara Chaitya Trust) என்ற புதிய தன்னாட்சி அமைப்பை உருவாக்கி, அந்த இடத்தின் முழு கட்டுப்பாட்டையும் புத்த சமூகத்திடம் ஒப்படைக்க விரும்புகிறார்கள். 
 
பௌத்தர்கள் குற்றச்சாட்டுகள் என்ன?
01. பௌத்த தளம் பௌத்தர்களின் கட்டுப்பாட்டில் இல்லை.
பௌத்த தளம் புத்தகயா பௌத்தர் அல்லாதவர்களால் ஆதிக்கம் செலுத்தப்படுகிறது. உலகெங்கிலும் உள்ள பௌத்தர்களுக்கு புத்துணர்ச்சி பெறத்திரும்பும் இந்த விகார் இந்தியாவின் மதிப்புமிக்க வரலாற்றின் ஒரு பகுதியாகும். 

02. ஊழல் நிறைந்த பிராமணர்களின் கட்டுப்பாட்டில் உள்ளது.

புத்தர் விஷ்ணுவின் அவதாரம் போன்ற குப்பைகளை பார்ப்பனர்கள் சொல்லிக்கொண்டு இருக்கின்றனர். ஐந்து இந்து (Hindu) உறுப்பினர்கள் மற்றும் அதிகாரிகள் விகாரின் நன்கொடைகளை தவறாக நிர்வகிக்கின்றனர். மகாபோதி மகா விகாரத்திர்க்கு வரும் யாத்ரீகர்களை மோசமாக நடத்துகின்றனர்.

03. பீகார் அரசு மிரட்டல் தந்திரங்களை கையாளுகின்றது
பீகார் அரசு இந்த நான்கு புத்த (Buddhist) உறுப்பினர்கள் குறைகளைப் புறக்கணித்து மிரட்டல் தந்திரங்களை கையாளுகின்றனர்.

 



பிக்கு பதந்த் ஆர்யா நாகார்ஜுன சுராய் சசாய்

01.இந்தியாவில் புத்த மதத்தைப் பரப்புவதற்காக தனது குடியுரிமையைத் துறந்த ஜப்பானிய புத்த துறவி பதந்த் நாகார்ஜுன் சுராய் சசாய் இந்தப் பிரச்சினையை எழுப்பினார்.

02. மகாபோதி கோயிலின் "விடுதலை"க்கான இயக்கம், ஜப்பானிய துறவியான பதந்த் ஆர்யா நாகார்ஜுன சுராய் சசாய் அவர்களால் முறையாகத் தொடங்கப்பட்டது.

03. ஆர்ய சசாயி பௌத்தத்தை இந்து அடக்குமுறையிலிருந்து விடுவிக்க வேண்டிய இடம் இந்தியா என்றுரைக்கிறார்.


இயக்கத்தின் முக்கிய நபரான டாக்டர் விலாஸ் காரத்

01. மகாபோதி மகாவிஹாரா முதலில் பேரரசர் அசோகரால் நிறுவப்பட்டது  அவர் இந்த பெரிய விகாரை கட்ட 100,000 தங்க நாணயங்களை செலவிட்டார்.

02. இந்தியாவின் அடையாளம் புத்தர் மற்றும் அசோகரில் வேரூன்றியுள்ளது. தேசிய சின்னமான சிங்கங்கள் மற்றும் தர்ம சக்கரத்துடன் கூடிய அசோக தூண் நமது பாரம்பரியத்தை குறிக்கிறது. இருப்பினும், அசோகர் கட்டிய 84,000 ஸ்தூபங்களில், யானையுடன் கூடிய ஒரு ஸ்தூபி (புத்தரை குறிக்கும்) காணாமல் போனது. இந்த யானை 1890 இல் மஹந்தின் இல்லத்தில் நூற்றுக்கணக்கான புத்தர் சிலைகளுடன் கண்டுபிடிக்கப்பட்டது. புத்தரின் மரபு ஏன் அத்தகையவர்களின் கைகளில் உள்ளது?

03. புத்தகயா முற்றிலும் பௌத்த தளம், ஆனால் புத்தகயா கோயில் மேலாண்மைக் குழு (BTMC) பௌத்தர் அல்லாதவர்களால் ஆதிக்கம் செலுத்தப்படுகிறது. BTMC இன் பிராமண உறுப்பினர்கள் பிரதான கோயிலில் மணிகளை அடித்து தூபம் போடுகிறார்கள், மேலும் புத்தரின் சிலைகள் சிவன் மற்றும் பாண்டவர்களுடன் இணைத்து, இந்த இடத்தை இந்துமயமாக்க பல ஆண்டுகளாக முயற்சிகள் எவ்வாறு மேற்கொள்ளப்பட்டுள்ளன


இந்திய உலகில் புத்தரின் தேசம் என்று தான் அறியப்படுகிறது. இந்து வேதங்கள் புத்தரையும் பௌத்த தத்துவத்தையும் கடுமையாக விமர்ச்சித்து இருக்கிறது. அப்படி இருக்கும் பொழுது மகாபோதி கோயிலின் நிர்வாகத்தை பார்ப்பனர்கள் இப்போது ஏன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறார்கள்?  இது தீர்க்கப்பட வேண்டிய ஒன்று.